Posts filed under ‘அதிசயம்.ஆனால் உண்மை.’

அதிசயக் குழந்தை

மும்பை மஹிம் ஏரியாவைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்து வரும் ஒரு தொழிலாளியின் மனைவியை செவ்வாய்க் கிழமையன்று மூன்றாவது பிரஸவத்திற்காக ஸையான் ஆஸ்ப்பத்திரியில் சேர்த்தனர். ஏற்கெனவே அப்பெண்ணிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். வயது அவருக்கு 26. பிறந்தது என்னவோ ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தை.

ஒட்டிப் பிறந்த குழந்தைகள்

வலி எடுத்ததும் மருத்துவர்கள் பிரஸவம் பார்த்தும் அவருக்கு ஸுகமான பிரஸவம் ஆகவில்லை. இதனால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரஸவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்தனர். வியாழக்கிழமையன்று.
பிரஸவம் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும். குழந்தைக்கு இரண்டு தலைகள்,இரண்டுகால்கள்,இரண்டு கைகள், வயிற்றில் தொப்புள் கொடிகள் இரண்டு..
மூன்று கைகள் என்று சில பத்திரிக்கை எழுதினது.
பிறந்ததும் இரண்டு வாய்களாலும், காலை அசைத்து குழந்தைகள் வீறிட்டு அழுதது.இரண்டு குழந்தைகளும் மார்புப் புறத்திலிருந்து இடுப்புவரை ஒட்டிப் பிறந்திருந்தது. டாக்டர்களுக்கு ஒரே வியப்பு. அந்தக்குழந்தை உடல் நலத்துடன் இருக்கிறது.
குழந்தைகளை ஸி.டி ஸ்கேன், ,ஈ.ஸி.ஜி என பலவித டெஸ்டுகளும் செய்து பார்த்ததில் அவர்களைப் பிரிக்கலாம். அதுவரை அந்த இரட்டையர்கள் ஒரு ஹ்ருதயத்திலேயே ஸ்வாஸிக்க வேண்டும். ஏன் என்றால் இருவருக்குமாக இருப்பது இரண்டுகால்கள்,இரண்டு கைகள், ஒரு கிட்னி, ஒரு லிவர், இரண்டு intestines, ஒரு ஆண்குறி, ஒரு ஹார்ட் இரண்டு aortas.

இரண்டு குழந்தைகளுக்கும் மூச்சு விடுவதில் சிரமமிருந்தாலும் நல்லபடியாகவே உள்ளது. இரண்டின் எடையும் சேர்த்து மூன்றறை கிலோ உள்ளது.
பிரித்தெடுக்கும் வகையில் ஒரு குழந்தைதான் உயிரோடிருக்க முடியும். அதுவும் உறுதி செய்வது கடினம் என்பது டாக்டர்களின் அபிப்ராயம்.

முதலிலேயே தொடர்பு கொண்டிருந்தால் கர்பத்தை கலைத்திருக்க முடியும். நல்ல தேர்ந்த டாக்டர்களின் மேற்பார்வையில்தான் யாவும் கவனிக்கப்பட்டு வருகிறது.
யாவும் நல்லபடியாக முடியவேண்டும் என்று அந்த முகம் அறிந்திராத பெண்ணிற்காக நாம் கடவுளைப் பிரார்த்திப்போம்.
செய்தி மும்பைமிரர்,தினத்தந்தியின் வாயிலாக . நன்றி இரண்டு பத்திரிக்கைகளுக்கும்.

ஜூலை 29, 2016 at 2:04 பிப 6 பின்னூட்டங்கள்

சிங்கராஜனிடமிருந்து மகனை மீட்டதாய்.

அதிசய உண்மை

Continue Reading ஜூன் 22, 2016 at 9:32 முப 3 பின்னூட்டங்கள்

குள்ளர்களின் நகரம்.

 

P1040097

குள்ளர்களின் நகரம்

இது என்ன புது தகவல் என்கிறீர்களா?    அதிசயம், ஆனால் உண்மை என்ற தலைப்பிற்குத் தகுந்த மாதிரி ஏதாவது செய்திகள் பத்திரிக்கைகளில் பார்த்தால் அதை சேமிக்க  எண்ணம் வந்து விடும்.

