Posts filed under ‘இடை வேளைச் சிற்றுண்டிகள்’
சீஸ்பால்ஸ்

மேலே இருப்பது சீஸ் பால் செய்யஉபயோகப்படுத்திய சில ஸாமான்கள். நல்ல மழை,குளிர் போன்ற ஸமயங்களில் யாவரும் காபி,டீயுடன் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
செய்வது ஸுலபம்தான். இக்காலங்களில் சீஸ் சேர்த்த பண்டங்கள் யாவரும் விரும்பிச் சாப்பிடும் பொருளாகவும் ஆகிவிட்டது. பிரட்,உருளைக்கிழங்கு, சீஸ்,காய்கறிகள்,எண்ணெய் இவை யாவுமே முக்கியப் பொருட்கள். வாங்க நீங்கள் யாவரும். எப்படிச் செய்வதென்று பார்ப்போம். அப்படியே அளவுகளையும்.பார்ப்போம்.
பிரட்ஸ்லைஸ் —3, பெரிய அளவிலான உருளைக்கிழங்கு –2. காப்ஸிகம்1 துருவின சீஸ் மூன்று டேபிள்ஸ்பூன், சிறிது முட்டகோஸ்,பொரிப்பதற்கு எண்ணெய். ருசிக்கு–உப்பு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன். பச்சைமிளகாய் அரைத்த விழுது சிறிதளவு
செய்முறை—–பிரட்டை மிக்ஸியிலிட்டுப் மாவாகப்பொடித்துக்கொள்ளவும்.காப்ஸிகம்,கோஸ் இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உறித்து சூடு இருக்கும்போதே நன்றாக மசித்துக் கொள்ளவும். ஆறினவுடன் பிரட் பொடியில் ஓரளவு பாக்கி வைத்துக்கொண்டு மசித்த உருளைக் கிழங்குடன் பொடியைச் சேர்த்துப் பிசையவும்.மிளகாய் விழுது,உப்பு சேர்த்துக் கெட்டியான பதத்தில் பிசையவும். தண்ணீர் விடக் கூடாது. வேகவைத்த உருளைக்கிழங்கின் ஈரப்பசைக்குப் போதுமான ரொட்டித்தூள் போட்டால் போதுமானது.
அடுத்து பொடியாக நறுக்கிய கேப்ஸிகம்,கோஸுடன் சீஸ்,மிளகுப்பொடி,உப்பு சிறிதுசேர்த்துக் கலக்கவும். இதில் உப்பைக் குறைத்துப் போட்டால் நீர்க்காமல் இருக்கும்.
பிசைந்து வைத்திருக்கும் உருளைக்கலவையில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு எடுத்து சிறிய கிண்ணம் போல விரல்களால் அகட்டிச் செய்து கொள்ளவும்.
அதில் சிறிதளவு காய்கறிக் கலவையை வைத்து பக்குவமாக மூடி, லேசாக உருட்டி பிரட்பொடியில் லேசாகப் பிரட்டவும். இப்படியே யாவற்றையும் செய்து கொண்டு, அடி அகலமான வாணலியை அடுப்பில் எண்ணெயைக் காயவைத்து மிதமான தீயில் உருண்டைகளைப் போட்டு லேசாகத் திருப்பி விட்டுச் சிவக்க எடுக்கவும். தக்காளி சாஸுடனோ, மற்றும் பிடித்தமானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
போட்டோவைத் தனித்தனியாக எடுக்கவில்லை. சிறிது ரொட்டித்தூள் மிகுதியும் ஆகலாம். செய்து பார்க்கிறீர்களா? டவுன் ஸைடில்தான் இந்தச் சீஸ் கலாசாரமெல்லாம். எங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லுவர்களும் இருக்கலாம். பாருங்கள்.
மட்ரி.
Originally posted on சொல்லுகிறேன்:
இது ஒரு வடஇந்திய வகை மைதாமாவின் தயாரிப்பு. பார்க்கப்போனால் நம்முடைய தட்டை மாதிரிதான். பருப்புகள் போடுவதில்லை. சற்று வித்தியாஸமான ருசி. கரகரப்பாகச் செய்கிறார்கள். சிறிதளவு வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள். இது மேத்தி மட்ரி. அவசரத்திற்கு ஊறுகாயுடன்காலைடிபனில்கூட மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான் கற்றுக்கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வேண்டியவைகள். மைதாமாவு—-2 கப் ஓமம்—2 டீஸ்பூன் மாவுடன் சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன் ருசிக்கு உப்பு மட்ரி…
Continue Reading நவம்பர் 20, 2015 at 11:25 முப 6 பின்னூட்டங்கள்
ஆலு டிக்கி.
