அன்னையர்தினப் பதிவு—-30

மே 9, 2015 at 5:04 பிப 29 பின்னூட்டங்கள்

ஆலமரம் திருப்பதி

ஓ. நாளைக்கு அன்னையர் தினமா? / யாவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். அம்மா போன விவரம் தெரிந்து   தலைக்குளியல்தான்  போட்டிருக்கிறேன். எப்படி போனாள்,எந்த விவரமும்கூட  பிறகு கேட்கும் படியான ஒரு நிலை. சொல்லு இப்போது சொல்லு.  அக்கா அத்திம்பேர் பெங்களூர் போய் வந்தார்கள்.வந்து ஸமாசாரங்கள் சொல்லியுள்ளார்கள். ஸரி பாட்டிக்கு என்ன ஆயிற்றென்று சொல்.

எங்களுக்கும் தந்தி வந்தது.   கணேஷ் உடனே  ஏர் டிக்கட் புக்செய்து    சென்னை போனான். நேற்று அந்த ஏர் ஹோஸ்டஸ்  சினேகிதி வந்திருந்தாள். அவளும் போயிருந்தபடியால்  விஷயங்கள் விவரமாகச் சொன்னாள்.எல்லா நாட்களும் போலதான்  காலையில் குளித்து சமையல் செய்து  பாட்டி எல்லாம் செய்திருக்கிறாள். அக்கா அவஸரத்தில் பாட்டியிடம் போய்வருகிறேன் என்று சொல்லக்கூட மறந்து விட்டு அவஸரமாகப் போய்விட்டாளாம்.

அத்திம்பேர்  பாதி வழி போனவர் திரும்பி வந்து பாட்டி பீரோவில்  பணம் வைத்திருக்கிரது. வாசலில் தாழ்ப்பாள் போடாது உட்கார்ந்து விடப் போகிறீர்கள். கதவை சாத்திவிட்டு உள்ளே போங்கள். என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்.

லேட்டாக  தலை பண்ணிக்கொண்டு க்ஷவரம்.குளித்து சாப்பிட்டு, எல்லாம் செய்திருக்கிறாள். சாயங்காலம் உலர்த்தின புடவையை மடிக்கும்போது மேலேருந்துசாந்தாபாட்டியைக்கூப்பிட்டு முருக்கு மாவு அரைப்பதற்கு கணக்கு கேட்டிருக்கிறாள். அதைச் சொல்லி முடிப்பதற்குள் வாசலில் தபால்க்காரர் ரிஜிஸ்டர் தபால் பாகீரதி அம்மாவுக்கு. கூப்பிட்டிருக்கிறான். அழகாக டைட்டிலோடு அழகர பாகீரதி அம்மாள் என்று கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் தபாலை வாங்கி ஷெல்பின்மேலே கீழே விழுந்து விடாமல் பாரம் ஒன்றும் வைத்திருக்கிறாள். பக்கத்திலேயே   மற்றவர்கள்கொடுத்துப்போயிருந்த சாவிகளும் இருக்கிறது வழக்கமாகப் பால் போடுகிறவன் பாட்டிம்மா பால் கவர் என்றுகூப்பிடுவான்.அவனும்கூப்பிட்டிருப்பான். பாலை வாங்கி அந்தக் கவரை ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தினுள் போட்டு இருக்குமே! அதுவும் செய்தாகி இருந்தது. அக்கா வந்து டீயோ,காப்பியோ போடுவாளே கதவைகவனமாகசசாத்தித்தாபாவும்போட்டிருந்தது.ஸ்கூல்விட்டுப்பசங்கள்  ஓடிவரும்போது  ஸுபாஷும் முன்னாடியே வந்திருக்கிரான்.அக்காவர லேட்டாகும் இல்லையா. ? அவன் வந்து கதவைத் தட்டுகிறான். பாட்டீ,பாட்டீ என்று கூப்பிடுகிறான். பதிலில்லை.மேல்வீட்டு சாந்தாவின் பெண்,பாட்டி கதவைத் திறக்கவில்லை,தூங்கிட்டாங்க போலிருக்கு என்று அவளிடம் சொல்ல,இல்லே,இல்லே, பாட்டியுடன் இப்பொதானே பேசினேன். காது கேட்டிருக்காது, அவளும் வந்து நான் கூப்பிடறேன் இரு. பாட்டீ,பாட்டீ ஊஹூம் எந்த பதிலும் இல்லை. வேலைக்கார பையனைக் கூப்பிட்டு நீ மேலேருந்து இறங்கிப்பாரு.பாட்டி என்ன பண்ராங்கோ? அவன் லாகவமாகக் கீழே  இரங்கி போய்ப் பார்க்கிறான். இரண்டு நிமிஷம் கூட ஆகலே பாட்டி படுத்திருக்காங்கோ என்று கூவிக்கொண்டே வாயிற்கதவைத் திறக்கிரான். அதற்குள்நான்கைந்துபேர்அக்கம்,பக்கம்யாவரும்உள்ளேபோய்ப்பார்க்கிரார்கள். சமையலரையில் சாமி படத்திற்குமுன்படுத்தநிலையில்.பாட்டி. எவ்வளவு கூப்பிட்டும்ஏன்என்றுகேட்கவில்லை.பக்கத்திலுள்ளவர்கள்தெருக்கோடியில் உள்ள டாக்டரைக் கூப்பிடுகிரார்கள்.

