Posts filed under ‘சித்ரான்னங்கள்’

அரிநெல்லிக்காய் சாதம்.

நெல்லிரைஸ்                                         கலந்த  சித்ரான்னம்   மேலே உள்ள படம்.

இப்போதுஅரிநெல்லிக்காய்ஸீஸன்.அரிநெல்லிக்காயிலும்

பலவிதங்கள் செய்யலாம்.  ஸீஸனில் மலிவாகவும்கிடைக்கும்.

சென்னையில்  எங்கள்  வீட்டு மனையில்  அரிநெல்லிமரம் இருக்கிறது.

இரண்டு வருஷங்களாகக் காய்க்கத் துவங்கியுள்ளது.முன்பெல்லாம்

வாங்கி பச்சையாகத் தின்போம்.  ஜூஸ்செய்து குடிப்போம். ஆனால்

இப்போது ஊறுகாய்,சாதம் , பச்சடி,  ஜூஸ் என எல்லா விதத்திலும்

உபயோகிக்கிறோம். நல்ல ருசியாக இருக்கிறது.

வீட்டுமரம் என்றால்  பறித்தவுடன் செய்து சுவைக்க முடிகிறது.

வீட்டு நெல்லிக்காயிது

வீட்டு நெல்லிக்காயிது.

நீங்களும் செய்து பார்க்கலாமே!!!!!!!  இதனுடைய புளிப்பு

ருசி வித்தியாஸமானது.

வேண்டியவைகள்.

அரிநெல்லிக்காய்——புளிப்புக்குத் தக்கபடி–12

உதிரியாக வடித்த சாதம்- இரண்டுகப்

பச்சைமிளகாய்—ஒன்று. காரம் அதிகம் சேர்க்கலாம்

இஞ்சி—சிறிதளவு

தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு வகைக்கு

சிறிதளவு.

கலர் கொடுக்க–ஒரு துளி மஞ்சள்ப்பொடி

பெருங்காயப் பொடி—வாஸனைக்குச் சிறிது

நல்லெண்ணெய்—-3 டீஸ்பூன்

ருசிக்கு உப்பு

கறிவேப்பிலை சில இலைகள்.

செய்முறை.

நல்ல பழுத்த நெல்லிக்காய்களாகப் பொறுக்கிச் சுத்தம் செய்து

கொப்பரைத் துருவல் மூலம்   துருவிக் கொள்ளவும்.

நெல்லிக்காய்த் துருவல்

நெல்லிக்காய்த் துருவல்

சாதம்   இரண்டு கப் அளவிற்கு   எடுத்து ஆறவிடவும்.

நான்ஸ்டிக் பேனிலோ,அல்லது அலுமினியம் வாணலியிலோ

எண்ணெயைக் காயவைத்து முறையே   கடுகை வெடிக்கவிட்டு

பருப்புகளைச் சிவக்க வறுத்து ,நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை

வதக்கவும்.

துருவிய நெல்லிக்காய்த்துருவலைச் சேர்த்து வதக்கவும்.

உப்பு,மஞ்சள் , பெருங்காயம்சேர்த்து  சுருள வதக்கவும்.

வதங்கியத் துருவல்

வதங்கியத் துருவல்

கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி,  சாதத்தில்க் கொட்டிக்

கலக்கவும்.

வறுத்த வெந்தியப்பொடி,சீரகப்பொடி சேர்க்கலாம்.

காரட்,காப்ஸிகம்,பச்சைப் பட்டாணி, முதலியவைகளும் வதக்கும்

போது சேர்த்து வதக்கலாம்.

காரம் அதிகமாக்கிக் கொள்ளவும்.

முந்திரி,மணிலாக் கொட்டையும்  சேர்த்தால் கண்ணிற்கும் அழகு.

. வாய்க்கும் ருசி.

ஜூஸ் , ஊறுகாய்  , தொக்கு முதலானவைகளும் எழுதுகிறேன்.

