Archive for ஜூலை 14, 2015
தினமும் நான் பார்த்த பறவைகள்
சென்ற மாதமும்,போன வருஷம் மூன்று மாதங்களுக்கும் ஓய்விற்காகசென்னை சென்றிருந்தேன். வீட்டைவிட்டு வெளியே வந்தால் பார்ப்பதற்கு பறவைகள் காட்சி கொடுத்தாலே போதும்.கவனிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காகவே அமைந்து விட்டது. உடல் நலமில்லாத சென்னை விஜயத்தின்போது அவ்விடம் வீடுபெருக்க துடைக்க வென்று உதவிப்பெண் வந்து வேலை செய்யும்போது நான் அக்கடா என்று வீட்டை ஒட்டிய சுற்றுப்புற ச் சுவரினருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விடுவேன் கூடவே படிக்க பேப்பர், கையில் சின்ன கேமரா, வாயில் ஸ்லோகம். ஏதாவது பழத்துண்டுகள் அதுவும் பின்னாடி வரும். பெண்,மாப்பிள்ளை வீடு அது.
நல்ல வெயில் வந்து உள்ளே போ என்று சொல்லும் வரை இதேதான். அதுவரையில் நம்மைச் சுற்றி நடப்பவைகள் தானாகவே கண்ணில்ப்படும். வீட்டை ஒட்டிய எங்கள் மனையின் மரங்கள்,செடிகள், அதற்கு வரும் பட்டாம் பூச்சிகள், பறவைகள், அணில்கள். வாழைமரங்கள்,எட்டு வருஷமாகியும் காய்க்காத சாத்துக்குடிமரம், நிழலோரமா கொய்யாச் செடி, பச்சைப்பசேல் என்ற அரிநெல்லிமரம்,வாழைக்குலைகளுடன்பழத்தோடு கூடிய வாழை இன்னும் வளர்ந்து வளராத மா,தென்னம் பிள்ளைகள் , வாயிற்பக்கம் வந்தால் வீட்டின் எதிர் வரிசைகளில் வரிசையான பெருங்கொன்றை மரங்கள் என என் கற்பனையில் அவைகள் ரம்யமிக்கவைகள். நம்முடைய செடி கொடிகள் அதற்கும் பந்தமிருக்கிரது. அடுக்கு நந்தியாவட்டை, மல்லி. பவழமல்லி எனபூக்களும். விடியற்கால வேளையில் பெருங்கொன்றை மரத்தில் கூவும் குயில்கள்.
இந்தப் பட்சிகளைப் பிடித்து விட,கேமிராவில், மனதில் தோன்றும். காலைநேரம் முடியாது. மாலைநேரம் இலைகளுடன் இலையாய் மறைந்து விடும். காக்கைகள் கூடுகட்டி இருக்கும். கிளைமாறி உட்டார்ந்து கறையும். குயிலும் ஒரு அவஸர பிரவேசமாக வரும் ஆனால்ப் பறந்து விடும்.நெல்லிமரத்தில் பகல் வேளையில் போனால் போகட்டும் என்று தரிசனம் கொடுத்தது. அடுத்து தினமும் வந்து குரல் கொடுப்பதுபோலக் கூவும். நானும் ஒரு படமாவது முயற்சி செய்வேன். அப்படி பாருங்கள்.
இன்னொரு நாள்
இடம் மாறிகூட உட்காருவதில்லை. சாயங்காலம்,விடியற்காலம் பெருங்கொன்றை மரத்தில் கூவும் போது பின்பக்கத் தோட்டத்திலிருந்து பதில் எப்போதாவது வரும். அதுவும் இதுவா என்று பார்த்தால் அது வேறு. என்னையும் பார் என்று அதுவும் சில நாள் குரல் கொடுக்கும். அதையும் பார்த்து நைஸாக படம் பிடித்தால் அழகழகாக தரிசனம் கொடுத்தது.
ஓ. நீ குயிலியா! நீயும் போட்டோக்கு போஸ் கொடுக்க வந்தாயாயா? வாவா
அப்புறம்அழகான போஸ்
என்னைப் பாருங்கள்.
நான்தான்
காக்கை,மைனா தவிர இன்னும் சில பறவைகள் நாளைக்கு.