மட்டர் பனீர் முந்திரிக் கிரேவியுடன்.
ஓகஸ்ட் 22, 2022 at 10:45 முப 2 பின்னூட்டங்கள்
மடர் பன்னீர் வெங்காயம், பூண்டு இல்லாதது.இதுவும் ஒருவகை. மீள் பதிவாக வருகிறது. ருசித்துப் பாருங்கள். அன்புடன்
பிள்ளையுடன் படித்த பால்ய சினேகிதர்கள் வருகிறார்கள் j`’ரொட்டியுடன் சாப்பிட. காரசாரமாக மட்டர் பன்னீரும் தயாராகிறது. சற்று வேறுமாதிரி என்று தோன்றியது. ப்ளாகில் குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகிறது. இதுவும் உபயோகமாக இருக்குமே. செய்து பாருங்கள். பூண்டு வெங்காயம் சேர்க்கவில்லை. ஒரிஜனல் முந்திரிச் சுவையுடன்—-
வேண்டியவைகள்.ப்ரோஸன் மட்டர்–200 கிராம்.பனீர்–200 கிராம். வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்
தாளித்துக் கொட்ட நெய்—2டீஸ்பூன்.
பெரிய தக்காளிப் பழம்—2 அரை அங்குல நீளம்–இஞ்சித்துண்டு. இவை இரண்டையுமாகச் சேர்த்து அரைத்த விழுது.
முந்திரிப் பருப்பு—8, ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை. இதைத் தர்பூஸ்கா ஸீட்ஸ் என்று வட இந்தியர் சொல்வார்கள், இவைகளை ஊரவைத்துத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்க ஸாமான்கள்
மிளகுஅரை டீஸ்பூன்—லவங்கம்-5,—பட்டை ஒரு அங்குல அளவிற்கு, ஏலக்காய்-இவைகளைப் பொடிக்கவும். ஸுமாராகப் பொடித்தல்ப் போதும். வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேஜ்பத்தி என்னும்லவங்க இலை–1
பொடிகள். மிளகாய்ப்பொடி–1 டீஸ்பூன்,—-மஞ்சள் பொடி தேவையான அளவு.
ருசிக்கு—உப்பு.
செய்முறை. பதப்படுத்தப்பட்ட பட்டாணியை வென்னீர் விட்டு அலம்பி ஊறவைக்கவும். பின்னர் திட்டமான தண்ணீரில் வேக வைக்கவும்.
பனீரைச் சிறு துண்டங்களாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ச்சி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து இரண்டுஸ்பூன்வைத்துச் சூடானதும்தேஜ்பத்தியைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளிவிழுதைக் கொட்டி சுருளக்கிளறவும்.
பொடிகளைச் சேர்த்துக் கிளறி, வெந்தமட்டரைத் தண்ணீருடன் சேர்க்கவும். இரண்டொரு கொதி வந்தபின் பனீரைச் சேர்க்கவும்.
திட்டமாக உப்பைச் சேர்த்து முந்திரி விழுதைச்…
View original post 31 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 10:14 முப இல் ஓகஸ்ட் 24, 2022
சூப்பர் செய்முறை. நன்றாக இருக்கிறது
கீதா
2.
chollukireen | 11:28 முப இல் ஓகஸ்ட் 24, 2022
மிக்க நன்றி. அன்புடன்