துளசித்துதி

ஓகஸ்ட் 6, 2014 at 12:14 பிப 16 பின்னூட்டங்கள்

துளசிமாடம்

துளசிமாடம் சென்னை

நம்மில் யாவர் வீட்டிலும் துளசிச் செடியை ஒரு மாடத்தில் வளர்த்து அதற்கு

சுற்றிலும் கோலமிட்டு,மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து தினமும் வழிபடுவதென்பது

தொன்று தொட்டு வரும் பழக்கம்.

வீட்டுப் பெண் குழந்களுக்கு    கோலம்போட, பக்தியை வளர்க்க என்று கலைக்கும்,தெய்வ பக்திக்கும்

ஒன்று சேர அப்யாஸிக்கப் படுகிறது என்பதும் என் எண்ணம்.

அதிலும் வெள்ளிக் கிழமைகள்,ஆடி,தைமாத வெள்ளிக் கிழமைகள்,

என விசேஷமாக  பூஜிப்பதும் உண்டு.

மாக்கோலத்துடன்  செம்மண் பூச்சும்,பூக்களுடன் விசேஷ பாயஸ நிவேதனத்துடன்

பூஜித்து ,ஸுமங்கலிகளுக்கு   வெற்றிலை,பாக்கு,பழங்கள்,குங்கும சந்தனத்துடன்

அளிப்பதும் உண்டு.

கார்த்திகை மாத சுக்கில பக்ஷ துவாதசியில் துளசி கல்யாணம் என்று கொண்டாடுவதும்

உண்டு.

அப்பொழுது

நெல்லிக் கிளையை மஹா விஷ்ணுவை மனதிலிருத்தி துளசியுடன் சேர்த்து வைத்து

பக்ஷ பரமான்னத்துடன் பூஜிக்கலாம்.

நெல்லிக்காயில் விளக்கேற்றி பூஜிப்பவர்களும் உண்டு.

நேபாளத்தில் ஆடிமாதம் துளசியை நடுவதற்கும்  வாத்தியார் வந்து

முறைப்படி  நடுவார். இது நேபாளத்து வழக்கம்.

கார்த்திகை மாதம் துளசி விவாக தினத்தன்று, ஹோமம் வளர்த்து, அதையும்

மந்திர கோஷத்துடன்  கொண்டாடும் வழக்கத்தையும் பார்த்திருக்கிறேன்.

குளிர் நாட்களில் துளசி   பட்டுப் போய்விடுவதால்,   வருஷா வருஷம் நடுவதும்

ஒரு விசேஷநாளாகிறது.

நம்மில்

ஸாதாரணமாக தினமும்  தமிழில் துளசித் தோத்திரம் எல்லோரும் சொல்வார்கள்.

அதை     எனக்குத் தெரிந்த அளவில்ப்  பதிவிடுகிறேன்.

இதைப் படித்து வந்தால் சிறிது நாட்களிலேயே மனப்பாடமாகிவிடும்.

தினமும் மனதினால் இதைச் சொன்னாலே போதும். அவ்வளவு நல்லது.

ஒரு சிறிய தொட்டியில் துளசியை வளர்த்தால் கூட போதும்.

படியுங்கள் தமிழ்த் துதியை.   அர்த்தம் தானாகவே விளங்கிவிட்டுப் போகிறது.

தோத்திரம்

இதுவும் துளசிமாடம்

இதுவும் துளசிமாடம்

ஸ்ரீமத்துளசியம்மா-திருவேகல்யாணியம்மா

வெள்ளிக்கிழமை தன்னில் -விளங்க வந்த மாதாவே

செவ்வாய்க் கிழமைதன்னில்–செழிக்க வந்த செந்திருவே

தாயாரே உந்தன்–தாளடியில் நான் பணிந்தேன்.

