Posts tagged ‘யமுனை’
காவிரி இல்லையிது.
பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு படம் இது. நதிக்கரையில் வசித்த மக்களெல்லாம், திரும்ப வர ஆரம்பித்து உள்ளனர். யமுனையில் அதிக அளவு தண்ணீரே பார்க்க முடிந்ததில்லை. ஐந்து,ஆறு வருஷங்களுக்குப் பிறகு, தொடர் மழையும்,யமுனையில் வெள்ளமும் என்று சொல்லக் கேட்டேன்.
பாருங்கள் யமுனையை!!
மக்களெல்லாம் ஒருபுறம் திரும்ப ஆரம்பித்த பிறகோ முன்போ வளர்ப்புச் செல்லங்களின் நிலையும் எப்படி இருந்திருக்கும்?
நான் எதையும் நேரில் பார்க்கவில்லை. நீங்களும் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம். நமக்கு உதவுவது செய்தித் தாள்கள்.
மதில்மேல்ப் பூனயாக என்று சொல்வார்களே? நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னை வளர்த்தவர்கள் வந்து விடுவார்கள். வீட்டுப் பக்கம்தான் இது.
நன்றியுள்ள நாங்களும் திரும்புகிறோம். எங்கள் எஜமானர்களும் வந்திடுவார்கள். எங்கள் வீடுதான் அருகில் இருப்பது. நான் இன்னும் குழந்தை,குட்டிங்களுக்கு இடம் தேடணும். புரிதுங்களா?
நானும் எவ்வளவு தண்ணியிலே வரேன் தெரியுமா? தண்ணியெல்லாம் வடிஞ்சுடுங்கோ!என்னிடம் பேசுவது போன்ற ஒரு கற்பனை. அவ்வளவு தான்.