Posts filed under ‘கூட்டுவகைகள்’
காய்கறி ஸ்டூ
தேங்காசேர்த்துத்ய்ப்பால் சேர்த்துத்
இதையும் நான் கூட்டு வகையில்தான் சேர்த்திருக்கிறேன்.
தேங்காய்ப் பால் தயாரிப்பது எப்படி என்பதை முதலில்
பார்ப்போம்.
ஒரு தேங்காயைத் துருவி சிறிது சுடு நீர் தெளித்ப்
பிழிந்தால் கெட்டியாக சிறிது தேங்காயப் பால
கிடைக்கும். பின்னர் ஒருகப் சூடான நீர் சேர்த்து
தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பிழிந்தால்
தேங்காய்ப்பால் கிடைக்கும்.
வேண்டிய சாமான்கள்——-தோல் நீக்கி
நறுக்கியஉருளைககிழங்கு ஒருகப்
உறித்த பட்டாணி–அரைகப்
கேப்ஸிகத் துண்டுகள்—-அரைகப்
நறுக்கிய காலிப்ளவர்—ஒருகப்
நறுக்கிய கேரட்—-அரைகப்
நறுக்கிய தக்காளிப் பழம்-முக்கால் கப்
பச்சை மிளகாய்–மூன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம்–ஒருகப்
லவங்கம்—–6, ஏலக்காய்–ஒன்று
மிளகுப் பொடி—-இரண்டு டீஸ்பூன்
ஒரு துளி மஞ்சள்ப் பொடி
ருசிக்கு உப்பு
எண்ணெய்—–இரண்டு டேபிள் ஸ்பூன்
பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி ஏலக்காய் லவங்கத்தைத்
தாளித்து, வெங்காயம், மிளகாயை வதக்கி தக்காளி,
காய்கறிகளைச் சேர்த்து சிறிது பிறட்டி உப்பு ,மிளகுப்பொடி
மஞ்சள் சேர்க்கவும்.
திட்டமாகத் தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்.
வெந்த காய்க் கலவையில் தேங்காய்ப் பாலை விட்டு
ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறி வேப்பிலை சேர்த்து
உபயோகிக்கவும்.
கலந்த சாதம், புலவு, சேவை, அடை, தோசை,என
எல்லாவற்றுடனும் உபயோகிக்கலாம்.
தேங்காய்ப் பால் வேண்டிய அளவு தயாரித்து உபயோகிக்கவும்.
சிவப்பு கீரைத்தண்டு கூட்டு.
தெய்வ தரிசநத்திற்குப் போன இடத்தில் நல்ல கீரைத்தண்டும் தரிசிக்கக் கிடைத்தது. விடலாமா?
மாப்பிள்ளை வாங்கி வந்தார்.
என்கையில், எப்படியெல்லாம் மாரியது. இதுதான் ஸமாசாரம். பரவாயில்லை. நீங்களும் படியுங்கள்.
Continue Reading திசெம்பர் 10, 2014 at 3:57 பிப 14 பின்னூட்டங்கள்