;சிற்றுண்டி வகைகள். ருசியானது.
Continue Reading மார்ச் 20, 2015 at 11:13 முப 21 பின்னூட்டங்கள்
மசூர்டால் பகோடா.
ருசியான பகோடா ருசிக்கலாம்
Continue Reading ஏப்ரல் 2, 2013 at 8:10 முப 18 பின்னூட்டங்கள்
சோம்புக்கீரை பக்கோடா
திடீரென் று நினைத்துக் கொண்டு அறைத்தமாவில் நம் மனதிற்கேற்ப சிலதைக் கலந்து சுடச் சுட ஒரு தின்பண்டம்.
Continue Reading செப்ரெம்பர் 13, 2012 at 11:06 முப 26 பின்னூட்டங்கள்
கீரை வடை
இது உளுத்தம் பருப்பு வடைதான். இந்த மருமகள் செய்த மாதிரியைப்
படம் பிடித்தேன். ஸரி, பொங்கல் வருகிறது. அரைக்கும் மாவில் இது
மாதிரியும் ஒரு நான்கு செய்து பார்க்கலாமே நீங்களும் என்று
தோன்றியது. ஷேப் முன்னே பின்னே இருந்தாலும் வடை ருசிதானே
முக்கியம். கரகரப்பாக நன்றாகவே இருந்தது வடை.
வேண்டியவைகள்
உளுத்தம் பருப்பு-தோல் நீக்கிய வெள்ளை உளுத்தம்பருப்பு-1கப்
முழு உளுந்து ஆனால் மிகவும் நல்லது. தோல் நீக்கியதைத்தான் .
பாலக் கீரை—-மெல்லியதாக அலம்பி நறுக்கியது 1 கப்பிற்கு அதிகம்.
பச்சையோ சிகப்போ 4 மிளகாய்கள்
துளி இஞ்சி
ருசிக்கு உப்பு
வடை தட்டி எடுக்க வேண்டிய எண்ணெய்
துளி பெருங்காயப் பொடியும். சில கறிவேப்பிலையும்.
செய்முறை
பருப்பை ஊற வைத்து வடிக்கட்டி மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து தயாராக நறுக்கிய
பொடிப்பொடியான வடிக்கட்டிய கீரை, பெருங்காயப்பொடி,உப்பு,
கறிவேப்பிலையை சேர்த்துக் கலந்து துளி ஜலத்தைத் தெளித்து
காயும் எண்ணெயில் வடைகளைப் போட்டு கரகரவென்று
வேகவைத்துஎடுத்து பச்சைப் பசேல் என்று வடை தயார்.
அரைத்த பருப்பு கெட்டியாக இருந்தால்தான் ஜலம்
தெளிக்க வேண்டும். இஞ்சியைப் போட்டே அரைக்கலாம்.
பண்டிகை நாட்களில் வெங்காயம் சேர்ப்பதில்லை.
அதையும் சேர்த்து ஜமாய்க்கலாம்.
இளசான எந்தக் கீரையையும் போடலாம்.
கார மபின்.சோளம்.
மெல்லியதாக உடைத்த சோள ரவையில் செய்த இதைஎங்களுக்கு மிகவும்வேண்டியவர்கள்செய்துகொண்டுவந்திருந்தனர். மிகவும் ருசியாக இருந்ததால் செய் முறைகேட்டேன். மிகவும்அக்கறையாகஉங்களப்ளாகில்போடுங்கள்என்று
செய்முறைவிளக்கம்அளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்
மெல்லியதான சோளரவை–1 கப்.polenta
மைதா—1 கப்
ருசிக்கு உப்பு
இவைகளைக் கலந்து கொள்ளவும்.
அடுத்து—எண்ணெய் –கால்கப்,
மோர் கடைந்தது–இரண்டே முக்கால் கப்
இவை இரண்டையும் மாவுடன் சேர்த்துக் கரைத்து
இட்டிலி மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து கொள்ளவும்.
மேலும் பதப்படுத்திய இனிப்பு சோள முத்துகள்—1 கப்
காப்ஸிகம் மெல்லியதாக நறுக்கிய துண்டுகள்–1 கப்
parmezan. பார்மிஜான் சீஸ்ப் பொடி–1 கப்
பச்சைமிளகாய்–2 சிறியதாக நறுக்கியது
இவைகளை மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
செய்முறை—அவனைச் சூடாக்கவும்
கலக்கிய மாவை சிறிய மபின் கப்புகளில் விட்டு
ட்ரேயில் அடுக்கி வைத்து
90 டிகிரி உஷ்ணத்தில் அவனில் வைத்து 20 நிமிஷங்கள்
பேக் செய்து எடுக்கவும்.
