Posts filed under ‘கூட்டு வகைகள்’

என்ன சமையல்?

ஸிம்பிலாக   சமைக்கிறேன்  என்று  பிரதீஷா செய்த சமையலை

நீங்களும் தான்  ருசியுங்களேன்.     அஸ்ஸாம் டாலும் சென்னை

ரஸமும்     பொதுவான    கறிகளும்கலந்து  ருசியுங்களேன்.

ஒரு டால்.   பயத்தம்பருப்பும்,   மசூர்  டாலும் கலந்து வேகவைத்து

பொடியாக  நறுக்கிய  வெங்காயம்,ப.மிளகாய்,  இஞ்சி, பூண்டு,

தக்காளியை நன்றாக  வதக்கிச் சேர்த்து  உப்பு, மஞ்சளுடன்

சேர்த்துக் கொதிக்க  வைத்து,   கொத்தமல்லி சேர்த்தது.

மஸாலா போடலை.   துளி  சீரகப்பொடி போட்டது.

உருளைக் கிழங்கை    மெல்லியதாக   நறுக்கி   1ஸ்பூன்

எண்ணெயுடன்   5 நிமிஷங்கள்   மைக்ரோவேவ்  செய்து எடுத்து

வாணலியில்   எண்ணெயில்  கடுகைத் தாளித்து,  உப்பு,காரம்

மஞ்சள்   சேர்த்து  நன்றாக   வதக்கியது.

அடுத்து   நிறைய  தக்காளியை  மைக்ரோவேவில்  வேகவைத்து

எடுத்து துளி  புளி சேர்த்து  கறைத்து   சாறு எடுத்து,  ரஸப்பொடி,உப்பு,

பூண்டு விழுதுடன்   நிதான தீயில்   நன்றாகக்   கொதித்துக்

குறைந்தவுடன்,    துவரம்பருப்பு   வேகவைத்ததைக் கறைத்துக் கொட்டி

ஒது கொதி வந்தவுடன்   இறக்கி,   நெய்யில்   கடுகு,  பெருங்காயம்

பொரித்துக் கொட்டி,    கொத்தமல்லித்தழை  தூவி இறக்கியது.

கமகம ரஸம்.

வீட்டில்  தோய்த்த   புளிப்பில்லாத   தயிர்.

கொஞ்சம்   ஊறுகாய்.

வதக்கிய    வெண்டைக்காய் கறி.

நடுவில்    குட்டி காப்ஸிகம்   பஜ்ஜி அதுவும் சுடச்சுட

பாக்கலாமா,   கேட்கலாமா,  ருசிக்கலாமா

பஜ்ஜியைச் செய்யலாம்.

குட்டி கேப்ஸிகம்

வேண்டிய அளவு–

-கடலைமாவு,துளி அரிசி மாவு

ருசிக்கு  வேண்டிய   உப்பு,மிளகாய்ப்பொடி

துளி   ஸோடா உப்பு

துளி பெருங்காயப்பொடி

கொத்தமல்லி இலை கொஞ்சம்

கேப்ஸிகம் வேண்டியஅளவு.

செய்முறை

மிளகாயை   இரண்டாக  நறுக்கிக்  கொள்ளவும்.

முழுதாகவும்   போடலாம்.

உப்பு, ஸோடா,   பெருங்காயம்,  மிளகாய்ப்பொடி யாவற்றையும்

மாவுடன்   சேர்த்து    நன்றாய்க்  கலக்கவும்.

சிறிது சிறிதாகத்   தண்ணீர் சேர்த்து   இட்டிலி  மாவு பதத்தில்

நன்றாகக்  கறைத்துக் கொள்ளவும்.கொத்தமல்லியையும்

சேர்க்கவும்.

வாணலியில்    எண்ணெயைக்   காயவைத்து    நறுக்கி வைத்திருப்பதை

மாவில்   அமிழும்படி    தோய்த்து   பஜ்ஜிகளாகப் போடவும்.

ஒன்றோடொன்று   ஒட்டாமல்   சட்டுவத்தால் பிரித்து விட்டு,

சிவந்து வரும்போது   திருப்பிவிட்டு  மறுபுறமும் சிவந்ததும்

எடுத்து   டிஷ்யூ  பேப்பரில்   வைத்தெடுத்து  உபயோகப் படுத்தவும்.

எண்ணெய்  திட்டமான  சூட்டில் இருக்கவும்.

புகையும்படி   அதிக   சூடு வேண்டாம்.

கலவையும், குட்டி காப்ஸிகமும்

பஜ்ஜிகள்

என்ன  சமையல் என்கிற  தலைப்பு.   சமையல்  சொல்லிவிட்டேன்.

