Posts filed under ‘பொழுதுபோக்கு’

ஜெனிவா ஏரியைச்சுற்றி மேலும்–7

நடுநாயகமாக கிராமத்து, சர்ச். பெரியகிராமம். இராஜதானியாகக் கூட இருந்திருக்கலாம். குறுநில மன்னர்கள்தானே! நான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவும் இருந்திருக்கலாம்.

கிராமம்

கிராமம்

சர்ச்

சர்ச்

கோட்டை மலை உச்சியில் இருக்கிறது. வண்டி போகாது. பாதை சற்று செங்குத்தாக கரடு முரடாகத் தோன்றியது. மதிய சாப்பாடும் முடிக்க வேண்டும். நிறைய ரெஸ்டாரெண்டுகள். அடுக்கடுக்கான மலை முகடுகளைத் தரிசித்துக் கொண்டே சாப்பிடும் வசதிகள்.

எல்லோரும் அவரவர்களுக்கு வேண்டிய பிட்ஸா,பாஸ்தா, பழச்சாறுகள், நானும் ஸேலட்டுடன் பழச்சாறு சாப்பிட்டேன். நாங்கள் போனபோது குளிரே இல்லை. ஸெப்டம்பர் முதல் வாரம்.

எனக்காக ஒரு வீல்சேரும் கண்டுபிடித்துக் கொண்டு வந்தனர்.
பெரிய கோட்டை,கூடகோபுரம்,மாடமாளிகை என்று கற்பனைப்பண்ணி விடாதீர்கள் என்று முன்னெச்சரிக்கை பிள்ளையிடமிருந்து வந்தது.
மலைக் காட்சிகளே ரம்யமாக இருந்தது. வெகு தூரமில்லை. வந்தடைந்தோம்.
டிக்கெட் வாங்க வேண்டு மென்றனர். வீல்சேர் உள்ளே போகமுடியாது. படிக்கட்டு வழியே மேலே போக வேண்டுமாம்.
]கோட்டையின் ஒருபக்க சுவர் கோட்டையின் ஒருபக்க சுவர்.
பக்கத்திலிருந்து மலைகளழகு.
கோட்டையின் கற்சுவர். நடுவில் ஏதோ சின்னம்.

20160911_153342

உள்ளே நுழைந்தால்  புராதன சமையலறை.

சமையலறை

சமையலறை

படுக்கையறை ஓவியங்களுடன் அழகாக இருந்தது. பாருங்களேன். எனக்குத்தான் அப்படித் தோன்றியதோ?

சயன அறை

சயன அறை

ஓவிய அறை

ஓவிய அறை

பால்கனியிலிருந்து பார்த்த அழகான தோட்டம் கோட்டையின் நடுநாயகமாக.

நவீனமா இருக்கு இல்லே?

நவீனமா இருக்கு இல்லே?

புராதனமான பொருட்கள் ஒரு மேஜையின் மீது.
நீங்களாக எதுவாக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

[பார்த்தீர்களா? பார்த்தீர்களா?[

கீழ்த்தளத்தில், முகப்பிலேயே தண்ணீர் வர வசதி இருக்கிறது.
நீங்களெல்லாம் இதுவரை கூட வந்தீர்கள். பிடித்தவர்களுக்குத்தான் பிடிக்கும். கதை ஒன்றும் இல்லை என்று நினைப்பீர்கள் உடன் வந்தவர்களுக்கு மிகவும் நன்றி. வந்தவழியே ஏரியைச் சுற்றிக்கொண்டு வந்து சேர்ந்தாயிற்று. ரஸித்ததற்கு மிகவும் நன்றி.இந்த ஏரியினின்றுதான் ரோன் என்ற நதி வாய்க்கால்மாதிரி உற்பத்தியாகி பிரான்ஸில் பெரிய நதியாகப் பாய்கிறது.

