Posts tagged ‘சீஸ்’
ஜெனிவா ஏரியைச் சுற்றி மேலும்–5
அன்று போய்வந்த ந்யான் வழியேதான் கார்தான் எவ்வளவு வேகமாகப் பறக்கிறது. காரிலிருந்து படம் எடுக்க வேண்டுமென்றால் முடிவதே இல்லை. ஆப்பிள் தோட்டங்களும், சோளக் கொல்லைகளும்,திராக்ஷைத் தோட்டங்களும். ஆப்பிள்மரங்கள் அடர்ந்த பகுதி இது.
சூரியகாந்தி அறுவடை முடிந்து விட்டிருக்கும் போலுள்ளது. லுஸான் நகரையும் கடந்து மலைமீது அமைந்திருக்கும் ஒரு இடத்திற்குப் போகிறோம். குளிர் இருக்குமென்பதால் இலகுவான ஸ்வெட்டர் எனக்குத் தேவையாக இருந்தது. கிராமத்திற்குப் போகும் வழி. ஊரின் பெயர் Gruyeres Gகிரியேர்ஸ்
மலை மேலுள்ள பாதை தெரிகிறதா? வழியே எவ்வளவோ காட்சிகள். மாடுகளின் மேய்ச்சலுக்கான புல் வெளிகளும்,மாட்டுக் கூட்டங்களும். படமெடுக்கவில்லை கார்வேகம். மேலும் போகிறோம்.
கிராமத்து கார் முகப்பில் நிறுத்திவிட்டு சீஸ் உற்பத்தி செய்யும் இடத்தின் முகப்பிற்குச் செல்கிறோம்.
கொழுகொழு பசுமாட்டின் உருவமும்,சீஸ் ஸம்பந்தப்பட்ட கடைகளும்,அவ்விடத்திய விஷயங்களும், மாதிரிக்கு சாப்பிட சீஸும் தருகிரார்கள். பெரிய முகப்பு. எல்லா விஷயங்களும் ஆங்கிலத்திலும்,Fப்ரெஞ்ஜிலும் இருக்கிறது.அழகான கடைகள்.
வியப்பு மேலிட அவ்விட எல்லா உபகரணங்களையும் பார்க்க விலையைப் படிக்க எவ்வளவு விலை அதிகம் என்று வியப்பு மேலிடுகிறது.
சீஸ் தயாரிக்கும் முறையைப் பொது மக்களுக்குக் காட்ட, மதியம் ஒரு மணி குறிப்பிடப் பட்டுள்ளது. அதற்கும் டிக்கெட் வாங்கிப் போக வேண்டும். டிக்கெட் வாங்கியாகிவிட்டது. பொழுது இருக்கிறது.
உள் நுழைவதற்கு முன்பே சீஸ் வட்டங்களை அடுக்கி வைக்கும் பெரிய கிடங்கு இருக்கிறது. ரோபோக்கள் உதவியுடன் பெரியபெரிய வட்டங்கள் அடுக்கப்படுவதைப் பார்ப்போம் வாருங்கள். வண்டிச் சக்கரம் மாதிரி கெட்டியான சீஸ். அடுக்கடுக்கான ஷெல்புகள்,
வட்டவட்டமாக அடுக்கியிருப்பது எல்லாம் சீஸ். இடையே வருவது ரோபோ.
சீஸை அடுக்கும் விதத்தையும் , ரோபோ செய்வதையும் பார்ப்போம்.
ரோபோ வேலை செய்வதைப் பாருங்கள்.
சீஸ் செய்யும் இடத்திற்கு ஒரு மணிக்குப் போவோம். பின்பு மலைமுகடுகளருகில் ஒரு கோட்டையையும் பார்ப்போம்.
ரிஸோட்டோரைஸ். Risotto rice
இதையும் விருப்பமானவர்கள் செய்து ருசிக்கலாமே
Continue Reading ஏப்ரல் 28, 2015 at 7:20 முப 11 பின்னூட்டங்கள்