Archive for திசெம்பர், 2014
புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பிற்கினிய ஸஹ .பதிவர்கள், அவர்களின் குடும்பத்தினர்,
மற்றும் எல்லா ஸஹோதர, ஸஹோதரியவர்களின் குடும்பத்தினர்
யாவருக்கும் 2015 ஆம் வருஷத்தை வருக.வருக, யாவருக்கும்
நன்மையைத் , தருக தருக என்று வரவேற்று, உங்கள் யாவருக்கும் என்
மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்புடன்
காமாட்சி மஹாலிங்கம்.
லெஸொதோ அனுபவமும் தென்னாப்பிரிக்காவும்.4
கடைகளையும்,விலங்குகளையும்,மலைகளையும் சுற்றினால்ப் போதுமா? நம்மொத்தவர்களுடனும்,மற்றோர்களுடனும் ஆற அமரப் பேச வேண்டாமா ? லெஸொத்தோவிற்கு நன்றி சொல்ல வேண்டாமா? வாருங்கள்
Continue Reading திசெம்பர் 30, 2014 at 11:21 முப 10 பின்னூட்டங்கள்
2014 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.
Here’s an excerpt:
Madison Square Garden can seat 20,000 people for a concert. This blog was viewed about 61,000 times in 2014. If it were a concert at Madison Square Garden, it would take about 3 sold-out performances for that many people to see it.
அன்னையர் தினப்பதிவு–19
பூசணி கதையும்,நேபால் படிப்பும்,, மற்றும் படியுங்களேன். பார்க்கலாம்
Continue Reading திசெம்பர் 22, 2014 at 10:45 முப 21 பின்னூட்டங்கள்
லெஸொதோ அனுபவமும் தென்னாப்ரிக்காவும்.3
வெகு மாதங்கள் கடந்த ஒரு பதிவு. முடித்துவிட நினைத்துப் பகிர்கிறேன். படங்களைக் கண்டு களியுங்கள். ஒருவரி அபிப்ராயமும் சிரமம் பார்க்காது தட்டுங்கள்.அவ்வளவே
Continue Reading திசெம்பர் 15, 2014 at 8:38 முப 12 பின்னூட்டங்கள்
கீரை வெல்லப் பச்சடி.
கீரைத்தண்டை கூட்டு செய்த பிறகு, அதனுடன் இருக்கும் கீரையையும் ஆய்ந்து வீணாக்காமல் செய்த பச்சடி இது. நல்ல கீரைகளை , சற்று முற்றிய கீரைகளாக இருந்தால், இப்படி பச்சடி செய்வது வழக்கம். இல்லாவிட்டால் ,நன்றாக வதக்கி, தேங்காய் சேர்த்து ,காரசாரமான வதக்கல் செய்யலாம். பாருங்கள்.
Continue Reading திசெம்பர் 14, 2014 at 7:19 முப 4 பின்னூட்டங்கள்
சிவப்பு கீரைத்தண்டு கூட்டு.
தெய்வ தரிசநத்திற்குப் போன இடத்தில் நல்ல கீரைத்தண்டும் தரிசிக்கக் கிடைத்தது. விடலாமா?
மாப்பிள்ளை வாங்கி வந்தார்.
என்கையில், எப்படியெல்லாம் மாரியது. இதுதான் ஸமாசாரம். பரவாயில்லை. நீங்களும் படியுங்கள்.
Continue Reading திசெம்பர் 10, 2014 at 3:57 பிப 14 பின்னூட்டங்கள்
பொரி உருண்டை
கார்த்திகையை நினைத்துக் கொண்டு நாம் ஏதாவதுஎழுதினோமா என்று பார்த்தால் ஜெனிவாவில் கிடைத்த பொரியில் செய்தது நான் இருக்கிறேன் என்று முன் வந்து நிற்கிறது. அதுதான் நானே எடுத்த முதல் போட்டோவும். காமா,சோமா என்று இருந்தாலும் கார்த்திகைப்
பருப்பு தேங்காயும்,உருண்டைகளும் கிடைத்த வெல்லத்தைக் கொண்டு செய்தது. நான் எடுத்த முதல் படம்.
என் கேமிராவில் என்ன இருக்கும்? கம்யுட்டரில்தான் என்ன இருக்கும்.? இதுவே அது.அதுவே இது என்ற கணக்கில்தான்.
பாருங்கள்.அண்ணாமலைக் கார்த்திகை வாழ்த்துகளுடன்.
அன்புடன்கோபுர தரிசனம் கோடி புண்யம். திருவண்ணாமலை கோபுரம்.
இவைகளும் கோபுரமும் என் காமிராவின் பதிவே.
சுத்தம் செய்த அவல் பொரியோ அல்லது நெல் பொரியோ எது
கிடைக்கிரதோ ஒரு 3 டம்ளர் அளவில் செய்யலாம் வாருங்கள்.
வேண்டிய சாமான்கள்.—–பொடித்த வெல்லம்—1 டம்ளர்
சுக்குப் பொடி—அரை டீஸ்பூன்
மிளகுப் பொடி—கால் டீஸ்பூன்
ஏலப்பொடி—கால் டீஸ்பூன்
சிறிய பல்போல நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்–3டேபிள்ஸ்பூன்
பொட்டுக் கடலை, வறுத்த வேர்க் கடலை சிறிது
நெய்—-சிறிது
செய்முறை. —-நெய்யில் தேங்காய்த் துண்டுகளை சிவக்க
வறுத்து வைத்துக் கொள்ளவும்.
சற்று கொள்ளளவு பெரிதாகவுள்ள பாத்திரத்தில் வெல்லப்பொடி
நன்றாக மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நிதான தீயில் வைத்து
பாகாகக் காய்ச்சவும்.
பாகில் பொடிகளைச் சேர்க்கவும். முதிர் பாகாக வரும் போது
பொரியையும், தேங்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எண்ணெய் தடவிய தட்டில் கொட்டிக் கொண்டு கையில்
அரிசி மாவை லேசாக தடவிக்கொண்டு வேண்டிய சைஸில்
உருண்டைகளாக உருட்டவும்.
விருப்பமுள்ளவர்கள், பொட்டுக் கடலையையும், வறுத்த
வேர்க் கடலையையும் பொரியுடன் சேர்க்கலாம்.
பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.
காய்ந்தபாகில் ஒரு துளி, சிறிது ஜலத்தில் விட்டுப் பார்த்தால்
கரையாமல் கெட்டியாக உருட்டி எடுக்கும் பதத்தில் பாகு வரும்.
திருக்கார்த்திகைக்கு விசேஷமான பொரி உருண்டை.
சாதாரணமாக எப்போதும் கிடைக்கும் முட்டைப்பொரி[அதாவது அரிசிப் பொரி]
இதிலும் தயாரிக்கலாம். அளவு எல்லாம் பொரி 3 பங்கு, வெல்லம் 1 பங்கு கணக்குதான்.
பொரி யைக் கடையில் வாங்குவதால் சில சமயம் நமுத்துப் போக
வாய்ப்புள்ளது. அதனால் பொரியை சற்று சூடு படுத்தி…
View original post 7 more words
மூலிபரோட்டா என்று அழைக்கப்படும் முள்ளங்கி சேர்த்த ரொட்டி
சுடச்சுட சாப்பிட நன்றாக இருக்கும். செய்து பழக்கமானால் அடிக்கடி செய்வதற்குத் தோன்றும்.
Continue Reading திசெம்பர் 2, 2014 at 10:52 முப 15 பின்னூட்டங்கள்