Archive for நவம்பர், 2013
அன்னையர் தினம் 8
அன்னையர் தினம் எட்டாவது பதிவு எழுதியிருக்கிறேன். பண்டிகை,பருவங்கள் என தாமதமாகத்தான் எழுத முடிந்தது. அதனாலென்ன. சிறு பதில் போட்டால்கூட போதுமே!!!!!!!!!!!!!!!!!
Continue Reading நவம்பர் 21, 2013 at 11:00 முப 27 பின்னூட்டங்கள்
மிக்சர் விசேஷமானது.
தீபாவளிக்கு வாழ்த்து எழுதும்போது உங்களுக்காக இந்த மிக்சரை ச்
செய்தது. ஆனால் வாழ்த்துடன் இதைப் பகிர முடியவில்லை.
ஏதோ கம்யுட்டர் எரர் காரணம்.
அப்போதில்லாவிட்டால் இப்போது எழுதுவதால் என்ன வித்தியாஸம்?
பாருங்கள். சாப்பிடுங்கள்.
அதிகம் கடலைமாவு சேராத வகை தேன்குழல், ரிப்பன், பயத்தம் பருப்பு சேர்த்த முருக்கு
சோள அவல்,அவல்,வேர்க்கடலை,முந்திரி,பாதாம்,உலர் திராக்ஷை, கறிவேப்பிலை
மஸாலாவாக வறுத்த ஜீரக,பெருஞ்ஜீரகப் பொடிகள்,பெருங்காயம், மிளகாய்ப்பொடி,துளி
மாங்காய்ப்பொடி,உப்பு, மஸாலா கலக்க துளிநெய்.
மேலோடு துளி சாஸ்திரத்துக்கு வாங்கின காரா பூந்தி, இவைகள்தான்.
தீபாவளிப் பக்ஷணங்களுடன்,சோள அவலையும்,அவலையும், பொரித்துப் போட்டு,
பாதாம்,முந்திரி,திராக்ஷையும் வருத்துச் சேர்த்து, கறிவேப்பிலையைப் பொரித்துப்
போட்டு, வேண்டிய அளவு உப்பு காரம்,பொடிகள் துளி நெய்யில் கலந்துக் கலக்கி
ட்ரேயில் வைத்து விட்டால், விசேஷமான மிக்சர் தயார்.
பக்ஷணம் எல்லாம் இருக்குமே!!!!!!!
அவசியமானால் சொல்லுங்கள் எழுதுகிறேன். எப்படி இருக்கு?
வாழ்த்துகள்
சொல்லுகிறேன் ஆதரவாளர்களுக்கும், ஸக பதிவர்கள் யாவருக்கும், உலகத்திலுள்ள தமிழன்பர்கள் யாவருக்கும்,மகிழ்ச்சிகரமான தீபாவளி நல் வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.
வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களுடன் மற்றவைகள் கொடுக்க கணினி உதவி செய்யவில்லை. . அன்புடன் சொல்லுகிறேன்.