அவர்வருகிரார் .அக்காவும்நுழைகிராள்பார்த்தவுடனேசொல்லிவிட்டார். இல்லே பாட்டிம்மா போய்விட்டாங்க.  தலையில் ஏதாவது பட்டிருக்குமோ? அப்படி எதுவும் இல்லே.  லேசா ஏதோபட்டமாதிரி இருந்தது. இதுதான் விஷயம். பிறகுதான் சாவிகொடுத்துப்போனவர்கள்,பால்க்காரன்,தபால்க்காரன், எல்லோருக்கும் ஆச்சரியம். இப்போது நன்றாக இருந்தார்களே?   அத்திம்பேருக்குச் சொல்லி அவர் வந்த பிறகு எல்லோருக்கும் செய்தி போய்  கணேஷும் புறப்பட்டுப் போனான்.  நானாவது உனக்கு ஒத்தாசைக்கு வரலாமென்று வந்தேன். மற்றபடி

அவன் சொன்ன செய்திகள்தான். அப்பாவிற்காவது பேரன் கை பில்லு வாங்கிச் செய்தது. பாட்டிக்குத் தயாராக  எல்லாவற்றையும் தானே செய்யும் படியான வயது. மாப்பிள்ளை  எல்லா ஏற்பாடுகளும் தயாராக செய்து வைத்திருந்தார். கணேஷ் கையால் எல்லாம் நடந்தது.

பேரன் கை காரியத்தில்  பிள்ளைக்குப்பதிலாக  பேரனிடம்  கொள்ளி வாங்கிக் கொண்டுஜாம்ஜாம்என்றுபோய்விட்டாள்அவளைப்பொருத்தவரையில்

கிடக்காமல், படுக்காமல், எதற்கும் யாருடைய கையையும் எதிர்ப் பார்க்காமல்

நல்ல சாவு என்று பிறர் சொல்லும் படி போயாகி விட்டது. ஹார்ட் அட்டாக்கா, என்னஏதுஎதுவோநிறையகிழம்,கட்டைகளுக்குச்செய்திருக்கிறேன்.

