Posts filed under ‘இடை வேளைச் சிற்றுண்டிகள்’
ஜவ்வரிசி வடை
வேண்டியவைகள் ஜவ்வரிசி—–1கப் வேர்க்கடலை—முக்கால் கப் தயிர்—1கப் திட்டமான சைஸ்—-உருளைக் கிழங்கு 1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 நறுக்கிய கொத்தமல்லித் தழை கால்கப் மிளகுப் பொடி–அரை டீஸ்பூன் சீரகம்—அரை டீஸ்பூன் தேவைக்கு–உப்பு பொரிப்பதற்கு வேண்டிய- எண்ணெய் செய்முறை——ஜவ்வரிசியைக் களைந்து இறுத்து தயிரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வேர்க்கடலையை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். ஊறின ஜவ்வரிசியை அழுத்திப் பிழிந்தெடுக்கவும். வேர்க் கடலைத் தூள், […]
தயிர் வடை.
வேண்டியவைகள்
உளுத்தம் பருப்பு——1 கப்
துவரம் பருப்பு—-கால்கப்
புளிப்பில்லாத கெட்டித் தயிர்——-3 கப்
வடை பொறித்தெடுக்க வேண்டிய எண்ணெய்
பச்சைமிளகாய்—–7
இஞ்சி——ஒரு அங்குலத் துண்டு
வேண்டிய உப்பு
சீரகம்—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—–1 கப்
பெருங்காயம்—-அரை டீஸ்பூன
கடுகு——1 டீஸ்பூன்
துருவிய கேரட்——அரைகப்
இலையாகக் கிள்ளிய கொத்தமல்லி—-கால்கப்
சின்ன சைஸ் தக்காளிப் பழம்—-3. பிரிஜ்ஜில் வைத்தெடுத்து ஸ்லைஸ் செய்யவும்.
செய்முறை
பருப்புகளைக் களைந்து 2, 3, மணிநேரம் ஊற வைத்து வடிக்கட்டி மிக்ஸியிலோ,
கிரைண்டரிலோ தண்ணீர் விடாமல் கெட்டியாக நன்றாக அரைக்கவும்
அரைஸ்பூன் உப்பு,பெருங்காயம் ஒரு மிளகாய் அரைக்கும் போது போட்டால் போதும்.
தேங்காயையும், மீதி மிளகாய்,சீரகத்தை அரைடீஸ்பூன் ஊறின அரிசியுடன்
இஞ்சி சேர்த்து மிக்ஸியிலிட்டு பூப்போல மென்மையாக அரைத்தெடுக்கவும்.
தயிரைக் கடைந்து , அறைத்த தேங்காய்க் கலவையைக் கலந்து
திட்டமாக உப்பு சேர்த்து பிரிஜ்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அரைத்த மாவை
அதிகம் ஊற விடாமல் திட்டமான வடைகளாகத் தட்டி
வேகவைத்து எடுக்கவும்
கையில் ஜலத்தைத் தொட்டு இலையிலோ, பாலிதீன் கவரின் மேலோ
வடையைத் தயாரிக்கலாம்.
ஒவ்வொரு முறையும் எடுக்கும் வடைகளை ,வெது வெதுப்பான,
தண்ணீரில் 2 நிமிஷம் போட்டு சற்றே பிழிந்தாற்போல அகலமான
தாம்பாளத்தில் வைக்கவும். தண்ணீரை அடிக்கடி மாற்றவும்.
பூரா வடைகள் தயாரானவுடன் தயிரை வெளியிலெடுத்து தாளிக்கவும்.
|ஒவ்வொரு வடையாக த் தயிரில் நன்றாகமுக்கி எடுத்துவேறொரு
குழிவான தாம்பாளத்தில் இடைவெளி விட்டுப் வடைகளைப் பரத்தி
வைக்கவும். மேலாகத் தயிர்க் கலவையை லேசாக விடவும்.
ஒவ்வொரு வடையின் மீதும் சிறிது கேரட் துருவல், அதன்
மீது மெல்லிய தக்காளி ஸ்லைஸ், மேலாகத் பச்சைக் கொத்தமல்லித்
தழை என கலர்க் கலராக அலங்கரிக்கவும்.
மிகுதியுள்ளத் தயிரை கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு வைத்து
வேண்டியவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
மாவைத் தண்ணீர் அதிகம் சேர்க்காது அறைக்க வேண்டும்.
காரம் அதிகம் வேண்டுமாயின் சேர்த்துக் கொள்ளவும்
சின்ன ப்ளேட்டில் வடையை வைத்து தயிர்க் கலவையைச்
சேர்த்துக் கொடுக்கவும்.
அதிகம் தயிர் வேண்டுமானால் கலந்து கொள்ளவும்.
தயிர் வடை ரெடி.
மைசூர் போண்டா
வேண்டியவை—–ஒருகப் உளுத்தம் பருப்பு.—2பச்சைமிளகாய்—-ஒரு டேபிள்ஸ்பூன்பச்சரிசி—–இவைகளை த் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிக்கட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சிறிது நீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும்.
சேர்க்க வேண்டிய சாமான்கள்—-சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காய் மூன்று டேபிள்ஸ்பூன்,— உடைத்த மிளகு ஒரு டீஸ்பூன், —–பொடியாக நறுக்கிய கொத்த மல்லி —- பெருங்காயம் சிறிது—ருசிக்குத் தேவையான உப்பு.
