Posts filed under ‘கறி வகைகள்’

அகத்திக்கீரைப் பொடித்தூவல்

அகத்திக் கீரை

வேண்டியவைகள்

அகத்திக்கீரை—1 கட்டு

பயத்தம்பருப்பு—-2டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல்—2டேபிள்ஸ்பூன்.

குண்டு மிளகாய் வற்றல்—-2

-அரைடீஸ்பூன்   கடுகு

,உ.பருப்பு—-1டீஸ்பூன்

எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்

சர்க்கரை—2 டீஸ்பூன்

ருசிக்கு—உப்பு

மஞ்சள் பொடி—துளி

அகத்திக் கீரையை    ஒவ்வொரு  வரியாக  உறுவினறுக்கினால்

நறுக்குவதற்கு சுலபமாக  இருக்கும். மெல்லியதாக  நறுக்கவும்

முடியும்.

சுமார்  இரண்டரை கப்   நறுக்கிய  கீரையை  நன்றாகத் தண்ணீரில்

அலசி  வடியவிடவும்.

பாசிப்பருப்பை  முன்னதாகவே   கைபொறுக்கும் அளவிற்கு  சூடாக்கி

தண்ணீரில்  ஊரவைக்கவும்.

மைக்ரோவேவ்  பாத்திரத்தில்,ஊறி வடியவைத்த   பருப்பு, கீரை,துளி

சர்க்கரை   சேர்த்துக்  கலந்து   ஹைபவரில் 6 நிமிஷங்கள் மைக்ரோவேவ்

செய்து  எடுக்கவும்.

திரும்பவும் இரண்டு,  இரண்டு  நிமிஷங்கள் இரண்டுமுறை

வைத்தெடுத்து      எடுக்கவும்.

வேண்டுமானால்  சிறிது   ஜலம்   தெளிக்கலாம்.

வாணலியில்  எண்ணெய் விட்டு    கடுகு,மிளகாய், உ.பருப்பு  தாளித்து

கீரையை உப்பு சேர்த்து   வதக்கவும்.

இறக்குமுன்   தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இரக்கவும்.

கீரை ஒரிஜனலாக   சிறிது   கசப்புத்தன்மை உடையது.

குளிர் காலத்தில்  டிஸம்பர்   ஜனவரியில்  கீரை பூவுடன்  சேர்த்துக்

கிடைக்கும்.

கார்த்திமாதக் கீரை  கணுவெல்லாம்  இனிப்பு என்ற வசனம் உண்டு.

அவ்வளவு  நன்றாக இருக்கும்.

மைக்ரோவேவில் செய்யாவிட்டால் கீரையை  சிறிது ஜலத்தில்

வேகவிட்டு  வடித்தும்   செய்யலாம்.

ஒவ்வொரு ஏகாதசி யிலும்   பட்டினி விரதமிருப்பவர்கள்  மறுநாள்

துவாதசியன்று  சமையலில்   இந்தக் கீரை   கட்டாயமாக   இடம்

பெறும்.

உடல் நலத்திற்கு   எப்போதாவது  ஒருநாள் சாப்பிட்டாற் கூட

நன்மை தரும்  கீரை வகைஇது.

பசுவிற்கு  இந்தக் கீரையை வாங்கிக் கொடுத்தால் மிகவும் நல்லது என்று

நம்பிக்கையும் உண்டு.

துவாதசி   சமையலில்  தொடர்ந்து     சுண்டைக்காய்  குழம்புக்கு  அடுத்து

அகத்திக்கீரை பொடித்தூவல்.  படித்தோ,  சமைத்தோ,  ஞாபகம் வைத்தோ

இதையும்  பாருங்கள்.

சாதத்துடன்   கலந்து சாப்பிட   சிறிது   உப்பு சேர்த்த பருப்பு,நெய்,மோரோ,

தயிரோ    இன்னும்    எது வேண்டுமோ    அதைக்     கூட்டி  ஏகாதசி   பட்டினி

உபவாஸம்   இல்லாவிட்டாலும்,   துவாதசி பாரணையைப்  பற்றியாவது

உங்களுக்கு   அறிமுகமாக்கியதில்   எனக்கு ஒரு   திருப்தி. ஸரிதானே?

