Posts filed under ‘குழம்பு வகைகள்’
வெந்தய பருப்புக் குழம்பு.
காய்கள் விரும்பியதைப் போட்டுச் செய்யுங்கள்.
Continue Reading ஜூன் 16, 2017 at 5:50 முப 37 பின்னூட்டங்கள்
காரக்குழம்பு
காய்கள் ஒன்றும் போடாது ஸுலபமாகத் தயாரிக்கும், ருசியான க் குழம்பு இது.
Continue Reading நவம்பர் 7, 2014 at 11:49 முப 19 பின்னூட்டங்கள்
காளன்
செய்வது சுலபம்தான். ருசியும் நன்றாக இருக்கிரது. மோர்க் குழம்புதான் என்று நினைக்க வேண்டாம். பெ யர் வித்தியாஸம் ஒன்றே ருசியைக் கூட்டும்.
Continue Reading ஏப்ரல் 30, 2013 at 12:28 பிப 14 பின்னூட்டங்கள்
பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு
உறித்த பூண்டும், சின்ன வெங்காயமும், பொடித்த கறிவேப்பிலையும் சேர்த்து செய்தால் கமகம வாஸனை ஊராத் தூக்காதா. பொருள்கள் அப்படிச் சொல்கிறது. ஸரிதானே.
Continue Reading ஓகஸ்ட் 26, 2012 at 7:37 முப 10 பின்னூட்டங்கள்
பச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.
வெந்தயக் குழம்பைத்தான் நாங்கள் மெந்திக் குழம்பு என்று பேச்சு
வழக்கில் சொல்லுவோம்.
துவாதசி சமையலில் சுண்டைக்காயும் ஒரு முக்கியமான இடத்தை
வகிக்கிறது.
சென்னையில் சுண்டைக்காய் சுலபமாக கிடைத்ததால் குழம்பும்
செய்து, சுண்டைக்காய்ப் பருப்புசிலியும், ப்ளாகில் போட செய்தும்,
படமெடுத்தும் வைத்திருக்கிறேன். சுலப முறையை எழுதுகிறேன்.
பருப்புசிலியைப் பின்னாடி பார்ப்போம். பலாக்கொட்டையும் பழ
சீஸனானதால் கிடைத்ததைச் சேர்த்துப் போட்டு ச் செய்தேன்.
இப்போது குழம்பிற்கு வேண்டியதைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்
புளி ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தாளித்துக்கொட்ட—கடுகு—அரைடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—-1
நல்லெண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
வெல்லம்—சிறிது
ருசிக்கு—உப்பு
ஸாம்பார்ப் பொடி—3 டீஸ்பூன்
அரிசிமாவு—ஒரு டீஸ்பூன்
முக்கியமான பச்சை சுண்டைக்காய்—கால்கப்
இருந்தால் பலாக்கொட்டை—7 அல்லது 8
கறிவேப்பிலை—சிறிது.
செய்முறை
புளியை 2 கப் ஜலம் விட்டுக் கறைத்துக் கொள்ளவும்.
பச்சை சுண்டைக்காயை காம்பு நீக்கி நன்றாக நசுக்கித்
தண்ணீரில் அலசவும்.
விதைகள் ஓரளவிற்கு வெளியேறும். வடிக் கட்டவும்.
பலாக் கொட்டையையும் மேல் தோல் நீக்கி உட் பருப்பைத்
துண்டுகளாகச் செய்து கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, கடுகு
வெந்தயம்,பருப்புகள்,பெருங்காயம்,மிளகாய் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, சுண்டைக்காயைச் சேர்த்து நிதான தீயில்
நன்றாக வதக்கவும்.
சுண்டைக்காய் வதங்கியதும், ஸாம்பார்ப் பொடியைச் சேர்த்துச்
சற்றுப் பிரட்டி புளி ஜலத்தைச் சேர்க்கவும்.பலாக் கொட்டையையும்
உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
துவாதசி சமையல் ஆனபடியால் பூண்டு, வெங்காயம்
சேர்ப்பதில்லை.
துளி வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
குழம்பு சற்று சுண்டி சுண்டைக்காய் வெந்தவுடன்
சற்று திக்காக இருப்பதற்காக அரிசி மாவைத் துளி
ஜலத்தில் கறைத்துக் கொட்டிக் கொதிக்கவைத்து இறக்கவும்.
முன்போ, பின்போ கறிவேப்பிலை சேர்க்கவும்.கமகம
குழம்பு தயார்.
