Archive for ஜூலை, 2015
பாஸ்தா ஸேலட்
வேகவைத்த பாஸ்தாவுடன் ,சில காய்கள் சேர்த்து ருசியான ஸேலட் பிடித்தவர்களுக்கு.
Continue Reading ஜூலை 30, 2015 at 11:52 முப 10 பின்னூட்டங்கள்
உப கதைகளில் நான் எழுதும் இரண்டாவது கதை. மூன்று மீன்கள்.
உபகதையில் மூன்று மீன்களின் கதை
நான் படித்த உப கதைகள்
நேற்றைய கதையின் முடிவு.படியுங்கள் சொல்லுங்கள்
Continue Reading ஜூலை 24, 2015 at 1:19 பிப 19 பின்னூட்டங்கள்
நான் படித்த உப கதைகள்.
பாரதக்கதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்தவாகளில் சிலவற்றைப் பகிர உத்தேசம். பாருங்கள் சிலவற்றை.
Continue Reading ஜூலை 23, 2015 at 7:43 முப 10 பின்னூட்டங்கள்
ராக்ஷஸ தாவரம்.
அதிசயம்,ஆநால் உண்மை என்ற பகுதிக்கேற்ற ராக்ஷஸ தாவரம் என்று தோன்றியது. அதுதான் பகிர்வுக்குக் காரணம்.
Continue Reading ஜூலை 20, 2015 at 5:38 முப 15 பின்னூட்டங்கள்
மகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.
ஆடி வெள்ளிக்கிழமை எனக்குத் தெரிந்தது பாருங்கள்
Continue Reading ஜூலை 17, 2015 at 5:18 முப 17 பின்னூட்டங்கள்
தினமும் நான் பார்த்த பறவைகள்
தினமும் நான் பார்த்த பறவைகளை இன்றும் பாருங்கள். வயதானவளின் பொழுது போக்க வந்தவைகள்தானிது.
Continue Reading ஜூலை 16, 2015 at 4:02 முப 16 பின்னூட்டங்கள்
தினமும் நான் பார்த்த பறவைகள்
சென்ற மாதமும்,போன வருஷம் மூன்று மாதங்களுக்கும் ஓய்விற்காகசென்னை சென்றிருந்தேன். வீட்டைவிட்டு வெளியே வந்தால் பார்ப்பதற்கு பறவைகள் காட்சி கொடுத்தாலே போதும்.கவனிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காகவே அமைந்து விட்டது. உடல் நலமில்லாத சென்னை விஜயத்தின்போது அவ்விடம் வீடுபெருக்க துடைக்க வென்று உதவிப்பெண் வந்து வேலை செய்யும்போது நான் அக்கடா என்று வீட்டை ஒட்டிய சுற்றுப்புற ச் சுவரினருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விடுவேன் கூடவே படிக்க பேப்பர், கையில் சின்ன கேமரா, வாயில் ஸ்லோகம். ஏதாவது பழத்துண்டுகள் அதுவும் பின்னாடி வரும். பெண்,மாப்பிள்ளை வீடு அது.
நல்ல வெயில் வந்து உள்ளே போ என்று சொல்லும் வரை இதேதான். அதுவரையில் நம்மைச் சுற்றி நடப்பவைகள் தானாகவே கண்ணில்ப்படும். வீட்டை ஒட்டிய எங்கள் மனையின் மரங்கள்,செடிகள், அதற்கு வரும் பட்டாம் பூச்சிகள், பறவைகள், அணில்கள். வாழைமரங்கள்,எட்டு வருஷமாகியும் காய்க்காத சாத்துக்குடிமரம், நிழலோரமா கொய்யாச் செடி, பச்சைப்பசேல் என்ற அரிநெல்லிமரம்,வாழைக்குலைகளுடன்பழத்தோடு கூடிய வாழை இன்னும் வளர்ந்து வளராத மா,தென்னம் பிள்ளைகள் , வாயிற்பக்கம் வந்தால் வீட்டின் எதிர் வரிசைகளில் வரிசையான பெருங்கொன்றை மரங்கள் என என் கற்பனையில் அவைகள் ரம்யமிக்கவைகள். நம்முடைய செடி கொடிகள் அதற்கும் பந்தமிருக்கிரது. அடுக்கு நந்தியாவட்டை, மல்லி. பவழமல்லி எனபூக்களும். விடியற்கால வேளையில் பெருங்கொன்றை மரத்தில் கூவும் குயில்கள்.