உள்ளே வாருங்கள் ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போகலாம். அன்புடன்

திசெம்பர் 13, 2016 at 2:51 பிப 8 பின்னூட்டங்கள்

ஜெனிவாஏரியைச் சுற்றிமேலும்-6

சீஸ்செய்யும் இடம்

சீஸ்செய்யும் இடம்.

இந்த இடத்தில் பார்வையாளர்களுக்காக  மதியம் ஒரு மணிக்கு  மிஷினை இயக்கிக் காட்டுகிரார்கள்.  அது வரை அவ்விடம் சேருவதற்குள்     பார்வைக்குப் படங்களும்,கணக்குகளும்,  மாடுகளின் உணவைப் பற்றியும்,   விவரமாகப்  பதிவுகள் படங்கள் மூலம் இருக்கிறது.

ரிமோட் ஒன்றை எடுத்துக் கொண்டு விட்டால் அவ்விட விஷயங்களை அது நமக்குச் சொல்லுகிறது.

ரிமோட் சொல்லுகிறது

ரிமோட் சொல்லுகிறது

புற்கள்தான் எத்தனைவித நறுமணங்களில்?       புற்களைப் பார்க்க முடிவதில்லை.

அதன் நறுமணங்களை   முகர்ந்து பார்க்க    வசதி இருக்கிறது.  இந்த வாஸனை இல்லையா?  ஓமம் வாஸனை,     சீரகம்,ரோஜா,  பூக்களின் வாஸனை என பலதரப்பட்டது. லவென்டர்,ரோஸ்மரி இப்படிப்பலபல.

ஓ அம்மா கரெக்டா கண்டு பிடிக்கிறா என்று கேலிக்கூச்சல்.   பிறகு பார்த்தால்  வாஸனையின் பெயர்களும்   சிறிய எழுத்தில் எழுதியிருக்கிறது போலும்.

அம்மாவிற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்.   உனக்கு பிளாக் இருக்கு  எங்களுக்கெல்லாம் எதுவும் இல்லையே என்று  என்னை   முக்கிய நபராக  பேசி சிரித்துக் கொண்டு வந்தனர்.

போகட்டும்போங்கள்.  நான்தான் எங்குமே வர விரும்பவில்லை.  இப்படி ஒரு பெரிய சுமை எனக்காகவா என்றேன்.

சுமையில்லை.  நீ ஸந்தோஷமாக ஏதாவது எழுத இம்மாதிரி  இடங்கள் வேண்டுமென்றுதான்.      மனதில் ஸந்தோஷம் வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
கணக்குகளின் பார்வை பாருங்கள்.

ஒரு பசுவின் சாப்பாடு 100 கிலோகிராம் பசும்புல். எண்பத்தைந்து லிட்டர் தண்ணீர்

12 லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ சீஸ் செய்ய முடியும். 30 பால் வியாபாரிகள் ஒரு வருஷத்தில் ஆறு மில்லியன் லிட்டர்
பால் ஸப்ளை செய்கிறார்கள். இதில் 500 டன் சீஸ் செய்கிரார்கள்.

இந்த சீஸை ஐந்து மாதத்திற்குப் பிறகு உபயோகப் படுத்துகிரார்கள்.
பிறகு 16மாதங்கள் வரை உங்கள் ருசிக்குத் தக்கவாறு சாப்பிடமுடியும்.

2200 பால் கொள் முதல் செய்பவர்கள் 345 மில்லியன் லிட்டர் பாலில் 870000 வீல்ஸ் சக்க்ரவடிவிலான சீஸைச் செய்கிரார்கள்.

மணி ஒன்றாகப்போகிறது. நமக்கு செய்முறை காட்டும் நபரும் வந்து விட்டார்.

வீல் வடிவமைக்கும் உபகரணங்கள்,,சீஸ்,  சீஸ் செய்யும்  கொப்பறை  தயாராக உள்ள நிலை

வீல் வடிவமைக்கும் உபகரணங்கள்,,சீஸ், சீஸ் செய்யும் கொப்பறை தயாராக உள்ள நிலை

கொப்பறையில்   குளமாக கெட்டியானபால்.  என்ன ஏது கலப்பார்களோ அது தெரியவில்லை.    கேட்டுகள் மாதிரி உள்ளவைகள்    சுழன்று வருகிறது.