குக்கரில்  சாதம் ரெடி.   அப்பளாமும் பொரித்தாகிறது.

எல்லாரும்  வந்து  சாப்பிடலாம்.

மேஜையிலும்    வைத்தாகிவிட்டது.

என்ன சமையல்

ஜூன் 1, 2012 at 2:49 பிப 14 பின்னூட்டங்கள்

வேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.

புதியதான   வேர்க்கடலையைப்   ப்ரெஷ்ஷாக   பார்த்ததும்   கூட்டோடு

சேர்த்துப் பண்ணுவது   ஞாபகத்திற்கு வந்தது.  சாப்பிடறதோட எழுதறது

ஒரு வைடமின்  B12   எனக்கு. மார்க்கெட்டிலிருந்து   பீர்க்கங்காயும் நான்

தயார்  என்றது. ஸரி. கூட்டு மட்டும்   நான்  பண்றேன்.  பர்மிஷன்

வாங்கினேன்.

ஒரு  அரைகப்புக்கு மேலேயே   வேர்க்கடலையை  உறித்தேன்.

எங்கள் ஊர்பக்கம்  மல்லாக் கொட்டை  என்று சொல்லுவோம்.

மைசூர்லே  கள்லேகாய். நார்த்லே  இது  பதாம்.

வேர்க்கடலை என்ற  பெயர்  அதிகம்.காமன் இல்லையா?

வேண்டியவைகள்.

பீர்க்கங்காய்—-2  திட்டமான ஸைஸ்

தேங்காய்த்துருவல்—-2 டேபிள்ஸ்பூன்

மிளகு—1டீஸ்பூன்

சீரகம்—அரை டீஸ்பூன்

மிளகாய்—-4   காரத்திற்கு   தகுந்தாற்போல்

உளுத்தம் பருப்பு—-2 டீஸ்பூன்

அரிசி—1டீஸ்பூன்

உறித்த  பச்சை வேர்க்கடலை—அறைகப்பிற்கு மேல்

தாளித்துக்கொட்ட—-வேண்டிய அளவு எண்ணெய்

கடுகு,  உளுத்தம்பருப்பு,   பெறுங்காயம்  வகைக்கு  சிறிதளவு

இருக்கவே இருக்கு  கொத்தமல்லி  கறிவேப்பிலை.

பருப்பு–வெந்த   துவரம்பருப்போ,   அல்லது   பயத்தம்பருப்போ

4அல்லது  5 கரண்டிகள்.

ருசிக்கு—உப்பு

மஞ்சள் பொடி   சிறிது

செய்முறை.

பீர்க்கங்காயை   நன்றாக   அலம்பி   தோலைச் சீவி எடுக்கவும்.

தோலையும்   உபயோகப் படுத்தி  விடலாம். எதுக்குத் தெறியுமா?

அதையும் கூட ஒரு  துவையலாக   அறைக்கலாம்.

அதை  அடுத்துப் பார்ப்போம்.

காயை திட்டமான   துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளுவோம்.

மிளகாய்,  உ.பருப்பு,அரிசி,  மிளகை  துளி எண்ணெயில்  நன்றாக

வறுத்துக் கொள்வோம்.

தேங்காய் சேர்த்து   சீரகத்துடன்  வறுத்தவற்றை  மிக்ஸிலிட்டு

துளி ஜலம் சேர்த்து  அறைத்து வைத்துக் கொள்ளுவோம்.

வழக்கமான   பாத்திரம்  இருக்குமே, அதில்  சிறிது ஜலம்

வைத்து   நறுக்கிய காய்,வேர்க்கடலை,உப்பு, மஞ்சள்ப்பொடி

சேர்த்து   வேக வைப்போம் அதிக நேரமெடுக்காது.

காய்   வெந்ததும்,    அரைத்த  விழுதைக் கரைத்துக் கொட்டி

ஒரு கொதிவிட்டு  பருப்பையும்  சேர்த்துக்     கொதிக்கவைத்து

இறக்குவோம்.

அரிசி   சேர்ப்பது   நீர்க்கும்   காய்களை   ஓரளவு   சேர்ந்தாற்போல

இருப்பதற்குதான்.

இஷ்ட்டப் பட்டால்   துளி   நெய்யில்   கடுகு,  பெருங்காயத்தைத்

தாளித்துக் கொட்டினால்   கூட்டு ரெடி. எண்ணெயிலும்  தாளிக்கலாம்.

கொத்தமல்லி  கறிவேப்பிலை  சேர்க்கவும்.