அனாயாஸமாகப் போக வேண்டும். அதற்கும்

ஏதோ கிடைத்தபடம்

ஏதோ கிடைத்தபடம்

நிறைநாட்கள் இருக்கிறதென்று சொல்லுவாள்.  அது இதுதான் போலுள்ளது. எதைச் சொல்ல எதை நினைக்க?   எண்பத்தாறு வயது.  முடியாது போயிருந்து, யார் வைத்துக் கொள்வது? என்று பங்கு போடாமல், யாரால் செய்ய முடியும் என்று அலுத்துக் கொள்ளாமல், பாயும், படுக்கையுமாக இராமல், நாங்கள் எல்லோரும் போனோம்,ஆனால் பிழைத்துவிட்டாள் என்று சொல்லாமல், கடைசி ஸெகண்ட் வரை பரபரப்பாக கடமையைச் செய்து கொண்டு இருந்தாயே? நான் இப்படி நினைக்கிறேன்.உன் கடைசி நேரத்தில் கூட இருந்து ஒன்றும் செய்யாவிட்டாலும், உன்னுடைய காரியங்களில் கூடபங்கு கொள்ள இயலாமல், நான் இப்படி இருக்கிறேனே?    நீ இந்த ஸமயம் அதிகம் கண்ணீர் விடக்கூடாது. பையா நன்றாக ஆக வேண்டும் என்ற என் சிநேகிதியின்  அறிவுறுத்தலும்

பத்து வருஷங்களுக்குமுன் நானும்,நேபால் சினேகிதி கங்கா கார்கியும்

பத்து வருஷங்களுக்குமுன் நானும்,நேபால் சினேகிதி கங்கா கார்கியும்

கூடவே. அடிக்கடி நான் முணுமுணுக்கும் பஜனைப் பாடலை பாடும்படி சொல்வாயே. அந்தப்பாடல் ஞாபகம் வருகிறது. சரணம் பவ கருணாமயி  குருதீன தயாளோ, கருணாரஸ வருணாலய கரிராஜ கிருபாளோஅதே மாதிரி சரணமாகிவிட்டாயோ. இப்படியெல்லாம் நினைத்தேன், வெகுநாட்கள் வரை இம்மாதிரி எண்ணங்கள் வந்து அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

பேரன் வந்து ஒப்புக்கொண்டான். பெங்களூர்பெண்  கணவரிறந்த  பதினான்காம் நாள்தான் அம்மா போனது.  அவள் வரமுடியாது.

வெகு நாட்களுக்கு முன்னமேயே  அம்மாவிற்கு  பென்ஷன்  கிடைக்கவில்லை என்று தெரியுமாம். அதுவும் காரணமில்லை. சென்னைப் பெண் தனது மகன்,மருமகளுடன் ரூர்கேலாவினின்றும் வந்து  காரியத்தில் பங்கு கொண்டனர். வளர்த்த பேத்தி, மருமகன் மேற்பார்வையில்,உறவுக்கார சம்பந்தி அம்மாள் முன்னின்று காரியங்களைச் செய்து முடித்தாள்.

இன்னொரு மாப்பிள்ளை உடம்பு ஸரியில்லமல் இருக்கிரார் என்ற வார்த்தையைக் கேளாமலே,இறுதிக் காரியங்களுக்குக், கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் தபாலை வாங்கி வைத்து விட்டது, இப்படி பார்த்தவர்கள் புகழும்படியாகப் பேச,நான் செய்ய வேண்டிய கடமைகளை என் பெண்ணானஉன் வளர்த்த பேத்தியும் மருமகனும் செய்ய இதை விட வேறு என்ன கொடுப்பனை வேண்டும்.?

சென்ற மாதம் சென்னை போயிருந்த போது நீ இருந்த இடத்தையும், போன இடத்தையும், கடைசியில் வார்த்தையாடினவர்களையும், பார்த்துப் பேசி வந்தேன்.  உன்னுடைய ஆசியினால்  உன் பெண் வயிற்றுப்பேரன்கள்,  உன்னுடன் பிறந்தவர்கள் வம்சமென யாவரும் ஆல்போல் தழைத்துப் பெருக உன் ஆசிகள் ஒன்றே போதும். அன்னையர் தினத்தில் எப்போதுமே நினைக்கின்றோம். கடைசியில் உன்னிடம் பாக்கி இருந்தது ஐந்து புது ஒற்றைரூபாய் நோட்டுகள்.

