Archive for செப்ரெம்பர் 23, 2022
ஜெனிவா கொலுக்களில் சில
இதுவும் ஒரு மீள்பதிவுதான். ஆறு வருஷங்களுக்குப் பிறகு நவராத்திரிப் பதிவாகப் போடுவதை வெள்ளிக்கிழமையான இன்றே போடலாம் என்று தோன்றியது. கொரானோவிற்குப் பிறகு எல்லாம் சிறிய வட்டத்திற்குள் போய்விட்டது போலும். யாவருக்கும் ஆசீர்வாதங்கள். கண்டு களியுங்கள் அன்புடன்
ஜெனிவா நவராத்திரி. எங்கள் வீட்டில் ஸ்வாமி ஷெல்ப்பில் தான் நித்யகொலு.
ஸ்வாமி ,ஷெல்ப் நித்யகொலு. ஜெனிவா.
இவ்விடமும் ஏராளமான குடும்பங்களில் நவராத்திரி பொம்மைக் கொலு வைக்கிரார்கள். மிகவும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். விதவிதமான பட்டுப் புடவைகளும், அதற்கேற்ற நகைகளும், மற்ற குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துப் பேசி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துண்ணலும், மஞ்சள் குங்கும, அன்பளிப்புகளுடன் பக்திக் கொண்டாடலும் மிகவும் அழகாக இருக்கிறது.
நல்ல குளிர் களை கட்டுகிரது.என்னைப்போன்ற வயதானவர்களுக்கு.
நான் சில அருகிலுள்ள வீடுகளுக்குத்தான் போனேன். என்னுடைய மருமகளும் கொலு என்ற பெயர் வைக்காமல் நித்தமும் கொலுவாகவே விளங்கும் ஸ்வாமி அறையில் மஞ்சள் குங்குமம் கொடுத்துக் கொண்டாடுகிறாள். பேத்தி விலாயினியும் மருமகள் ஸுமனும்.
நான் ஐந்து வருஷங்களுக்குப் பிறகு இவ்விடம் வந்திருந்ததால் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
நான் கண்ட சில கொலுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கீதா கிருஷ்ணமூர்த்தி மாமியின் கொலு.
மாமி வீட்டில் எல்லாமே ,ஸ்பெஷல்தான். அங்கு போயிருந்தபோது ஏராளமானவர்களைப் பார்க்க முடிந்தது. பாட்டுகள் அவ்விடம் பாடியவர்கள் மறக்க முடியாதவர்கள். ஸ்ரீ சக்ரராஜ,பாக்யாத லக்ஷ்மிபாரம்மா.சேர்ந்து அருமையாகப் பாடியவர்கள் பாட்டு இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள். மற்றும்
ஒவ்வொருவரும் மிக்க அழகாக கொலு வைத்திருந்தனர். எங்கோ தமிழ்நாட்டில் உள்ளது போல அவர்களும்,அவர்களின் பெண் குழந்தைகளும் பங்கு கொண்டு,பேசி,மகிழ்வித்தது மனதைவிட்டு அகற்ற முடியாத காட்சிகள்.
பிரபா வீட்டுக் கொலு. அம்மாவும் பெண்ணுமாக உபசரித்தது மறக்க முடியாதது.
பிரபாவின் மாமியாரும் ஓர்ப்படியும் அயலூரில் இருக்கிரார்கள். மாமியின்…
View original post 184 more words