செய்து ருசியுங்கள்.

பிப்ரவரி 16, 2015 at 12:09 பிப 16 பின்னூட்டங்கள்

புளிக் காச்சலும் புளியஞ்சாதமும்.

Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள்– கெட்டியாக உருட்டிய 2 எலுமிச்சை அளவு புளியை  அரைகப் தண்ணீரில் ஊற வைக்கவும். வறுப்பதற்குச் சாமான்கள் தனியா—-2 டீஸ்பூன்,  மிளகு அரை டீஸ்பூன், மிளகாய் 4 , இவைகளைத் தனியாக வெறும் வாணலியில்வறுத்துக் கொள்ளவும். கடுகு கால் டீஸ்பூன்,      வெந்தயம் அரைடீஸ்பூன்,          சீரகம்கால்டீஸ்பூன்- இவைகளைத் தனியாக கருகாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன் சிவப்பாகவறுத்துக் கொள்ளவும். எள் இரண்டு டேபிள்ஸ்பூன் கருகாமல்  சிவக்க…

Continue Reading ஜனவரி 12, 2014 at 11:41 முப 10 பின்னூட்டங்கள்

ஃப்ரைட்ரைஸ்

இதுவும்  ஒரு  சுலபமான விதம்தான்.  ஃப்ரைட் ரைஸ் இருப்பதை

வைத்து பலவிதங்களில்  ஒப்பேற்றலாம்.ஆனால் நான் மும்பையில் என்

பேத்திகளுக்காக லஞ்ச் பாக்ஸில் சொடுத்தனுப்ப புதியதாக காலையில்

7மணிக்குள் தயாரித்து அனுப்பியதிது. நீங்களும் தான் படித்துச் சுவையுங்கள்.

வேண்டியவைகள்—- ஒரு  கப் அரிசியிலோ முக்கால் கப்  அரிசியிலோ

உதிராக வடித்த  சாதம்..

தண்ணீர்  சற்றுக்  குறைவாக  வைத்து  சாதம் தயாரானவுடன்  தட்டில்

கொட்டி  பரப்பலாக வைத்தால் சாதம் உதிர்  உதிராக  வரும்.

வெங்காயத் தாள்—அரைகப்பிற்கு மேலாகவே.   துண்டுகளாக  நறுக்கியது.

காரட்—-1

மஷ்ரூம்—5,  6

காப்ஸிகம்—1

ருசிக்கு—-உப்பு

மஞ்சள்ப்பொடி—மிகவும்  துளி

எண்ணெய்—-5அல்லது 6 டீஸ்பூன்

மேகி  மஸாலா  க்யூப்   பாதி  பொடியாகச்  செய்தது

அல்லது  ஏதாவது   மஸாலாவுடன்  காரம் சிறிது.

செய்முறை

வெங்காயத் தாளைத் தனியாக  நறுக்கவும்.

மீதி காய்களை  நன்றாக அலம்பிப்   பொடியாக   நறுக்கி    வடியவிட்டு

ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டுக்  கலந்து    மைக்ரோவேவில்   ஹைபவரில்

வேகவைத்து   எடுக்கவும்.

வாணலியில்   எண்ணெயைக் காயவைத்து  வெங்காயத் தாளை  நன்றாக

வதக்கவும்.

மைக்ரோவேவ் செய்த காய்களையும்   உப்பு சேர்த்து வதக்கி  வேண்டிய

மஸாலா,  மஞ்சள்  சேர்த்து   தயாராகவுள்ள   சாதத்தைச் சேர்த்துச்

சிறிது வதக்கிக்     கீழே   இறக்கி    உபயோகிக்கவும்..

மஷ்ரூமையும்    காய்கள்  லிஸ்டிலேயே  சேர்த்துவிட்டேன் போலுள்ளது.

சேர்ப்பது  அவரவர்கள்  சாய்ஸ்.

ஃப்ரைட் ரைஸ் ரெடி.

