Posts filed under ‘Uncategorized’
கல்கண்டுப் பொங்கல்.
வழக்கமாகத் திங்களன்று ஏதாவது மீள்பதிவு செய்வேன். திங்ள் வந்து போனதே தெரியவில்லை. அவ்வளவு குளிர். இன்று கிடைத்த இந்தப் பதிவை ரஸியுங்கள். இனிப்பானது. அன்புடன்
நவராத்திரி விசேஶ நிவேதனப் பொருள் கல்கண்டுப் பொங்கலுடன் நான் வந்திருக்கிறேன்.
விசேஶமாக அதிகம் ஸாமான்களில்லாமல் இருப்பதைக் கொண்டு செய்ததிது.
வழக்கமான சில குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகி விட்டது.
அடிக்கடி செய்யும் பொங்லில்லை இது.
ஆதலால் செய்தபோது பதிவிடவேண்டும் என்று விருப்பம்.
வேண்டியவைகள்
சீரகச்சம்பா அரிசி—கால்கப்.
டைமண்ட் கல்கண்டு—முக்கால்கப்
பால்—ஒருகப்
ஏலக்காய்—இரண்டு
பாதாம்,முந்திரி,திராக்ஷை, எது கைவசமோ அதில் சிறிது.
செய்முறை
அடிகனமான பாத்திரம், எடுத்துக் கொள்ளவும்.
பாலுடன் ஸரி அளவு தண்ணீரும் கலந்து கொள்ளவும்.
அரிசியைக் களைந்து பாதி அளவு பால்க் கலவையுடன் தீயைஸிம்மில் வைத்து
அரிசியை வேக வைக்கவு்ம்.
அரிசி வேக வேக மீதிக் கலவையை சேர்த்துக் கொண்டே வரவும்.
நன்றாக வெந்தவுடன் கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
நான் இரண்டு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயையும் சேர்த்தேன்.
ஏலக்காய் பொடித்து சேர்த்து நன்றாகக் கிளறவும். சற்று நீர்க்க ஆகிப் பிறகு
இறுகிவரும். எல்லாமே நிதான தீயில்தான்.
இறக்கிவைத்து நெய்யில் முந்திரி,பாதாம்,திராக்ஷை எது இருக்கிறதோ அதை வறுத்துப்
போடவும். குங்குமப்பூ போட்டால் அதிக வாஸனையுடன் கலரும் அழகாக வரும்.
நவராத்திரி. அம்மனுக்கு நிவேதனம் செய்யவும்.ஒருஸ்பூன் சாப்பிட்டாலும், ருசியாக
இருக்கும். நிவேதனப் பொங்கல் அல்லவா?
நல்ல நெய் முந்திரி வறுக்கப் போதுமானதிருந்தால்ப் போதும்.
சுலபமாகத்தானிருக்கு. என்ன கல்கண்டுதான் வாங்க வேண்டும்.
சின்ன அளவில்ச் செய்தது. ருசித்து மகிழுங்கள்.
எங்கள் ஊர் நினைவுகள்.2
எங்கள் ஊர் நினைவுகளின் இரண்டாம் பாகமிது. இதையும்தான் நீங்கள் படிக்கட்டுமே என்றுமீள்பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள். அன்புடன்
மாசி நிலவு மாத்திரமில்லை. ஆடிப்பூரம் உத்ஸவத்திற்கும் எங்கள்
ஊரில் இரண்டு கோயில்களிலும் அதாவது ,ஈச்வரன் , பெருமாள்
கோயில்களிலும், சாயங்கால வேளையிலிருந்து இரவு 10 மணி
வரையில் கூட,சுமங்கலிப் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடிக்
கும்மியடித்து மகிழும் வழக்கம் இருந்தது.
காரணம் எல்லோரும் வழக்கமறிந்து பழகிப்போன அவ்வூர்ப் பெண்களே.
கொடுக்கல், வாங்கல் என்ற முறையில் எல்லாப் பெண்களும்
அவ்வூரின்,பெண்களாகவும், நாட்டுப் பெண்களாகவும் இருந்ததின் காரணம்
என்று நினைக்கிறேன்.
இப்போதும், ஒரு,கல்யாணம், உபநயனம், வளைகாப்பு, சீமந்தம், போன்ற
வைபவங்களின் முடிவில் ஒரு சுற்றாவது கும்மி பெரியவர்களும்,
சிறுமிகளுமாக சேர்ந்து, கும்மியடிப்பது வழக்கமாக இருக்கிறது.