இதற்கு   ஜோடியாக    புளி வைத்து அறைத்த  துவையலையும்

சொல்லி விடுகிறேன்.  கொஞ்சம்  பொறுமையாகப் பாருங்கள்.

துவையலுக்காக வேண்டியவை.

பெறிய சைஸ்  வெங்காயம்—1

இஞ்சி—1 அங்குல நீளம்

இஷ்டப்பட்டால்  4அல்லது5  பூண்டு இதழ்கள்

மிளகாய்—-3அல்லது 4 எதுவானாலும் ஸரி

வறுப்பதற்கு—எண்ணெய்

உளுத்தம் பருப்பு—-ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு,  பெருங்காயம்  துளி

புளி—ஒரு நெல்லிக்காயளவு

ருசிக்கு –உப்பு

கொத்தமல்லி,   கறிவேப்பிலை   எதுவானாலும் கூட

வைக்கலாம்.  கலர்  பச்சையாகவும்  வாஸனையாகவும் இருக்கும்.

செய்யலாமா?

வாணலியில்   எண்ணெயைக் காயவைத்து  கடுகை வெடிக்கவிட்டு

மிளகாய் பருப்பை வறுத்துக்கொண்டு  நறுக்கிய  வெங்காயம், இஞ்சி

வதக்கிக்கொண்டு  நருக்கிய  பீர்க்கந் தோலையும் சேர்த்து  நன்றாக

வதக்கவும்

புளி,   உப்பு சேர்த்து   வதக்கியதைத்   துவையலாக மிக்ஸியில்

அறைத்தெடுக்கவும்.

பொறித்த  கூட்டும்,   புளிப்புத் துவையலும்  நல்ல காம்பினேஷன்.

கொஞ்சம்  அப்பளாத்தை சுட்டுவிட்டு   பருப்பு ஜலம்விட்ட நாட்டு

தக்காளி ரஸமும் வைத்துவிட்டால்  ஒரு ஸிம்பிளான  ருசியான

சமையல்தான்  பிடித்தவர்களுக்கு. யாருக்கு பிடிக்கும்  பார்க்கலாம்

பீர்க்கங்காய்

பச்சை வேர்க்கடலை

பீர்க்கங்காய் வேர்க்கடலை கூட்டு

துவையலுக்கான வதக்கல்

பச்சென்ற துவையல்

கூட்டும் துவையலும்

.

மார்ச் 24, 2012 at 3:54 பிப 9 பின்னூட்டங்கள்

மக்னி அல்லது மகானா.makhana

நான்   மஃக்னி யைப்பற்றி   இங்கே எழுதுகிறேன்.  மும்பையில்

மக்னி என்று சொல்வது   பெரும்பாலான  இடங்களில்  மகானா

என்று அதுவும்  வட இந்தியாவில்   சொல்லப்படுகிறது.  அதைப்பற்றி

விவரம் கேட்டு  எழுதியதில்   ஏராளமான  விவரங்கள்  அறிய

முடிந்தது.  எனக்கு தெறிந்ததில்  சிலவற்றை எழுதுகிறேன்.

மகானா.     makhana     இங்லீஷ் பெயர்     foxnut

இது ஒரு   தண்ணீரில்  வளரும்    தாவரம்.

லில்லி  குடும்பத்தைச்  சேர்ந்தது.    இலை  ரவுண்ட்ஷேப்.

பெறிய அளவு.  இலை மேலே பச்சை நிறம்.  கீழே  பர்பல் நிறம்.

பூவும்–பர்பல்நிறம்தான்.

ஒயிட்  கலர்,  ஸ்டார்ச்சி ஸீட்.  சாப்பிடத் தகுந்தது.

விதைக்காக கல்ட்டிவேட் செய்கிரார்கள்.

விளையும்  இடங்கள்—இந்தியா,சைனா, ஜப்பான்.

சீதோஷ்ணம்–ஹார்ட் ட்ரை ஸம்மர்,கோல்ட் வின்ட்டரில்

பயிராகும்.

லேட் ஸம்மரில்  கலெக்ட் செய்வார்கள்.

3000  வருஷங்களாக  சைனாவில்  விளைவிக்கிறார்கள்.

இந்தியாவில் பீஹாரில் மாத்திரம் 96000 ஹெக்டேரில்

தண்ணீரில்   பயிராகிரது.

இதை  பச்சையாகவும்,   உணவுகளில்  சேர்த்தும் சாப்பிடலாம்.

சைனாபெயர்—-       Qian’shi

சைனாவில்   மருந்துகளிலும்,  ஸூப்புகளிலும், மற்றும் பல

விதங்களிலும் உபயோகிக்கிரார்கள்.

