மும்பையின் வினாயகர்கள்
ஓகஸ்ட் 30, 2022 at 12:06 பிப 8 பின்னூட்டங்கள்
இவ்வருடத்திய மும்பை கணேசர்களின் அணிவகுபப்பைத் தரிசியியுங்கள்.

தொந்தி வினாயகர்








இப்படி மனதில் தோன்றியவைகளை வண்ணமாக எழுதியுள்ளேன். பதிவு எழுதி வருஷங்கள் பல ஆகிவிட்டதால் எதுவும் மனதில் இல்லை. மறந்தே விட்டது. எங்களுக்குப் பண்டிகை இல்லை. இருப்பினும் பதிவு எழுதி இருக்கிறேன். வக்ர துண்டமஹாகணபதியை யாவரும் வணங்கி நன்மையைப் பெறுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
ஏதோ அப்படி இப்படி பதிவை உருவாக்கி உள்ளேன். மன்னிக்கவும்.
வினாயகச் சதுர்த்திப் பதிவு இது.
Entry filed under: Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 1:28 பிப இல் ஓகஸ்ட் 30, 2022
எவ்வளவு வித வித விநாயகர்கள்… படங்களின் அணிவகுப்பு அருமை.
மும்பையில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன்.
மஹாகணபதி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சந்தோஷத்தையும் மன அமைதியையும் தரட்டும் காமாட்சி அம்மா.
உங்களிடமிருந்து புதிய பதிவு வந்ததே மிக்க மகிழ்ச்சி
2.
chollukireen | 7:03 முப இல் ஓகஸ்ட் 31, 2022
மிகவும் நன்றி இவை யாவும் என் மும்பை பிள்ளை அனுப்பிய படங்கள் நான் கேட்டு எழுதி இருந்தேன் உங்களின் அக்கரைக்கு மிகவும் நன்றி செப்டம்பரில் கயா சேத்திரத்திற்கும் போவேன் என்று சொன்னது ஞாபகம் வருகிறது என்னிடம் என் கணவருக்கு செப்டம்பர் 2 புண்ணிய திதி டெல்லியில் நடக்கிறது என் உடம்பு நிலை காரணமாக நான் போகவில்லை இருந்த இடத்தில் பிரார்த்திக்கிறேன் மற்றபடி யாவரின் நலத்திற்கும் பிள்ளையார் அருள் புரிய வேண்டுகிறேன் அன்புடன்
3.
ஸ்ரீராம் | 3:13 முப இல் ஓகஸ்ட் 31, 2022
நேற்று அண்ணனுக்கு பிறந்துள்ள பேரனைப் பார்க்க திருத்தணி சென்று திரும்பி வந்த வழி முழுவதும் முகம் மறைக்கப்பட்ட விநாயகர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்!
மும்பை கணபதி ஹெவாவின் வழிபாட்டுக்கு புகழ் பெற்றதாச்சே…
தேவாதி தேவா கணபதி தேவா தும்ஸே பட்கர் கௌன்… ஸ்வாமி.. தும்ஸே பட்கர் கௌன்
4.
ஸ்ரீராம் | 3:21 முப இல் ஓகஸ்ட் 31, 2022
‘நேற்று முதல் நாள் பிறந்த அண்ணனின் பேரனை….’ என்று வார்த்தையைப் போட்டு ஆரம்பிக்கவும்…!!! முதல் வரி பொருந்தவில்லை என் கமெண்ட்டில்!
5.
chollukireen | 7:05 முப இல் ஓகஸ்ட் 31, 2022
உங்கள் அண்ணாவின் பேரனுக்கு நல்வாழ்த்துக்கள் தாத்தாவாக பிரமோஷன் ஆசிர்வாதங்கள் அன்புடன்
6.
chollukireen | 7:07 முப இல் ஓகஸ்ட் 31, 2022
திரை இல்லாத பம்பாய் கணேசர்கள் உங்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டார்கள் மற்றவர்கள் அப்புறம் தான் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உங்கள் பாடல் எல்லாம் மிகவும் அருமை நன்றி அன்புடன
7.
thulasithillaiakathu | 9:39 முப இல் ஓகஸ்ட் 31, 2022
பதிவு மிக நன்றாக இருக்கிறது காமாட்சிம்மா. விநாயகர்களின் பல வண்ணச் சிலைகள் அனைத்தும் மிக அழகு. முன்பையில் விநாயகர் சதுர்த்தி ரொம்பப் பிரமாதமாகக் கொண்டாடுவார்களே..
நல்ல கைவினைஞர்கள் அவர்களின் திறமையைப் பாராட்ட வேண்டும். ஆனால் இவை அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடுமே.
விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!
கீதா
8.
chollukireen | 10:54 முப இல் ஓகஸ்ட் 31, 2022
இப்போதெல்லாம் வேர்ட்பிரஸ்காமில் எழுதுவது புதுமாதிரி ஆகி வெகுநாட்களாகி விட்டது.விதமே மறந்து விட்டது. வயதும் காரணமாக இருக்கலாம். மும்பை படங்கள் கேட்டிருந்தேன்.வந்ததும் மனதில் ஒரு ஆசை வந்துவிட்டது. இன்னும் எவ்வவோ அழகு சிலைகள் உண்டு. கடலுக்குள்போனாலும் திரும்ப அருள்பாலிக்க வன்துவிடுவார் என்ற பலத்த நம்பிக்கைதான். வாழ்த்துகள் உங்களுக்கு.மிக்க நன்றி. அன்புடன்