Posts filed under ‘டிபன் வகைகள்’

ராகி தோசை.

வேண்டியவை

அரைத்த கேழ்வரகு மாவு–2 கப்

உளுத்தம் பருப்பு——கால்கப்

வெந்தயம்—ஒரு டீஸ்பூன்

ருசிக்கு —உப்பு

தோசை செய்ய வேண்டிய எண்ணெய்

வேக வைத்து தோல் உறித்த—2 உருளைக் கிழங்கு

செய்முறை—-மாவை உப்பு சேர்த்துத் சற்றுத் தளரத் தண்ணீர்     விட்டுப்         பிசையவும்.

வெந்தயத்தையும்,  பருப்பையும் தண்ணீர் விட்டுக் களைந்து

3 மணிநேரம்   ஊற  வைத்து ,    மிக்ஸியில் அறைத்து,  மாவுடன்

சேர்த்துக் கலக்கி   வைக்கவும்.

5,  6    மணி நேரம் கழித்து வெந்த உருளைக் கிழங்கை 

நன்றாக மசித்து மாவுடன் கலக்கி  தோசைகளாக வார்த்துச்

சாப்பிடலாம். பிடித்தமான சட்னியோ கூட்டுகளோ இசைவாக

இருக்கும். அரிசி இல்லாத டிபன்.

  வேண்டுமாயின் ஒரு கரண்டிமோர்   மாவுடன் கலந்து

கொள்ளவும்.

மார்ச் 17, 2010 at 11:17 முப பின்னூட்டமொன்றை இடுக

புளி அவல்.

வேண்டியவைகள்——-அவல்—2 கப்

நெல்லிக்காயளவு– புளி.–கால்கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.

மிளகாய் வற்றல்—-2,—அதிக காரம் வேண்டுமானால் பச்சைமிளகாய்1

தனியாப் பொடி—அரை டீஸ்பூன்

சீராப்பொடி–அரை டீஸ்பூன்

மஞ்சள் பொடி—கால் டீஸ்பூன்

உப்பு——ருசிக்கு ஏற்ப

நல்லெண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க—கடுகு, பெருங்காயப் பொடி,சிறிது

மேலும்  ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பும்,

வேர்க் கடலையும்

வாஸனைக்கு கறி வேப்பிலை

அரை டீஸ்பூன்—-வெல்லப்பொடி.

செய்முறை—-அவலைக்    காய்கறி வடிக்கட்டியில் போட்டு

மேலாகத் தண்ணீரை விட்டுக் கலந்து வடிக்கட்டி வைத்துக்

கொள்ளவும்.

புளியைக் கறைத்துக் கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.

நான் ஸ்டிக் வாணலியில் எண்ணெயைக் காய வைத்து தாளிக்க ,வேண்டியவைகளைத் தாளித்து சீரக தனியா,கறிவேப்பிலை

 மஞ்சளைச் சேர்த்துப் பிரட்டி புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.

உப்பு,  வெல்லம் சேர்த்துக் கிளறி  புளித்தண்ணீர் சுண்டும் வரை

நிதான தீயில் வைக்கவும்.

திக்கான பதம் வரும் போது  ஊறின அவலைக் கொட்டி பதமாகச்

சூடு ஏறும் வறை கிளறி இறக்கவும் .

என்னுடைய வழக்கமான வார்த்தை பூண்டு, வெங்காயம்

வேண்டுபவர்கள்   தாளிப்பின் போது  சேர்த்துச் செய்யலாம்.

இதுவும் ருசியான டிபன்தான்.

புளிக்குப் பதில் தக்காளிப்பழ சாற்றைக் குறுக்கியும்

செய்ய முடியும்.

மார்ச் 16, 2010 at 11:19 முப பின்னூட்டமொன்றை இடுக

அடை.

வேண்டியவைகள்

அரிசி—-முக்கால் கப்

கடலைப் பருப்பு-கால்கப்பிற்கு சற்று அதிகம்

துவரம் பருப்பு–கால்கப்

உளுத்தம் பருப்பு—ஒருபிடி

வற்றல்மிளகாய்–இரண்டு

தேங்காய்த் துருவல்–5 டேபிள் ஸ்பூன்

பெருங்காயப் பொடி–கால் டீஸ்பூன்

அடை செயவதற்கு வேண்டிய—–எண்ணெய்

பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது   சிறிதளவு.