அகத்திக்கீரைப் பொடித்தூவல்

ஏப்ரல் 5, 2012 at 1:04 பிப 4 பின்னூட்டங்கள்

பலாக்காய் பொடித்தூவல்

பிஞ்சு  பலாக்காய்—1  அரைக்கிலோஎடை

.பச்சைமிளகாய்—3

இஞ்சி—1சிறியதுண்டு

தேங்காய்த் துருவல்—அரைகப்.

கடுகு—அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு—ஒரு டீஸ்பூன்

எண்ணெய்—3டேபிள்ஸ்பூன்

ருசிக்கு—உப்பு

துளி  மஞ்சள்  பொடி

கொத்தமல்லி,  கறிவேப்பிலை—சிறிது

செய்முறை.

காயை 2 துண்டங்களாக  வெட்டவும்.

பால்போல   பிசின்  வெளிப்படும்.  நிறைய  தண்ணீர்விட்டு

காயை அலம்பவும்.

கடைகளிலேயே   காயை  ஒழுங்காக  தோல் நீக்கி துண்டங்களாக

வெட்டியும்   கொடுக்கிறார்கள்.

சின்ன  காயானால்  நாமே   பட்டை பட்டையாக   தோலைச்

சீவிக் கொட்டிவிட்டு   உள் பாகத்தை  சற்று பெறியதுண்டுகளாக

நறுக்கி   தண்ணீரில் போட்டு  அலம்பிக் கொள்ளவும்.

வாணலியில்  துண்டுகள் அமிழத் தண்ணீர் விட்டுமஞ்சள்ப்பொடி

சேர்த்து   திட்டமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.

காய்  முக்கால்பதம்  வெந்ததும்    இறக்கி  வடிக்கட்டவும்.

காய் ஆறியவுடன்   மிக்ஸியிலிட்டு  வைப்பரில் 2 ,3 முறை

சுற்றி   எடுக்கவும்.

இப்பொழுது   உதிர் உதிராக  காய்  பக்குவமாக இருக்கும்.

திரும்பவும்   வாணலியில்   எண்ணெயைக் காயவைத்து

கடுகை வெடிக்கவிட்டு  பருப்பை சிவக்க வறுத்து  நறுக்கிய

இஞ்சி,  பச்சை மிளகாயைப் போட்டு   வதக்கவும்.

உதிர்த்த  காயைக் கொட்டி உப்பு  சேர்த்து வதக்கவும்.

தேங்காயைச் சேர்த்து  வதக்கி இறக்கவும்.

கொத்தமல்லி,  கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

பொடித்தூவல் தயார்.  தினப்படி  சாப்பாட்டில் இதுவும்

ஒரு   கறிதான்.எலுமிச்சை  சாறு  துளி   சேர்க்கலாம்

இது சிரார்த    காலங்களில்  விசேஷமான  ஒருகறிகாயாக

தேடி வாங்கப்படும்.1008   கறிகளுக்கு சமானமான  காயிது.

கேரளாவில்   இது  பரவலாக எல்லோராலும்   சமைக்கப்படும்

காய்.

பலா முசு  என்று  சிறிய  வகைக் காய்கள்  சமைப்பதற்கு

மிகவும் ஏற்றது.

வட இந்தியாவிலும்   மிகவும்  விரும்பப்  படுகிறது.

மாதிரிக்கு    இங்கு  செய்த  பொடித்தூவலும்  சின்ன காயும்.

காய்  ஒன்றோடொன்று  உராய்ந்து  சற்று  கருப்பாக காட்சி

தருகிறது.  அவ்வளவுதான்.

பலாக்காய்ப் பொடித்தூவலும்,பலாப்பிஞ்சும்.

மார்ச் 10, 2012 at 7:16 முப 7 பின்னூட்டங்கள்

உருளை வதக்கல்

இதுவும்   ஸாதாரண   வதக்கல் தான். விசேஷமாக மாருதலில்லை.

5 ஸ்டார்   ஹோட்டல்  குறிப்பு இது  சும்மா  4 பெறிய உருளைக் கிழங்கில்

கொஞ்சம் மாற்றி  செய்தேன் நான்.  வறுப்பதற்குப்  பதில் வதக்கினேன்

.அவ்வளவுதான். இதையும் பாருங்களேன்.

