Posts tagged ‘எள்ளும் சீரகமும்’
பீன்ஸ் கறி.
என்ன பிரமாதம் பீன்ஸ் கறி இல்லையா! இது பஞ்சாபியர்கள் செய்யும் வகை. மிக்கச் சுலபம்தான். ரொட்டியுடன் சாப்பிட இந்தவகை வதக்கல். நாமெல்லாம் பொடிப்பொடியாக நறுக்கி தேங்காய் சேர்த்தும், கறிப்பொடி சேர்த்தும் வதக்குவோம் பருப்புசிலியும் செய்வோம். ஒரு சிறு மாறுதல்தான். அதையும்தான் பார்ப்போமே.
என்ன விசேஷமானது என்றால் பெரியஅளவில் காய்கள் நறுக்கப்பட்டிருந்தது. தாளிதம் வேறு பொருள்கள் . அவ்வளவுதான்.
பீன்ஸை இரண்டு அங்குல நீளமாக நறுக்கி தண்ணீரில் அலசி வடியப்போடவும். நான் ஸ்டிக் பேனை சூடாக்கி வேண்டுமான எண்ணெய் விடவும். வெள்ளை எள் ஒரு டீஸ்பூன்,அரை டீல்பூன் சீரகத்தைத் தாளித்து, விழுதாக்கிய பூண்டு இஞ்சியைப் போட்டு வதக்கவும். பின்னர் பீன்ஸைச் சேர்த்து வதக்கவும். மூடித்திறந்து மிதமான தீயில் காயை நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் கீழிறக்கி ரொட்டி,காரஸாரமான டாலுடன் உபயோகிக்கவும். வேண்டுமானால் மிளகாய் சேர்க்கலாம். எள்ளும்,சீரகமுமாக ரொட்டியுடன் இது ஒரு ருசி. ஒன்றும் பிரமாதமில்லை.