Posts filed under ‘படங்கள்’
கணபதியே வருகவருக.
வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
மும்பை கணபதிகளின் அணி வகுப்பு. அவ்விடமுள்ள என் மகன் அமெரிக்கா போவதால் முன்கூட்டியே படங்கள் கேட்டிருந்தேன். குறைந்தது படமாவது போடலாமே.
வேழ முகத்து வினாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
வெற்றி முகத்து வினாயகனைத் தொழ புத்தி மிகுத்து வரும்.
அல்லல் போம் வல்வினைகள் போம், அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக
மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதிையைக் கொதொழுதக்கால்.
கணபதிியின் அடி பணிந்து யாவருக்கும் நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.
நல் வாழ்த்துகள் யாவருக்கும்.
பூர்ணிமா.
எங்கள் ஜெனிவா சந்திரனைப் பாருங்கள். கரிய மேகத்தினிடையே இரவு எட்டு மணிக்கு.
பால்கனியிலிருந்து எடுத்தது.
நிறம் மாறும் மரங்கள்
காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியே வெளியில் ஒரு முறை பார்ப்பது என் வழக்கம். வந்தபோது பார்த்தாயே!தீபாவளியை வரவேற்க இப்போது எப்படி கலர்மாறுகிறேன் என்று சொல்வது போலத் தோன்றியது. முதற்பார்வை.
என்ரூம் ஜன்னல் வழியே இன்னும் சில காட்சிகள்.
சற்று முன்னாடி இன்னும் மாறுதல்.
ஆஹா ஓஹோதான்
படம் பார்க்க அழகுதானே. வேலை வேண்டுமே!!!!!!!!!!!
மும்பைப் பிள்ளையார் இவரும்
மும்பைப் பிள்ளையார்கள் இவர்களும். பாருங்கள், பரவசமாகுங்கள். வக்ரதுண்ட மஹாகாய
என்னையும் பாருங்கள்.
அடுத்து நான்
இன்னும் எவ்ழளவோ அழகுடன் நாங்கள் மும்பையில்.
படமுதவி—–ஸுரேஷ். நன்றி.
வினாயகர்கள்
மும்பை வினாயகர்கள் அருள்பாலிக்கப் போகு முன்னர் எனக்குத் தரிசனம் கொடுக்க வேண்டினதில் வந்தவர்கள்.நிறைய வினாயகர்கள் தரிசனம் கொடுக்க உங்கள் எல்லோருக்குமாக வருகிரார்கள். படங்கள் உதவி மும்பை மருமகள் பிரதீஷா ஸுரேஷ்
கண்டு தரிசனம் செய்யுங்கள். அன்புடன் காமாக்ஷி.
குட்டி கணபதி அம்மை,அப்பனுடன்
ஸ்ரீகிருஷ்ணபகவானை குழந்தையிலிருந்து பலவித வளர்ச்சியில் பார்ப்போம். முதுமை என்பதை அவரிடம் எப்போதும் பார்க்கவில்லை. மஹா பாரத யுத்தத்தின்போது அவருக்கு ஏராளமான பேரன்களிருந்தார்கள். அவர் என்னவோ இளமையுடன்தானிருந்தார். அதுபோல
ஸ்ரீகணேசரும் ஊர்,உலகம்,ஆறு,குளம்,மரம் வீடு,காடு எங்கு வீற்றிருந்தாலும் இளமையுடன்தான் இருந்தார் என்று நினைக்கிறேன். தாத்தா கணேசரைப் பார்க்கவில்லை. தாய் பார்வதியுடனும்,திரிசூலதாரி,கங்காதாரி சிவனுடனும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பது போன்ற இச் சித்திரம் யாவரையும் மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். வினாயக சதுர்த்தி வாழ்த்துகளுடன் அன்புடனும். காமாட்சி
ஓவிய கணபதி
இங்கு இரண்டு ஓவியங்கள் ஹாலில் மாட்டப்பட்டிருந்தது. வினாயக சதுர்த்தி ஸமயமாதலால் நீங்களும் பார்க்கலாமே என்று தோன்றியது. வாங்கிய ஓவியம்தான். ரஸிக்க முடிகிறதா பாருங்கள்.
கணேச சரணம் சரணம் கணேசா.
படங்கள்
எங்கள் வீட்டின் மாடியிலிருந்து தினமும் பார்க்கும் காட்சி.
மாங்ரோவ் சதுப்பு நிலம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்தேரி மேற்கு. மும்பை.
