Posts filed under ‘பூஜைகள்’
ஜெனிவா கொலுக்களில் சில
அயல்நாட்டில் நவராத்திரி பெருமை கொள்ள வைக்கிறது.
Continue Reading ஒக்ரோபர் 8, 2016 at 4:31 பிப 13 பின்னூட்டங்கள்
நவரத்ன ஸ்தோத்ரமாலை
நவராத்திரியில் எளிதாக ஸ்தோத்திரம் செய்ய உகந்த தமிழ்த் துதி இது. அகத்தியர் அருளிச் செய்தது. நவராத்ரி,குத்து விளக்கு பூஜை, வாரா வாரம் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் என எல்லா ஸமயங்களிலும் சேர்ந்து சொல்லியது. டில்லியிலிருக்கும்போது இவைகள் மனதிற்குகந்ததாக இருந்தவற்றின் ஞாபகம் வருகிறது. நீங்களும் பாடிப் பயனடையுங்கள்.
1 ஞானகணேசா சரணம் சரணம் ஞானஸ்கந்தா சரணம்சரணம்,
ஞானசத்குரோ சரணம் சரணம், ஞானானந்தா சரணம்சரணம்.
ஆக்கும் தொழில் ஐந்தரநாற்றநலம், பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்,
சேர்க்கும் நவரத்தின மாலையினை, காக்கும் கணநாயக வாரணமே.
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
வைரம்
2. கற்றும் தெளியார் காடே கதியாம், கண்மூடிநெடுங்கின வான தவம்
பெற்றும் தெளியார் நினைப் பென்னில் அவம், பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வைர படைவாள் வைரப், பகைவர்க்கு யமனாக எடுத்தவனே,
வற்றாத அருட்சுனையே வருவாய். மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
நீலம்
3. மூலக்கனலே சரணம்சரணம் , முடியா முதலே சரணம்சரணம்,
கோலக்கிளியே சரணம்சரணம், குன்றாத ஒளிக் குவையே சரணம்.,
நீலத்திருமேனியிலே நினைவாய், நினைவற்றறியேன் நின்றாய் அருள்வாய்,
வாலைக்குமரி வருவாய்வருவாய் , மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
முத்து.
4. முத்தே வரும் முத்தொழில் ஆற்றிடவே, முன்னின்று அருளும் முதல்வி சரணம்,
வித்தே விளைவே சரணம்சரணம், வேதாந்த நிவாஸினியே சரணம் சரணம்,
தத்தேரியநான் தனயன் தாய்நீ , சாகாதவரம் தரவே வருவாய்,.
மத்தேறுத் திக்கினை வாழ்வடையேன், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
பவழம்.
5. அந்திமயங்கிய வான விதானம் ,அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை,
சிந்தை நிரம்பவழம் பொழிவாரோ , தேம்பொழிலாம் இது செய்தவள் யாரோ,
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள், எண்ணுபவர்க்கருள் எண்ண மிகுத்தாள்,
மந்திர வேத மாயப் பொருள் ஆனாள், மாதாஜெயஓம் லலிதாம்பிகையே!
மாணிக்கம்.
6. காணக்கிடையா கதியானவளே, கருதக்கிடையா கலையானவளே,,
பூணக்கிடையா பொலிவானவளே,, புனையக்கிடையா புதுமைத்தவளே,
நாணித் திருநாமமும் நின் துதியும், நவிலாதவரை நாடாதவளே,
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
மரகதம்.
7. மரகதவடிவே சரணம் சரணம் ,மதுரித பதமே சரணம்சரணம்,
சுரபதி பணிய திகழ்வாய் சரணம், சுருதிஜதிலயமே இசையேசரணம்,
அரஹர சிவ என்றடியார் குழுவ, அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம், மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
கோமேதகம்.
