மிளகாய்த் தொக்கு.
ஓகஸ்ட் 7, 2015 at 3:15 முப 13 பின்னூட்டங்கள்
ஐந்து வருஷஙகளுக்கு முன்பு எழுதியது. ஒரு வார காலமாக ப்ளாகினுள்ளே நுழைய முடியாமல் இருந்தது. சித்ரா சுந்தர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக தேடப்போய் இன்றுதான் வலைப்பூவினுள்ளேயே நுழைந்தேன். பச்சை
மிளகாயை இரண்டாகக் கீறி நல்லெண்ணெயில் வதக்கிச்செய்யவும். வருகிறேன் தொடர்ந்து. அன்புடன்
வேண்டியவைகள்
பச்சை மிளகாய்—–100 கிராம்
புளி—-ஒரு எலுமிச்சையளவு
எண்ணெய்—–3டேபிள் ஸ்பூன்
கடுகு—–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—முக்கால் டீஸ்பூன்
வெந்தயம்-1 டீஸ்பூன்
உப்பு—-தேவையான அளவு
வெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
செய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து
வைத்துக் கொள்ளவும்.
புளியைக் கொட்டை கோது இல்லாமல் உலர்த்திஎடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்
கீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.
மூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.
ஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட
தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தைச்
சிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்
கலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,
உபயோகிக்கவும் .சாப்பாடு டிபன் வகைகளுடன் உற்ற
ஜோடியாக இருக்கும்.
Entry filed under: Uncategorized.
13 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed

1.
Vekat | 3:21 முப இல் ஓகஸ்ட் 7, 2015
படிக்கும்போதே காரம் நாக்கில் உறைக்கிறது! 🙂
சாப்பிட்டுப் பார்க்க ஆசையும் வருகிறது! 🙂
செய்முறை பகிர்வுக்கு நன்றிம்மா…
2.
chollukireen | 3:28 முப இல் ஓகஸ்ட் 7, 2015
இவ்வளவு சீக்கிரம் காரம் உறைத்து சப்பு கொட்டும்படி வைத்ததில் ஒரு வேளை நெய்வேலி மிளகாய் இருக்குமோ? முதலில் காரம் உறைத்ததற்கு பின்னுமொரு கரண்டி தயிர் விட்டுக் கொள்ளுங்கள். அன்புடன்
3.
இளமதி | 2:25 பிப இல் ஓகஸ்ட் 7, 2015
அன்பு வணக்கம் அம்மா!
நலமாக இருக்கின்றீர்களா?
நானும் கடந்த 6 மாதமாகப் படாத நோய் துன்பமுற்று
இப்போதான் ஓரளவுக்குத் தேறியுள்ளேன். ஆயினும் மழை விட்டும் தூவானம் விடாத நிலையாக இருக்கிறது.
வலையுலக உறவுகளின் அன்பு என்னை மீண்டும் பதிவிட வைத்துள்ளது. அத்துடன் மனதிற்கு ஆறுதலும் மாற்றமாகவும் உள்ளதே.!.. என்ன.. ஒரே ஒரு கவலை எல்லோர் வலைகளுக்கும் முன்பு போல உடனுக்குடன் போக முடியாமல் எனக்கு தெரப்பி, டாக்டர் சந்திப்பெனக் காலம் விரைகிறது.
இங்கும் வர எத்தனையோ தடவை முயன்றும் தாமதமாகவே வந்துள்ளேன். மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா!
மிளகாய்த்தொக்கு அபாரமாகக் காரமாக இருக்கிறதே..:)
கண்டிப்பாகச் செய்து பார்க்கின்றேன்.
பதிவை இடத்தூண்டிய சகோதரி சித்ராவுக்கு நன்றி!
உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் அம்மா!
4.
chollukireen | 2:56 பிப இல் ஓகஸ்ட் 8, 2015
ஆசிகள் இளமதி. ப்ளாக் ஒரு வரப்ரஸாதம்தான். உனக்கு உடல்நலம் ஸரியில்லை என்ற ஒரு செய்தி மட்டும் தெரியும். அவ்வப்போது இளையநிலா பக்கம் வந்து பார்ப்பதுடன் ஸரி. உன்னுடைய பதிவு பார்த்ததும் மனதில் ஒரு ஸந்தோஷம். தெரப்பி,டாக்டர் ஸந்திப்பு எல்லாம் நல்லபடி நடந்து வந்தால் ஆரோக்யம் விரைவில் கிடைக்கும். விரைந்தாலும் சுகம் கிட்டினால்ப் போதுமானது. மன்னிப்பெல்லாம் என்ன வார்த்தை. எனக்குக்கூட எழுதுவது மஹா பெரிய விஷயங்களில்லாவிட்டாலும் மன ஆறுதல் என்று சொன்னாயே அது கிடைக்கத்தான் செய்கிறது.