ஆண்மை பலப்படும், முதுமை  தள்ளிப்போகும் என சைனீஸ்

நம்புகிறார்கள்.

இந்தியாவில் ,   வட இந்தியாவிலும்,,   இந்தியாவின் மேற்குப்

பகுதிகளிலும்,  அதிக உபயோகமாகிறது.

பீஹாரில்   பண்டிகைகளிலும்,  கடவுளுக்கான  நிவேதனப்

பண்டங்களிலும்,   இது அதிகமாக உபயோகப் படுத்தப்

படுகிரது.

கஞ்சி, பாயஸம்,லட்டு,  புட்டிங்,    சமையல் என பல

விதங்களில்   மிகுதியாக  உபயோகப் படுத்துகிறார்கள்.

நான் அறிந்து  கொண்டதை எழுதியிருக்கிறேன்.

ஜெநிவாவில்   என்   சம்மந்தி அம்மா   அவர்கள்  செய்ததையும்,

படம்பிடித்து  வைத்திருந்தேன்.   ஷாஹி மட்டர் மகானா.

இதை   வழக்கமான   ஸாமான்களுடன்   முந்திரி பருப்பையும்

சேர்த்து அரைத்து,மட்டரை   வேகவைத்துச் சேர்த்து,  மகானாவை

வறுத்துச் சேர்த்துச் செய்தது.

எல்லா கடைகளிலும்,    வட இந்தியாவில் கிடைக்கிறது.

லோடஸ் ஸீட் என்று    சிலரும்,இது வேறு  என்று  சிலரும்

சொல்கிறார்கள்.   இப்போது   முக்கியமாக    தென்நிந்தியாவிலும்

கிடைப்பதாகச் சொல்கிரார்கள்.

ஷாஹி மட்டர் மகானா

சோளப்பொரி   மாதிரி   சற்றுப் பெறிய  சைஸில்  பாக்கெட்டுகளில்   கிடைக்கும்.நான் இங்கு  இன்னமும்

விசாரிக்கவில்லை. ரொட்டி, பூரி  போன்ற   வட இந்திய

உணவுகளுடன்  நன்றாக  இருக்கிரது.

பிப்ரவரி 13, 2012 at 6:32 முப 5 பின்னூட்டங்கள்

காப்ஸிகம் க்ரேவி

இதுவும்  சுலபமான  ஒன்றுதான்.  ரொட்டியுடன்   சாப்பிடநன்றாக

இருக்கும்.

வேண்டிய    சாமான்கள்

திட்டமான சைஸில்—-3 உருளைக் கிழங்குகள்

காப்ஸிகம்—5

வெங்காயம்—பெரியதாக ஒன்று

அரைப்பதற்கு

தக்காளி—-1

வெங்காயம்—1

பூண்டு இதழ்கள்—5

சீரகம்—அரை டீஸ்பூன்

சின்ன துண்டு—இஞ்சி

பொடிகள்

மிளகாய்ப் பொடி—-1டீஸ்பூன்

மஞ்சள்ப்பொடி–அரைடீஸ்பூன்

ருசிக்கு—-உப்பு

எண்ணெய்—–2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க–லவங்கம்   3

செய்முறை—–உருளைக்கிழங்கை   வேகவைத்து   உறித்து

துண்டங்களாகச்  செய்து கொள்ளவும்.

அரைக்கக்  கொடுத்தவைகளை  மிக்ஸியில்நன்றாகஅரைத்துக்

கொள்ளவும்.

காப்ஸிகத்தை  திட்டமானதுண்டங்களாகச்செய்துகொள்ளவும்.

வெங்காயத்தையும்  நறுக்கிக் கொள்ளவும்.

நான்ஸ்டிக்பேனிலஎண்ணெயைக்காயவைத்துவெங்காயத்துடன்

லவங்கம் சேர்த்து   வதக்கி  ,  அரைத்த விழுதைக்கொட்டி

சுருள வதக்கவும்.

கேப்ஸிகம்    சேர்த்து   சிறிது வதக்கி , வேகவைத்த கிழங்குத்

துண்டங்கள்   ,உப்புகாரம்,   மஞ்சள்பொடி , ஒன்றரைகப்தண்ணீர்

முதலானவைகளைச் சேர்த்து   கொதிக்க வைக்கவும்.

க்ரேவி சற்று  கெட்டியாகும் வரை கொதிக்கவைத்துஇறக்கவும்.

காரத்திற்கு  பச்சை  மிளகாயும்  சேர்க்கலாம்.

இதையும் விருப்பமான   ரொட்டி, பூரி முதலானவற்றுடன்

ருசிக்கலாம்.