இப்போது சிறிது நாட்களுக்காக வந்திருக்கும் இடத்தின் சன்னலில் காலையில் பார்த்த போது இந்த காட்சி.
மும்பையும் ஜெனிவாவும். அன்புடன்
வரலக்ஷ்மிவிரதபடங்கள்
இன்றைய வரலக்ஷ்மிபூஜை மானஸீக அர்ப்ப்பணிப்புகளும், வாழ்த்துகளும்.சில படங்களும் அவ்வளவே!!!!!!!!!!!!
.
அம்மனை அழைத்து வந்தாயிற்று. அமர்ந்த அம்மனுக்கு நமஸ்காரங்கள்.
பூஜைக்குத் தயார்.
மேலும் சிலபடங்கள்.
அடுத்து இதுவும்.
பூஜை முடிந்து சரடு கட்டிக்கொண்டபின் அம்மனின் அழகு.
யாவருக்கும் ஆசிகளும் வாழ்த்துகளும்.
பூஜை நிர்வாகம், அமைப்பு, யாவும் மருமகள் பிரதீஷாவும், பேத்தி மனஸ்வினியும். எனக்கு நிம்மதியாக எழுதமுடிந்தமைக்கு எல்லோரும் நன்மையுடன் இருக்க வேண்டும்.
அம்மனைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சமையலைப் பற்றி எழுதாத ஒரு பதிவு. அன்புடன்
பூ–பூ என்னபூ
பூ–பூ என்னபூ குழந்தைகள் சொல்வார்கள் புளியம்பூ.இல்லை இல்லை ஸாயபூ என்று பேசக் கற்றுக் கொடுப்போம்.
அந்தவகையில் தொட்டியில் பூத்த பூவைப் பார்த்து மகிழ்ச்சி. நேற்று இன்டர்நெட் வேலை செய்யவில்லை.விடை எழுத முடியவில்லை.
இது வெறெதுவும் இல்லை. நித்ய மல்லியும் இல்லை. நந்தியாவட்டையுமில்லை.
இந்தச் செடியை என் மருமகள் பிரதீஷா ஜோர்ஹாட்டிலிருந்து கொண்டு வந்து நட்டாள். சென்ற ஜூலையில் ஆகாயவிமானத்தில் பயணித்து வந்த செடி இது. அன்று பார்க்கிறேன். அதில் பூக்கள். புதியதாக கொள்ளுபேரன் பிறந்தமாதிரி பரவசம். உடனே படமெடுத்தேன். பேத்தியையும் படமெடுக்கச் சொன்னேன். பார்த்தால் சிறு காயுடன் வேறு தரிசனம் கொடுக்கிறது. நம்முடைய தமிழில் அதன் பெயர் தெரியும். பூவெல்லாம் எங்கு பார்த்திருக்கப் போறேன்.!!!!
வட இந்தியாவில் இப்பழத்தை மெல்லிய கீற்றுகளாக நறுக்கி உணவின்போது உடன் பிரியமாக உபயோகிக்கிரார்கள். பெயருக்கு வருவோமா? கதை சொல்லுகிறேனா?
மேல்நாட்டில் Finger LIME—Cavier Lime
நம் நாட்டில்,தமிழ்நாட்டில் —கொடி எலுமிச்சை Crotalaria evolvuloides
ஹிந்தியில்—நிம்பு. அஸ்ஸாமியில் காஜிநெமு. பெங்காலியில் ரஸ்ராஜ்
இன்னும் எவ்வெவ்வளவு பெயர்களோ? செடி,பூ,பிஞ்சு எல்லாம் எங்கள் வீட்டுப் படங்கள். காய் பட உதவி கூகல். மிகவும் நன்றி.
ஆக இந்த பூ–பூ கொடி எலுமிச்சை பூ. பதிலளித்த யாவருக்கும் நன்றி. காயாகவும் பழமாகவும் உபயோகிக்கலாம். நல்ல எலுமிச்சை வாஸனையும் சுவையும் உண்டு. தோல் பருமனாக இருக்கும். ஊறுகாய்க்கு அவ்வளவு ஏற்றதல்ல. பூ அழகாக இருக்கிறது. மரமாக அடர்ந்து வளரும். நிறைய தகவல்கள். இல்லையா?
செடியைக் கொண்டு வந்த பிரதீஷாவிற்கும் நன்றி.இரவு மணி 11. இன்டர்நெட் வேலை செய்தது. போட்டும் விட்டேன்.