பொரிக்க எண்ணெய்,————————————அரைத்த மாவுடன் சாமான்களைச் சேர்த்துக் கலந்து வாணலியில் எண்ணெயைக் காய வைத்து ஈரக்கையினால் மாவை எடுத்து ஒரே சீராக உருண்டை வடிவ த்தில் உருட்டிப்போட்டு பொன்நிறமாக பொரித்தெடுக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் போண்டாக்கள் ஒத்துப் போகும்.
மாவில் அதிகம் தண்ணீர் கூடாது. நைஸாக அரைப்பது அவசியம்.
கதம்ப பகோடா
வேண்டியவை—கடலைமாவு2கப் — அரிசிமாவு2டேபிள்ஸ்பூன்——–
வெண்ணெய் ஒரு டீஸ்பூன் ,–வெங்காயம்2, பச்சைமிளகாய்3,——பொடியாக நறுக்கிய வகையில் கோஸ், காரட், குடமிளகாய்2கப்—கொத்தமல்லிசிறிது,—–கால்ஸ்பூன்இஞ்சித்துருவல்—வேண்டியஅளவுஉப்பு,———-பொரிப்பதற்கு எண்ணெய்.விருப்பமுள்ளவர்கள் பூண்டு சீரகம் சேர்க்கலாம்.
செய்முறை——மாவுகளுடன் உப்பு வெண்ணெய் 2ஸபூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு, பொடியாக நறுக்கியவெங்காயம் மிளகாய் காய்கறி மற்றவைகளையும் சேர்த்து திட்டமாக தண்ணீர் தெளித்துக் கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெயைக்
காயவைத்து, மாவைக் கிள்ளிப் போட்டு பகோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். இதையே தனியாக வெஙகாயத்தை மட்டிலும் அதிகமாகச் சேர்த்தும் செய்யலாம்.காரம் அதிகம் சேர்த்து செய்தால் சட்னிக்கு அவசியமிராது.
ஸோடா உப்புவிற்கு பதில்தான் இரண்டுஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் உபயோகிப்பது. கரகரப்பைக் கொடுக்கும்.
மசூர் பருப்பு குணுக்கு
வேண்டியவை—-200கிராம்மசூர்டால்—–2பெரிய சைஸ் தோலுரித்து வேகவைத்த உருளைக்கிழங்கு—-3பச்சைமிளகாய்—1ஸ்பூன் சீரகம்—-1துண்டு இஞ்சி—-வேண்டிய அளவு உப்பு–பொரிப்பதற்கு எண்ணெய்.
2மணிநேரம் பருப்பை ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். கிழஙகைச் சிறிதும்,பெரிதுமாக உதிர்த்துக் கொள்ளவும். பருப்புடன் இஞ்சி,மிளகாய், சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாய் கரகரப்பாக தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உப்பும் கிழங்கையும் சேர்த்துக் கலந்து இரண்டுஸ்பூன் காய்ச்சிய எண்ணெயையும் விட்டு பகோடா மாதிரி எணணெயில் ஒரே சீராக திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும். விரும்பும் சட்னிகளோடு சாப்பிடலாம். புதினா, புளிச்சட்னி, தோதாக இருக்கும்.
பாலக் பட்டாணிபருப்பு வடை-
வேண்டியவை.-பட்டாணிபருப்பு200கிராம்—உளுத்தம்பருப்பு50கிராம்—-துவரம்பருப்பு50கிராம்.–இரண்டுவத்தல்மிளகாய்—-இரண்டுபச்சை மிளகாய்— ஒரு டேபிள்ஸ்பூன்பெரும் சீரகம்—-உப்பு,—–நறுக்கிய பாலக்கீரை ஒருகப்,—-கொத்தமல்லி அரைகப்,இஞ்சிஒரு துண்டு—-பொரிப்பதற்கு எண்ணெய்.
பருப்பு வகைகளை 2-3மணி நேரம் ஊறவைத்து நீரைவடித்து,உப்பு காரம், இஞ்சி,பெருஞ்சீரகத்தைச் சேர்த்து மிகஸியில் கரகரப்பாக அரைத்தெடுக்கவும். சுத்தம் செய்த கீரை கொத்தமல்லியுடன் துளி மஞ்சள் பொடி 2ஸபூன் காய்ச்சிய எண்ணெய் இவைகளுடன் மாவைக்கலந்து வடைகளாகத் தட்டி காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த பருப்புக் கலவையில் வடைகள் சீக்கிரம் நமுத்துப் போகாமல் கரகரப்பாக நீண்ட நேரம் இருக்கும். வெங்காயம் சேர்த்தும் செய்யலாம். சூடாகச் சாப்பிட வேண்டும். .
மசால்வடை—கடலைப்பருப்பு——வேண்டியவை—-கடலைப்பருப்பு200கிராம்,—-உளுத்தம்பருப்பு50கிராம்–பச்சைமிளகாய்4,—பெரியஸைஸ்வெங்காயம்3,-கொத்தமல்லி,கறிவேப்பிலை,உப்பு,–பொரிப்பதற்கு எண்ணெய்.
பருப்புகளை ஊறவைத்து தண்ணீரை வடித்து உப்பு மிளகாய் சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்த்து, காயும் எண்ணெயில் வடைகளாகத்தட்டிப்போட்டு சிவக்க வேகவைத்து எடுக்கவும். புதினா,சோம்பும் சேர்க்கலாம். உப்பு காரம் வேண்டிய அளவு கூட்டியும் குரைத்தும் சேர்க்கவும். ஊறவைக்கும் நேரம் 2மணி போதுமானது.பூண்டு 2-3-துண்டு உங்கள் விருப்பம்.