காப்ஸிகம் க்ரேவி

ஏப்ரல் 12, 2011 at 10:06 முப 2 பின்னூட்டங்கள்

மணத்தக்காளிக்கீரைக் கூட்டு. எளியமுறை.

மிகவும் சுலபமான  மருத்துவ குணமுள்ள    எளிய கூட்டு இது.

வேண்டியவைகள்

மணத்தக்காளிக் கீரை—-2கட்டு

தேங்காய்த்துருவல்—அரைகப்

பயத்தம்பருப்பு—–அரைகப்

மிளகாய்—2

சீரகம்–1 டீஸ்பூன்

உளுத்தம்பருபபு—2 டீஸ்பூன்

பூண்டு.உறித்த இதழ்கள்—3

நெய்—2 டீஸ்பூன்

ருசிக்கு—உப்பு

துளி மஞ்சள் பொடி

சிறிது,   கடுகு,   பெருங்காயம்.

செய்முறை.

கீரையின் இலைகளை   ஆய்ந்து நறுக்கி த்  தண்ணீரில்

நன்றாக அலசி   வடிக்கட்டவும்.

வெறும் வாணலியில்  பயத்தம் பருப்பை சற்று சிவக்க வாஸனை

வரும்படியாக   வறுத்துக் கொள்ளவும்.

துளி நெய்யில்   மிளகாய்,  உளுத்தம் பருப்பை  வறுத்துக் கொண்டு

பூண்டையும் சேர்த்து இறக்கவும்.

ஆறினவுடன் தேங்காய்,   சீரகம் சேர்த்து   மிக்ஸியில் நன்றாக

அறைத்துக் கொள்ளவும்.

வறுத்த பருப்பை   நன்றாகக் களைந்து   ஒண்ணரைகப் ஜலமும்,

கீரையும் , மஞ்சள் சேர்த்து  ப்ரஷர் குக்கரில்   2 விஸில் விட்டு

நன்றாக  வேகவைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த கீரை,  பருப்புடன்   அரைத்த கலவை, வேண்டிய

உப்பு சேர்த்துக்   கிளறி  ஒரு  கொதிவிட்டு இறக்கவும்.

நெய்யில் கடுகு,   பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

ஒரு   தக்காளியையும் வதக்கி சேர்த்து   அரைக்கலாம்.

வாய்ப்புண்,  வயிற்றுப் புண் முதலானவைகளை    ஆற்றும்

குணமுள்ளது இக்கீரை. காய்களையும்.பச்சையாக சமைத்தும்

வற்றலாகச் செய்தும்  உபயோகப் படுத்துதல் இன்றும் நடை

முறையில் உள்ளது.    பத்தியச் சாப்பாடுகளில்  மணத்தக்காளி

வற்றல்   முதன்மையானது.

மணத்தக்காளிக்கீரை

கீரைக் கூட்டு

ஏப்ரல் 5, 2011 at 10:02 முப 4 பின்னூட்டங்கள்

சோலே[செனாமஸாலா]

வேண்டியவைகள்

வெள்ளை கொண்டைக் கடலை—-2கப்காபூலிச்செனா]

அரைக்க.வெங்காயம்—-பெறியதாகஒன்று

பூண்டு—-4 இதழ்கள்

இஞ்சி–அரை அங்குலத் துண்டு

தக்காளி–பெறியதாக 1

வேண்டிய பொடிகள்—தனியாப்பொடி–2 டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன்

மஞ்சள்பொடி–அரை டீஸ்பூன்

ஏலப்பொடி–சிறிது

பொடிக்க-லவங்கம்–8

மிளகு—1 டீஸ்பூன்

பட்டை—சிறு துண்டு

தாளிக்க,எண்ணெய்—-4டேபிள்ஸ்பூன்

பிரிஞ்சி இலை–1

ருசிக்கு—உப்பு

கெட்டியாகக் கரைத்த  புளி ஜலம்—-3 டேபிள்ஸ்பூன்

பச்சைக் கொத்தமல்லி—–சிறிதளவு

செய்முறை.—-கடலையை   5,  6,மணிநேரத்திற்குக்   குறையாமல்

தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

கேஸ்ரோலில்   சூடான தண்ணீர் விட்டு கடலையைப் போட்டு மூடி-

-வைத்து ஊறவைத்தால்  அவசர சமயங்களில் சீக்கிரமாகவே

ஊறும்.

தக்காளியைத் தனியாகவும்,     பூண்டு,வெங்காயம்,இஞ்சி இவைகளைச்

சேர்த்துத் தனியாகவும்     மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

பட்டை,லவங்கம்,  மிளகு இவைகளைப்   பொடிக்கவும்.