வேண்டியவைகள்.

உருளைக்கிழங்கு—சற்றுப் பெறிதாக  4

வெங்காயம்—பெறிசா 1

பூண்டு இதழ்—4

பச்சைமிளகாய்–1

இஞ்சிவிழுது—அரை டீஸ்பூன்

வெள்ளை எள்—அரை டீஸ்பூன்

கடுகு—கால் டீஸ்பூன்

ருசிக்கு உப்பு

எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்

மிளகாய், மஞ்சள், தனியாப் பொடி வகைகள்–வகைக்கு சிறிது

கறிவேப்பிலை—10 இலைகளுக்குமேல்.

ஒரு துண்டு  எலுமிச்சை

செய்முறை.

கிழங்கை த் தண்ணீரில்  வேகவைத்து  உறித்துத் துண்டங்களாகச்

செய்து கொள்ளவும்.

சிறிது எண்ணெயில்   கடுகு,எள்ளை   வெடிக்கவிட்டு,நறுக்கிய

வெங்காயம்,பூண்டு  மிளகாயை வதக்கி  பொடிகளைச் சேர்த்து

உருளை வதக்கல்

இறக்கவும்.

வாணலியில்   எண்ணெயைக் காயவைத்து  உறித்த  துண்டங்களைச்

உப்பு     சேர்த்து  நன்றாக வதக்கி இறக்கவும்.

இறக்கிய   வதக்கலில்     முன்பாக   வதக்கிய   வெங்காயக் கலவையைச்

சேர்த்துக் கலந்து   எலுமிச்சைச் சாறு கலந்து  பாத்திரத்தில் மாற்றி

கரிவேப்பிலையை  புதியதாக  வறுத்துப்போட்டு டேபிளில் வைத்தால்

5 ஸ்டார் வதக்கல்தான்.

வேகவைத்த கிழங்கை     எண்ணெயில்  பொறித்து எடுப்பதற்குப்

பதிலாக  நான்   வதக்கி எடுத்து செய்திருக்கிறேன்.

அதுதான்  வித்தியாஸம்.

பிப்ரவரி 7, 2012 at 8:45 முப 6 பின்னூட்டங்கள்

பீன்ஸ் கறி

நல்ல இளசான பீன்ஸாக இருந்தால் மிகவும் நல்லது.

காம்பையும், நாரையும்  நீக்கி   பொடிப் பொடியாக   நறுக்கிக்

கொள்ளவும்.

வேண்டியவைகள்.

பீன்ஸ்—-கால்கிலோ

பச்சைமிளகாய்—2

இஞ்சி—ஒரு சிறு துண்டு

தேங்காய்த் துருவல்–அரைகப்.விருப்பத்திற்கிணங்க

ருசிக்கு—-உப்பு

மஞ்சள்பொடி—அரைடீஸ்பூன்

தாளித்துக் கொட்ட—4 டீஸ்பூன்   எண்ணெய்

கடுகு—1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு—2, 3 டீஸ்பூன்

சக்கரை—1 துளி

செய்முறை

பொடியாக நறுக்கிய பீன்ஸை தண்ணீரில் அலசி வடிக்கட்டவும்.

துளி,சக்கரையும்,  2டீஸ்பூன்  எண்ணெயும் சேர்த்துக் கலந்து

மைக்ரோவேவில்  ஹைபவரில் ,7 நிமிஷங்கள்

வேகவைத்து  எடுக்கவும்.  அல்லது

அடிகனமான பாத்திரத்தில்  நறுக்கிய பீன்ஸைப் போட்டு சிறிது

ஜலம் சேர்த்து,  நிதான தீயில்  மூடி  வேக வைத்துக்

வடித்துக்  கொள்ளவும்.

கலர் பச்சென்றிருக்கவே  துளி சக்கரை சேர்ப்பது.

வாணலியில்எண்ணெயைக்காயவைத்கடுகு,உளுத்தம்பருப்பைத்

தாளித்துக் கொட்டி,  நறுக்கிய   இஞ்சிபச்சைமிளகாயைச்சேர்த்து

வதக்கவும்.

வெந்தபீன்ஸ்,உப்பு,  மஞ்சள் சேர்த்துப் பின்னும்வதக்கி

தேங்காய்த்  துருவலும் சேர்த்து   நன்றாக வதக்கி    இறக்கி

உபயோகிக்கவும்.

