Archive for செப்ரெம்பர் 12, 2022
க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி.
இந்த அவகேடோ எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.கிடைத்தாலும் விலை மிகவும் அதிகம். மீள் பதிவு போட்டபின் இது ஞாபகத்திற்கு வந்தது. ரஸிக்கலாம் அல்லவா? அன்புடன்
இந்த க்வாக்கமோலே என்பது மெக்ஸிகன் பெயர். இதை அடிக்கடி என்
மருமகள் ஜினிவாவில் செய்வது வழக்கம்.
காயாகவும்,இல்லாமல்,மிகவும் பழுத்த தாகவும் இல்லாத பழத்தில்
இதை தயாரித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
மென்மையான சதைப் பகுதியைக் கொண்டது இந்தப் பழம்.
ஸேலட்களிலும் நறுக்கிச் சேர்ப்பார்கள். சட்னியிலும் போடலாம்.
இந்த அவகேடோ உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
ஆன்டி ஆக்ஸிடெண்டுகளும்,பொட்டாஷியமும் இருக்கிறது.
ஸேன்ட்விச்,மில்க் ,ஷேக் செய்யவும் உதவுகிறது இது.
நம்முடைய,வெங்காயமும் ,தக்காளியும் அனேக மருத்துவக் குணங்களை
உடையது அல்லவா?
எல்லாமாகச் சேர்த்து சுலபமாக ஒரு டிஷ்
கார்ன் சிப்ஸோடு, தொட்டுச் சாப்பிட இதைச் செய்வார்கள்.
இந்த அவகேடோவின் உள்ளே கொட்டை பெரியதாக இருக்கும்.
அதை எடுத்து விட்டு பின்னர் தயாரித்த பண்டத்தின் நடுவே அதை
வைத்து விடுவது வழக்கம்.
அக்கொட்டை உடனிருந்தால் அவகேடோ நிறம் மாறுதலடையாமல்
இருக்கும். என்ன வேண்டும் என்பதைப் படத்தில் காட்டி விட்டு
வேண்டியவை சொல்லவே இல்லை அல்லவா?
வேண்டியவைகள்.
அவகேடோ—–1
பச்சை மிளகாய்—-1
நல்ல தக்காளிப்பழம்—-1
கொத்தமல்லி இலைகள்—ஆய்ந்தது—சிறிது.
சின்ன சைஸ்– வெங்காயம்—பாதிகூட போதுமானது.
ருசிக்கு– உப்பு
எலுமிச்சை—பாதி பழம். ருசிக்கேற்ப
கடையில் வாங்கிய கார்ன் சிப்ஸ்—-தேவைக்கேற்ப. உடன் சாப்பிட
செய்முறை.
அவகேடோவை தோல் சீவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், வெங்காயம்,தக்காளியை, மிகவும் பொடிப்பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
அவகேடோ நறுக்கினதை, ஒரு குழிவான கிண்ணத்தில் போட்டு
ஒரு…
View original post 71 more words