ஊறவைத்த   கடலையை   நான்கு கப் ஜலம் சேர்த்து ப்ரஷர்

குக்கரில்  நன்றாக வேகவைக்கவும். இரண்டு மூன்று விஸில்

வந்த பிறகு ஸிம்மில் வைத்து 4 ,அல்லது 5 நிமிஷங்கள்வைத்து

இறக்கவும்.

சற்று பெறிய வாணலியிலோ, அல்லது    நான் ஸ்டிக் பாத்திரத்திலோ

எண்ணெயைக் காய வைத்து,   அரைத்த வெங்காய இஞ்சி,பூண்டு

விழுதைச் சேர்த்து  நிதான தீயில் நன்றாக க் கிளறிக் கொடுத்து

வதக்கவும்.

எண்ணெய் பிறிந்து  வருமளவிற்கு வதக்கி எல்லாப் பொடிகளையும்

சேர்த்துக் கிளறி,   தக்காளி விழுதைச் சேர்த்துத்  திரும்பவும்

வதக்கவும்.  எண்ணெய் போதாவிட்டால் சிறிது விடவும்.

மஸாலா சேர்ந்து வரும்போது, பிரிஞ்சி இலையைச் சேர்த்து

வெந்த கடலையையும் , ஜலத்துடனேயே   சேர்த்துக்    கொதிக்க விடவும்.

உப்பு,   கடலையை   வேக வைக்கும் போதும் சேர்க்கலாம்..

இப்போதும் சேர்க்கலாம். கொதிக்கும் போதே புளி ஜலத்தைச்

சேர்க்கவும்.

நனறாகக் கொதித்து     கலவை  வேண்டிய அளவிற்கு கூட்டுப்

பதம் வரும் போது இறக்கி   கொத்தமல்லியைத் தூவவும்.

நெகிழ வேண்டுமானால்  வேண்டிய அளவிற்கு  கொதிக்கும் போதே

ஜலத்தைக் கூட்டவும்.

கலவை   பிரகு கூட கெட்டியாகும் வாய்ப்பு உள்ளது.

இரண்டு ஸ்பூன் வெந்த கடலையை எடுத்து  மசித்தும்

சேர்க்கலாம்.

கரம் மஸாலா பிடிக்காதவர்கள்  அதை நீக்கி வெங்காயத்தை

அதிகம் சேர்த்தும் தயாரிக்கலாம்.

ரொட்டி, பூரிவகைகளுடனும்,   சாதத்துடனும், சமோசாக்களுடனும்

சேர்த்துச் சாப்பிட ருசியானதுதான்.

வழக்கம்போல உப்பு, காரம்     உங்கள் கையில்.

 

 

 

 

 

 

நவம்பர் 19, 2010 at 1:21 பிப 1 மறுமொழி

காய்கறி ஸாகு

இதுவும் ஒருவிதக்  காய்கறிக் கலவையின் கூட்டே.

சுலபமாகவும்  செய்யலாம்.

வேண்டியவைகள்.

உருளைக் கிழங்கு ——2 தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.

கேரட்—-2

பச்சைப் பட்டாணி—அரைகப்

பொடியாக நறுக்கிய—பீன்ஸ்,   கோஸ் தலாஅரைகப்

காப்ஸிகம்—-2 .துண்டுகளாக   நறுக்கிக் கொள்ளவும்.

நூல்கோல்,    காலிப்லவரும் சேர்க்கலாம்.

தாளிக்க       நறுக்கிய   வெங்காயம்   ஒன்று

எண்ணெய்—1  ‘ டேபிள் ஸ்பூன்ஸ்பூன்,   கடுகு—அரைடீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு—-1 டீஸ்பூன்      லவங்கப் பட்டை  சிறிது 

பெருங்காயப்பொடி–அரை டீஸ்பூன்

தேவைக்கு—-உப்பு.-    மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்

அரைப்பதற்கு—–3 பச்சை மிளகாய்

பொட்டுக் கடலை[உடைத்தது]—–2 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய்— அரைகப்

மிளகு-அரை டீஸ்பூன்

சீரகம்—-அரை டீஸ்பூன்

தனியா–2 டீஸ்பூன்.

மேலே தூவ

நெய் சிறிது,   முந்திரி 5,  6  .

பச்சைக் கொத்தமல்லி  —சிறிது

செய்முறை—-நறுக்கிய காய்களை அலம்பி வடிக்கட்டவும்.