இக்காலப்  பசங்களின்   சாய்ஸ்   மஷ்ரூமாக   இருக்கிறது.

ஸிம்பிளான   ரைஸ்  இது.  எது பிடிக்குமோ அதை  உடன்

சேர்த்துச் சாப்பிடவும்.

ப்ளஸ்   காரம்.  அவ்வளவுதான்.

_ஃப்ரைட் ரைஸ்

மார்ச் 5, 2012 at 6:36 முப 8 பின்னூட்டங்கள்

எலுமிச்சை சாதம் பலவிதம்.

அடிக்கடி  கையில்  டிபன்  கொடுக்கும் போது ஒரே எலுமிச்சை

சாதம் என நினைக்காமல்  சற்று தாளித்துக் கொட்டுவதை

மாற்றி,  ருசியையும்  சற்று  மாற்றியதை  உங்களுடன் பகிர்ந்து

கொள்கிறேன்.  பிரமாதம்  ஒன்றுமில்லை.   ஆனாலும்   யோசிக்க

முடியாத ஒரு  ஸமயத்தில்   படம் வேறு  எடுத்திருந்தேன்.

நீங்களும்தான்  பாருங்களேன்.

வேண்டியவைகள்.

நல்ல  மெல்லியதான   அரிசியில்  ஒருகப் எடுத்து   உதிர் உதிரான

சாதமாக   வடித்து   ஸ்டீல் தம்பாளத்தில்  ஆற வைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சம் பழம்   நல்ல சாறுள்ளதாக—–1

சிகப்புநிற   காப்ஸிகம்—-1 .  சிறிய துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைமிளகாய்–2 .  நீட்டுவாக்கில்   நறுக்கிக் கொள்ளவும்.

பட்டாணி  பிஞ்சு—1.  கைப்பிடி,   பொடியாக நறுக்கவும்.

இஞ்சித் துண்டுகள்—பொடியாக நறுக்கியது  1,  டீஸ்பூன்

சில கரிவேப்பிலை  இலைகள்

நல்லெண்ணெய்–2  டேபிள்ஸ்பூன்

கடுகு–1/2  டீஸ்பூன்

கடலைப்பருப்பு—1 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு—10

மஞ்சள்ப்பொடி–சிறிது

பெருங்காயப்பொடி—-சிறிது

ருசிக்கு உப்பு

வறுத்துப் பொடி செய்த   வெந்தய,  கடுகுப்பொடி  1/2டீஸ்பூன்

செய்முறை

நறுக்கிய   கேப்ஸிகம்,  பிஞ்சு பட்டாணியை  ஒரு ஸ்பூன் எண்ணெய்

விட்டுக் கலந்து   3 நிமிஷங்கள்  மைக்ரோவேவில்   வைத்து

எடுக்கவும்.

வாணலியில்   எண்ணெயைக்  காயவைத்துகடுகைவெடிக்கவிட்டு

பருப்புகளைச் சிவக்க  வறுத்து ,  இஞ்சி பச்சைமிளகாய்.

கறிவேப்பிலை   சேர்த்து  வதக்கி, மைக்ரோவேவ்  செய்ததையும்

சேர்த்துப் பிரட்டி இரக்கவும்.  மஞ்சள்ப் பொடி  சேர்க்கவும்.

ஆறினவுடன்   எலுமிச்சை  சாற்றையும்,   உப்பையும் சேர்த்துக்

கலந்து    ஆறின  சாதத்தில்   கொட்டிக் கலக்கவும்.    பொடிகளைச்

சேர்த்துக் கலந்தால்   சாதம் ரெடி.

மற்றும்,  பூண்டு, இஞ்சி  விழுதை   வதக்கி ரெட்   கேப்ஸிகம்,கேரட்,

மட்டர், ப.மிளகாய் சேர்த்து, கடுகு,வேர்க்கடலை, கடலைப்பருப்பு

தாளித்துக்கொட்டி    எலுமிச்சை சாற்றுடன் உப்பு சேர்த்து,

சாதத்துடன்  கலந்து   பூண்டு வாஸனை  மேலோங்க

தயாரிக்கலாம்.  பொடிகள்  அவசியம்.