தயிர்கடைவேனே   கோபாலன் தனைமறவேனே என்ற பழைய பாடல் ஒன்று ஞாபகம் வந்தது. காணொளி பாருங்கள்.

நான் மிக்க அக்கறையாக இம்மாதிரி பதிவு ஒன்றும் நாம் போட வேண்டும் என்ற ஆசையுடன் செய்கிறேன்.


 

அவர்கள் கணக்கு முடிந்து கலவையை வட்டங்களில் நிரப்பி ஒரு நாள் பூரவும் அழுத்தம் கொடுப்பார்களாம்.
கலவை கெட்டியாக ஆனவுடன் தயார் செய்து கிடங்குகளில் ரோபோ மூலம் அடுக்கி விவரங்கள் பதிப்பார்கள்.

இம்மாதிரி வகைவகையாக எவ்வளவு சீஸ் தயாரிக்கும் இடங்களோ? பலவித ருசிகளில், விதவிதமாக ருசிப்பவர்களுக்கு விருந்துதானே?

நல்ல தரமான பசும்பாலில்தான் சீஸ் தயாரிக்கப் படுகிறது. முன்நாட்களில் படகுகள் மூலம் வெளியிடங்களுக்குக் கொண்டுச் செல்வார்களாம். இப்போது வாகன வசதிகளுக்குக் குறைவில்லை.

யாவரும் உடன் வந்து ரஸித்தாற்போல நான் உணருகிறேன்.
இன்னும் மலையின் மீது போய்ப் பார்க்க ஒரு கோட்டை ஃபோர்ட் பாக்கியுள்ளது. குட்டி குட்டி ராஜ்யமும் , பெயரளவில் கோட்டையும்.
பிறகு பார்க்கலாம். வாருங்கள்.

நவம்பர் 24, 2016 at 2:14 பிப 16 பின்னூட்டங்கள்

ஜெனிவா ஏரியைச் சுற்றி மேலும்–5

அன்று போய்வந்த  ந்யான் வழியேதான்  கார்தான் எவ்வளவு வேகமாகப் பறக்கிறது. காரிலிருந்து படம் எடுக்க வேண்டுமென்றால் முடிவதே இல்லை. ஆப்பிள் தோட்டங்களும், சோளக் கொல்லைகளும்,திராக்ஷைத் தோட்டங்களும். ஆப்பிள்மரங்கள் அடர்ந்த பகுதி இது.

ஆப்பிள் காடு

ஆப்பிள் காடு

சூரியகாந்தி  அறுவடை முடிந்து விட்டிருக்கும் போலுள்ளது. லுஸான் நகரையும் கடந்து மலைமீது அமைந்திருக்கும் ஒரு இடத்திற்குப் போகிறோம். குளிர் இருக்குமென்பதால் இலகுவான ஸ்வெட்டர் எனக்குத் தேவையாக இருந்தது. கிராமத்திற்குப் போகும் வழி. ஊரின் பெயர் Gruyeres Gகிரியேர்ஸ்

கிராமத்தை நோக்கி

கிராமத்தை நோக்கி

மலை மேலுள்ள பாதை தெரிகிறதா? வழியே எவ்வளவோ காட்சிகள். மாடுகளின் மேய்ச்சலுக்கான புல் வெளிகளும்,மாட்டுக் கூட்டங்களும். படமெடுக்கவில்லை கார்வேகம். மேலும் போகிறோம்.

பாதை

பாதை

கிராமத்து கார் முகப்பில் நிறுத்திவிட்டு சீஸ் உற்பத்தி செய்யும் இடத்தின் முகப்பிற்குச் செல்கிறோம்.

சீஸ் ஃபேக்டரியின் முகப்பு.