ஈரான் நாட்டின் , ஷாஹ்தாத் என்னும் புராதன  நகரின் அருகில் உள்ள பாலை வனத்தில்   இப்படி ஒரு இடம் இருக்கிறது.  இதன்பெயர் மகுனிக். ஸராஸரி  மனிதர்கள் வசிக்கும்படியான உயரமே இல்லாத சிறிய களிமண் வீடுகள் கொண்ட ஒரு நகரம் அளவிற்கு   அமைந்திருக்கிறது.  வீடுகளின் கதவுகள் நகர்த்த முடியாத களிமண்ணினால் செய்து அடைக்கப் பட்டுள்ளது. உள்ளிருந்து வெளிவரமுடியாத அளவிற்கு கதவுகள் அடைக்கப் பட்டிருக்கும் காரணம் விளங்கவில்லை.

இறந்தவர்கள் திரும்ப வரலாம் என்ற நம்பிக்கையில் அவர்களை வைத்து மூடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த இடங்களில் 1948, 1956 வருஷங்களில் அகழியல்,தொல்லியல் ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டிருக்கிரது. அப்போது பல விஷயங்கள் வெளியாயின.

கி.மு 3000,4000  ஆண்டுகளுக்கு முன்னே   அவ்விடம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிரார்கள் என்று    அங்கு கிடைத்த பொருட்களின் அடிப்படையில் ஊகிக்கப்படுகிறதாம். வீடுகள்,உலைகள்,  கூரைகள் அலமாரிகள், விவசாயத்திற்கான கருவிகள்,  உலோகக் கருவிகள்   முதலானவற்றின் மூலம் ஆதாரங்களும் கிடைத்தது. தங்க ஆபரணங்கள், இரும்பு,பித்தளை உலோகங்களை உபயோகப் படுத்திய சான்றுகளும் கிடைத்தனவாம். இங்கு வாழ்ந்தவர்கள் உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்ந்திருக்கிரார்கள். இப்பகுதியில்  மம்மி    உருவங்களும்  2005  இல் கிடைத்திருக்கிறது. இதுவே குள்ளர்கள் நகரம் என்பதற்கு  ஆதாரமாகவும் ஆகிறது..

பத்திரிக்கை தந்த தகவலுக்கு மிகவும் நன்றி. சித்திரக்குள்ளன் என்று கதை சொல்வார்களே  அவனுடைய ஊராக இருக்குமோ?

 

 

 

 

 

 

 

மே 10, 2016 at 6:48 முப 4 பின்னூட்டங்கள்

ஒரு பரோபகாரத் தந்தை.

Snapshot_20160309_1

உதவி

துக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை  மற்றவர்களுக்கும் இம்மாதிரி  கஷ்டம் நேரிடக் கூடாது என்று,  அதற்குத்  தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்று,செய்து கொண்டிருக்கும் காரியம்தான் என் மனதை மிகவும் நெகிழ்த்தியது.

பார்க்கப்போனால் இவர் அன்றாடும் காய்கறிகளைத் தள்ளு வண்டியில் வைத்து விற்று அந்த வருமானத்தில் இரவு,பகல்,மழை,வெயில்,குளிர் எதுவும் பாராது,அலைந்து திரிந்து சம்பாதித்தால்தான் குடும்பம் ஓடும். மும்பை அந்தேரி பகுதியில்  விஜயாநகர் இவர் வியாபார ஏரியா. தான் படும் கஷ்டம் பிள்ளைக்கு வரக்கூடாது என்று,ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பிள்ளையைப் படிக்கவைத்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு,டிப்ளமா என்ஜீயனிரிங் படிப்பதற்காக ஒரு பாலி டெக்னிக் கல்லூரிக்குஅவருடைய பிள்ளை தனது நண்பருடன் சென்றுவிட்டு  மோட்டர் ஸைக்கிளில்வரும் போது, எதிர் பாராத வகையில் வீதியில் மழை நீரால் மூடப்பட்ட ஒரு பள்ளத்தில் வீழ்ந்து இருவரும்தூக்கி எறியப்பட்டனர்.   இவரின் பிள்ளை பலத்த அடியில் உயிரிழந்தான் தந்தை தாதாராவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு. தனது பெண்ணிற்காக அதிகம் துக்கத்தை வெளியில்  காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை. அதன்பிறகு மகனுக்கு செலுத்தும் அஞ்ஜலியாக,  பிரருக்கு இம்மாதிரி கஷ்டம் நேரிடாமலிருப்பதற்காக,  காய்கறி விற்கும்போதே வீதியில் எங்கு குழி,பள்ளங்கள் இருக்கிறதோ, அதைப் பார்த்துப் பார்த்து நிரப்புகிரார்.