பச்சைப் பசுமையுள்ள–துளசி நமஸ்தே

பரிமளிக்கும்- மூலக்கொழுந்தே நமஸ்தே

அற்பப் பிறப்பைத்–தவிர்ப்பாய்      நமஸ்தே

அஷ்ட ஐசுவரியம்–அளிப்பாய் நமஸ்தே

வனமாலி என்னும்–மருவே நமஸ்தே

வைகுண்ட வாஸியுடன்–வாழ்வாய் நமஸ்தே

அன்புடனே நல்ல–அருந்துளசி கொண்டு வந்து

மண்ணின்மேல்நட்டு–மகிழ்ந்து நல்ல நீரூற்றி

முற்றத்தில்தான் வளர்த்து—முத்து போல்க் கோலமிட்டு

செங்காவி சுற்றுமிட்டு–திரு. விளக்கை ஏற்றி வைத்து

பழங்களுடன் தேங்காயும்—தாம்பூலம் தட்டில் வைத்து

புஷ்பங்களைச் சொரிந்து—பூஜித்த பேர்களுக்கு

என்ன பலன் தருவாயென்று—ரிஷிகேசர் தான் கேட்க

மங்களமான துளசி—மகிழ்ந்தே எடுத்துரைப்பார்.

மங்களமாய் என்னை வைத்து–மகிழ்ந்து  உபாஸித்தவர்கள்

தீவினையைப் போக்கி—சிறந்த பலன் நானளிப்பேன்

அரும் பிணியை நீக்கி– அஷ்ட ஐசுவரியம் நானளிப்பேன்.

தரித்திரத்தை நீக்கி –ஸம்பத்தை நான் கொடுப்பேன்.

புத்திரனில்லாத பேர்க்கு–புத்திர பாக்யமளிப்பேன்

கன்னியர்கள் பூஜை செய்தால்—நல்ல கணவரையும் கூட்டி வைப்பேன்

கிரஹஸ்தர்கள் பூஜை செய்தால்–கீர்த்தியுடன் வாழ வைப்பேன்.

ஸுமங்கலிகள் பூஜை செய்தால்–தீர்க ஸுமங்கலியாயிருப்பர்

மும்முக்ஷுக்கள் பூஜை செய்தால்—மோக்ஷ பலனடைவர்.

கோடி காராம்பசுவைக்  கன்றுடனே கொண்டுவந்து

கொம்பிற்கு பொன்னமைத்து–குளம்பிற்கு வெள்ளிகட்டி

கங்கைக் கரைதனிலே—கிரஹண புண்ய காலத்தில்

வாலுருவி அந்தணர்க்கு–மஹாதானம் செய்த பலன்

நானளிப்பேன் ஸத்யமென்று–நாயகியும் சொல்லலுமே

அப்படியே ஆக என்று–திருமால் அறிக்கையிட்டார்

இப்படியே அன்புனே  –ஏற்றித் தொழுதவர்கள்

ஒப்புடனே வாழ்ந்திடுவார்—பரதேவிதன் கிருபையால்.

 

ஒருநமஸ்காரமும், மனதார வேண்டுதல்களும் தொடரட்டுமே.

மற்றபடி வேண்டிக்கொண்டு  ரவிக்கை,புடவை சாற்றி

மற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.

உலகக்ஷேமத்திற்காக வேண்டுவோமே. ஏதாவது வரிகள் விட்டுப்

போயிருந்தால் தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

அன்புடனும்,ஆசிகளுடனும் சொல்லுகிறேன்.

 

 

Entry filed under: பூஜைகள்.

எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை பிள்ளையாரே வாரீர்,பெருமாளேவாரீர்

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. வை. கோபாலகிருஷ்ணன்  |  12:21 பிப இல் ஓகஸ்ட் 6, 2014

    இப்போதெல்லாம் இதனை அதிகமாக முன்போலக் காண இயலவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளால் ஏற்பட்ட நஷ்டங்களில் இதுவும் ஒன்று. தங்கள் பதிவினில் பார்த்ததில் சந்தோஷம்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  12:34 பிப இல் ஓகஸ்ட் 6, 2014

      பார்க்கஉங்களின் விரைவுப் பின்னூட்டம் பார்த்து ஸந்தோஷம்.
      தனி வீடுகளில்தான் பார்க்க இயலும். சின்னதாக பொம்மை போல ஒன்று வெள்ளியில் வாங்கி
      வெளிநாட்டில் இருந்தபோது வைத்திருக்கிறேன். இங்கும் உள்ளது.
      மும்பையிலும் சின்னதாக துளசிமாடம் இருக்கிறதைப்
      போட்டிருக்கிறேன்.
      உங்களுக்கு மிகவும் நன்றி. அன்புடனும்.ஆசியுடனும்.

