Archive for ஓகஸ்ட், 2015
இது என்ன பூ, வாழைப்பூ மாதிரி.
பூ அழகாக இருந்தது. பாருங்களேன். எங்கள் ‘டெரஸில் பூத்த பூவிது.
Continue Reading ஓகஸ்ட் 24, 2015 at 3:49 பிப 16 பின்னூட்டங்கள்
உபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதையின் முடிவு.2
பூனையும்,எலியும் எப்படி என்ன செய்தது என்பதைப் படியுங்கள்.
Continue Reading ஓகஸ்ட் 14, 2015 at 12:11 பிப 8 பின்னூட்டங்கள்
உபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதை பூனையும்,எலியும். 1.
இதுவும் உபகதைதான். புத்தி கூர்மையுள்ள எலியின் கதை.
Continue Reading ஓகஸ்ட் 12, 2015 at 8:52 முப 8 பின்னூட்டங்கள்
மிளகாய்த் தொக்கு.
ஐந்து வருஷஙகளுக்கு முன்பு எழுதியது. ஒரு வார காலமாக ப்ளாகினுள்ளே நுழைய முடியாமல் இருந்தது. சித்ரா சுந்தர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக தேடப்போய் இன்றுதான் வலைப்பூவினுள்ளேயே நுழைந்தேன். பச்சை
மிளகாயை இரண்டாகக் கீறி நல்லெண்ணெயில் வதக்கிச்செய்யவும். வருகிறேன் தொடர்ந்து. அன்புடன்
வேண்டியவைகள்
பச்சை மிளகாய்—–100 கிராம்
புளி—-ஒரு எலுமிச்சையளவு
எண்ணெய்—–3டேபிள் ஸ்பூன்
கடுகு—–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—முக்கால் டீஸ்பூன்
வெந்தயம்-1 டீஸ்பூன்
உப்பு—-தேவையான அளவு
வெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
செய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து
வைத்துக் கொள்ளவும்.
புளியைக் கொட்டை கோது இல்லாமல் உலர்த்திஎடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்
கீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.
மூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.
ஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட
தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தைச்
சிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்
கலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,
உபயோகிக்கவும் .சாப்பாடு டிபன் வகைகளுடன் உற்ற
ஜோடியாக இருக்கும்.