பெறிய எலுமிச்சை  வகையுடன்,    கிரீன் காப்ஸிகம்,கேரட்,

பேபிகார்ன், காரமில்லாத  பெறியவகைமிளகாய்,  லேசாக

வேண்டியவகை    மஸாலாவும் சேர்த்து. உப்பு காரம்    கூட்டி

வகையாக   முந்திரி வகைகளுடன்   தயாரிக்கலாம்.

எல்லாம்  ஒரே மாதிரி  தோன்றினாலும் காய்களை மைக்ரோவேவ்

செய்து ,   ருசியை சிறிது மாற்றி  செய்யலாம்.  ஒரே நாளில்

யாவற்றையும்     செய்யப் போவதில்லை.கலர்க் கலராக

செய்யலாமே.  பாதாம்,  பிஸ்தா,  மற்றும்   வேறுவித பருப்புகளும்

அலங்காரமாகச் சேர்க்கலாம்.

பெறிய  எலுமிச்சை  சாற்றில் செய்யும்போது  திட்டமாக  சாற்றைச்

சேர்க்கவும்.  சிறிய வகைப் பழத்தில்   வாஸனைநன்றாகஇருக்கும்.

பிஞ்சுமட்டர்,ரெட்கேப்ஸிகம் கலந்த எலுமிச்சை சாதம்

மட்டர், கேரட்,ரெட்கேப்ஸிகம் கலந்த எலு.சாதம்

பேபிகார்ன்,கேரட்டுடன்,பெறிய எலுமிச்சை சாற்றுடன்

வித்தியாஸமான மணமுடன் எலுமிச்சை சாதம்.

நவம்பர் 21, 2011 at 1:19 பிப 19 பின்னூட்டங்கள்

வாங்கி பாத்

வேண்டியவைகள்——

அரிசி மெல்லியவகை—-1கப்

சாம்பார் வெங்காயம் உறித்து நறுக்கியது—முக்கால் கப்

சிறியவகை   பிஞ்சு  குண்டு கத்தரிக்காய்—-6

தக்காளிப் பழம்—1

எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்

கறிப்பொடி—-3 டீஸ்பூன்

கொப்பறைத் துருவல்–3 டீஸ்பூன்

இஞ்சித் துருவல்—-அரை டீஸ்பூன்

கடுகு—அரைடீஸ்பூன்

முந்திரி–7,8

 டோபூ அல்லது,    பனீர் துண்டுகள்—15

நறுக்கிய கொத்தமல்லி இலைகள்–சிறிது

நெய்—1டீஸ்பூன்  

விருப்பத்திற்கிணங்க காப்ஸிகம்–1

பச்சைப் பட்டாணி——கால்கப்

ருசிக்கு உப்பு, நிறத்துக்குத் துளி மஞ்சள் பொடி,வாஸனைக்கு4கிராம்பு

செய்முறை—-அரிசியைக் களைந்து   உதிர் உதிரான சாதமாகச்

சமைத்து  தாம்பாளத்தில் கொட்டி ஆற விடவும்.

கத்தரிக்காயை மெல்லிய துண்டங்களாகச் செய்து தண்ணீரில்

அலம்பி வடிய வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க

விட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி,  தக்காளி சேர்த்து பின்னும்

வதக்கவும்.    பட்டாணியைச் சேர்க்கவும்

 நறுக்கிய கத்தரிக்காய், காப்ஸிகம்,  சேர்த்து நிதானமான தீயில்

உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கவும்.

வதக்கிய காயுடன் பனீர்த் துண்டங்களையும் சேர்த்து

வதக்கி,       கறிப்பொடி தூவி இறக்கவும்.