அரைக்கக் கொடுத்திருப்பவற்றை   மிக்ஸியிலிட்டு சிறிது

ஜலம் சேர்த்து நனறாக அறைத்தெடுக்கவும்.

வாணலியி்ல் எண்ணெயில் கடுகு,பருப்பு,காயம் தாளித்து

வெங்காயத்தை நன்றாக வதக்கி காய்கறிகளையும் சேர்த்து

சிறிது வதக்கி திட்டமாக ஜலம் சேர்த்து வேக வைக்கவும்.

உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும். நிதான தீயில் காய்கள்

வெந்ததும்,    அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து

கொதிக்க வைத்து இறக்கி ,ஒடித்த முந்திரியை  நெய்யில்

வறுத்துச் சேர்க்கவும்.  நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி

உபயோகிக்கவும்.

தோசை, ரொட்டி,பூரி என எல்லாவற்றுடனும் சேர்த்து

சாப்பிடலாம்.

 மற்ற காய்களும் சேர்க்கும் போது  தக்காளியும் சேர்க்கலாம்.

மே 20, 2010 at 9:49 முப பின்னூட்டமொன்றை இடுக

நூல்கோல் புளிக்கூட்டு

வேண்டியவைகள்—-3திட்டமான நூல்கோல். தோல் நீக்கி ஒரே

மாதிரி சிறியதாக  நறுக்கிக் கொள்ளவும்.

தனியா—-1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு—-2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்

வற்றல்   மிளகாய்—3

மிளகு—1 டீஸ்பூன்

பெருங்காயம்—சிறிது

தேங்காய்த் துருவல்—-அரைகப்

வேகவைக்கத் துவரம் பருப்பு—-முக்கால் கப்

தாளிக்க எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன் 

புளி—1 சின்ன எலுமிச்சை அளவு

தக்காளிப் பழம் 1

கடுகு,   கறிவேப்பிலை,  பச்சைக் கொத்தமல்லி

 செய்முறை—-புளியை சுடு நீரில் ஊறவைத்து கறைத்துக்

கொள்ளவும்.  2 கப் அளவிற்கு.

பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து திட்டமான

ஜலத்துடன் ப்ரஷர் குக்கரில் வேக வைக்கவும்.

தனியா,மிளகு,மிளகாய் பருப்புகளை எண்ணெயில் சிவக்க

வறுத்து எடுக்கவும்.

தேங்காயையும்,  லேசாக வறுத்துக் கொள்ளவும்.

வறுத்தவைகளை      மிக்ஸியிலிட்டு   சிறி்து தண்ணீர் சேர்த்து

அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெயில்,   கடுகு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய

நூல்கோல் துண்டுகளை அலம்பிப் போட்டு வதக்கி

நறுக்கிய தக்காளியையும் சேர்த்து திட்டமாகத் தண்ணீர்  

விட்டு வேக வைக்கவும். காய் வெந்ததும்,  புளித் தணணீர்,..

உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

புளி வாஸனை போனவுடன் வெந்த பருப்பு,அரைத்த

கலவையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, கொத்த

மல்லி,  கறிவேப்பிலை சேர்த்து உபயோகிக்கவும்.

வெள்ளைப்     பூசணிக்காய்,   சௌசௌ,   முதலானவைகளிலும்

செய்யலாம்.

வேண்டியவர்கள் சின்ன வெங்காயத்தையும்     தக்காளியையும்

வதக்கி அரைக்கும் சாமான்களுடன் சேர்த்து அரைத்துக் கலந்தும்

உபயோகிக்கலாம்.

பருப்பு வேகும் போதே ஒருபிடி வேர்க்கடலை சேர்த்து

வேகவைத்தும் சேர்க்கலாம்.

கூட்டு என்பதால்  ஜலம் எல்லாவற்றிலும் அளவாகச்

சேர்க்கவும்.

மே 7, 2010 at 11:05 முப பின்னூட்டமொன்றை இடுக

காய்கறி ஸ்டூ

இதையும் நான்   கூட்டு வகையில்தான்  சேர்த்திருக்கிறேன்.

தேங்காய்ப் பால் தயாரிப்பது எப்படி என்பதை முதலில்

பார்ப்போம்.

ஒரு தேங்காயைத் துருவி சிறிது சுடு நீர் தெளித்ப்

பிழிந்தால் கெட்டியாக சிறிது தேங்காயப் பால

கிடைக்கும். பின்னர் ஒருகப்  சூடான நீர் சேர்த்து

தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பிழிந்தால்

 தேங்காய்ப்பால் கிடைக்கும்.