நம்முடைய தினப்படி சமையலில் இது ஒரு தினுஸு.

மற்றும்   பீன்ஸை சற்று நீளமாக நறுக்கி  எண்ணெயில்  வதக்கி

மஞ்சள்,மிளகாய்,தனியா,  சீரக,  மாங்காய்,  உப்புப் பொடிகள்

திட்டமாக சேர்த்து  ,துளி ஜலமும் தெளித்து   வதக்கி இறக்கியும்

ரொட்டி வகைகளுடன்   உபயோகிக்கலாம்.

பருப்புசிலியும் எல்லோரும் செய்வதொன்று.

பீன்ஸை  பெறிய  துண்டுகளாக  நறுக்கி  இட்டிலி தட்டுகளிலோ

அல்லது வேறு வகைகளிலோ 15நிமிஷத்திற்கதிகம்ஸ்டீம்செய்து

வெண்ணெயில் உப்பு,  மிளகுப்பொடி சேர்த்து வதக்கினாலும்

ருசியோருசிதான்.

பொடியாக  நறுக்கிய   உருளைத் துண்டுகளுடனும் பீன்ஸை

சேர்த்து வதக்கி உப்பு காரம் சேர்த்தால் அதுவும் ஒரு ருசிதான்.

இப்படியே எழுதிக்கொண்டே போகலாம்.

பட்டர் பீன்ஸ்  நாரில்லாமல்   நன்றாக இருக்கும்.

இஞ்சி,  பூண்டு,  வெங்காயம் இவைகளையும்  வேண்டியவர்கள்

உபயோகிக்கலாம்.  கறிப்பொடி சேர்த்து வதக்கவும்  செய்யலாம்.

பீன்ஸ் கறி தேங்காய் சேர்த்தது

ஜூன் 17, 2011 at 1:08 பிப 2 பின்னூட்டங்கள்

குர்ஜர் கறி

வேண்டியவைகள்.

குர்ஜர்—திட்டமானசைஸில்—4

மிளகாய்ப்பொடி—அரைடீஸ்பூன்

தனியாப்பொடி—1 டீஸ்பூன்

சீரகப்பொடி–அரை டீஸ்பூன்

மஞ்சள்பொடி–அரை டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—துளி

வேர்க்கடலை–2 டேபிள்ஸ்பூன்.  வெறும் வாணலியில்  வறுத்துப்

பொடிக்கவும்.

தாளிக்க எண்ணெய் —-4,5  டீஸ்பூன்

கடுகு—1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு–1 டீஸ்பூன்

ருசிக்கு உப்பு

துளி  இஞ்சித் துருவல்

செய்முறை

குர்ஜரைத் தோல்சீவி   சற்றுப்  பெறிய  துண்டங்களாகநறுக்கிக்

கொள்ளவும். அலம்பி நன்றாக  வடிக்கட்டிக் கொள்ளவும்.

அடிகனமான   வாணலியிலோ அல்லது  நான்ஸ்டிக்  பேனிலோ

எண்ணெயைக் காயவைத்து  கடுகு, உளுத்தம் பருப்பைத்

தாளித்து,  தீயைக் குறைத்து  நறுக்கிய தளரில் ஒரு பிடியைச்

சேர்க்கவும். வேர்க் கடலைப் பொடியைத் தவிர   மற்றவைகளைச்

சேர்த்துச்   சிறிது வதக்கவும்.

பூரா தளர்களையும் சேர்த்து   உப்பு       இஞ்சி  சேர்த்துக்   கிளறி

மூடிவைத்து 5 நிமிஷங்கள்  வேகவிடவும்.

சற்று நீர் விட்டுக் கொள்ளும்.  திறந்து வைத்து  வதக்கவும்.

வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து  வதக்கினால்  தண்ணீரை

ஓரளவு  இழுத்துக் கொள்ளும்.

பாத்திர சூட்டிலே இருந்தால்  ஸரியாக இருக்கும்.

வதக்கியகாயை இறக்கி,   மல்லித்தழை தூவி உபயோகிக்கவும்.

