எங்களைப் படம் போட்டிருக்காங்கோ பாருங்கோ.
செப்ரெம்பர் 19, 2022 at 11:18 முப 6 பின்னூட்டங்கள்
இது தினமும் காணும் மும்பையின் காட்சி. ஏதோ ஒரு கற்பனை. அதற்கு சில படங்கள். அந்த காக்கைகளுக்கும் மிகவும் ஸந்தோஷம். ஒரு நிமிஷம் நீங்களும் பாருங்கள். நன்றி. தினம்தினம் பார்க்கலாம். அன்புடன்
எங்க க்ளாஸ் பாத்தீங்களா?
நாங்கள் மும்பை வாசிகள்
நாங்க எப்படின்னு இவங்க எங்களையே படம் பிடிக்கறாங்க
நீங்களும் பாருங்க
பறந்துபோன காக்கைகள் ஒவ்வொன்றாய் வருகிறது.
வரிசையாய் உட்காருகிறது. இன்னும் என்ன செய்யும் இதுகள்?
பார்ப்போமா?
எல்லாரும் வந்தாச்சா? கோடிவீட்டு மரத்து அண்ணா, அண்ணி
வந்துட்டாங்களா?
எல்லாரும் வந்து சாயங்காலம் இங்கே கூடலாம்..
அதோ அவங்களுக்கும் சொல்லுங்க.
எங்ளையும் படமெடுங்க.
அங்கே பாருங்க அவங்க ஒரு ஸெக்க்ஷன்.
நீங்களும் வந்துடுஙகோ!!!!!!!!!
எல்லோரும் இரை தேடி தின்னூட்டு இங்கே இதே இடத்தில் காமாட்சிம்மா
படம் பிடிப்பாங்க குளிச்சுட்டு ஜோரா வந்திடுங்கோ என்ன!!!!!!!!!!!!!
அம்மா படம் பிடிக்க வந்துட்டாங்க. வாங்கவாங்க காகாகா
நாங்க அழகாக ஊஞ்ஜல் ஆடுவோங்க பிறகு எல்லோரும் ஓடுவோங்க
காகாகா
அழகான ஊஞ்சல்
எல்லோரும் வந்தாச்சா?
அதுக்குள்ள சிலபேருக்குக் கோவமா ?
என்ன ஆச்சுங்க அதுக்குள்ளே அங்கே போய்ட்டீங்க
நன்றிம்மா நாங்களும் போறோங்க காகாகா.
நன்றி,நன்றி நாங்களும் பரந்து போறோங்க. அழகாக ஊஞ்ஜலில் ஆடினோங்க காகாகா
b
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:57 பிப இல் செப்ரெம்பர் 19, 2022
காமாட்சி அம்மா படம் எடுப்பார் என்று நம்பி வரும் காக்கைகளை ஏமாற்றாமல் படம் பிடித்து போட்டு விட்டீர்கள்! எங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் நிறைய காக்கைகள் வந்து அமரும். இதே போலதான்! மாலை வேளைகளில் வந்து கூட்டமாய் குழுமி பார்ட்டி கொண்டாடி இருட்டியதும் விட்டு அவரவர் இருப்பிடம் சென்று விடுகின்றன.
2.
chollukireen | 11:02 முப இல் செப்ரெம்பர் 20, 2022
ஊஞ்சலாட ரஸிக்க முடிகிறது. உங்களுக்கும் காணக்கிடைக்கும் ஒரு ஸம்பவம்தான். இருப்பினும் ஏராளமான காக்கைகள் ஒன்று கூடி அதனுடைய நடவடிக்கைகளின் ஒரு ரஸனை எனக்கு. நம்பிக்கை அதுகளுக்கு வீண்போகவில்லை.. மிக்க நன்றி. அன்புடன்
3.
நெல்லைத்தமிழன் | 11:43 பிப இல் செப்ரெம்பர் 19, 2022
என் பின்னூட்டம் எங்கே?
4.
chollukireen | 11:04 முப இல் செப்ரெம்பர் 20, 2022
பின்னூட்டமும் பதிலும் இருக்கிறது. நன்றி. பாருங்கள். அன்புடன்
5.
geetha | 2:30 பிப இல் செப்ரெம்பர் 20, 2022
காமாட்சிம்மா ஹையோ ரொம்ப ரொம்ப ரசித்தேன். படங்களையும் அதைவிட அதற்கான உங்கள் வரிகளியயும் ஆஹா.
//எல்லாரும் வந்தாச்சா? கோடிவீட்டு மரத்து அண்ணா, அண்ணி//
ஹாஹாஹாஹாஹா ரொம்ப ரசித்தேன்…
ஆமாம் ஊஞ்சலாட்டம் அருமையா இருக்கும்…
கீதா
6.
chollukireen | 11:23 முப இல் செப்ரெம்பர் 21, 2022
இந்தக் காக்கைகளின் கூட்டம் காலைநேரம் வேறுமாதிரி. ஊஞ்சல் கிடையாது.ஹலோமாத்திரம் சொல்லிவிட்டு பறந்துவிடுங்கள். ஒரு பத்து வருஷம் இவைகள் கம்பெனி கொடுத்தது.நீங்களும் ரஸித்திருக்கிறீர்கள். இவ்விடம்குருவிகள் வருகிறது.குளிர் வந்து விட்டது. ஓடிப் போய்விடும். நினைத்துப் பார்க்கிறேன்.ரஸித்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்