வேண்டிய சாமான்கள்——-தோல் நீக்கி

 நறுக்கியஉருளைககிழங்கு ஒருகப்

உறித்த பட்டாணி–அரைகப்

கேப்ஸிகத் துண்டுகள்—-அரைகப்

நறுக்கிய காலிப்ளவர்—ஒருகப்

நறுக்கிய கேரட்—-அரைகப்

நறுக்கிய தக்காளிப் பழம்-முக்கால் கப்

பச்சை மிளகாய்–மூன்று

பொடியாக நறுக்கிய வெங்காயம்–ஒருகப்

லவங்கம்—–6,      ஏலக்காய்–ஒன்று

மிளகுப் பொடி—-இரண்டு டீஸ்பூன்

ஒரு துளி மஞ்சள்ப் பொடி

ருசிக்கு உப்பு

எண்ணெய்—–இரண்டு டேபிள் ஸ்பூன்

பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி ஏலக்காய் லவங்கத்தைத்

தாளித்து,  வெங்காயம்,  மிளகாயை     வதக்கி தக்காளி,

 காய்கறிகளைச் சேர்த்து சிறிது பிறட்டி உப்பு ,மிளகுப்பொடி 

மஞ்சள் சேர்க்கவும்.

திட்டமாகத்  தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்.

வெந்த காய்க் கலவையில் தேங்காய்ப் பாலை விட்டு

ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறி வேப்பிலை சேர்த்து

உபயோகிக்கவும்.

கலந்த சாதம், புலவு,  சேவை,   அடை, தோசை,என

எல்லாவற்றுடனும் உபயோகிக்கலாம்.

தேங்காய்ப் பால் வேண்டிய அளவு தயாரித்து உபயோகிக்கவும்.

பிப்ரவரி 28, 2010 at 12:16 பிப 1 மறுமொழி

காய்கறிக் குருமா

வேண்டியவைகள்——–அரை அங்குல அளவில் தோல் நீக்கி

காய்களை நறுக்கிக்கொள்ளவும்.

ஒருகப்—-உருளைக் கிழங்கு

காரட்—ஒருகப்

காலிப்ளவர்—ஒருகப்

பச்சைப் பட்டாணி —-அரைகப்

நூல்கோல்——–ஒருகப்

பீன்ஸ்——-அரைகப்.

வறுத்து அறைக்கசாமான்கள்——-

கசகசா  ——-2டீஸ்பூன்,          தனியா—-ஒரு டீஸபூன்

பெருஞ்சீரகம்—–ஒரு டீஸ்பூன்,——மிளகாய் வற்றல்—-இரண்டு

லவங்கம்—-நான்கு,—–பட்டை சிறிது

பூண்டு—–4 இதழ்கள்,     வெங்காயம்—-திட்டமாகஒன்று

எண்ணெய்——5,     6.       டீஸ்பூன்

சேர்த்து  அரைக்க—தேங்காய்த் துருவல்முக்கால் கப்

முந்திரி பாதாம்  ஏதாவது 6,     அல்லது 7

ருசிக்கு   உப்பு,      தக்காளிப் பழம்  ஒன்று

துளி மஞ்சள்ப் பொடி

செய்முறை—–வாணலியில் எண்ணெய் விட்டு காயவைத்து

வறுக்கக் கொடுத்திருக்கும் சாமான்களை வறுத்துஎடுக்கவும்.

வெங்காயம்,  பூண்டையும்   வதக்கி ,  தக்காளி, சேர்த்து   

, வறுத்த சாமான்களை ஆறினவுடன் தேங்காய்

சேர்த்து  மிக்ஸியில்   மென்மையாக  அரைத்துக்   கொள்ளவும்.

 நறுக்கி வைத்துள்ள காய்களை சிறிது எண்ணெயில்

2 நிமிஷங்கள் வதக்கி உப்பு,  மஞ்சள் பொடி ,வேண்டிய

தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.காய்கள் வெந்ததும்

அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறி ஒரு கொதி

வந்ததும் இறக்கவும்.

ருசிக்காக அரைக்கும் போது முந்திரி, பாதாம், அல்லது

பொட்டுக்கடலை சேர்க்கவும். காரம் அதிகம்வேண்டுமானால்

பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.

சாதம், ரொட்டி,  பூரி,  இடியாப்பம், தோசை வகைகள்என

எல்லாவற்றிர்க்கும் உகந்த  சேர்மானமாகக் கொடுக்கலாம்.

காய் கறிகளும் பிடித்தவற்றைச் சேர்க்கலாம்.

பிப்ரவரி 26, 2010 at 11:20 முப பின்னூட்டமொன்றை இடுக


ஜூன் 2023
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,503 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.