ஐயோ எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்று பிகு பண்ணிக்
கொண்டாவது கை கொட்டும் வழக்கம் இருக்கிறது.
ஒரு பெரியவர், குனிந்து நிமிர்ந்து கை கொட்டினால் தொடரவேண்டிய
கட்டாயம் வந்து விடுகிறது.
பழைய காலத்தில், பெண்கள் புஷ்பவதி ஆனால், 4,5 தினங்கள் வரை
இவ்வழக்கம் ,ஸந்தோஷமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது
இதன் தொடர்ச்சிதான் எங்களூர் ஆடிப்பூர உற்சவம்.
அதற்கும் வசூல் செய்து,நான்குநாள் அம்மனை ஊஞ்சலிலிருத்தி,
ஊர் முழுவதிலும் வீட்டுக்கு வீடு, மூன்றாவது நாள், புட்டு,சர்க்கரை,
பழம், முதலானவைகளைமேளதாளம் புடை சூழ ,அலங்காரம்
செய்து கொண்டசிறுமிகளும்,பெரியபெண்களுமாக கொடுத்துவிட்டு வருவது
ஒரு அழகான நிகழ்ச்சியாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று, காலையில் எல்லோருக்கும், வளை அடுக்கி, எண்ணெய்,
மஞ்சள் கொடுப்பார்கள்.
இவையெல்லாம் யாராவது நேர்ந்து கொண்டு செய்வார்கள். எத்த வருஷமும்
இவைகளில்லாமலில்லை. இரண்டு…
View original post 459 more words
எங்கள் ஊர் நினைவுகள்.1
நேற்று உறவுக்காரர் ஒருவர் எங்கள் ஊரைப்பற்றிய கட்டுரை ஒன்று வாட்ஸப்பில் ஊரைச்சுற்றுவதைப் படிக்கும்படி அனுப்பி இருந்தார். அது நான் இந்த வலைப்பூவில் நான் எழுதியதே.நீங்களும் படியுங்களேன். பெயரில்லாமல் இரள்டு வரிகள் மட்டுமே மாற்றம் அவர் எழுதியதில். ஸந்தோஷம்தான். அன்புடன்
இரவு நேரத்திற்கான சமையல் செய்து கொண்டே யோசனை. காஸில் ரஸம் கொதிக்கிரது. மைக்ரோவேவிலிருந்து எடுத்த காலிபிளவரும் உருளைக்கிழங்கும் எண்ணெயில் வதங்குகிரது. எழுதரதை விட்டு விட்டாயா என்று உள் மனம் கேட்கிரது. காரணம் எதுவானா என்ன? எழுத நினைத்தால் எழுதணும். காரணம் தேடாதே!!! நம்மஊர்,நம்ம ஊர் என்று மனதால் நினைக்கும் ஊரைப் பற்றி எழுது. வளவனூர். தமிழ் நாட்டில் விழுப்புரத்தை அடுத்து புதுச்சேரி போகும் வழியில் 5 மைல்களைக் கடந்தால் எங்கள் ஊர் அமைந்திருக்கிறது. ரயில்,பேருந்து, என எல்லா வசதிகளுமுடைய ஊர். ஊரைப் பற்றி ஆரம்ப கால கதைகள் சொல்லக் கேட்டிருக்கிரேன். சோழ மன்னர்களின் ஆட்சியில் ஏற்பட்ட ஊர் ஆகையால் வளவன் என்றால் அவர்களைக் குறிக்கும் காரணப் பெயர் கொண்டு வளவனூர் என்ற பெயருக்குக் காரணம் சொல்வார்கள். பச்சைப் பசுமையாக நில,புலன்களுடன்,ஆராவாரமில்லாத, அமைதியான ஊர். ரயில்வே ஸ்டேஷன். ஸ்டேஷன் எதிரே ப்ரமாண்டமான ஏரி. பெண்ணை நதியினின்றும் ஏரிக்கு தண்ணீர் வரத்து. ஸ்டேஷனுக்கு வெளியே வந்தால் சற்று இரண்டுநடை போட்டால் அழகான குளம். குளத்தைச் சுற்றி மாமரங்கள். வேம்பு,அரசு,இருவாக்ஷி, ஸரகொன்றை,கொன்றை போன்ற மரங்கள், பவழமல்லி, அரளி மற்றும் பூந்தோட்டம், தோட்டத்தைக் காக்க,வேலை செய்ய,நம்பகமான ஆட்கள், இப்படி. ஊரில் ஸ்டேஷனின்றும் வரும்போதே உள் நுழைந்தால் அக்ரஹாரம். என்னை ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போ என்று சொல்வதுபோல் ஒரு சிறிய வரப்ரஸாதியான ஸ்ரீ ஹனுமார் ஸன்னதி.பெருமாள் கோயில். இதே பஸ்மூலம் வருபவர்களுக்கு கடைத்தெரு, பிள்ளையார்,ஈசுவரன் கோயில்கள்,ஸ்கூல், ஹையர்…