சீஸ் ஃபேக்டரியின் முகப்பு.

கொழுகொழு பசுமாட்டின் உருவமும்,சீஸ் ஸம்பந்தப்பட்ட  கடைகளும்,அவ்விடத்திய விஷயங்களும்,  மாதிரிக்கு  சாப்பிட சீஸும் தருகிரார்கள்.    பெரிய முகப்பு. எல்லா விஷயங்களும் ஆங்கிலத்திலும்,Fப்ரெஞ்ஜிலும் இருக்கிறது.அழகான கடைகள்.

வியப்பு மேலிட  அவ்விட எல்லா உபகரணங்களையும் பார்க்க விலையைப் படிக்க  எவ்வளவு விலை   அதிகம் என்று வியப்பு மேலிடுகிறது.

சீஸ் தயாரிக்கும் முறையைப் பொது மக்களுக்குக் காட்ட, மதியம் ஒரு மணி குறிப்பிடப் பட்டுள்ளது. அதற்கும்  டிக்கெட் வாங்கிப் போக வேண்டும்.  டிக்கெட் வாங்கியாகிவிட்டது. பொழுது இருக்கிறது.

உள் நுழைவதற்கு முன்பே  சீஸ்   வட்டங்களை  அடுக்கி வைக்கும் பெரிய கிடங்கு இருக்கிறது. ரோபோக்கள் உதவியுடன்    பெரியபெரிய  வட்டங்கள்  அடுக்கப்படுவதைப் பார்ப்போம் வாருங்கள். வண்டிச் சக்கரம் மாதிரி கெட்டியான சீஸ். அடுக்கடுக்கான ஷெல்புகள்,

சீஸ் கிடங்கு ஒருபக்கம்

சீஸ் கிடங்கு ஒருபக்கம்

வட்டவட்டமாக அடுக்கியிருப்பது எல்லாம்  சீஸ். இடையே வருவது ரோபோ.

சீஸை அடுக்கும் விதத்தையும் , ரோபோ செய்வதையும் பார்ப்போம்.

சீஸ்கிடங்கும் ரோபோவும்

சீஸ்கிடங்கும் ரோபோவும்

ரோபோ வேலை செய்வதைப் பாருங்கள்.

சீஸ் செய்யும் இடத்திற்கு ஒரு மணிக்குப் போவோம். பின்பு மலைமுகடுகளருகில் ஒரு கோட்டையையும் பார்ப்போம்.

நவம்பர் 17, 2016 at 1:35 பிப 8 பின்னூட்டங்கள்

ஜெனிவாஏரியைச்சுற்றி–4

இதுவரை நாம் போய்வந்தது -பிரெஞ்சு கிராமத்தின் கரை ஓரம்.
நாம் இன்று போவது ஸ்விஸ்ஸின் பாகத்திலுள்ள ஏரிக்கரையின் சின்ன நகரம். இங்கு வந்த போது குளிர் ஆரம்பமாகவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தில்லி மருமகளும் வந்திருந்ததால் போனேன். ஊரின் பெயர் Nyon ந்யான்.

நியான் அழகிய வீதி

நியான் அழகிய வீதி

வீதியின் மத்தியில் பூக்கள் பூத்திருப்பது மனதைக் கவர்கிறது. நடந்து யாவற்றையும் ரஸித்துக் கொண்டே ஏரிக்கரையோரத்திலே பாட்டை மனதில் நினைத்துக்கொண்டே நடைபோட்டு ரஸிக்கலாம் வாருங்கள்.
பிருமாண்ட ஏரியின் கரையோர அழகுப் பார்வைகள்.

ஏரிக்கரையோரம்

ஏரிக்கரையோரம்

இதே அழகான இன்னொரு பார்வை.

அழகு

அழகு

இன்னும் கொஞ்சம் மேலே போவோமா? போய்க்கொண்டே இருக்கலாம்.

காட்சி

காட்சி

பூக்கள் அலுக்காதவைகள்.