ரொட்டி வகைகளுடனும்.   ஸாதாரண சாப்பாட்டுடனும்  ஒத்துப்

போகும்.  கறி  சேர்ந்தாற்போல இருக்கும்.

வேண்டுமானால்    சிறிது ஆம் சூரும் சேர்க்கலாம்.

இந்தக் காயை,பஜ்ஜி போடும் போதும்  உபயேகிக்க முடியும்.

ஸேலட்டிலும்,  இது பங்கு  பெறுகிறது.

குர்ஜர்

குர்ஜர் கறி

ஜூன் 7, 2011 at 12:30 பிப 4 பின்னூட்டங்கள்

முள்ளங்கிக்கறி,அதன் கீரையுடன்.

பிஞ்சு முள்ளங்கி   அதன் கீரையுடன் தளதளவென்று இவ்விடம்

கிடைக்கிறது. முள்ளங்கி பெறிதாக இருந்தால்கீரைஅவ்வளவாக

தேறுவதுமில்லை. ருசியும் ஸரியில்லை. காற்றுள்ளபோதே

தூற்றிக்கொள்.கட்டுசின்னதாகத்தானஇருந்தது.கண்டவரையில்

போதுமென     கறி செய்தேன்.

எப்போதாவதுசான்ஸ்கிடைக்கும் போது  ப்ளாகிற்காக  ப்ளான்

செய்துவிடுகிறேன்.

ஒரு கட்டில் சின்னதாக  நாலோ ஐந்தோ இருந்தது.

வேண்டியவைகள்—-பச்சைமிளகாய்—1

கடுகு,   உளுத்தம்பருப்பு—தலா 1 டீஸ்பூன்

ஒரு பிடித்த பிடியளவு—–ப்ரோஸன் மட்டர்

துளி சீரகப்பொடி,   இஞ்சித்துருவல்   சிறிது.

எண்ணெய்—2,   3   டீஸ்பூன்

ருசிக்கு –உப்பு

செய்முறை

முள்ளங்கிக் கீரையை   காம்பு,  நரம்புகள் நீக்கிப்  பொடியாக

நறுக்கித்   தண்ணீரில்  அலசி   வடிக்கட்டவும்.

முள்ளங்கியையும்  தோல் சீவி மெல்லிய வட்டங்களாக

நறுக்கி     நீரில் அலசி   வடிக்கட்டவும்.

நான் ஸ்டிக் பேனில்    எண்ணெய்விட்டுக்    காயவைத்து

கடுகை   வெடிக்கவிட்டு,   உளுத்தம்பருப்பை    சிவக்க வறுத்து

மிளகாயைஇரண்டாகக்கிள்ளிப்போட்டுஇஞ்சியுடன்வதக்கவும்.

கீரையை உடன் சேர்த்து  வதக்கவும்.    மட்டரைச்  சேர்த்துக்

,கிளரி நிதான தீயில்   தட்டினால் மூடி  சில நிமிஷங்கள்

வைக்கவும்.

கீரை வதங்க ஆரம்பித்ததும்   முள்ளங்கி வில்லைகளையும்

சேர்த்து    உப்பு,   சீரகப் பொடி சேர்க்கவும்.

நீர் வற்றி   நன்றாக வதங்கும்வரை      வதக்கி இறக்கி

உபயோகிக்கவும்.

சுயமாக     தன் மணத்துடன்   ருசியாக இருக்கும்.

தேங்காய்த் துருவல்  சேர்க்கலாம்.

வெங்காயம்,   பூண்டு,     பயத்தம்பருப்பு முதலானவைகளும்

சேர்த்துச்  செய்வதுண்டு.   உடல் நலத்திற்குகந்த    சாதாரண

ஸப்ஜி இது.

முள்ளங்கிக் கறி அதன் கீரையுடன்

ஏப்ரல் 15, 2011 at 11:03 முப 2 பின்னூட்டங்கள்

பாலக் பன்னீர்

வேண்டியவைகள்

பாலக்கீரை—250 கிராம் வரை

அரைக்க சாமான்கள்

வெங்காயம்—-3

பூண்டு—3 இதழ்கள்

இஞ்சி—சிறியதுண்டு

நல்ல சைசில் தக்காளி—-1

பொடிகள்

மிளகாய்ப்பொடி—அரை டீஸ்பூன்

தனியாப்பொடி—-அரை டீஸ்பூன்

ஜீராப்பொடி—-அரைடீஸ்பூன்

கரம் மஸாலா–கால்டீஸ்பூன்

மஞ்சள் பொடி—-சிறிது.