இதை ஆரம்ப நாட்களில் பலர் வேடிக்கைப் பார்த்தனர். தற்போது என்னுடன் ,பலர்ஒத்தாசையும் புரிகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது. இது ஸம்பந்தமாக சாலை பராமரிப்பு நிறுவனம்மீது, போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். கோர்ட்டில் 6,7 மாதங்களாகியும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மகன் படித்து பெரிய ஆளாக வருவான் என்று கனவு கண்டேன் அவ்வளவு புத்திசாலிமகன். எங்களைவிட்டு மகிழ்ச்சி சென்று விட்டாலும், என் மகனுக்குச் செலுத்தும் அஞ்ஜலியாக இதைச் செய்து வருகிறேன் என்கிரார் தாதாராவ்.

பின் குறிப்பு.  மனம் நெகிழ்ந்த வேளையிலும், தாதாராவ் குழிகளை நிரப்பி அஞ்ஜலி செய்வது மனதை நெகிழ்த்துகிறது.  இது ஒரு மாதத்திற்கு முந்தைய  பேப்பரில் வந்த ஸமாசாரம்தான்.பெற்றமனம். இதுதான்.   என்னுடைய கேமரா பழுதாகி இருந்ததால் அப்போது போட நினைத்த ஸமாசாரமிது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மார்ச் 16, 2016 at 6:48 முப 9 பின்னூட்டங்கள்

யானைகளின் சிலசுபாவங்கள்

சிறியதாக எதையாவது எழுதி திரும்ப எழுத முயற்சிக்கும் அவாவில் யானை சிக்கிக்கொண்டது. கேட்ட ஸமாசாரம்தானிது. இருக்கட்டுமே. குழந்தைகளுக்கானது போலத் தோன்றுகிறது. பாருங்கள்

Continue Reading ஜனவரி 29, 2016 at 6:34 முப 8 பின்னூட்டங்கள்

ராக்ஷஸ தாவரம்.

அதிசயம்,ஆநால் உண்மை என்ற பகுதிக்கேற்ற ராக்ஷஸ தாவரம் என்று தோன்றியது. அதுதான் பகிர்வுக்குக் காரணம்.

Continue Reading ஜூலை 20, 2015 at 5:38 முப 15 பின்னூட்டங்கள்

Snake Performing Pooja! இந்த விவரங்கள் வளவனூர்நா பாஸகரனுடயவை.

A True incident recorded in Photo and witnessed by many ….
Believing & non believing left to choice of the reader.———

As received…………                                                                                

All pictures in order…..                                                                           
amazing!!!

a
strange but true incident that happened on the 16th Jan 2010 on the
day of the Solar eclipse in Teperumanallur Village Sivan temple near
Kumbakonam.
This cobra had been observed visiting the Sanctum Sanctorum on the
temple by the Priest on two earlier eclipses. He had therefore
requested a photographer who resided at Thirunegeswaram about a
kilometer from the temple in question, to be ready in case the
incident was repeated on the 16th. When the Sanctum was opened on the
16th morning, the priest finding the snake immediately sent for the
photographer. It is said that the cobra made three visits to the
Sanctum Sanctorum with a Bilva leaf in its mouth that it fetched from
the Bilva tree, which is the Sthala Vriksham of the templஇவ் விஷயங்களை அனுப்பிக் கொடுத்த வளவனூர் திரு நா.பாஸ்கரன் அவர்களுக்கு மிக்க நன்றி. ப்லாகில் பதிவு செய்ய உதவியசிறுமி பேத்தி மநஸ்வினிக்கும் ஆசிகள்.காமாட்சி.

பிப்ரவரி 24, 2010 at 7:52 முப 4 பின்னூட்டங்கள்


ஜூன் 2023
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,488 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.