8. பூமேவியநான் புரியும் செயல்கள், பொன்றாதுபயன் குன்றா வரமும்,
தீமேல் எனினும் ஜெய சக்தி எனத், திடமாய் அடியேன் மொழியும் திறனும்,
கோமேதகமே குளிர்வான் நிலவே , குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்,
மாமேருவினிலே வளர் கோகிலமே, மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
பதுமராகம்.
9. ரஞ்ஜனி நந்தினி அங்கணி பதும, ராக விலாஸினி வியாபினி அம்மா
சஞ்ஜலரோக நிவாரணி வாணி, சாம்பவி சந்ர கலாதரி ராணி,
அஞ்ஜன மேனி அலங்ருத பூரணி, அம்ருதஸ்வ ரூபிணி நித்ய கல்யாணி,
மஞ்சுளமேரு சிருங்க நிவாஸினி, மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
வைடூரியம்.
10…வலையொத்தவினை கலையொத்தமனம், மருளப் பறையாரொலி யொத்தவிதால்,
நிலையற்றொளியேன் முடியத் தகுமோ, நிகளம் துகளாக வரம் தருவாய்,.
அலையற் றசைவற் றனுபூதி பெரும் , அடியார் முடிவாழ் வைடூரியமே,
மலையத்துவஜன் மகளே வருவாய், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
11. பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா, நவரத்தின மாலை நவின்றிடுவார்,
அவர் அற்புத சக்தி எல்லாமடைவார், சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே,
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே ,மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே மாதாஜெயஓம் லலிதாம்பிகையே!!!!!!!
பின் குறிப்பு—- எழுத்துப் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. தெரிந்தவர்கள் திருத்திக் கொள்ளவும்.
நவ ராத்திரி சுப ராத்ரிகளாக அமைய எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லுகிறேன்.
எங்கள் வீட்டு கணபதிகள்
எங்கள் வீடுகளில் பூசித்த கணபதிகளையும் உங்கள் பார்வைக்கு வைக்க வேண்டாமா? காட்மாண்டு,மும்பை,ஜெனிவா என்று எளிய கணபதிகளையும் தரிசியுங்கள்
முதலில் பார்ப்போம். காட்மாண்டு கணேசரை.
அடுத்து வருகிறார் எங்கள் மும்பை கணபதி.
அவரின் நிவேதனம்.
சிவராத்திரி மகிமை
சிவனுக்குகந்த தினம் சிவராத்திரி
.தேவியைப் பூஜை செய்ய நவராத்திரி ஒன்பது தினங்களைப்போல் இல்லாவிட்டாலும்சிவராத்திரி ஒரு தினமே சிவனுக்கு மிகவும் மகத்துவமானது. சிவனுக்காக விசேஷமான தினங்கள் ஏராளமாக உள்ளது. ஆயினும் இந்த சிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும், அவரவர்கள் வீடுகளிலும் பூஜித்துக் கொண்டாடப் படுகிறது. இளைய ஸமுதாயங்கள் சற்று விதி விலக்காக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் சிறுவர் சிறுமியர்கள் கூட அவரவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ,பூஜை,பாட்டு என்று பாடிக் கொண்டாடுவது ஞாபகம் வருகிறது. இரவு முழுதும் கண் விழித்து பக்தியை அப்போதே சிறுவர்களுக்கு ஊட்டப் படுவதும் மனதை விட்டு அகலவில்லை.
காட்மாண்டு சுபதீசுவரர் கோவிலில் சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப் படும். நேபாளத்திலேயே மிகவும் உயர்வான சிவனைப் பற்றிய விசேஷக் கொண்டாட்டமது. வெகு வருஷங்கள் அவ்விடம் வசித்தபடியால் நேபாளத்தைப்பற்றி குறிப்பிடாதிருக்கவே முடிவதில்லை.ஸாதுக்கள் கூட்டம்சொல்லிமாளாது.