ஆலம் விழுதுகள்

புது வீட்டுக் கிரஹப்பிரவேச ஸமயம்,அப்பாவிற்கும் உடம்பு சற்று குணமானது. எல்லோரும் பழைய கதைகளைப் பேசினோம்.புது வீட்டில் பூஜையை செய்து விட்டு அம்மா இருந்த வீட்டில்தான் விருந்து சாப்பாடு.

மனதிற்கு இதமாக இருந்தது. இன்று அம்மாவின்,   அக்காவின் கொள்ளு பேரன் போன் செய்த போது  வளவனூர் புகழ் பொரி வடாத்தைப் பற்றியும் எழுதுங்கள் என்றார்.   அதைப்பற்றித் தனிப் பதிவாகப் போடலாம் என்று நினைத்துக் கொண்டேன். இது வரை வாசித்தவர்கள்,  கலந்து கொண்டவர்கள் என எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். ஸாதாரணமாகப் பொது நலத்தொண்டு செய்ய மனமும்,  வகையும் வேண்டும்.   அதனால் மனதைவிட்டு அகலாதப்

பெண்மணியாக உங்களிடம்   அவரைப்பற்றி சொல்லியுள்ளேனே தவிர பெருமைக்காகவோ,  கதையாகவோ நினைக்கவில்லை. என்னுடன் வந்த உங்கள் எல்லோருக்கும் மிகவும் நன்றி. அன்புடன் சொல்லுகிறேன்.

யாவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

Entry filed under: அன்னையர் தினம். Tags: .

அன்னையர் தினப் பதிவு—29 வேலை என்றால் வீழ்ந்து கிடக்கும் கள்ளிகளே சோறு என்றால் வாய்திறப்பீரோ?

29 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ranjani135's avatar ranjani135  |  5:22 பிப இல் மே 9, 2015

    கடைசிவரை உழைத்துவிட்டு, தன் வேலைகளை தானே பார்த்துக்கொண்டு பேரன்களுக்கும், பேத்திகளுக்கும் துணையாக இருந்துவிட்டு – நீங்கள் எழுதியதைப் படிக்கப் படிக்க என்ன ஒரு பெண்மணி என்று வியந்து போகிறேன்.
    எல்லோருக்கும் பயன்படும்படியாகவே வாழ்க்கை. அனாயாச மரணம்! வெளியில் போய் தங்களை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்பதில்லை பெண்களுக்கு. இதுபோல தன்னைச் சார்ந்தவர்களை பேணுவதும் ஒரு சாதனை தான். ஒரு முழுமையான பெண்மணியைப் பற்றிப் படித்த நிறைவு மனம் முழுக்க.
    பாடல் பெறாத தலைவிகள் வரிசையில் உங்கள் அம்மாவிற்கும் இடம் நிச்சயம் உண்டு.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  12:16 பிப இல் மே 13, 2015

      நான் என் அம்மாவைப் பற்றி எழுதினேன் என் மனக் கட்டளைப்படி. எவ்வளவோ இன்னும் எழுதலாம். நீங்கள் தொடர்ந்து படித்து,அநுபவித்து விமரிசனங்கள் போல ஊக்கம் கொடுத்து வந்தது மறக்க முடியாது. மேலும் வட்டார வார்த்தைகளாகவே எழுதினதால் சிலருக்கு என்ன இது என்றும் தோன்றி இருக்கலாம்.
      கற்பனைகளே இல்லாது ஒரு நினைவுத் தொடர். நீண்டது. முடிந்தது. இன்னும் அது எழுதலே,இது எழுதலேஎன்று தோன்றுகிரது. உங்கள் தொடர்வரவு,அநுபவிப்பு,எதிர்பார்ப்பு எல்லாவற்றிற்கும்
      பாராட்டுதலுக்கும் என்றும் என்நன்றி.அன்பு அளவிடமுடியாது. அன்புடன்

      மறுமொழி
  • 3. chitrasundar's avatar chitrasundar  |  8:06 பிப இல் மே 9, 2015

    காமாக்ஷிமா,

    அம்மாவுக்கான மகளின் கடமையை முடித்துவிட்டீர்கள்.