View original post 501 more words
அரிசி உப்புமா
இந்தப்பதிவு இடும்போது நான் ஜெனிவாவில் இருந்திருக்கிறேன். அதனால் குக்கரில் செய்முறை எழுதியிருக்கிறேன். மற்றும் தேங்காயெண்ணையில் செய்யும் பழக்கமும் கிடையாது. தோசையைத் தொடர்ந்து உப்புமா பதிவு. பாருங்கள். ரஸியுங்கள். .ஜெனிவாவினின்றே மீள்பதிவும் ஆகிறது. அன்புடன்
வேண்டியவைகள்—
பச்சரிசி—–2கப்
துவரம் பருப்பு–2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் —கால் டீஸ்பூன.
இந்த அளவு செய்வதற்கு வீட்டிலேயே மிக்ஸியில் ரவை தயாரித்துக்
கொள்ளலாம்.
அரிசியில2 ஸ்பூன் ஜலம் சேர்த்துப் பிசறி வைத்து ஒரு மணி நேரம்
கழித்து மிக்ஸியில் பெறிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும்.
பருப்பு வகைகளைச் சற்று சூடாக்கி ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
வெந்தயமும் சேர்த்துப் பொடிக்கவும்
தாளிக்க வேண்டிய ஸாமான்கள்
நல்ல எண்ணெய்—3 டேபிள் ஸ்பூன்
கடுகு–1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் —3
உளுத்தம் பருப்பு—-3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—முக்கால் கப்
மிளகு சீரகம்–தலா அரைடீஸ்பூன்
நெய் –2 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
வாஸனைக்கு–கறிவேப்பிலை
செய் முறை—
முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் வெண்கலப்பானை, உருளி,போசி,
கோதாவரிகுண்டு என, அளவைகளுடன் கால்படி, அரைபடி, பட்ணம்படி
என அடை மொழிகளுடன் பாத்திரங்கள் உண்டு.
அவைகளில் செய்வதுதான் வழக்கம்.
இப்போது எல்லா அளவுகளையும் ப்ரஷர் குக்கர்கள் ஏற்றுக்
கொண்டு விட்டது. நாம் இப்போது குக்கரிலேயே செய்வோம்.
ப்ரஷர் பேனோ அல்லது குக்கரையோ காஸில் வைத்து எண்ணெயைச்
காயவைத்து மிளகாய்,கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
இவைகளைத் தாளித்து,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
தண்ணீர் சேர்ப்போம்.
அளவு ஒரு பங்கு ரவை என்றால் இரண்டரை பங்கு ஜலம்
சேர்க்கலாம். மிளகு,சீரக ம் உடைத்தது
உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதிக்கும் போது தீயைச் சற்றுக் குரைத்து,
View original post 116 more words
தோசையும் சுலப சட்னியும்.
பார்த்தேன். போடவேண்டும் போலத் தோன்றியது. பார்கககககதப்போம்
பதிவைப் பார்த்ததும் மீள்பதிவு செய்யத் தோன்றியது. பாருங்கள். கூட ஒரு சட்னியும் உள்ளது. அன்புடன்
இதுவும் வழக்கமான தோசைதான். நான் எந்த விகிதத்தில் அரிசி,
பருப்பு, கலந்து செய்கிறேனென்பதுதான் சொல்ல வந்த விஷயம்
என்று கூடத் தோன்றும். கரகரவென்று தோசை குழந்தைகளுக்குப்
பிடிக்கிரது. அதனால் நான் எப்படிச் செய்கிறேனென்று சொல்லுகிறேன்.
வேண்டியவைகள்.