பசுபதீசுவரருக்கு நான்கு திசையில் நான்கு முகங்கள், உச்சியில் ஒன்று என ஐந்து முகம் கொண்ட ஸதா சிவமாக விளங்குபவர். நான்கு முக எதிரிலும் நான்கு வாயில்கள் உள்ளன. எதிரில் பிரும்மாண்டமான உலோகத்தினாலான நந்தியின் சிலை உள்ளது. தென்னிந்திய கர்னாடக பட்டாக்கள்தான் பூஜை செய்கின்றனர்.பிரஸாதமாக அன்றன்று அரைத்த சந்தனம் வழங்கப்படும். நான்கு ஜாமங்களிலும் அபிஷேக அலங்காரம் சொல்லி மாளாது.
மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களாகப் பிரித்து , அபிஷேக ஆராதனைகளுடன் சிவராத்திரி பூசைகள் நடக்கிறது. அன்று கண் விழித்திருந்து, விரதமிருந்து, இறைவனை வணங்கும்போது, முழுமையான பக்தி பரவசம் கிடைக்கும். நினைத்த எண்ணங்கள் கைகூடும் என்றும் சொல்வார்கள்.
சிவராத்திரியன்று மடி ஆசாரத்துடன் சாப்பிடாது உபவாஸமிருந்து, இரவு பூராவும் கண் விழித்து சிவ தரிசனம் செய்து, மறுநாளும், மடியாக சிவதரிசனம் செய்து, தான தர்மங்கள் செய்து பாரணை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகலும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சிவனுக்குப் பூஜிக்கத் தகுந்த இலை வில்வம்.இந்த வில்வ தளப் பெருமையை பீஷ்மப்பிதாமஹர் அம்புப்படுக்கையில் இருக்கும்போது கூறிய ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது.
சித்ரபானு என்கின்ற ஒரு மன்னன் வேட்டையாடி ஒரு மானை எடுத்துக்கொண்டு வரும்போது இரவு நேரமாகிவிட்டது. ஒரு மரத்தின்கீழ் அதைப் போட்டுவிட்டு,,மரத்தின்மேலே இரவைக்கழிக்க, அதன்ஏறி உட்கார்ந்து கொண்டான். விழிப்புணர்வுடன் இருப்பதற்காக மரத்தின் ஒவ்வொரு இலையாகக் கிள்ளி கீழே போட்டுக் கொண்டும்,குடுவையிலிருந்த நீ்ர் சிந்திக் கொண்டும் இருந்தது.கண்களைத் துடைக்கும் போது நீர் கீழே சிந்திக் கொண்டும் இருந்திருக்கிறது. காலையில் மானுடன் அவர் அரண்மனை போயாகிவிட்டது.
காலப்போக்கில் அவர் காலகதி அடைந்தபோது, சிவதூதர்கள் அவருக்கு இராஜ உபசாரம் செய்து அழைத்துப் போனபோது அவரறியாது செய்த புண்ணியத்தின்பலன் தெரியவந்தது. அவர் ஏறி இருந்த மரம் வில்வமரம்.மரத்தினடியில் சிவலிங்கமிருந்திருக்கிறது.
அவரறியாமலே செய்த சிவராத்ரி பூஜையின் பலன் அவருக்கு, அதுவும் பூர்வ ஜன்மத்தில் செய்தது நல்ல கதியைக் கொடுத்ததாக மஹாபாரத சாந்தி பர்வத்தில் பீஷ்மரால் கூறப்படுகிறது.
ஸகல பிரபஞ்ஜமும் அடங்கி இருக்கிற லிங்க ரூபமானதுஆவிர்பவித்த மஹா சதுர்த்தசி இரவில்.அவரை அப்படியே ஸ்மரித்துஸ்மரித்து அவருக்குள்நாம் அடங்கி இருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை என்று ஸ்ரீ ஸ்ரீீ மஹா பெரியவாள் தன்னுடைய தெய்வத்தின் குரலில் சொல்லி இருக்கிறார். அதை விட வேறு எந்த வாக்கு பெரியது?