இந்தப் பட்சிகளைப் பிடித்து விட,கேமிராவில், மனதில் தோன்றும். காலைநேரம் முடியாது. மாலைநேரம் இலைகளுடன் இலையாய் மறைந்து விடும். காக்கைகள் கூடுகட்டி இருக்கும். கிளைமாறி உட்டார்ந்து கறையும். குயிலும் ஒரு அவஸர பிரவேசமாக வரும் ஆனால்ப் பறந்து விடும்.நெல்லிமரத்தில் பகல் வேளையில் போனால் போகட்டும் என்று தரிசனம் கொடுத்தது. அடுத்து தினமும் வந்து குரல் கொடுப்பதுபோலக் கூவும். நானும் ஒரு படமாவது முயற்சி செய்வேன். அப்படி பாருங்கள்.
இன்னொரு நாள்
இடம் மாறிகூட உட்காருவதில்லை. சாயங்காலம்,விடியற்காலம் பெருங்கொன்றை மரத்தில் கூவும் போது பின்பக்கத் தோட்டத்திலிருந்து பதில் எப்போதாவது வரும். அதுவும் இதுவா என்று பார்த்தால் அது வேறு. என்னையும் பார் என்று அதுவும் சில நாள் குரல் கொடுக்கும். அதையும் பார்த்து நைஸாக படம் பிடித்தால் அழகழகாக தரிசனம் கொடுத்தது.
ஓ. நீ குயிலியா! நீயும் போட்டோக்கு போஸ் கொடுக்க வந்தாயாயா? வாவா
அப்புறம்அழகான போஸ்
என்னைப் பாருங்கள்.
நான்தான்
காக்கை,மைனா தவிர இன்னும் சில பறவைகள் நாளைக்கு.
குதிரைவாலி அரிசியில் குழி அப்பம்.
விண்டுப் பார்த்து சுளைசுளையாக இருக்கா? ஸரியான பதந்தான். அதுவும் கூட இருக்கிறது.
எல்லா இடத்திலும் இப்போது சிறுதானியங்களின் உபயோகம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. எல்லாவகை சிறுதானியங்களும்,மேலும் அதிக ஸாமான்களை/யும்க கொண்டு கஞ்சி மாவு தயாரிப்பது என்பது யாவர் வீட்டிலும்,பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அளவுகளில் சற்றேறக்குறைய வித்தியாஸங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையாக யாவரும் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள். எங்கள் பெண்ணின் வீட்டிலும் இது மிகவும் பிரபலம். வயதானவர்கள், அதிகம் பொருப்புகளை வகிக்கும் நடுத்தர வயதினர் என யாவருக்கும் நல்ல,ஸத்தையும்,ஆரோக்யத்தையும் அளிக்கிறது.
கரண்டியால் அளந்து தானியங்கள் போடுவதில்லை. கடையிலிருந்து பாக்கெட்.பாக்கெட்டாக வாங்கிவந்து வறுத்து அரைப்பதுதான். அவியலின் காய்கள் போல , இதில் இல்லாத தானியங்களே கிடையாது. பார்க்காத சிறுதானியங்களைக்கூட ,சென்னையில் கிடைப்பதை வாங்கி வந்ததைப் பார்த்த போதுதான் எனக்கும் சில தானியங்கள் எப்படியிருக்கும் என்று தெரிந்தது. சொன்னால் இவ்வளவா என்று மலைத்துப் போகும் அளவிற்கு தானியங்கள். நானும் அந்த ஸத்து மாவின் சக்தியை அரிந்துகொண்டு சாப்பிட்டு வருகிறேன்.. மாவு போஸ்டில் வந்து விடுகிரது. அந்தப்பெயர்களின் பட்டியலைப் பாருங்கள். பல படங்களையும் பாருங்கள்.
தினை, சாமை மேல்வரிசை, கீழ் வரிசை வரகரிசி, கொள்ளு அடுத்து

இன்னும் சில படம் 2மேல்வரிசை–கேழ்வரகு, கம்பு அடுத்து ஜெவ்வரிசி, சம்பா கோதுமை,நடுவில் பார்லி, இன்னும் படத்தில் இல்லாதவைகள் மக்காச் சோளம்,பொட்டுக்கடலை,புழுங்கலரிசி,பாதாம், குதிரைவாலி அரிசி, ஏலக்காய், போதுமா ஸாமான்.?
நல்ல சுத்தமாகக் கிடைக்கும் ஸாமான்களை வாங்கி அப்படியே சற்று வாஸனை வருமளவிற்கு வறுத்து, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் கஞ்சிமாவு ரெடி.
இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்து, இரண்டுகப் நல்ல தண்ணீரில் கரைத்து, மேலும் தண்ணீருடன்அடுப்பில் வைத்துக் கிளறினால் வேண்டிய அளவிற்குத் திக்காகவோ,நீர்க்கவோ கஞ்சி காய்ச்ச முடியும்,பால்,சர்க்கரை,தேன் எது வேண்டுமோ அதைச் சேர்த்துப் பருகவேண்டியதுதான்.