இட்டிலிக்கு உபயோகிக்கும் புழுங்கலரிசி—3 கப்
பச்சரிசி—–1 கப்
துவரம்பருப்பு—-கால்கப்
வெந்தயம்—5 டீஸ்பூன்
நல்ல விழுது காணும் உளுத்தம் பருப்பு—-1 கப்
தேவைக்கு—-உப்பு
செய்முறை
அரிசிவகைகள், துவரம்பருப்பு, வெந்தயம் இவைகளைத் தண்ணீர்-
-விட்டுக் களைந்து சுத்தம் செய்து நல்ல ஜலம் விட்டு ஊற வைக்கவும்.
இதே போல் உளுத்தம் பருப்பையும் நன்றாகக் களைந்துத் தனியாக
ஜலம் விட்டு ஊறவைக்கவும்.
அரிசி நன்றாக ஊறினால் சீக்கிரம் அரைபடும்.
குறைந்த பக்ஷம் 5, 6 மணிநேரம் ஊறினால் நல்லது.
பருப்பு 2, 3 மணி நேரம் ஊறினால் கூட போதும்.
கிரைண்டரை நன்றாகச் சுத்தம் செய்து அலம்பி முதலில்
உளுத்தம் பருப்பைப் போட்டு திட்டமாக ஜலம் தெளித்து நன்றாக
அரைக்கவும். பஞ்சுப் பொதி மாதிரி, நன்றாகக் குமிழ்கள் வரும்படி
அரைக்கவும். நல்ல கிரைண்டரானால் 40 நிமிஷமாவது ஆகும்.
உளுந்து மாவைப் பூரவும் எடுத்துவிட்டு, அரிசியைச் சிறிது,சிறிதாகக்
கிரைண்டரில் போட்டு தண்ணீர் திட்டமாகச் சேர்த்து நன்றாக மசிய
வெண்ணெய் போல அறைக்கவும். இட்டிலி மாவைப்போல அல்ல.
நைஸாக அறைக்கவும். இப்போது வேண்டிய உப்பையும் சேர்க்கவும்.
2, 3 சுற்றுகள் சுற்றி முதலில் அறைத்து வைத்த…
View original post 270 more words
பச்சை கொத்தமல்லிப்பொடி
நாமெல்லாம் விரும்பித் தொட்டுக்கொள்ள உதவும் இந்தப்பொடி புதியது ஒன்றும் இல்லை என்று நினைப்பீர்கள்.மீள் பதிவுதான்.செய்துபாருங்கள். அன்புடன்
கொத்தமல்லித் தழை வாங்கியது அளவுக்கு அதிகமாக மிகுந்து
விடும் போல இருந்தது. காரம் அதிகமில்லாமல் பொடியாகச்
செய்து உபயோகிக்கலாம் என்று செய்தது. சாதத்திலேயே
நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்போல அமைந்து விட்டது.
வேண்டியவைகள்
நிறைய மிகுந்த கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து
நிழலில் ஃபேன் அடியில் ஒரு துணியில் பறத்தி மூடி காற்றாட
உலர்த்தவும். ஈரம் இல்லாதிருக்க வேண்டும்.
உளுத்தம் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
குண்டு மிளகாய்—-12,அல்லது இன்னும் சில
ருசிக்கு உப்பு
துளி சர்க்கரை
பெருங்காயப்பொடி–சிறிது
புளி—-ஒரு நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—-2 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பருப்புகள்,மிளகாய்
பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் வெறும் வாணலியில் , பிய்த்துப்போட்டு
லேசாக வேண்டுமானால் வறுத்துக் கொள்ளலாம்.
பருப்புகள்,மிளகாய்,உப்பு, பெருங்காயம்,சர்க்கரை
சேர்த்து மிக்ஸியில் ரவை மாதிறி கரகரப்பாகப் பொடித்து
எடுக்கவும்.
கொத்தமல்லி இலையையும் புளியையும் சேர்த்து மிக்ஸியில்
தண்ணீர் சேர்க்காமல் 4 சுற்று சுற்றினால் பேஸ்ட் பதத்தில்
இலைகள் மசியும்.
முதலில் செய்த வைத்த பொடியைச் சேர்த்து 2 சுற்று சுற்றி
எடுக்கவும்.
தயாராகும் போது சற்று சேர்ந்தாற்போல இருந்தாலும் நாழியாக
ஆக உதிர்ந்தாற்போல ஆகும்.
எல்லாவற்றுடனும் எண்ணெய் சேர்த்துச் சாப்பிட,மோர் சாதத்துடன்
தொட்டுக்கொள்ள ஏற்றது.