ருசிக்கு—-உப்பு

செய் முறை—–கரகரப்பாக அடை வேண்டுமானால் அதிக

நேரம் அரிசி பருப்பு வகைகளை ஊறப்போடாமல் 3 அல்லது4-

-மணி நேரம் களைந்து ஊறவைத்து   அதிக ஜலம் விடாமல்,

உப்பு, காரம் சேர்த்து  நறநறப்பாக அறைத்துக் கொள்ளவும்.

பெருங்காயம், தேங்காய்த் துருவல்,கொத்தமல்லி சேரத்துக்

கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான தோசைக்கல்லிலோ,        நான் ஸ்டிக்தோசைக்-

-கல்லிலோ,  திட்டமான சூட்டில்  எண்ணெய் தடவி அடையை

தடித்த தோசை அளவில் பறத்தி வார்க்கவும்.   நடுவில்தோசை

திருப்பியால் ஒரு பொத்தலிட்டு அதிலும், சுற்றிலுமாக  சற்று

தாராளமாக ஸ்பூனினால் எண்ணெயைவிட்டு அடையை

வேக விடவும். வெந்தபின் அடையைத்திருப்பிப் போட்டு

சிறிது எண்ணெயை சுற்றிலும் விட்டு நிதான தீயில்

கரகரப்பாக ஆகும்வரை வைத்து எடுக்கவும்.

இது சாதாரண அடை.

புழுங்கலரிசி,   முழு உளுந்தை ஊற வைத்தரைத்தும்

உப்பு காரம் சேர்த்து அடை செய்யலாம்.

வெங்காயம், பூண்டு, இஞ்சி பெருஞ்சீரகம் இவைகளை

சேர்த்து அரைத்தும் செய்யலாம்.

முளைக்கீரை,பாலக்,  முருங்கைக் கீரை புதிநா சேர்த்தும்

செய்யலாம்.

கோஸ்,  கேரட், காலிப்லவர், பரங்கிக் காய் இவைகளைத்

துருவிச் சேர்த்தும் அடை வார்க்கலாம்.

சின்ன வெங்காயம், நறுக்கிச் சேர்த்தால் கூடுதல் ருசி.

 பருப்புகள்    மற்ற வகைகளையும்  ஊற வைக்கும் போது

கலந்து செய்யலாம்..

 தகுந்தாற்போல உப்பு காரமும்  கூட்டிக் குறைத்துச்

சேர்க்கவும்.

நெய், தேங்காய் எண்ணெயும்  சேர்த்து செய்தால் ருசி

கூடும்.

முள்ளங்கி, நூல்கோல்கூட விதி விலக்கில்லை.துருவிப்

பிழிந்து போடலாம்.  ஏதாவதுஒன்றிரண்டு தேர்வு செய்து

கலக்குங்கள். அடை மாவையும்தான். கலவையைப்

பொறுத்து    அடையின் பெயர் சொல்லுங்கள்.எதற்கு

எது சேர்த்தால் சுவைகூடும். அது உங்கள் சாய்ஸ்.

மார்ச் 15, 2010 at 11:39 முப பின்னூட்டமொன்றை இடுக

பயத்தந் தோசை.

வேண்டியவைகள்

பச்சைப் பயறு—–ஒருகப்

அரிசி—கால்கப்

வெங்காயம் —–1 நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய்–சிறியதாக 2

வேக வைத்து தோ்ல் உரித்த உருளைக் கிழங்கு—-1

சீரகம்—அரை டீஸ்பூன்

நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி   சிறிது

ருசிக்கு—உப்பு

தோசை செய்ய —-எண்ணெய் வேண்டிய அளவு.

செய்முறை—–அரிசி ,பயறு இரண்டையும் நன்றாகக் களைந்து

6 மணி நேரத்திற்குக் குறையாமல் தண்ணீரில் ஊறவைக்கவும்.

 எண்ணெய் நீங்கலாக  மற்றவைகளையும் சேர்த்து ஊற

வைத்திருப்பதை மிக்ஸியிலிட்டு அதிக த் தண்ணீர்  விடாமல்

அரைத்துக்  கொள்ளவும்.