    சென்ற பதிவின் முடிவில் மனம் அடித்துக்கொண்டாலும் _____///////”முடியாது போயிருந்து, யார் வைத்துக் கொள்வது? …….ஆனால் பிழைத்துவிட்டாள் என்று சொல்லாமல்” //////// _____ நிதர்சனமான உண்மை.

    சிரமம் பாராது எழுதி, உங்கள் அம்மாவின் நினைவுகளுடன் எங்களையும் பயணிக்க வைத்து, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட‌ உங்களுக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  12:33 பிப இல் மே 13, 2015

      என்னுடைய பதிவு உன்னையும் அதிகமாகவே பாதித்திருக்கும் யென்று கூட பிறகு கூட தோன்றியது. அதாவது கடைசிநேரம் கூட இருக்க முடியாதது. சிரமம் என்று இல்லாவிட்டாலும் கடைசி இரண்டு பதிவுகள் எழுத மனம் வரவே இல்லை. அதிலும் அடுத்த படுக்கைக்காரருக்கு தண்ணீர் கொடுத்ததும்,அதே நேரம் அம்மாவின் கடைசி நேரமும் ஒன்றாக இருந்திருக்கிறது என்பது மறக்க முடியவில்லை. என்னுடைய அஞ்சலியாக இருக்கத்தான் இந்தப் பதிவை எழுதினேன். ஆரம்ப முதல் அனுபவித்து பின்னூட்டமிட்டு,ஆதரித்தவள்நீ. எவ்வளவு சொன்னாலும் போதாது. அந்த பென்ஷன்தான் தறேன் தறேன் என்று ஏமாற்றியது. நன்றி பெண்ணே. அன்புடன்

      மறுமொழி
  • 5. திண்டுக்கல் தனபாலன்'s avatar திண்டுக்கல் தனபாலன்  |  2:33 முப இல் மே 10, 2015

    அருமை அம்மா…

    இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்…

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  12:38 பிப இல் மே 13, 2015

      தொடர்ந்து அருமையாக ஊக்கம் கொடுத்த உங்கள் ஒரு வரி காணாவிட்டால் மழைக்காக ஏங்கும் பயிராகிவிடும் அன்னையர் தினம். முடிவுவரை வந்து அருமை சொல்லி அம்மாவிற்கு பெருமை கொடுத்ததற்கு மிகவும் நன்றியும்,பெருமையும். அன்புடன்

      மறுமொழி
  • 7. Ramu Ramachandran's avatar Ramu Ramachandran  |  2:38 முப இல் மே 10, 2015

    Dear Mami,
    Thanks for Baghi Patti`s photo. As if I am seeing her live. She is still fresh in my memory. Last saw her in 1981 in Sudha`s house.
    Your narration was excellent. Will meet you soon to talk about our Valavanur personalities.

    RAMU

    மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  12:46 பிப இல் மே 13, 2015

      ஏதோ கிடைத்த படத்தைப் போட்டேன். உங்களைப் போன்ற கொள்ளுப்பேரன்கள்கூட பாராட்டும் ஒரு பெண்மணி. நினைக்கவே பெருமிதமாக இருக்கிறது.
      இன்னும் மற்ற பேரன்கள் ஸந்திக்கும் போது அவரவர்கள் அனுபவங்களைச் சொல்கின்றனர். இந்தக்காலத்தில் மதிப்புகள் கிடைப்பது மிகவும் கஷ்டம். உன் கமென்ட் நிறைவைக் கொடுத்தது. அன்புடன். கட்டாயம் எள்ளோரும் வாருங்கள்.

      மறுமொழி
      • 9. chollukireen's avatar chollukireen  |  12:47 பிப இல் மே 13, 2015

        எல்லோரும் வாருங்கள். எள்ளோரும் இல்லை.