அழகான கலரில் ருசியான கார மபின்கள் ரெடி.
ருசித்துப் பாருங்கள். நன்றி ஸ்டெல்லா.
மட்ரி.
இது ஒரு வடஇந்திய வகை மைதாமாவின் தயாரிப்பு.
பார்க்கப்போனால் நம்முடைய தட்டை மாதிரிதான். பருப்புகள்
போடுவதில்லை. சற்று வித்தியாஸமான ருசி. கரகரப்பாகச்
செய்கிறார்கள். சிறிதளவு வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள்.
இது மேத்தி மட்ரி. அவசரத்திற்கு ஊறுகாயுடன்காலைடிபனில்கூட
மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான் கற்றுக்கொண்டேன்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்.
மைதாமாவு—-2 கப்
ஓமம்—2 டீஸ்பூன்
மாவுடன் சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
மட்ரி பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்
செய்முறை.
ஓமத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
அகன்ற தாம்பாளத்தில் மாவைக் கொட்டி ஓமம், திட்டமான உப்பு
சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
மாவில் சிறிது சிறிதாக மேலே குறிப்பிட்ட 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், 1ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.
புட்டுமாவுபோல , மாவைக் கையிலெடுத்துப் பிடித்தால் பிடிபட
வேண்டும்.
உதிர்த்தால்தான் உதிர வேண்டும். இம்மாதிரி பக்குவமாக கலக்கவும்.
செய்து பார்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக ஜலத்தைத் தெளித்து மிகவும்
கெட்டியான மாவாக நன்றாகப் பிசைந்து கொள்ளவும்..
அழுத்தமாகப் பிசைந்த மாவைத் திரட்டி பாதி மாவைச் சிறிய
உருண்டைகளாக உருட்டி அப்பளக் குழவியினால் சிறிய கனமான
வட்டங்களாகச் செய்து கொள்ளவும்.
போர்க்கினால் வில்லைகளின் மேல் குத்தி துளைகளிடவும்.
மீதிமாவைக் கனமான அப்பளாமாக இட்டு போர்க்கினால் குத்தி
கத்தியினால் துக்கடாக்களாகக் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஜாஸ்தி புகையவிடாமல்
நிதானமான சூட்டில் இவைகளைக் கொஞ்சம், கொஞ்சமாகப்போட்டு
கிளறிவிட்டு பொறித்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில்ஆறவிடவும்.
கரகரப்பான மட்ரி தயார்.
மாவு அழுத்தி இடும்படியான கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைய
வேண்டும். இது நன்றாக ஞாபகம் வைக்க வேண்டும்.
பெரிய அளவில் சற்றுப் பெரியதாகச் செய்து வைத்துக்கொண்டு
டிபனில் ஒரு அயிட்டமாக உபயோகிப்பார்களென நினைக்கிறேன்.
இதையே ஒருகப் மைதாவுடன் 1 டேபிள்ஸ்பூன் கடலைமாவு,துளி
மிளகாய்ப்பொடி, 1டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெந்தயக்கீரை,
எண்ணெயும்,நெய்யுமாக 2டேபிள்ஸ்பூன், உப்பு,ஜீரகப்பொடி சேர்த்து
ஸாதா மட்ரி செய்யும் முறையிலேயே மேதி மட்ரியும் செய்யலாம்.
.
கோஸ்வடை
பழக்கமாகிவிட்டால் எதையுமே சுலபமாகச் செய்யலாம்.
இதுவும் அப்படிதான்.
முழு உளுத்தம் பருப்பு—1 கப் தோல் நீக்கியது
துவரம்பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்—4
இஞ்சி—சிறிய துண்டு
பெருங்காயம்—சிறிது
பொடியாக நறுக்கியமுட்டைகோஸ்-1கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி–அரைகப்
ருசிக்கு—உப்பு
பொரிக்க—வேண்டிய எண்ணெய்
8 மிளகு.—பொடித்தது
செய்முறை—–பருப்புகளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற-
வைத்து வடித்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாயையும் சேர்த்து அரைத்து விடலாம்.
லேசாக துளி ஜலம் தெளித்து அரைக்கவும்.