அரைத்த மாவைத் திட்டமாக ஜலம் விட்டு கரைத்துக்

கொள்ளவும்.

நான் ஸ்டிக் தோசைக்கல்,   அல்லது கனமான தோசைக்

கல்லிலோ பதமான சூட்டில் எண்ணெய் தடவி  மெல்லிய

தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டுத்

திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

பிடித்தமான சட்னிகளுடன் சுடச்சுட சாப்பிட ருசியாக

இருக்கும்.

மார்ச் 14, 2010 at 10:39 முப பின்னூட்டமொன்றை இடுக

உருளைக் கிழங்கு அவல்.

வேண்டியவைகள்——–மெல்லிய அவல்—-2கப்

சிறிய அளவில் நறுக்கி, அலம்பிய உருளைக் கிழங்கு—அரை கப்

 பச்சை மிளகாய்  2   —நறுக்கிக் கொள்ளவும்.

திட்டமான வெங்காயம் 1—பொடியாக நறுக்கவும்.

ஒரு துண்டு இஞ்சி—நறுக்கியது

பச்சைப் பட்டாணி—-2 டேபிள் ஸ்பூன்

பச்சைக் கொத்தமல்லி நறுக்கியது—-கால் கப்

காரா பூந்தி அல்லது  ஓமப்பொடி      —ரெடி மேடாக  4 டேபிள் ஸ்பூன்

தாளித்துக் கொட்ட—–எண்ணெய்   3 டேபிள் ஸ்பூன்

 தாளிக்க –கடுகுசிறிது,    உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்,  சோம்பு அரைடீஸ்பூன்.

ருசிக்கு—-உப்பு  . துளி மஞ்சள் பொடி,     எலுமிச்சைத் துண்டுகள்.

செய்முறை——அவலைக் காய்கறி வடிக்கட்டியில் போட்டு

மேலாகத் தண்ணீரை  விட்டுக் கலந்து   வடிக்கட்டிக் கொள்ளவும்.

  உப்பு,    மஞ்சள்பொடி கலந்து சிறிது ஊறவைக்கவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெயைக்காயவைத்து

 கடுகு முதலானவைகளைத் தாளித்து, வெங்காயத்தை

வதக்கவும். இஞ்சி பச்சைமிளகாய்,  கிழங்குத் துண்டுகள்

சேர்த்து நிதான தீயில் வதக்கி ஒரு துளி   உப்பு  சேர்க்கவும்.

கிழங்கு வதங்கிய பின்  ஊறிய  அவலைச் சேர்த்து லேசாகக்

கிளறி நன்றாகச் சூடு ஏறிய பின் இறக்கி வைத்து சிறிது நேரம்

மூடி வைக்கவும்.

சுடச்சுட,  ப்ளேட்டில்  அவல்க் கலவையைப் போட்டுப்

பரத்தி    மேலாக     ஓமப்பொடியைப்     போட்டு,

கொத்தமல்லியைத் தூவி   ஒரு எலுமிச்சைத் துண்டுடன்

கொடுக்கவும்.  இது என்னுடைய போபால் மருமகளின்

ஆலு   போஹா. தயாரிப்பதும் எளிது.

 ருசியும் நன்றாக இருக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

மார்ச் 13, 2010 at 12:50 பிப பின்னூட்டமொன்றை இடுக

மோர்க்களி.

வேண்டியவைகள்.

மிதமான புளிப்பு மோர்—இரண்டரைகப்

மெல்லியதாகச் சலித்த அரிசி மாவு—ஒரு கப்

எண்ணெய்——இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு—அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு–ஒரு டீஸ்பூன்

மோர் மிளகாய்——மூன்று

ருசிக்கு உப்பு

வாஸனைக்கு–துளி பெருங்காயம்

சிறிது கறிவேப்பிலை.

செய்முறை——-மாவை உப்பு சேர்த்து மோரை விட்டு கரைத்துக்

கொள்ளவும்.