  • 10. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  12:41 பிப இல் மே 10, 2015

    அருமையான பதிவு. பசுமையான நினைவலைகள். யதார்த்தமான எழுத்துக்கள். அபூர்வமான படங்கள். அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    மறுமொழி
    • 11. chollukireen's avatar chollukireen  |  12:58 பிப இல் மே 13, 2015

      எவ்வளவு உற்சாகமான ஊட்டம்தரும் பாராட்டுதல்கள்,
      உங்களின் பாராட்டுதல்களுடன்தான் அன்னையர் தினப்பதிவு மற்றவர்களுக்குக் காட்சிதரும். உங்களை யாவருக்கும் எங்கள் வீட்டில் நன்றாகத் தெரியும்.
      நான் எழுதுவது நிதானம். நீங்கள் பாராட்டுவது புயல் வேகம். எத்தனை விதமாக நன்றி சொன்னாலும் தகும்.
      பாராட்டி எழுத வார்த்தைகள் போதாது. நீங்களும்
      மிக்க அனுபவித்துப் படித்தீர்களென்பதை உங்கள் பின்னூட்டம் சொல்லும். உங்கள் பாராட்டுதல்களுக்கும், ஒரு முதியவளின் கதைக்கு மரியாதை கொடுத்ததற்கும் மனமார்ந்த நன்றியும்,அன்பும்,ஆசிகளும். பதினாயிரம் நன்றிகளாகக் கொள்ளவும்.

      மறுமொழி
  • 12. பார்வதி இராமச்சந்திரன்.'s avatar பார்வதி இராமச்சந்திரன்.  |  5:11 பிப இல் மே 10, 2015

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா!…

    முழுக்கப் படித்து முடித்த பின்னர், மனதில் தோன்றிய உணர்வுகளை எழுத்தால் விவரிக்க முடியுமா தெரியவில்லை.. முதல் அத்தியாயத்திலிருந்து, முழுவதும், ஒரு முறை மனதுள் ஓடி மறைந்தது.. தொடர்ந்த வாழ்வின் ஓட்டத்தில், தடைகளை எல்லாம் தாண்டி ஓடி வரும் ஆற்று நீர் போல், எல்லாக் கஷ்டங்களையும், தன் உத்தம குணங்களும் கூடவே ஓடி வர தங்கள் அம்மா கடந்திருக்கிறார். அதுவும், எவ்வித முகச் சுளிப்போ, சலிப்போ இன்றி, ‘இப்படித் தான் இருக்கும் வாழ்க்கைன்னா’ என்ற யதார்த்தமான பார்வையோடு!..

    ‘தானம் தர்மம்’ என்று தனியாக வேண்டாம். இருப்பதைப் பகிர்ந்தால் போதும் என்பது போன்ற இயல்பான கொள்கைகள், பிரச்னைகளை, பாஸிடிவ்வாக அணுகுவது, யாவரிடமும் நல்லதே காண்பது என்று உத்தமமான குண நலன்கள், உபகாரத்தின் மொத்த உருவமாக வாழ்க்கை என்று வாழ்ந்தவரின் வாழ்வைப் படிக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    தன் கணவரின் அந்திம சமயத்தில், பூஜையறையை நினைவுக்குக் கொண்டு வந்து, அவரது நல்ல கதிக்கு வழியமைத்தவர், தன் அந்திம காலத்தில், ஸ்வாமி படத்திற்கு முன் படுத்த நிலையில் விடைபெற்றிருக்கிறார்!!!.. என்ன ஒற்றுமை!..

    மனதில் ஒரு பாரம் அழுத்தினாலும், கூடவே ஒரு புனிதமான, நன்முறையில் நிறைவடைந்த ஒரு புண்ணியாத்மாவின் சரித்திரத்தைப் படித்த உணர்வே ஏற்படுகின்றது!… பாகி பாட்டியின் ஆசீர்வாதம் எனக்கும் வேண்டும்!..அந்த நல்ல குணங்கள்.. வற்றாத பெருஞ்செல்வம் அவை.. அதை ஆசியாகப் பாட்டி தர வேண்டுகிறேன்!..

    உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது அம்மா!.. இப்படியொரு பகிர்வைத் தந்ததற்கு!..

    மறுமொழி
    • 13. chollukireen's avatar chollukireen  |  2:20 பிப இல் மே 13, 2015

      எவ்வளவு ஈடு பாட்டுடன் படித்திருந்தால் இவ்வளவு உணர்வு வசத்துடன் பின்னூட்டமிடமுடியும். எல்லோருக்கும் நன்றி எழுதிவருகிறேனே, இப்போதும்ஸரி,எப்போதும் ஸரி பிறப்பிலேயே குணங்கள் அமைய வேண்டும். இம்மாதிரி இப்போது காணவோ, இ ருக்கவோமுடிவதில்லை என்று தோன்றுகிறது. சாதாரணமாக இ,க்கதையைகேட்டவர்களுக்கும்,பூஜையாக அனுஸரிப்பவர்களுக்கும் நல்ல பலனுண்டு என்று புராணக்கதையிலும்,ஸ்லோகங்களிலும் இறுதியாகச் சொல்லுவார்கள். கட்டாயம் அந்த வகையில் உனக்குப் பரிபூரண ஆசிகள் உண்டு. நல்ல கருத்துகளை எழுதியுள்ளாய். நன்றி பெண்ணே. நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 14. Kumar's avatar Kumar  |  4:48 பிப இல் மே 11, 2015

    Old memories marakkavey mudiyathu. Entha oru seyalukkum
    Patti Asheervadham eppothum irukku enru nimathiyaga
    ullom.

    Andvanitam ketpathum Patti mathiri kashtapadamal mudivu
    vendum enruthan

    Avarkaludaya magalaga neengal ullathu neegal seitha punniyam.

    Innum Pala kalam ungal asheervadhamum, guidance vendum.

    மறுமொழி
  • 15. chollukireen's avatar chollukireen  |  2:31 பிப இல் மே 13, 2015

    கடைசிகாலம் உங்களுடன் ஸௌகரியமாக இருந்திருக்கிறாள். அதிக வருஷங்கள். எப்போதும் ஆசிகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். ஒரு நெடுந்தூரம் அம்மாவுடனான நினைவுகளில் ஓடி வந்திருக்கிறேன். இன்னும் எண்ணங்கள் மனதைவிட்டு அகலவில்லை. எல்லோருக்கும் ஆசீர்வாதங்கள். அன்புடன்

    மறுமொழி
  • 16. yarlpavanan's avatar yarlpavanan  |  11:35 பிப இல் மே 13, 2015

    சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
    தொடருங்கள்

    மறுமொழி
  • 17. chollukireen's avatar chollukireen  |  10:40 முப இல் மே 14, 2015

    எவ்வளவோ முறைவந்து பாராட்டியுள்ளீர்கள். பாராட்டி எழுதாவிட்டாலும் படித்துச் சொல்லியவர்கள் பலர். அம்மாவையே நேரில் அறிந்தவர்கள் பலர். அவரவர்களுக்கும், முடிவு தெரிந்ததாக இருந்தாலும்,
    இப்போதுதான் தெரிந்தாற்போல உணர்வு இருந்ததாகச் சொன்னதையும் கேட்க முடிந்தது. நீங்களும் உங்கள் கருத்தைக் கூறியதற்கு மிகவும் நன்றி. நானும் இந்தத் தொடரின் எண்ணங்களே மனதில் வருவதை நானும் உணருகிறேன். அன்புடன்

    மறுமொழி
  • 18. sheela's avatar sheela  |  2:42 பிப இல் மே 15, 2015

    Mami, a great tribute to Patti. Nothing else can be said…

    மறுமொழி
  • 19. chollukireen's avatar chollukireen  |  5:39 முப இல் மே 18, 2015

    அன்புள்ள ,ஷீலா பூரா தொடர் படித்தாயோ இல்லையோ என்றுகூட நினைப்பதுண்டு. நேரம் வேண்டுமே. என்னைவிட இன்னும் இரண்டு தலைமுறைகள் பதிவுகளில் நடமாடினர். முடித்த பிறகு சிந்தனைகள் அதையே சுற்றிச் சுற்றி வருகிறது. உன்னுடைய பின்னூட்டமும் அருமை.எல்லோருக்கும் ஆசிகள்.
    நன்றி. அன்புடன்