பூங்காவா

பூங்காவா

சாப்பிடப் போகுமுன் முகம்காட்ட வேண்டாமா?

காட்சி

காட்சி

நாங்களும்

என்ன சாப்பிட

என்ன சாப்பிட

பிட்ஸா,ஸேலட் வரும்.
மறுநாள்
அடுத்து  ஒரு மலையுச்சியில் ஒரு சின்ன கோட்டையையும்,    மலைமுகடுகளையும்,போகும்போதே  சீஸ் செய்யப்படும் ஒரு இடத்தையும், பார்ப்பதாக உத்தேசம்

போய் விட்டு வந்தாகியும் விட்டது. முன்னமேயே. அதையும்  கடைசியாகப்  பங்குகொண்டு , எழுதி முடித்து விடுகிறேன்  சிலநாட்களில்.

 

 

 

நவம்பர் 1, 2016 at 1:39 பிப 10 பின்னூட்டங்கள்

போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி–3

ஏரிக்கரையை அடைந்தோமே தவிர இன்னும் சற்று மேலே போக வேண்டும் . நான் இங்கேயே இருக்கிறேன். என்னால் வரமுடியுமா பார்த்து வாருங்கள் என்று சொல்லி உட்கார்ந்து விட்டேன். சேர்கள் இருந்தது.  பிறகு  போனதில்   பார்த்ததுதான்

ஒருகாட்சி

ஒருகாட்சி

சற்று தள்ளிப்போய் பார்த்த பார்வைகள். குழந்தைமாதிரி ரஸிப்பதற்கு என்னவா?

அழகு

அழகு

வாத்துடன் குழந்தை பேசுகிறதா? அதைத்தான் கேட்க வேண்டும்.

குழந்தைபேசுகிறது

குழந்தைபேசுகிறது

இது என்ன பார்ப்போமா?

 என்ன அழகு

என்ன அழகு

அடுத்ததும் அழகுதான்.

சுற்றுலாக் கப்பலும்  பிரயாணிகளும்

சுற்றுலாக் கப்பலும் பிரயாணிகளும்

அழகான காட்சிகள்.
நாளைக்கு வேறு இடங்களுக்குப் போகலாம். இன்று இத்துடன் வீடு திரும்பலாம் என்று வரும் வழியில் ஓரிரு காட்சிகள். அப்புறம் கொஞ்சம் எழுத இருக்கும் . அவ்வளவுதான்.

திராக்ஷைத் தோட்டம்

திராக்ஷைத் தோட்டம்

 வழியெங்கும்

வழியெங்கும்

காரிலிருந்தே ஃபவுண்டனையும் பார்த்துக்கொண்டே திரும்புவோம் வீடு.

ஜெனிவா ஃபவுண்டன்

ஜெனிவா ஃபவுண்டன்

இப்படி  -ப்ரெஞ்ச்  கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்புகிறோம். நீங்களும் உடன் வந்தீர்களா?

ஒக்ரோபர் 27, 2016 at 1:20 பிப 9 பின்னூட்டங்கள்

போவோமா ஜெனிவா ஏரியைச் சுற்றி.2

ஊரையும் ஒரு கடையையும் பார்த்தோம். ஏரியின் காட்சிகளை இன்னும் பார்க்கத் தொடரலாம்

Continue Reading ஒக்ரோபர் 12, 2016 at 4:22 பிப 6 பின்னூட்டங்கள்

போவோமா ஜெனிவா ஏரியைச்சுற்றி.

ஜெனிவா ஏரியின் கரையோர கிராமம் பிரான்ஸில் உள்ளது. அங்கு போகும் வழியில் நாம்.

Continue Reading ஒக்ரோபர் 6, 2016 at 3:28 பிப 8 பின்னூட்டங்கள்


ஏப்ரல் 2017
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 265 other followers

வருகையாளர்கள்

  • 418,886 hits

காப்பகம்

பிரிவுகள்


Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.