நல்ல மெத்தென்ற பதத்தில் மாவு இருந்தால் நல்லது.
உப்பு,கோஸ், கொத்தமல்லி, பெருங்காயம் கலந்து கொண்டு
வடைகளை தயாரித்து, எண்ணெயைக் காயவைத்து
வடையைப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
கையை ஈரப்படுத்திக்கொண்டு மாவை எடுத்து உருட்டி
பாலிதீன் பேப்பர்மேல் வைத்து ,வட்டமாக சமன் செய்து,
நடுவில் ஒரு பொத்தலுமிட்டு மாவை காயும் எண்ணெயில்
நழுவ விடவேண்டும். திருப்பிவிட்டு இருபுறமும் சிவக்க-
-விட்டு எடுத்து வடிக்கட்டவும்.
ருசியானது. அரைப்பது சற்று முன் பின் இருந்தாலும்,
ஜலம், அரைப்பதில் அதிகமாகக் கூடாது
வாஸனைக்கு மிளகுப் பொடி சேர்ப்போம்.
இதையே பெரிய அளவில் உருட்டிப் போட்டும் சிவக்க
வேகவைத்தும் எடுக்கலாம்.
மிக்ஸியில் அரைக்கும்போது சீக்கிரமே சூடாகிவிடுவதால்
சற்று இடைவெளி கொடுத்து அரைப்பது அவசியமாகிறது.
கோஸ் மட்டிலும் சேர்த்து தயாரித்த வடையிது. சமயத்தில் சிறிது
ஜலம் அதிகம் என்று தோன்றினால் ஒரு டீஸ்பூன் கடலை மாவோ,
உளுத்தம் மாவோ கலந்து செய்யவும். முழுப் பருப்பு விழுது காணும்.
வடையும் ருசியாக இருக்கும்.
ஆமவடை
பொங்கலுடன் நிவேதனம் செய்ய வடை செய்யும் குறிப்பும்
இருந்தால் விசேஷம் தானே?
கலந்த பருப்பு வடையும் செய்யலாம். உளுத்தம் பருப்பு வடையும்
செய்யலாம். வேண்டியவைகளைப் பார்ப்போம்.
கடலைப் பருப்பு—அரைகப்
உளுத்தம் பருப்பு—அரைகப்
துவரம்பருப்பு—அரைகப்
காரத்திற்கு வேண்டியபடி—4, 5 மிளகாய்
சிறியதுண்டு–இஞ்சி, அரை டீஸ்பூன்சீரகம்
அரைடீஸ்பூன் பெருங்காயப் பொடி
வாஸனைக்கு—கொத்தமல்லி, கரிவேப்பிலை
வடையை ,வேகவைத்தெடுக்க வேண்டிய எண்ணெய்
பச்சரிசி—ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—4 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு
செய்முறை.—பருப்புக்களைக் களைந்து 3மணி நேரம் ஊற
வைக்கவும்.
அந்த ஒரு ஸ்பூன் அரிசியையும் தனியாக ஊற வைக்கவும்.
ஊற வைத்த பருப்பை வடிக்கட்டி 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு
தனியாக எடுத்து வைத்துவிட்டு, மிகுதி பருப்புடன் , இஞ்சி,
மிளகாய் உப்பு, பெருங்காயம், சீரகம் சேர்த்து, மிக்ஸியில்
கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அவசியமிருந்தால் சிறிது
ஜலம் தெளிக்கவும். அரிசி,தேங்காய் சேர்த்து மேலும் ஒரு
முறை சுற்ற விட்டு எடுத்து, பருப்புக்களைச் சேர்க்கவும்
நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலையுடன் ஒரு டேபிள்-
-ஸ்பூன் காய்ச்சிய எண்ணெயையும் கலவையில் சேர்த்துக்
கலக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இலையிலோ,
அல்லது, பாலிதீன் பேப்பர் மேலோ வடைகளைத் தயாரித்து
போட்டெடுக்கவும்.
வடைகளை இருபுறமும் திருப்பிவிட்டு கரகரப்பாக வேக-
-விட்டு எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கி
உபயோகிக்கவும்.
மாமூலான வார்த்தை.நிதான தீயும் எண்ணெய் புகையாமலும்
இருப்பது அவசியம். இதன் பெயர்தான் ஆமவடை.
உளுத்தம் பருப்பு வடையும் எழுதுகிறேன். ஸரியா? இஷ்டம் உள்ளவர்கள் வெங்காயம், பூண்டும் சேர்த்தும் எந்தவிதமான வடைகளையும் தயாரிக்கலாம்.