 நெய்யில் ஒடித்த முந்திரியை வறுத்து கிராம்பையும் சேர்க்கவும்.

யாவற்றையும்   சாதத்தில்  சேர்த்து உதிர்,உதிராகக் கலக்கவும்.

கொப்பறைத் துறுவல், கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.

 காய் அதிக மானால் எண்ணெய்,சற்று அதிகம் சேர்க்கவும்.

பொடி வகைகள்   குறிப்பில்    கறிப்பொடி செய்யும் விதம்

கொடுக்கப்பட்டு இருக்கிரது.

செப்ரெம்பர் 14, 2010 at 1:26 பிப பின்னூட்டமொன்றை இடுக

டொமேடோ ரைஸ்

வேண்டியவைகள்—-ஒருகப் அரிசி. உதிர் உதிராக சாதம் வடித்து

ஆற வைத்துக் கொள்ளவும்.

தக்காளிப் பழம்—திட்டமான அளவில் 5

பெரிய வெங்காயம்—–1

இஞ்சி ஒரு  துண்டு

மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்

தாளிக்க—-எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

கடுகு——அரை டீஸ்பூன்

வேர்க்கடலை——2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு—–1 டீஸ்பூன்

டொமேடோ ஸாஸ்  —ஒரு டீஸ்பூன்

ருசிக்கு  உப்பு

கறி வேப்பிலை  —-வாஸனைக்கு

செய்முறை——தக்காளி, இஞ்சி,  வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியிலிட்டு

ஜலம் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து   கடுகு,   பருப்பு வகைகளைத்

தாளித்து     அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். ஸாஸ்  உப்பு,

மிளகாய்ப்பொடி சேர்த்து எண்ணெய் பிரியுமளவிற்கு    சுருளக் கிளறவும்.

கறி வேப்பிலையையும்,    ஆறின சாதத்தையும் சேர்த்துக் கிளறி  ,  சாதம்

சூடானவுடன் இறக்கி உபயோகிக்கவும்.    சுலபமாகச் செய்யக் கூடியது.

தக்காளியின்  புளிப்பிற்கேற்ப காரம், புளிப்பைக் கூட்டிக் குறைக்கவும்.

ஏப்ரல் 25, 2010 at 11:42 முப 1 மறுமொழி

மல்லி ரைஸ்

வேண்டியவைகள்—மெல்லிய ரக அரிசி—1கப்.  உதிர் உதிராக சாதம்

வடித்து  ஆறவைக்கவும்.

நல்ல இளசான  பச்சைக் கொத்தமல்லி வேர் நீக்கி அலம்பி சுத்தம்செய்து நறுக்கியது—–2கப்பிற்கு அதிகமாகவே இருக்கலாம்.

 புளி——ஒரு சின்ன நெல்லிக்காயளவு

பச்சை மிளகாய்-ஒன்று.

நல்லெண்ணெய்—–2 டேபில்ஸ்பூன்.

கடுகு –அரை டீஸ்பூன்

சீரகம்–அரைடீஸ்பூன்

பெருங்காயப்பொடி—-கால் டீஸ்பூன்

வறுத்த முந்திரிப் பருப்பு—-8

செய்முறை—–கொத்தமல்லி,    புளியை தண்ணீர் விடாமல், கெட்டியாக

அரைத்தெடுக்கவும்.

வேர்க் கடலையோ,   முந்திரிப் பருப்போ, வறுத்ததை ஒன்றிரண்டாகப்

பொடித்துக் கொள்ளவும்.

 நான் ஸடிக் பேனில் எண்ணெயைக் காயவைத்து கடுகு பெருங்காயம்,மிளகாய்

சீரகம் தாளித்து ,அரைத்த விழுதை  ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கொட்டி

நன்றாக வதக்கவும்.  எண்ணெய் பிரியுமளவிற்கு சுருள வதக்கி இறக்கவும்.