நாராயணா என்னா நாவென்ன நாவே நமசிவாயா யென்னா நாவென்ன நாவே.
திரிகுணம்,திரிகுணாகாரம்,திரிநேத்ரஞ்சதிரயாயுஷஹ
திரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்.
இவ்வருஷம் மார்ச்மாதம் ஏழாம் தேதி மஹா சிவராத்திரி வருகிறது. நம் எல்லா சிவாலயங்களிலும் அவரவர்களுக்கு அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று சிவனை வழிபட்டு உலக நன்மைகளுக்காகவும் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
நான்கு ஜாமங்கள் என்பது மாலை 6–30 மணி, 9—30மணி, 12—30 மணி 3. மணி என்பர்.
ஓம் நமசிவாயநமஹ.
நவராத்திரி
பதிவுகள் இடமுடியாமற் ஒரு உடல்நலக்குறைவு நவராத்திரி மறு பதிவாகிலும் செய்ய வேண்டுமென்ற அவா
ஓரிரு படங்களும் நிவேதனம் வேண்டாமா?நேற்று ஆரம்பித்துவிட்ட நவராத்ரி விழாவைச் செம்மையாகப்,பக்திப் பரவசத்துடன் கொண்டாடி,முப்பெருந்தேவிகளுடைய அருளுக்குப் பாத்திரராகி எல்லா நலன்களையும் பெறவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய மானஸீக மங்கலப்பொருள்களுடன் மஞ்சள் குங்கும தாம்பூலமும்,அன்பான ஆசிகளும். அன்புடன் சொல்கிறேன். படம் ரிப்ளாகில் தரவேற்றுவது எப்படி?/???
படமுதவி—-கூகலுக்கு நன்றி.
புரட்டாசிமாதம் வரும் அமாவாஸை கழித்த மறுநாள் தொடங்கி பத்து
நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை இது.
இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களைக் காட்டிலும் மைசூரில் சிறப்பாகக்
கொண்டாடப் படுகிறது. கர்நாடகத்தில் சாமுண்சீசுவரி.
வட இந்தியாவிலும்,உத்தரப்பிரதேசத்திலும் ராம் லீலா என்று கொண்டாடுகின்றனர்.
ராமாயண நாடகங்கள் நடிக்கப் படுகிறது. விஜய தசமியன்று
இராவணன் கும்பகர்ணன் உருவப் பொம்மைகள் மெகா ஸைஸில் செய்து பொது இடங்களில் வைத்து
பட்டாசுகளை வெடித்து உருவங்களை எரித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வங்காளத்தில் துர்கா பூஜையாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழ் நாட்டில் முற்றிலும் பெண்களுக்கான பண்டிகையாகத் திகழ்கிரது இது.
அழகான,விதவிதமான பொம்மைகளால் கொலு வைக்கப்படுகிறது.
இதில் இல்லாத விஶயங்களே கிடையாது. பெண்கள் தங்களின் ஆர்வத்தையும்
கலைத்திறனையும் கொலுவில் அழகுரக்காட்டி மகிழ்வர்.
உறவினர்கள்,நண்பர்கள்,யாவர்களையும் அழைத்துக் கூடி மகிழ்வாகக்
கொண்டாடும் விசேஶ தினங்களிது.
அதே நேரத்தில் விசேஶ பக்தி ச்ரத்தையுடன் தேவியை வணங்கித் துதிக்கும்
பண்டிகையாகவும் இது விளங்குகிறது. அன்னையை
மூன்று சக்திகளாகப் பாவித்து, பார்வதி,லக்ஷ்மி,ஸரஸ்வதி என ஒவ்வொருவருக்கும்
மூன்று நாட்களை ஒதுக்கி இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞான சக்தி என ஒன்பது நாட்கள்
பூஜை செய்யப் படுகிறது.
வீடே,ஊரே திருவிழாக் கோலம்தான்.