      மறுமொழி
  • 3. ranjani135  |  3:24 பிப இல் ஓகஸ்ட் 7, 2014

    துளசித்துதி ஒரு உரையாடல் போல அமைந்திருக்கிறதே! எழுதி வைத்துக் கொள்ளுகிறேன். சில நாட்களிலேயே நீங்கள் சொல்லியிருப்பது போல மனப்பாடம் ஆகிவிடும்.
    கர்நாடகாவில் உத்தான துவாதசி (கார்த்திகை துவாதசி) அன்று துளசிக்குக் கல்யாணம் என்று நெல்லிக்காய் கிளை வாங்கி துளசி செடி அருகில் வைத்து, தம்பிட்டு (அரிசி+வெல்லம் கலந்து) செய்து அதில் நெய் விளக்கேற்றுவார்கள்.

    என்னிடமும் சின்னதாக வெள்ளியில் தான் துளசி இருக்கிறது. வெயில் வருவதில்லை. அதனால் துளசி செடி சரியாக வருவதில்லை எங்கள் வீட்டில்.

    மறுமொழி
    • 4. chollukireen  |  9:16 முப இல் ஓகஸ்ட் 8, 2014

      கர்நாடகாவில் ஒவ்வொரு குடும்பத்துப் பெண்களும் பித்தளையில் செய்யப்பட்ட துளசி மாடத்தில்,துளசி வைத்துப் பூஜை செய்வார்கள். இதே தெலுங்கு,மஹா ராஷ்டிராவிலும் பார்க்க முடிகிறது.
      துளசித்துதி, . துளசிமாடம்,துளசி இருந்தால்தான் சொல்ல வேண்டுமென்பதில்லை. வழக்கமாகி விட்டால்
      தானாகவே வாய் உச்சரிக்கும்.
      உங்கள் மறுமொழி மிகவும் ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது..
      நெய் விளக்கு மிகவும் விசேஷமானதொன்று. ரெடிமேட்
      துளசிமாடம் மண்ணில் செய்து பதப்படுத்தியது
      இங்கெல்லாம் கிடைக்கிறது. நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 5. gardenerat60  |  5:48 பிப இல் ஓகஸ்ட் 7, 2014

    அம்மா, வல்லமையாளறாக தேர்ந்தெடுக்கப்பட்டது அறிந்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். பாராட்டுக்கள் .

    எங்கள் மாடியில் துளசியம்மா, ஏகமாக வளர்ந்து அருள் புரிகிறாள். துளசித்துதிக்கு நன்றிமா!

    மறுமொழி
  • 6. chollukireen  |  9:33 முப இல் ஓகஸ்ட் 8, 2014

    உங்ளைப் போன்ற மிக்க ஸந்தோஷப்படும் , அன்பானவர்களுக்கும், உங்களுக்கும் மிகவும் நன்றி.
    துளசி இருக்கும் இடத்தில், கொசுத்தொல்லைகள் கூட
    அதிகம் இருக்காதாம். கற்பூரம் கூட துளசியில் தயாரிக்க முடியும். நல்ல மருத்துவ குணமுள்ள தாவரமும் இல்லையா? வணங்குவதில்கூட அர்த்தமும் பொதிந்துள்ளது.
    உங்கள் வீட்டு துளசியம்மாவிற்கு என்னுடைய வந்
    தனம். பார்க்கவே அழகான தெய்வத்தன்மை வாய்ந்த தாவரம். நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 7. Kumar  |  3:56 பிப இல் ஓகஸ்ட் 8, 2014

    Hello Akka,

    Mummushugal enral enna?