    மறுமொழி
    • 20. sheela's avatar sheela  |  4:52 பிப இல் மே 19, 2015

      Mami, whenever I get time I read all your posts. And this one I read the complete series. I am just not an expert like u all to give my feedback. En phone no. Msg panni irukken. Regds

      மறுமொழி
  • 21. chollukireen's avatar chollukireen  |  5:42 முப இல் மே 18, 2015

    ஆரம்பத்தினின்றும் முன்னும்,பின்னும், எப்பவும் படிக்கும் யாவருக்கும் என் அன்புகளும் ஆசிகளும்.
    அன்புடன்

    மறுமொழி
  • 22. chollukireen's avatar chollukireen  |  11:50 முப இல் ஓகஸ்ட் 9, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    அன்னையர் தினப்பதிவின் 30 வது பதிவு அவரின் கதையின் முடிவுரையாக அமைந்துவிட்டது. எப்போதோ எழுதியதுதான். மீள் பதிவுக்கு வந்து ஆதரவுகொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 23. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  12:32 பிப இல் ஓகஸ்ட் 9, 2021

    அருமையான மனுஷி. கடைசி வரை தன் காரியங்களைப் பார்த்துக் கொண்டு இப்படி உயிரை விட அவரால் தான் முடியும். கடவுள் அவரைக் கஷ்டம் இல்லாமல் தன்னுடன் சேர்த்துக் கொண்டு விட்டார். அவர் ஆசிகள் எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு இருக்கும். நினைக்க நினைக்க மனசு விம்முகிறது.

    மறுமொழி
    • 24. chollukireen's avatar chollukireen  |  11:56 முப இல் ஓகஸ்ட் 10, 2021

      இந்த விஷயத்தில் பாக்கியம் இருந்தது. உங்களின் மறுமொழிகளுக்கு மிகவும் நன்றி.அன்புடன். வேறு ஒன்றும் எழுதத் தோன்றவில்லை.

      மறுமொழி
  • 25. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  1:49 பிப இல் ஓகஸ்ட் 9, 2021

    வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்த மனுஷி… கஷ்டத்தினூடான வாழ்க்கைப் பயணம், நல்ல குணத்தைப் பறித்துக்கொள்ளவில்லை. அதுவே அநாயசமான மரணத்தைக் கொடுத்திருக்கிறது.

    எங்கோ ஒரு நாட்டில் அப்போது இருந்துகொண்டு…. இப்போது நினைவுகளை ஒரு தொடராக்கி எழுதிய உங்களையும் நினைத்துக்கொள்கிறேன்.

    மறுமொழி
    • 26. chollukireen's avatar chollukireen  |  12:01 பிப இல் ஓகஸ்ட் 10, 2021

      நன்றி. இப்போது தகுந்தபடி பின்னூட்டம் எழுத எதுவுமே தோன்றவில்லை . மனது மழுங்கி விட்டது. உங்கள் பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 27. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  12:17 முப இல் ஓகஸ்ட் 10, 2021

    இப்படி கஷ்டப்படாத முடிவு அமைய நிறைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  நிறைய புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும்.  யாருக்கும் தொந்தரவு தராத வாழ்க்கை.  புண்ணியாத்மா.

    மறுமொழி
  • 28. chollukireen's avatar chollukireen  |  12:07 பிப இல் ஓகஸ்ட் 10, 2021

    நல்லபடி போய்ச்சேருவது கிடைக்கக் கூடியது அபூர்வம் என்பது அனுபவத்தில் உணருகிறேன். உண்மை . புண்யாத்மாதான் அம்மா. நன்றி உங்களின் பின்னூட்டங்களுக்கு. அன்புடன்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மே 2015
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,015 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.