Archive for திசெம்பர், 2015
பேபி பொடேடோ வதக்கல்.
இன்று இவ்விடம் இதே கறிசெய்தது. அதிகம் நான் சமையல் பக்கம் போவதில்லை. என்னையாவது திரும்பிப்போடு என்று குட்டி உருளைக் கேட்டது.டிஸம்பர் ஆரம்பித்து எதுவும் பதிவிடவே இல்லை. படியுங்கள் நீங்கள் ருசிக்காதது எதுவுமில்லை. என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். பதிலும் கட்டாயம் முதலில் விட்டுப்போனவைகளுக்கும் சேர்த்து எழுதுகிறேன். காமாட்சிம்மா அன்புடனாக.
இன்று இந்த வதக்கல் செய்தேன். ஸரி நம் ப்ளாகைப் பார்க்கிறவர்களும்
ருசிக்கட்டுமே என்று தோன்றியது.4 நாட்கள் முன்பு செய்தது, இது.
வேண்டியவைகள் ஒன்றும் பிரமாதமில்லை. வேண்டிய அளவு
குட்டி உருளைக் கிழங்கு
எண்ணெய் தாராளமாகவே விடுங்கள்.
தாளித்துக் கொட்ட —சிறிது கடுகு.
மஞ்சள்பொடி—சிறிது
மிளகாய்ப் பொடி—காரம் வேண்டிய அளவு.
சீரகப்பொடி—-அரை டீஸ்பூன்
உப்பு—ருசிக்கு
பெருங்காயப் பொடி—சிறிது
ஒரு டீஸ்பூன்—கடலைமாவு
கறிவேப்பிலை—-சிறிது. 2 இதழ் உரித்த பூண்டு
செய்முறை–
உருளைக்கிழங்கை அலம்பி ,அது அமிழத் தண்ணீர் வைத்து
குக்கரிலோ,அல்லது பாத்திரத்திலோ வேக வைத்து வடிக்கட்டவும்.
முக்கால் வேக்காடு போதும். ஆறினவுடன் தோலை உரிக்கவும்.
உரித்த கிழங்குடன்,உப்பு, மிளகாய், மஞ்சள், பெருங்காயம் சீரகப்
பொடிகளுடன் நன்றாக நசுக்கிய பூண்டு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
சற்று ஊறிய பிறகு, அடி கனமான வாணலியைச் சூடாக்கி
எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க விடவும்.
பிசறி வைத்துள்ள பேபி பொடேடோவை, அதான் குட்டி உருளைக்
கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.
ஸிம்மில் எரிவாயுவை வைக்கவும்.
நிதானமாகக் கிளறிவிட்டு வதக்கவும்.
ம னதுக்கு போதும் என்று தோன்றும் வரை வதக்கலாம்.
இஞ்சி சேர்த்து வதக்கலாம்.
பூண்டு சேர்த்து வதக்கலாம்.
வெங்காயம் சேர்த்து வதக்கலாம்.
மஸாலா, பெருஞ்சீரகம், எது வேண்டுமானாலும் சேருங்கள்.
ஏதாவதொன்று சேர்த்து வதக்கி கடைசியில் கடலை மாவைப் பரவலாகத்
தூவிப் பிரட்டி வதக்கி இரக்கவும். சிறிது எண்ணெய் அதிகமிருந்தாலும்
மாவு அதை ஸரியாக்கிவிடும். கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.
வித்தியாஸமான …
View original post 12 more words