ருசிக்கு   உப்பு

பன்னீர்—200 கிராம்.  திட்டமான  துண்டுகளாக செய்து

கொள்ளவும்.

தாளிக்க,  பன்னீர் பொரிக்க   வேண்டிய  எண்ணெய்

செய்முறை.        கீரையைத்    தண்ணீரில்  அலசவும்.

கீரையை ஆய்ந்து,   கொதிக்கும்   தண்ணீரில் சற்று வேகவைத்து

தண்ணீரை வடிக்கட்டி தனியாக வைக்கவும். வெந்த

கீரையைக்   குளிர்ந்த  நீரைவிட்டு  அலசி வைக்கவும்.

அரைக்கக் கொடுத்தவைகளை  ஜலம் சேர்க்காமல்

மிக்ஸியிலிட்டு    அரைத்தெடுக்கவும்.

கீரையையும்  தனியாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில்  எண்ணெயைக்   காயவைத்து  மிதமான

சூட்டில்,   துண்டுகள் செய்யப் பட்ட பன்னீரை  இலேசாக

வறுத்தெடுக்கவும்.      வேறொரு     நான் ஸ்டிக் வாணலியில்ல்

சிறிது நெய்யும்  எண்ணெயும்  கலந்து  சூடாக்கி  அரைத்த

வெங்காய, தக்காளி விழுதைச் சேர்த்து  நிதான தீயில்

வதக்கவும்.     நன்றாக  வதங்கி      சுருண்டு

எண்ணெய் பிரிந்து வரும்  போது   பொடிகளைச் சேர்த்துப்

பிரட்டி,   அரைத்த பாலக் விழுதையும்  சேர்த்துக் கிளறவும்.

வேண்டிய அளவிற்கு,     கீரையை வேக வைத்து வடிக்கட்டிய

நீரைச் சேர்த்து கொதிக்க வைத்து பொரித்த பன்னீரைச்

சேர்த்து  திட்டமாக  உப்பைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு

இறக்கவும்.

கீரை     நிறம்  மாறாமலிருக்க   உப்பைக்  கடைசியில்

சேர்க்கிறோம்.

பன்னீரை  வறுக்காமல்   சேர்ப்பவர்களும்   உண்டு.

எல்லாவற்றுடனும்    சேர்த்துச் சாப்பிட பாலக் பன்னீர்

தயார்.

.கீரையை  நறுக்கி   மைக்ரோவேவில்,   5,  6 நிமிஷங்கள்

வேகவைத்து ,  பிறகு  அரைத்துச்  சேர்த்துச்  செய்வதும்

உண்டு

இந்த முறையிலும்   கீரை  பச்சென்று  நிறம் மாராமல்

இருக்கும். பன்னீர் கூட்டிக் குரைக்கலாம்.

பாலக் பன்னீர்

மார்ச் 10, 2011 at 6:19 முப 2 பின்னூட்டங்கள்

வெண்டைக்காய் ஸப்ஜி

நல்ல பிஞ்சு வெண்டைக்காயில் ஸப்ஜி செய்தால் ரொட்டிக்கு

மிகவும் ஏற்றதாக இருக்கும். வேண்டியவைகள்.

வெண்டைக்காய்—-கால்கிலோ

பெரிய வெங்காயம்—–2

பழுத்த தக்காளி –1

எண்ணெய்—2அல்லது 3 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் பொடி–சிறிது

மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்

உப்பு—ருசிக்கு

கடுகு—அரைடீஸ்பூன்

விருப்பப் பட்டால்—கரம் மஸாலா  சிறிது

செய்முறை—–வெண்டைக்காயைத் தண்ணீரில் அலம்பித்

துடைத்து சுத்தமான துணியில் பரத்தி ஈரத்தைப் போக்கவும்.

காயைச் சிறிய துண்டங்களாக   நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியையும்  தனித்தனியாக   பொடியாக

நறுக்கிக்   கொள்ளவும்.

நறுக்கிய காயுடன்  ஒருஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து

மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு  4 நிமிஷம் ஹை பவரில்

மைக்ரோவேவ் செய்து எடுக்கவும்.

