Archive for மே 19, 2015
ஸீஸன் மோர்க்குழம்பு.
எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம்.
தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மருமகள். ஸரி அதை வைத்துவிடு நான் உப யோகப் படுத்திக் கொள்கிறேன்என்றேன். சீக்கிரமே செய்து விடுங்கள் என்றாள்.
அவர்கள் காலை சாப்பாடுகள் செய்து முடித்த பின் நான் சமையலரைக்குப் போனேன். இரண்டு ஸ்பூன் கடலைபருப்பு,துளி தனியா, சீரகம் ,எல்லாவற்றையும் ஊரவைத்து காரத்துக்கு பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து கொஞ்சம் கூடவே தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்துக் கொண்டேன்
இந்த மாம்பழத்தை 2 ஒரு பக்கம் துளி கீரல் போட்டுவிட்டு , நன்றாகக் கதுப்பை அழுத்தி எடுத்துக் கொண்டேன். இரண்டுகப் கெட்டி மோரில் புளிப்பில்லாதது எல்லா வற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்தேன். உப்பு,மஞ்சப்பொடியும் போட்டேன். என்ன பிரமாதம் என்கிறீர்களா?கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு கடுகு,வெந்தயம்,பெருங்காயம்,கூடவே நான்கு குடமிளகாயையும் வறுத்துப் போட்டு தாளித்துக் கொட்டி விட்டு, கறிவேப்பிலையையும் அதன் தலையில் போட்டு இறக்கினேன்.
எங்க வீட்டுக்காரர் சாதம் சாப்பிட்டு நாலு வருஷமாறது. ராக்கொடிஅளவுஇரண்டுதோசை,ரஸம்,அல்லது இரண்டு இட்லி, பிரட்பால் ,கஞ்சி, அந்த மனுஷருக்கு தோசையுடன் இன்று இந்த மோர்க்குழம்புதான் இரண்டு கரண்டி கொடுத்தேன். பிடித்து சாப்பிட்டதை உங்களுக்கும் சொல்லலாமே. நானும் காரமே சாப்பிடறதில்லே. நானும் சாப்பிட்டேன். எனக்கு அதில் இரண்டு வேக வைத்த காயைப் போட்டேன். குழம்பு சூப்பர்தான்.
என் கதையாகத்தான் இருக்கட்டுமே. நாட்டு மாம்பழமானால் இன்னும் காரம் வைக்கலாமோ என்னவோ? போட்டோ பாருங்கோ சூப்பரா இருக்கு. குழம்பும் அப்படிதான். எழுதாமலே போஸ்ட் பண்ணி. , குப்பைக்கு அனுப்பிச்சுட்டு, திரும்ப மனதைக் கொட்டி ஒரு பதிவு. ரஸியுங்கள்