வேண்டிய அளவு உப்பு சேர்த்து  கலவையை சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.

 பொடித்த பருப்பையும் சேர்த்துக் கலந்து உபயோகிக்கவும்.

துளி சர்க்கரை சேர்ப்பது,    பச்சைக் கலர் மாறாமல் இருப்பதற்காக.

மல்லி ரைஸ் பற்றியும் நான் தெரிந்து கொண்டது ஒரு சமையல்க்

கலைஞரிடம்தான். நமக்குத்   தோன்றும் துவையல் சாதம் என்று.

ஆனால் பந்தியில்  வகைகளில் ப்ளஸ் ஒன்றாகத் தோன்றியது.

ஏப்ரல் 19, 2010 at 9:58 முப பின்னூட்டமொன்றை இடுக

புளிக் காச்சலும் புளியஞ்சாதமும்.

இதுவும் முன்பே எழுதியதுதான். புளிக்காய்ச்சல்,பிறகு சாதம் என இரண்டும் ஒன்றாக எழுதப்பட்டது. இப்போதும் கனுவன்று உதவும்.

சித்ரான்னங்கள் என்ற . தலைப்பிள் உள்ளது. பாருங்கள்.

Continue Reading மார்ச் 16, 2010 at 1:29 பிப 3 பின்னூட்டங்கள்

பிஸி பேளேபாத்.

இதை எளிய முறையில் தயாரிக்கலாம். வாயால்

சுலபமாகச் சொல்வதானால்  அரிசி பருப்பு மற்றும்

காய்களை   ஒன்றாக க்       குக்கரில் வேக வைத்துக்

கொண்டு  கெட்டியான புளித் தண்ணீர சேர்த்து

அரைத்து வைத்துள்ள பொடியையும்  உப்பையும்

சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் நெய் சேர்த்து

கடுகு, முந்திரி வகையராவைத் தாளித்து, சுடச்சுட

சாப்பிடலாம் என்று சொல்லி விடலாம். நாம் சற்று

விரிவாகப் பார்க்கலாமா—–

வேண்டியவைகள்-——மெல்லிய ரகமான அரிசி-ஒருகப்

துவரம் பருப்பு—–அரை கப்

வறுத்தறைக்க    சாமான்கள்    

மிளகாய் வற்றல்—மூன்று

தனியா–ஒண்ணரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு—இரண்டு டீஸ்பூன்

வெந்தயம்—-கால் டீஸ்பூன்

கசகசா—-இரண்டு டீஸ்பூன்

கொப்பரைத் துருவல்—5 அல்லது6 டீஸ்பூன்

மேற் கண்டவைகளைக் கொப்பரை நீங்கலாகச்

சிறிது எண்ணெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

ஆறிய பின் கொப்பரை சேர்த்து மிக்ஸியில்

பொடித்துக் கொள்ளவும்.

வேண்டிய காயகள். சின்ன வெங்காயம் 

உறித்தது ஒருகப்,   பச்சைப்பட்டாணி்அரைகப்

நீளமாக நறுக்கிய காரட் அரைகப்

நீளமாக நறுக்கிய நூல்கோல் அரைகப்

நறுக்கிய பீன்ஸ் அரைகப்

ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை

ஊறவைத்து அரை கப்பிற்கு மேல்சாறு

எடுத்துக் கொள்ளவும்.

தாளிக்க    நல்லெண்ணெய், நெய் வகைக்கு

இரண்டு டேபிள் ஸ்பூன்,

கடுகு சிறிது,   முந்திரிப் பருப்பு 10

செய்முறை——-குக்கரில் சிறிது எண்ணெயைக்

காயவைத்து வெங்காயத்தைவதக்கிக் கொண்டு

 அரிசி பருப்பைக் களைந்து 4 கப்பிற்கு மேல்

தண்ணீருடன் காய் கறிகளைச் சேர்த்து சிறிது

மஞ்சள்ப் பொடியுடன்  ப்ரஷர் குக்கரில்குழைய

வேக வைக்கவும்.