வாணலியோ,நான்ஸ்டிக் பேனோ    எண்ணெயைக்

காயவைத்து   கடுகை வெடிக்கவிட்டு  வெங்காயத்தைச்

சேர்த்து வதக்கி  தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

சுருள வதக்கி,    உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்துக்

கிளறி ,  வெண்டைக்காயையும் சேர்த்து ,  ஸிம்மில் வைத்து

நன்றாக  வதக்கவும்.

காய் வதங்கியதும்   இறக்கி உபயோகிக்கவும்.

ரொட்டியுடன் சாப்பிட ஸப்ஜி தயார்.

வெண்டைக்காயுடன்  துளி ஆம்சூரோ.அல்லது துளிபுளி

பேஸ்ட்டோ   கலந்து   மைக்ரோவேவ் செய்து   தக்காளி

வெங்காயம் போடாமல்   கடுகை தாளித்து எண்ணெயில்

வதக்கி உப்பு காரம் போட்டு உபயோகிக்கலாம்.

காயை 2 அங்குல நீளத்திற்கு   மிகவும் மெல்லியதாக நறுக்கி

உப்பு காரம் பிசறி    எண்ணெயில் நேரடியாக வறுவலாகவும்

வறுத்தெடுக்கலாம்.

இப்போது நான் செய்தது    ஸப்ஜிதான்.  இப்படியே வீட்டில்

செய்தது  போட்டிருக்கிறேன்.

புளி,   ஆம்சூரெல்லாம் உபயோகிப்பது  காயின்

கொழகொழப்பை நீக்குவதற்கே.

கரிப்பொடி தூவியும் செய்யலாம்.

வெண்டைக்காய் ஸப்ஜி
மார்ச் 3, 2011 at 10:12 முப 2 பின்னூட்டங்கள்

ஆலுமட்டர் ஸப்ஜி

இதை என்ன உருளை, பட்டாணி கூட்டு,கறி என்று சொல்லலாமா?

எதைவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம், ருசி என்னவோ

மாறப்போவதில்லை.ஹிந்தி தாக்கம் நிறைய இருக்கிறது என்னிடம்.

அவ்வளவுதான்.

வேண்டியவைகள்.——நடுத்தர அளவு,உருளைக்கிழங்கு   6

உரித்த பச்சைப் பட்டாணி—-1 கப்

அரைப்பதற்கு

திட்டமானசைஸ்—வெங்காயம் 3

பழுத்த தக்காளி—–2

பச்சைமிளகாய்—2

இஞ்சி—சிறிய துண்டு

பூண்டு—2 இதழ்கள்

பொடிகள்—-கரம்மஸாலா,  தனியா,சீரகம் வகைக்கு1  டீஸ்பூன்

தாளிக்க,எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்

பிரிஞ்சி இலை–சிறியதாக 1

ருசிக்கு—உப்பு

நிறத்திற்கு—-அரைடீஸ்பூன் மஞ்சள்ப்பொடி

செய்முறை—–கிழங்குகளைத் தோல் சீவி சற்றுப் பருமனானதுண்டுகளாக

நறுக்கி நன்றாகத் தண்ணீரில்  அலசி  வடிக்கட்டவும்.

இதனுடன்  சுத்தம் செய்த  பட்டாணியும் சேர்த்து  1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய்  விட்டுக் கலந்து மைக்ரோவேவில் ஹைபவரில் 5நிமிஷங்கள்

வைத்து எடுக்கவும்.

அரைக்கக் கொடுத்தவைகளைத்  தண்ணீர் விடாமல் மிக்ஸியில்

மென்மையாக அரைத்து எடுக்கவும்.

சமைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையைத்

தாளித்து, அரைத்த விழுதைச்  சேர்த்து, நிதானமான   தீயில்  சுருளக்

கிளறவும்.

எண்ணெய்  பிரிந்து   கலவை சுருண்டு வரும்போது  பொடிகள்,  உப்பு என

யாவற்றையும் போட்டு சற்றுப் பிரட்டி   ஒன்றறைகப் தண்ணீர் சேர்த்துக்

கொதிக்க விடவும்.