நவராத்ரி நாட்களில் ஸுமங்கலி,கன்யாப் பெண்களுக்கு அன்னமளித்து,விசேஶ
மங்களச் சாமான்களை அளிப்பது என்பது மிகவும் விசேஶமான செயலாகக்
கருதப்படுகிறது.
நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஶமாக மத்தியான வேளைகளில்
சர்க்கரைப் பொங்கல்,பாயஸம்,தயிர்சாதம், வெண்பொங்கல்,எலுமிச்சைசாதம்,
புளியஞ்சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம்,பாலில் செய்த அக்கார வடிசல்
என…
View original post 126 more words
மகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.
ஆடி வெள்ளிக்கிழமை எனக்குத் தெரிந்தது பாருங்கள்
Continue Reading ஜூலை 17, 2015 at 5:18 முப 17 பின்னூட்டங்கள்
சித்திரா பவுர்ணமி.
நன்றி—-படம். கூகல்
இவ்வருஷத்திய சித்ரா பவுர்ணமி பூஜை 3—5—-2015 அன்று வருகிறது.
சித்திரைமாத, பவுர்ணமி,,சித்திரை நக்ஷத்திரமும் சேர்ந்து வரும்தினத்தைச்,சித்திராபவுர்ணமி என்று கொண்டாடி பூஜிக்கிறோம்.ஏறக்குறைய நக்ஷத்திரமும்,பவுர்ணமியும் சேர்ந்து வரும்.அன்று சித்திர குப்தனுக்கு பூஜை செய்து வழிபடும் வழக்கமிருந்தது.இதற்காக ஒரு கதையும் வழக்கத்தில் சொல்லுவார்கள்.
ஒருஸமயம் பார்வதிதேவி அழகான சித்திரமொன்றை வரைந்தார். அதற்கு சிவபெருமான் உயிர் வழங்கினார். சித்திரம் உயிர்பெற்றதால் சித்ரகுப்தனென்ற பெயர் வழங்கலாயிற்று.
யமதர்மராஜனுக்கு வேலை பளுஅதிகமாகிறதுயார்என்னபாவபுண்ணியங்கள்செய்தார்களென்று
பார்த்து அவர்களுக்கானதைச்செய்வதில் கடினம் ஏற்படுகிறது என்று
விஷ்ணுவிடமும்,சிவனிடமும் சொல்கிரார் யமன். உயிர்களைப் படைக்கும் பிரம்மதேவனிடம் சொல் என்கிரார்கள் அவர்கள். யமதர்மருக்கு,
அப்படி பிரம்ம தேவனால் கணக்குப்பிள்ளையாக சித்ரகுப்தன் நியமிக்கப்படுகிறார்.உலகத்தில் எல்லோருடைய பாப புண்ணிய கணக்குகளைத் துல்லியமாக வைப்பவர் சித்ர குப்தன்.
அவரை பூஜைசெய்து வணங்குவதுதான் சித்ரா பௌர்ணமியின் விசேஷம். தாங்கள் செய்த பாவங்ளைக் குறைத்தும்,புண்ணியங்களை அதிகரிக்க வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கமே. புண்ணியமான காரியங்கள் அதிகம் செய்ய வேண்டுமென்பதை இந்த நாள் ஞாபகப்படுத்துகிறது. அதிலும் வயதான பெண்மணிகள் கட்டாயம் இதைச் செய்வார்கள்.
உப்பில்லாமல் சாப்பிடுவது இதன் விசேஷம். நிவேதனத்திற்கு உப்பு சேர்த்து ருசியாகச் செய்து நிவேதித்து தானமும் செய்வார்கள். இந்த நன்னாளில் தானம் செய்வது விசேஷம்.
கோடைகாலமாதலால் விசிறி,குடை,பாதரக்ஷை, பழங்கள் என தானம் கொடுப்பார்கள்.