கஞ்சி கொதிக்க ஆரம்பித்தபின்தீயைமட்டுப்படுத்தி ஐந்து நிமிஷம் கிளறினால்ப் போதும். நல்ல ஸத்துள்ள கஞ்சி. வாஸனைக்கு ஏலக்காயும், சக்திக்குத் தகுந்தாற்போல பாதாமும் போடலாம். கேழ்வரகு மெயினாக ஒரு கிலோ அளவிற்கு எடுத்துக் கொண்டு மற்றவைகளை குறைத்துப் போடலாம்.
ஸரியான அளவு பின்னால் எழுதுகிறேன். குதிரைவாலி அப்பம் தலைப்பு அதைப் பார்க்கலாம்.
சென்னையிலிருந்து வரும்போதே அரைகிலோ குதிரைவாலி அரிசியும் ஃப்லைட்டில் கூட வந்து விட்டது.வேளை வந்தது இப்போதுதான். கிச்சடியும்,பச்சடியும் செய்தேன்..ஒருகப் அரிசியில் கறிகாய்கள் சேர்த்து கிச்சடி,கூடவே தயிர்ப் பச்சடி. நல்ல டேஸ்ட்தான். அட திரும்பவும் எங்கோ போகிறது குதிரைவாலி.. அப்பம்தான் நான் சொல்ல வந்தது. வாங்க அப்பம் செய்யலாம் அப்பம்,குதிக்க, குழக்கட்டை கூத்தாட என்று வசனம் உண்டு. மோமோவாகக் கொழுக்கட்டை ஆயிற்று. இப்போது எண்ணெயில் அப்பத்தைக் குதிக்க விடுவோம். வேண்டியவைகள் நான் செய்த வகையில்
குதிரைவாலி அரிசி–ஒருகப்
உளுத்தம் பருப்பு—கால்கப்,எண்ணி பத்து வெந்தயம்.
தேங்காய்த் துருவல்—-2 டேபிள்ஸ்பூன்.
அப்பம் வேக வைக்க வேண்டிய தேவையான எண்ணெய்.
உப்பு அப்பத்திற்கு பச்சைமிளகாய்–1 , சீரகம்துளி,பெருங்காயம் ஒரு துளி,உப்பு,கொத்தமல்லி இலை சிறிது.
செய்முறை—கு. வாலி அரிசி,பருப்பு,வெந்தயம் மூன்றையும் நன்றாக ஊறவைத்து மிக்ஸியில்,தேங்காயுடன் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைக்கவும்.,தோசைமாவு பதத்தில் இருக்கலாம்.
இரண்டு டேபிள்ஸ்பூன் மைதாவும் சேர்த்துக் கரைக்கவும்.
பாதி மாவைத் தனியாக எடுத்து அதில் துளி உப்பு,பொடியாகநறுக்கிய மிளகாய்,சீரகம்,பெருங்காயம்,கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும். மிகுதி பாதி மாவில் வெல்லமோ,நாட்டுச் சக்கரையோ, சர்க்கரையோ நான்குஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கரைக்கவும். ஏலப்பொடி துளி போடவும்.
அப்பக்காரல் தேடினால் எனக்குக் கிடைக்கவில்லை. சின்ன வாணலியிலேயே எண்ணெயைக் காய வைத்து சின்னக்கரண்டியால் ஒவ்வொன்றாக அப்பத்தை வார்த்து,வேக வைத்துத் திருப்பி எடுத்தேன். மொத்தமே படத்தில் இருக்கும் அளவுதான். வென்தயம் போட்டால் அப்பம் சுளைசுளையாக வரும். வீட்டில் யாரும் இல்லை. முதல்தரம் இந்த அரிசி அப்பம் செய்தேன்.. சக்கரைதான் கிடைத்தது. அதான் கலர் குறைவு.
வெல்ல அப்பத்தில் பெருஞ்சீரகம் கூட போடுபவர்களும் உண்டு, இதுவும் ஒரு டிப்ஸ்தான். முதலில் செய்தது கிச்சடிதான். அதையும் அப்புறம் போட்டு விடுகிறேன். எப்படி இருக்கு? காமா,சோமா இல்லை நன்றாக இருந்ததென்று சொன்னார்கள். பார்ப்போம்,
அப்பம் வார்க்கும் அப்பக்காரலில் செய்தால் ஒரே அளவாகக் குண்டு குண்டாக வரும்..
தினமும் நான் பார்த்த பறவைகள்.
காக்கை என நினைக்க பருந்தாக பரந்து வந்துசிந்திக்க வைத்தது.
Continue Reading ஜூலை 4, 2015 at 12:18 பிப 16 பின்னூட்டங்கள்