அடி கனமான வாணலியில்   எண்ணெயைக் காய வைத்து

மிளகாயை நன்றாக கிள்ளிப்போட்டு வறுத்துக் கொண்டு

கடுகு,  பெருங்காயம்,உளுத்தம்பருப்பைச் சேர்த்துத் தாளித்து

கறி வேப்பிலையுடன் கரைத்து வைத்திருக்கும் மாவுக்-

-கலவையைச் சேர்த்துக் கிளறவும். தீயை நிதானமாக

வைத்து அடிக்கடி கிளறவும். மாவு வெந்து சுருண்டு

வரும் போது  சற்று மூடி வைத்துப் பிறகு இறக்கவும்.

ஈரக் கையினால் மாவைத் தொட்டால் வெந்த மாவு

கையில் ஒட்டாது. உப்பு, புளிப்பு, காரத்துடன் களிப்பதத்தில்

சாப்பிட ருசியாக இருக்கும்.

சோளமாவு,  கேழ்வரகு  மாவு,  கம்பு மாவிலும் இதே மாதிரி

தயாரிக்கலாம்.  அவசரத்திற்கு, நினைத்தால் உடனே தயாரிக்க

முடியும். தாளிப்பில்  வேர்க்கடலை, முந்திரி பருப்பும் போடலாம்.

மார்ச் 7, 2010 at 11:02 முப பின்னூட்டமொன்றை இடுக

தவலடை

 பிடி குழக்கட்டைககு தயாரித்த மாதிரி, மாவு கிளரிக்கொள்ளவும். மிளகாய் சேர்க்காமல் ஒரு டீஸ்பூன் மிளகு பொடித்து சேர்க்கவும். ஆறியபின் தண்ணீரைத்தொட்டு  பெரிய வடைகளாக பொத்தலுடன் தயாரித்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான அகலமான வாணலியிலோ அல்லது நான் ஸ்டிக்    பேனிலோ பரவலாக எண்ணெய்த டவி    நடுவிலும், சுற்றிலுமாக தோடு ,    மாதிரி வைத்து  சற்று தாராளமாகவே எண்ணெய்  சுற்றிலும் விட்டு மிதமான தீயினில் வேகவிடவும். இரண்டொரு நிமிஷம் தட்டினால் மூடித் திறக்கவும். அடி பாகம் சிவந்ததும் திருப்பிப் போட்டு மேலும் சிறிது  எண்ணெய் விட்டு அடைமாதிரி முருகலாக எடுக்கவும்.

எல்லாவித சட்னிகளோடும் ஒத்துப்போகும். மேலே கரகரப்பூ உள்ளே   உப்புமாபோல மெத்தென்றும் இருக்கும். தேங்காய் அதிகமாகச் சேர்த்தால் ருசி கூடும். அடுத்து   இன்னொரு விதம்.

ஹோட்டல் தவலடை———பச்சரிசி,—-உளுத்தம்பருப்பு,—–கடலைபபருப்பு,—–பயத்தம்பருப்பு——–துவரம்பருப்பு யாவும்—-தனித்தநியாக 100–100 கிராம்கள்.——–காய்ந்தமிளகாய்நானகு,—-ஒருகப்தேங்காய்த் துருவல்—–இஞ்சிஒரு துண்டு–சீரகம்ஒருடீஸ்பூன்–வேண்டியஅளவுஉப்பு—நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி பொரித்தெடுக்க எண்ணெய்.

அரிசி,பருப்பு வகைகளை 3 மணி நேரம் தண்ணீரில்  ஊறவைத்து களைந்து நீரை ஒட்ட வடிக்கட்டவும்.     எண்ணெய் நீங்கலாக மற்றவைகளைச் சேர்த்துமிக்ஸியில் கரகரப்பாக நீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் நன்றாகக் காய்ச்சி மாவுடன் கலக்கவும்.வாணலியில்  எண்ணெயைக காய வைத்து, பொத்தலிடாமல்வடைகளைத் தட்டிப போடடு இருபுறமும்  சிவக்க வேக விட்டு எடுக்கவும். விருப்பமான சட்னிகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

கனமான பாலிதீன்  பேப்பரின்மேல் வடைகளைத் தயாரிக்கலாம்.

மே 27, 2009 at 8:44 முப 2 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


ஜூன் 2019
தி செ பு விய வெ ஞா
« ஏப்    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 294 other followers

வருகையாளர்கள்

  • 500,149 hits

காப்பகம்

பிரிவுகள்


Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.