எங்கள் ஊரில் ஐந்து ஆறு பெண்களாகச் சேர்ந்து இதனைச் செய்வார்கள். சித்திரகுப்தன் கதை ஏதோ பாட்டின் வடிவத்தில் இருக்கும். புத்தகம் பார்த்து பாடுவார்கள். மற்றவர்கள் பக்தியுடன் பாட்டைக் கேட்பார்கள். மிக்க சுலபமான நடையில், ஒரே ராகமாகத்தான் பாடிக் கேட்டிருக்கிறேன்.
ஒரே ஒரு அடி ஞாபகம் உள்ளது. சித்திர புத்திரனார், சீரார் பெரும் கணக்கர், நாட்டுக்கொரு கணக்கர் நல்ல கணக்கர் வந்தாரம்மா இப்படியே கதை பூராவும் பாடுவார்கள். பாட்டைக் கேட்பதற்கு அக்கம்,பக்கமுள்ள பெண்கள் எல்லோரும் வந்து பக்தியுடன் பாடலைக் கேட்பார்கள். பூஜையின் கடைசியில் பிரஸாத விநியோகமும் உண்டு. முக்கியமாக அன்று உப்பில்லாமல் சாப்பிடுவார்கள்.
சர்க்கரைப் பொங்கல்,மெயினாகப் பண்ணுவார்கள். மாங்காய் விசேஷமாக இருக்கும். அன்றைய தினம் தானங்கள் செய்தால் விசேஷமென்பர். கலந்தசாதங்கள்வடை முதலானதும் செய்து வந்தவர்களுக்குக் தானமாகக் கொடுப்பார்கள்.
போடும் இழைகோலத்தில் தெற்குபுறம் வாயிற்படி மாதிரி திறந்து விட்டுக் கோலம் அமைந்திருக்கும். நடுவில் சித்திர குப்தனாக கற்பனை செய்துஒரு படம். வைதீகர்கள் வீட்டில் ஓலைச்சுவடிகள் இருக்கும். அதனுடன் எழுதுகோலும் பூஜையில் வைத்து பூஜிப்பார்கள். கிருஷ்ணாஷ்டமிக்குப் போடுவதுபோல வாயிலிலிருந்து பாதமும் போடுவார்கள். இப்பொழுது பார்க்கவே கிடைக்காது. நிறைய பேர் வந்து பூஜையைப்பார்த்துப் போவார்கள். உப்பில்லாமலும் சாப்பிடுவார்கள்.
சென்றமாதம் காஞ்சீபுரம் போய் சித்ர குப்தன் கோவிலுக்குப் போய் வந்தோம். மிகவும் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது கோவில். அதன் ஞாபகமாக இந்தப்பதிவு.
ஆனந்த சதுர்த்தி. நான் பார்த்த வினாயகர்கள்,மும்பை.
மும்பையில் நான் தரிசித்த வினையகர்கள்
Continue Reading செப்ரெம்பர் 15, 2014 at 1:27 பிப 8 பின்னூட்டங்கள்
பிள்ளையாரே வாரீர்,பெருமாளேவாரீர்
வினாயகர்தான் நம் பிள்ளையார். விக்கினங்கள் வாராது கார்க்கும் நம்முடைய பெருமாளும் அவர்தான்.
அவரை எப்போதும் நினைக்கும் நாம் இப்போதும் பார்ப்போம்.
வணங்குவோம்.
Continue Reading ஓகஸ்ட் 13, 2014 at 9:10 முப 9 பின்னூட்டங்கள்
துளசித்துதி
துளசியம்மன் தோத்திரம்
தினமும் சொன்னால் நன்மையுண்டு. வெள்ளிக்கிழமைகள்,அதிலும் ஆடி.தை வெள்ளிக்கிழமைகள் என்றுமே குளித்ததும்
மடியாக துளசியை வணங்கி,மனதால்கூட இதைச் சொன்னாலே போதும். அவ்வளவு நல்லது. பாருங்கள்.
Continue Reading ஓகஸ்ட் 6, 2014 at 12:14 பிப 16 பின்னூட்டங்கள்