பிரஷர் போனபின் நன்றாகக் கிளறி புளித் தண்ணீறைச்

சேர்த் துக் கொதிக்க வைக்கவும்.

வறுத்தரைத்தப்  பொடியையும் உப்பையும் சேர்க்கவும்.

மிகுந்த எண்ணெய்,நெய்யில்கடுகைத் தாளித்து

உடைத்த முந்திரியை வறுத்துப் போட்டு

பச்சைக் கொத்தமல்லி சேர்த்து நிதான தீயில்

வைத்து இறக்கவும். கரம் மஸாலா  சேர்க்க

வேண்டுமாயினும் பொடியுடன் சிறிது சேர்க்கவும்.

மிகவும் கெட்டியாக இராமல்  சற்று நெகிழ்ச்சியாகத்

தண்ணீர் சேர்த்துத் தயாரித்தால் ருசியாக இருக்கும்.

பூந்திப் பச்சடி, வறுவல்களுடன் ஏற்ற ஜோடி.

காய்கள் அவரவர்கள் சாய்ஸில் சேர்க்கலாம்.

காரமும் அப்படியே.மிளகாய் கூட்டிக் குறைக்கவும்.

பிப்ரவரி 22, 2010 at 1:24 பிப பின்னூட்டமொன்றை இடுக

மசாலா பாத்

                                 வேண்டியவை—–அரிசி ஒருகப்.

உருளைக்கிழங்குசுமாரானசைஸ்—ஒன்று தோல்நீக்கி நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

காலிபிளவர் –நறுக்கியதுஒருகப் .கொதிக்கும் தண்ணீரை விட்டு வடிக்கட்டி வைக்கவும்.

துண்டுகளாக நறுக்கிய குடமிளகாய், அரைகப்

பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று.

தோல்சீவி நீளமாக நறுக்கிய கேரட் ஒன்று,-கீரிய பச்சை மிளகாய் மூன்று,     பூண்டுப்பல்[இதழ்கள்]பொடியாக நறுக்கியது ஆறு,  இஞ்சித் துண்டுகள் ஒரு டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு ஆறு,  நெய்—ஒருடேபிள்ஸ்பூன், எண்ணெய் இரண்டு டேபீள் ஸ்பூன்

மஸாலா பொடிக்க——லவங்கம் 7,– பட்டைகால் அங்குலத் துண்டு,— ஏலக்காயஒன்று,.-இவைகளை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.   

 சீரகம் அரை டீஸ்பூன் தாளிக்க.——தேவையான உப்பு.——மஞ்சள்பொடி அரைடீஸபூன்.

செய்முறை——-அரிசியை உதிரான சாதமாகச் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தை தாளித்து இஞ்சி பூண்டு, மிளகாயைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்  தக்காளியைச் சேர்த்து வதக்கி  காய்கறிகளைச் சேர்த்து  நிதானமான தீயில்  கிளறிவிட்டு  தட்டினால் மூடித்திறந்து ஈரப்பதம் குறையும்படி வதக்கி உப்பு, மஞ்சள்பொடி, பொடித்த மஸாலாவையும்  சேர்த்துக் கலந்து இறக்கவும்.

                   நெய்யை சூடாக்கி முந்திரியையும் வருத்து ஒடித்து சேர்க்கவும்.   இம் மஸாலாக் கலவையை சாதத்துடன் சீராகக் கலக்கவும் வாஸனைக்கு பிரிஞ்சி இலையும் தாளிக்கலாம். மஸாலா பாத் ரெடி.

ஓகஸ்ட் 6, 2009 at 3:30 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


ஓகஸ்ட் 2026
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 568,068 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Great Foodies's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Alien Poet's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com Blog

News, Tips & Website Tutorials

wordpress.com/

WordPress.com is the best place for your personal blog or business site.