ஒருவாரமாக பிளாகிற்கும் எனக்கும் பிணக்கு. மனதே ஸரியில்லாது போய்விட்டது. திரும்ப பிளாக் தொடர்வு கிட்டியது. மனது ஸரியாக வேண்டும்.
சித்ராவும் உனக்கு பதில் எழுதியுள்ளாள். நீ வந்து பின்னூட்டம் இட்டதே போதும். உன் உடல் நலம் கவனித்துக் கொள். மற்றது யாவும் கடவுள் அருளால் தானாகவே ஸரியாகும். நன்றி உனக்கு எல்லா விதத்திலும். ஆசிகளும், அன்பும்
5.
chitrasundar | 10:53 பிப இல் ஓகஸ்ட் 7, 2015
காமாஷிமா,
ஆஹா, காரசாரமா பச்சை மிளகாய் தொக்கு இதோ வந்துவிட்டதே ! நான் தேடியபோது எங்கே ஒளிந்திருந்தது? சிரமம் பாராமல் தேடிக் கொடுத்ததற்கு நன்றிம்மா. புது மிளகாய்தான் கைவசம் உள்ளதே, செய்துவிடுகிறேன். நன்றிம்மா, அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 3:08 பிப இல் ஓகஸ்ட் 8, 2015
வலைப்பூவே திறக்க முடியவில்லை. ரஞ்ஜனிக்கு போன் பண்ணி, டிடிக்கு மெயில் அனுப்பி ஒரு வாரம் மனதளவில் சோர்ந்து போனேன். எதையும் ஸகஜமாக மனது ஏற்பதில்லை. டென்ஷந்தான். வலைப்பூ ஓபனாயிற்று. இன்னும் டென்ஷந்தான் அடங்கவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? மனது ஸகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தத் தொக்குசொல்லுகிறேனின் தொக்கு வகையில் இருக்கிறது.
வீட்டு மிளகாய். இன்னும் வாஸனையும் ருசியும் கூடவே இருக்கும். துளி தொட்டுக்கொண்டால் கூட ருசி அதிகம். நன்றி உனக்கு அன்புடன்
7.
திண்டுக்கல் தனபாலன் | 1:55 முப இல் ஓகஸ்ட் 8, 2015
3 நாட்களாக வெளியூர் சென்று இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை… மன்னிக்கவும்…
dindiguldhanabalan@yahoo.com
8.
chollukireen | 3:46 பிப இல் ஓகஸ்ட் 8, 2015
நன்றி உங்களுக்கு. கணினியில் ப்ராப்ளம் என்றால் உள்ளம் சோர்ந்து விடுகிறது. உற்ற தோழி எனக்கு வலைப்பூ. பதில் எழுதினதற்கு விசேஷ நன்றிகள். அன்புடன்
9.
Chitrasundar | 5:35 முப இல் ஓகஸ்ட் 8, 2015
இளமதியை வலையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உடல்நிலையை கவனிச்சிக்கோங்க !
10.
chollukireen | 3:47 பிப இல் ஓகஸ்ட் 8, 2015
இளமதியும் உங்கள் பின்னூட்டம் பார்த்திருப்பாள். அன்புடன்
11.
ஸ்ரீராம் | 9:33 முப இல் ஓகஸ்ட் 8, 2015
சுவைமிக்க தொக்கு. மிளகாயை அரைக்காமல் துண்டங்களாகவே சாப்பிடும்படியும் செய்யலாம் இல்லையா அம்மா?
12.
chollukireen | 11:15 முப இல் ஏப்ரல் 6, 2016
மிளகாயை ஊறுகாயாகவும் போடலாம். பச்சடிமாதிரி புளியின் உதவியுடன் வெல்லம் போட்டு,காரத்துடன் செய்யலாம். தாமதமானபதில் காரணம் புரியவில்லை அன்புடன்
13.
chollukireen | 4:02 பிப இல் ஓகஸ்ட் 8, 2015
மிக்ஸி வருவதற்கு முன் உரலில் பூண்போடாத மர உலக்கையினால் இடித்தே தயார் செய்ய முடியும். அப்போது அது ஒன்றிரண்டாகத்தான் இருக்கும். இப்போதும் மிக்ஸியையும் குறைவாக ஓடவிட்டால் அப்படி வரலாம். மிகவும் நைஸாக அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைக்கலாம். காரமான வஸ்துவாதலால் துளி தொட்டுக்கொண்டாலும் போதும். பச்சைமிளகாயை
ஊருகாயும் போடலாம். அதற்கு முழுதாகவும் போடலாம்.
வரவுக்கும், அபிப்ராயத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்