அதிகம் ஸாமான்கள் சேர்த்துத் தயாரித்து நாட்பட உபயோகிக்க
ஃப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
ருசிக்கேற்ப காரம் அதிகரிக்கவும்.
இதுவும் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
நாம் செய்வதிலேயே சில வித்தியாஸங்கள் அவ்வப்போது
ஏற்படுகிறது.
View original post 1 more word
தீபாவளி வாழ்த்துகள்.

சொல்லுகிறேன் ஆதரவாளர்கள் யாவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
அன்புடன்.
எல்லா வலைப்பதிவாளர்களுக்கும், முகனூல் நண்பர்களுக்கும் வாழ்த்துகள் தீபாவளிக்காக அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்.24–10–2022 ஜெனிவா
பகோடா மோர்க் குழம்பு
இதுவும் பல வருஷங்களுக்கு முன்னர் எழுதியது. வேண்டிய அளவு பின்னும் மோர் சேர்த்துச் செய்யுங்கள் அன்புடன்
இதுவும் நம்முடைய மோர்க்குழம்பு வகைபோல செய்தேன்
சென்ற ஆகஸ்ட்டில் அமெரிக்காவில் தயானந்த ஸரஸ்வதி
ஸ்வாமிகள்ஆசிரமத்தில்பென்ஸில் வேனியா குருகுலத்தில்,அவருடையஸதாபிஷேகக்கொண்டாட்டத்தில்
கலந்துகொண்டு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இந்த
மோர்க்குழம்பு சற்று வித்தியாஸ முறையில் ருசித்தது.
அப்போதே இதை மனதில்க் கொண்டு எழுதப் ப்ளான் மனதில்
தோன்றியது. நேரம் இப்போதுதான் என்று நினைக்கிறேன்.
வெங்காயம் நான் சேர்த்து செய்தேன். சாதாரணமாக நாம்
வெங்காயம் மோர்க் குழம்பில் சேர்ப்பது கிடையாது.
இதுவும்.ஒரு தனி ருசிதான்.
பகோடாக்களைச் செய்து கொண்டு மோர்க் குழம்பில் சேர்த்து ச்
செய்வதுதான் இதன் முக்கியம். கடலைமாவைக் கரைத்து
செய்யாமல்அரைத்து செய்திருப்பதுதான் நம்முடைய வழி.
வேண்டியவைகள்
பகோடா தயாரிக்ககடலைமாவு—-6 டேபிள் ஸ்பூன்
பெறிய வெங்காயம் —1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய்ப் பொடி—-கால் டீஸ்பூன்
உப்பு—-கால் டீஸ்பூன்
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
மோர்க் குழம்பிற்கு வேண்டியவைகள்
கெட்டியான மோர்——3 கப்பிற்கும் மேல்
கடலைப் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
தனியா—-2 டீஸ்பூன்
கடுகு—-1 டீஸ்பூன்
பச்சைமிளகாய்—–3
வற்றல் மிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, சிறிது பெருங்காயம்
மஞ்சள்ப் பொடி—–சிறிது
ருசிக்கு—-உப்பு
செய்முறை
கடலைப்பருப்பு,தனியா.கடுகை ஊரவைத்து பச்சைமிளகாய்,
தேங்காய்த்துருவல்,வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
திட்டமாக ஜலம் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து
கரைத்து வைக்கவும்.
கடலைமாவுடன், நறுக்கிய வெங்காயம்,உப்பு, மிளகாய்ப்பொடி
சேர்த்துக் கலந்து ஜலம் விட்டுத் தளரப் பிசைந்துகொள்ளவும்.
சற்று லூஸாக இருக்கட்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக், …
View original post 67 more words
அரட்டிகாய வேப்புடு.
இது கல்பூரவள்ளி பழ வாழைக்காயில் செய்தது. பழங்களைப் பார்த்தாலே தெரியும். மீள்பதிவுஇது. கிடைத்ததைப் போட்டு இருக்கிறேன். அன்புடன்
அரட்டிகாய வேப்புடு புதுசா எதுவோ என்று பார்த்தால்
தெலுங்கில் வாழைக்காய் வறுவல் சில மாறுதல்களுடன்.
அவ்வளவுதான்.
நான் இங்கு வந்த ஸமயம் வாழைமரங்கள் குலைகள் முற்றி
ஒன்றன் பின் ஒன்றாக பழமாகவும், காயாகவும், தண்டாகவும்
உபயோகப் படுத்த வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது.