சுண்டைக்காயும், பலாக்கொட்டையும் ஸரியான ஜோடி.
ஸாம்பார் பொடிக்குப் பதில்,தனியா,மிளகாய், மிளகுப் பொடி
சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சேர்த்து வறுத்து அறைத்தும்
செய்யலாம் சாதத்துடன். நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பருப்பு சாதத்துடன் துவாதசியன்று சூப்பர் காம்பினேஷன்.
பகோடா மோர்க் குழம்பு
இதுவும் நம்முடைய மோர்க்குழம்பு வகைபோல செய்தேன்
சென்ற ஆகஸ்ட்டில் அமெரிக்காவில் தயானந்த ஸரஸ்வதி
ஸ்வாமிகள்ஆசிரமத்தில்பென்ஸில் வேனியா குருகுலத்தில்,அவருடையஸதாபிஷேகக்கொண்டாட்டத்தில்
கலந்துகொண்டு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இந்த
மோர்க்குழம்பு சற்று வித்தியாஸ முறையில் ருசித்தது.
அப்போதே இதை மனதில்க் கொண்டு எழுதப் ப்ளான் மனதில்
தோன்றியது. நேரம் இப்போதுதான் என்று நினைக்கிறேன்.
வெங்காயம் நான் சேர்த்து செய்தேன். சாதாரணமாக நாம்
வெங்காயம் மோர்க் குழம்பில் சேர்ப்பது கிடையாது.
இதுவும்.ஒரு தனி ருசிதான்.
பகோடாக்களைச் செய்து கொண்டு மோர்க் குழம்பில் சேர்த்து ச்
செய்வதுதான் இதன் முக்கியம். கடலைமாவைக் கரைத்து
செய்யாமல்அரைத்து செய்திருப்பதுதான் நம்முடைய வழி.
வேண்டியவைகள்
பகோடா தயாரிக்ககடலைமாவு—-6 டேபிள் ஸ்பூன்
பெறிய வெங்காயம் —1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய்ப் பொடி—-கால் டீஸ்பூன்
உப்பு—-கால் டீஸ்பூன்
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
மோர்க் குழம்பிற்கு வேண்டியவைகள்
கெட்டியான மோர்——3 கப்பிற்கும் மேல்
கடலைப் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
தனியா—-2 டீஸ்பூன்
கடுகு—-1 டீஸ்பூன்
பச்சைமிளகாய்—–3
வற்றல் மிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, சிறிது பெருங்காயம்
மஞ்சள்ப் பொடி—–சிறிது
ருசிக்கு—-உப்பு
செய்முறை
கடலைப்பருப்பு,தனியா.கடுகை ஊரவைத்து பச்சைமிளகாய்,
தேங்காய்த்துருவல்,வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
திட்டமாக ஜலம் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து
கரைத்து வைக்கவும்.
கடலைமாவுடன், நறுக்கிய வெங்காயம்,உப்பு, மிளகாய்ப்பொடி
சேர்த்துக் கலந்து ஜலம் விட்டுத் தளரப் பிசைந்துகொள்ளவும்.
சற்று லூஸாக இருக்கட்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக், கலந்த மாவை
பகோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப்
பொறித்தெடுக்கவும். ஷேப்பைப் பற்றிக் கவலை வேண்டாம்.
மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி
மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பொறித்தெடுக்கும் போதே பகோடாக்களைக் குழம்பில் சேர்த்து
விடவும்.
நல்ல பால் பொங்குவதுபோல் நுறைத்து வரும்போது கிளறி
தீயை மட்டுப்படுத்தி இரண்டு நிமிஷங்கள் மேலும்
வைத்திருந்து குழம்பை இறக்கவும்.
கடுகு, பெருங்காயம் தாளித்து மூடி வைக்கவும்.
பகோடா மிருதுவாக ஆகி, குழம்பும் சாப்பிட தயாராகிவிடும்.
இருக்கவே இருக்கிறது கொத்தமல்லி,கறிவேப்பிலை.
மேலே தூவுங்கள். காரம் அதிகரிக்க மிளகாயை தாளிப்பில்
சேர்க்கவும்.
வேண்டுமானவைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
திருவாதிரைக் குழம்பு
களியுடனான குழம்பு இது.
Continue Reading திசெம்பர் 20, 2010 at 6:27 முப 5 பின்னூட்டங்கள்