அன்புள்ளம் கொண்ட யாவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளையும்,மனமார்ந்த அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி மஹாலிங்கம்.
இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வஸந்தத்தை வரவேற்கும் பூக்களைப் பார்த்ததும் முயற்சி செய் என்று சொல்லும் என்னை ஊக்குவிப்பவர்களுக்காகச் செய்கிறேன். வஸந்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில மரங்கள் பூத்துக் குலுங்கி அதன் வேலையை முடித்து விட்டு பூக்கள் யாவையையும் உதிர்த்து இலைகளை சுமக்க ஆரம்பித்து விட்டது.
ஒரு வெண்மையான மலர் சிறிய மரத்தில் பூத்துக் குலுங்குவதைப் பாருங்கள். இப்போது பூக்களே இல்லை. எவ்வளவு அழகிய மலர்கள்?
உங்கள் யாவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ஜெனிவா ஆஸ்பத்திரி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ள நான் உங்கள் யாவருக்கும் இனிய மகர ஸங்கராந்தி, பொங்கல் வாழ்த்துக்களைச் சொல்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
இனிய பொங்கல் வாழ்த்துகளும், ஆசிகளும் உங்கள் யாவருக்கும். அன்புடன் சொல்லுகிறேன்.
அன்புள்ள சொல்லுகிறேன், முகநூல், காமாட்சி முதலானவைகளின் சஹோதரஸஹோதரிகள் மற்றும் அனைத்து எல்லா நட்புள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்பும் ,ஆசிகளும். காமாட்சி மஹாலிங்கம்.