ஆலு மட்டரைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு   சற்றுக் கிரேவியுடனே

வேகவைத்து   இறக்கி   உபயோகிக்கவும்.

உருளைக் கிழங்கை, முழுதாக   வேகவைத்து உரித்துத் துண்டங்கள்

செய்து,  பட்டாணியை வேக வைத்தும் சேர்க்கலாம்.

சில  காலிப்ளவர்   துண்டங்களையும் வேகும்போது சேர்க்கலாம்.

மிளகாயிற்குப் பதில் பொடியும் சேர்க்கலாம்.

உப்பு காரம் கிரேவியின் அளவிற்குத்  தக்கபடி அதிகரிக்கவும்.

ரொட்டி,பூரி,  தோசை, ஏன் சாதத்துடனும்  சேர்த்துச் சாப்பிட

ருசியானதுதான். மாதிரிக்குதான்   புகைப்படம்.

ஆலு மட்டர்ஸப்ஜி
பிப்ரவரி 21, 2011 at 11:27 முப 1 மறுமொழி

கத்தரிக்காய் காரக்கறி.

தினம் செய்வதில்  ஒவ்வொன்று போடலாம்என்றுதோன்றியது.

பிரமாதமானது ஒன்றுமில்லை.  கார கத்தரிக்காய் கறிசுலபமாக

செய்வதுதான்.   கறிப்பொடி எனது குறிப்புகளில் இருக்கிறது.

வேண்டியவைகள்.—-மீடியம் சைஸ்–உருளைக்கிழங்கு—4

சின்னசைஸ்—கத்தரிக்காய்—8

தக்காளி—1

பெரிய வெங்காயம்—-1

உறித்த பூண்டு—4 இதழ்கள்

மஞ்சள்பொடி—கால் டீஸ்பூன்.

கறிப்பொடி—-1டேபிள்ஸ்பூன்

கடுகு—-அரைடீஸ்பூன்

உப்பு—ருசிக்கு

எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை—-சிறிது

செய்முறை—-உருளைக்கிழங்கை   தோல் நீக்கி நீளவாக்கில்

நறுக்கி,   தண்ணீரில் அலசி வடிக்கட்டவும்.

பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

தக்காளியையும்   பொடியாக நறுக்கவும்.

நறுக்கிய உருளைக் கிழங்கை 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுப்

பிசறி    மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு  ஹைபவரில்

5 நிமிஷம் வைத்தெடுக்கவும்.

கத்தரிக்காயை மெல்லிய நீண்ட துண்டுகளாக நறுக்கி  நீரில்

அலம்பி வடியவிடவும்.

வாணலியில்   எண்ணெயைக் காயவைத்துகடுகை  வெடிக்கவிட்டு

முறையே பூண்டு,  வெங்காயம்,  தக்காளி எனச் சேர்த்து சுருள

வதக்கி,   கத்தரிக்காயைச் சேர்த்து , மஞ்சள்பொடி,உப்பு போட்டு

வதக்கவும். மிதமான தீயில், காய் வதங்கியதும்,மைக்ரோவேவ்

செய்த  உருளைக்கிழங்கை சேர்த்து,  கறிப்பொடியைத்தூவி

வதக்கி இறக்கவும். தாளிக்கும் போதே கறிவேப்பிலையை

சேர்த்து விடலாம்.

.கறிப்பொடிக்குப்பதிலாகதனியா,மிளகாய்ப்பொடிதேவைக்கேற்ப

வதக்கும்போது சேர்க்கலாம்.

வறுத்துப் பொடித்த வேர்க்கடலைப் பொடியும் சேர்க்கலாம்.

ஜெனிவாவில் எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் அக்ரூட்டைப்

பொடித்தும் சேர்ப்பார்கள்.  எந்த விதமாகிலும்  சத்துள்ளவைகளைச்

சேர்த்தால்  நல்லதுதானே.   இந்த,பூண்டு , வெங்காயமெல்லாம்

சேர்த்துச் செய்தால்  ரொட்டியுடன் சாப்பிட ஏற்றதாக அமையும்.

கத்தரிக்காய் காரக்கறி

பிப்ரவரி 16, 2011 at 10:58 முப 2 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


செப்ரெம்பர் 2021
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other followers

வருகையாளர்கள்

  • 534,610 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.