    Very glad to read your prayer lines.

    மறுமொழி
    • 8. chollukireen  |  11:03 முப இல் ஓகஸ்ட் 18, 2014

      மூன்று உலகத்தவர்களும் என்று நினைக்கிறேன்..நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 9. sheela  |  10:37 முப இல் ஓகஸ்ட் 16, 2014

    Mami,

    namaskaram. romba natkalaga naan padikave illai. Ippothuthan parthen. Arumai and thanks for giving so much information. Enakku appadiye cassette ketpathu pol irunthathu.

    Regards

    மறுமொழி
    • 10. chollukireen  |  11:10 முப இல் ஓகஸ்ட் 18, 2014

      உங்கள் யாரையுமே பார்க்க முடிவதில்லை. எப்போதாவது ஃபேஸ் புக்கில் பார்க்கிறேன். உன்னுடைய அலைகள் எங்கே?
      துளசித்துதி உனக்குப் பிடித்தது பற்றி மிகவும் ஸ,ந்தோஷம்.. எல்லோரும் பிஸியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அடிக்கடி உங்கள் யாவரையும் பற்றி எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆசிகள். பெண்ணே அடிக்கடி விஜயம் செய். அன்புடன்

      மறுமொழி
  • 11. adhi venkat  |  6:48 முப இல் ஓகஸ்ட் 23, 2014

    துளசித்துதி படித்து தெரிந்து கொண்டேன். சேமித்து கொள்ளவும் வேண்டும்.

    தில்லியில் வயதான ஒரு மாமி எனக்கு தான் பூஜை செய்து வந்த துளசிச் செடியை தந்து விட்டு சென்றார். நானும் கோலம் போட்டு தண்ணீர் விட்டு வளர்த்து வந்தேன். நாங்களும் இடம் மாறியதில் இப்போ என்ன நிலையில் இருக்கோ தெரியவில்லை.

    மறுமொழி
  • 12. chollukireen  |  12:58 பிப இல் மார்ச் 25, 2022

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    இது பல வருஷங்களுக்கு முன்னர் பதிவிட்டப் பதிவு இது. இன்று வெள்ளிக்கிழமை. துளசி ஸ்தோத்திரம் படித்தால் நல்லது. விரும்புவீர்கள் என்று பதிவிட்டுள்ளேன். அன்புடன்

    மறுமொழி
  • 13. ஸ்ரீராம்  |  1:58 பிப இல் மார்ச் 25, 2022

    துளசி ஸ்தோத்ரம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    மறுமொழி
    • 14. chollukireen  |  2:12 பிப இல் மார்ச் 25, 2022

      தமிழ் பிராமணக் குடும்பகளில் துளசிக்காக இதுவும்,திருவிளக்குத் தோத்திரம் ஒன்றும் பெண்களும்,சுமங்கலிகளும் கட்டாயம் அறிந்திருப்பார்கள். மிக்க நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 15. Geetha Sambasivam  |  12:58 முப இல் மார்ச் 26, 2022

    துளசி ஸ்தோத்திரம் எப்போதுமே காலம்பர/சாயந்திரம் விளக்கு ஏற்றி விட்டு விளக்கே, திருவிளக்கே, ஸ்தோத்திரத்துடன் சேர்ந்து சொல்லும் வழக்கம் உண்டு அம்மா. மறுபடி நினைவூட்டி இருக்கிறீர்கள். நமஸ்காரங்கள்.

    மறுமொழி
    • 16. chollukireen  |  12:08 பிப இல் மார்ச் 26, 2022

      எனக்கும் அதே வழக்கம்தான்.
      மருத்துவ மகத்துவமும் கூடியதெய்வமல்லவா?ஆசிகள் உங்களுக்கு. அன்புடன்

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஓகஸ்ட் 2014
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

பிரபலமான இடுகைகள்

வருகையாளர்கள்

  • 551,510 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.