அரிசி உப்புமா
நவம்பர் 7, 2022 at 12:28 பிப 2 பின்னூட்டங்கள்
இந்தப்பதிவு இடும்போது நான் ஜெனிவாவில் இருந்திருக்கிறேன். அதனால் குக்கரில் செய்முறை எழுதியிருக்கிறேன். மற்றும் தேங்காயெண்ணையில் செய்யும் பழக்கமும் கிடையாது. தோசையைத் தொடர்ந்து உப்புமா பதிவு. பாருங்கள். ரஸியுங்கள். .ஜெனிவாவினின்றே மீள்பதிவும் ஆகிறது. அன்புடன்
வேண்டியவைகள்—
பச்சரிசி—–2கப்
துவரம் பருப்பு–2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் —கால் டீஸ்பூன.
இந்த அளவு செய்வதற்கு வீட்டிலேயே மிக்ஸியில் ரவை தயாரித்துக்
கொள்ளலாம்.
அரிசியில2 ஸ்பூன் ஜலம் சேர்த்துப் பிசறி வைத்து ஒரு மணி நேரம்
கழித்து மிக்ஸியில் பெறிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும்.
பருப்பு வகைகளைச் சற்று சூடாக்கி ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
வெந்தயமும் சேர்த்துப் பொடிக்கவும்
தாளிக்க வேண்டிய ஸாமான்கள்
நல்ல எண்ணெய்—3 டேபிள் ஸ்பூன்
கடுகு–1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் —3
உளுத்தம் பருப்பு—-3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—முக்கால் கப்
மிளகு சீரகம்–தலா அரைடீஸ்பூன்
நெய் –2 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
வாஸனைக்கு–கறிவேப்பிலை
செய் முறை—
முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் வெண்கலப்பானை, உருளி,போசி,
கோதாவரிகுண்டு என, அளவைகளுடன் கால்படி, அரைபடி, பட்ணம்படி
என அடை மொழிகளுடன் பாத்திரங்கள் உண்டு.
அவைகளில் செய்வதுதான் வழக்கம்.
இப்போது எல்லா அளவுகளையும் ப்ரஷர் குக்கர்கள் ஏற்றுக்
கொண்டு விட்டது. நாம் இப்போது குக்கரிலேயே செய்வோம்.
ப்ரஷர் பேனோ அல்லது குக்கரையோ காஸில் வைத்து எண்ணெயைச்
காயவைத்து மிளகாய்,கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
இவைகளைத் தாளித்து,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
தண்ணீர் சேர்ப்போம்.
அளவு ஒரு பங்கு ரவை என்றால் இரண்டரை பங்கு ஜலம்
சேர்க்கலாம். மிளகு,சீரக ம் உடைத்தது
உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதிக்கும் போது தீயைச் சற்றுக் குரைத்து,
View original post 116 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 3:06 பிப இல் நவம்பர் 7, 2022
அட நம்ம குருணை உப்புமா… அப்பப்ப செய்வதுண்டும்மா.
2.
chollukireen | 12:22 பிப இல் நவம்பர் 8, 2022
அப்படியா. ஸாதாரணமாகப் பெயர்போனதுதான் இல்லையா. மிக்க நன்றி. அன்புடன்