வறுவல், கறி, தண்டில் கறி,கூட்டு,ஸாலட், என விதவிதமாக
செய்ய முடிந்தது. ஆட்கள் வேலை செய்ததால் நிறைய சாப்பாட்டுத்
தேவையும் இருந்தது. நிறைய செய்ததைச் சாப்பிடவும் ஆட்களிருந்தால்
குஷியோ குஷிதான்.
அதில் சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழை மரத்தின்
பட்டைகளைக்கூட இலை மாதிரி கிராமங்களில் சீவி உபயோகப்
படுத்துவார்கள்.
அம் மாதிரி ஒரு இலை தயாரித்தும் ஸந்தோஷப் பட்டேன்.
போட்ட இரண்டு குலைகளும் கல்பூர வல்லி என்ற நல்ல பழ
வகையைச் சேர்ந்தது.
நான் அதை வகைவகையாகச் செய து அதைப் பிடித்தும்
போட முயன்று இருக்கிறேன்.
வீட்டில் விளைந்தது என்றால் அலாதி ஸந்தோஷம்தானே?
அம்மாதிரி அந்தக்காயில் செய்த வேப்புடுவைப் பார்க்கலாம்.
முற்றிய எந்த வாழைக்காயிலும் இதைச் செய்யலாம்.
நான் இந்தக் கல்பூர வல்லி காயிலே செய்ததுதான் இது.
செய்த வகையைப் பார்ப்போமா?
~ஒன்றும் இவ்வளவு, அவ்வளவு என்று நான் குறிப்பிடவில்லை.
நல்ல முற்றிய வாழைக்காயைத் தோல்சீவித் தண்ணீரில் போடவும்.
வாழைக்காயைச் சற்றுப் பருமனாக ஒரு அங்குல அளவிற்குநீளமான
மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு சுத்தமான துணியில் பரப்பி
ஈரம் போக காற்றாட விடவும்…
View original post 106 more words
உருளை வதக்கல்
யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துகள். வழக்கம்போல இதுவும் மீள்பதிவுதான். சற்று மாற்றி செய்தது. கிழங்கை பொறிப்பதற்கு பதில் வதக்கி சேர்த்திருக்கிறேன். ருசியுங்கள். அன்புடன்
இதுவும் ஸாதாரண வதக்கல் தான். விசேஷமாக மாருதலில்லை.
5 ஸ்டார் ஹோட்டல் குறிப்பு இது சும்மா 4 பெறிய உருளைக் கிழங்கில்
கொஞ்சம் மாற்றி செய்தேன் நான். வறுப்பதற்குப் பதில் வதக்கினேன்
.அவ்வளவுதான். இதையும் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
உருளைக்கிழங்கு—சற்றுப் பெறிதாக 4
வெங்காயம்—பெறிசா 1
பூண்டு இதழ்—4
பச்சைமிளகாய்–1
இஞ்சிவிழுது—அரை டீஸ்பூன்
வெள்ளை எள்—அரை டீஸ்பூன்
கடுகு—கால் டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய், மஞ்சள், தனியாப் பொடி வகைகள்–வகைக்கு சிறிது
கறிவேப்பிலை—10 இலைகளுக்குமேல்.
ஒரு துண்டு எலுமிச்சை
செய்முறை.
கிழங்கை த் தண்ணீரில் வேகவைத்து உறித்துத் துண்டங்களாகச்
செய்து கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் கடுகு,எள்ளை வெடிக்கவிட்டு,நறுக்கிய
வெங்காயம்,பூண்டு மிளகாயை வதக்கி பொடிகளைச் சேர்த்து
இறக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உறித்த துண்டங்களைச்
உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
இறக்கிய வதக்கலில் முன்பாக வதக்கிய வெங்காயக் கலவையைச்
சேர்த்துக் கலந்து எலுமிச்சைச் சாறு கலந்து பாத்திரத்தில் மாற்றி
கரிவேப்பிலையை புதியதாக வறுத்துப்போட்டு டேபிளில் வைத்தால்
5 ஸ்டார் வதக்கல்தான்.
வேகவைத்த கிழங்கை எண்ணெயில் பொறித்து எடுப்பதற்குப்
பதிலாக நான் வதக்கி எடுத்து செய்திருக்கிறேன்.
அதுதான் வித்தியாஸம்.