Posts filed under ‘Uncategorized’

பேபி பொடேடோ வதக்கல்.

இன்று இவ்விடம் இதே கறிசெய்தது. அதிகம் நான் சமையல் பக்கம் போவதில்லை. என்னையாவது திரும்பிப்போடு என்று குட்டி உருளைக் கேட்டது.டிஸம்பர் ஆரம்பித்து எதுவும் பதிவிடவே இல்லை. படியுங்கள் நீங்கள் ருசிக்காதது எதுவுமில்லை. என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். பதிலும் கட்டாயம் முதலில் விட்டுப்போனவைகளுக்கும் சேர்த்து எழுதுகிறேன். காமாட்சிம்மா அன்புடனாக.

chollukireen's avatarசொல்லுகிறேன்

இன்று  இந்த வதக்கல் செய்தேன்.  ஸரி நம் ப்ளாகைப் பார்க்கிறவர்களும்

ருசிக்கட்டுமே    என்று     தோன்றியது.4  நாட்கள்  முன்பு செய்தது, இது.

பேபிபொடேடோவதக்கல் பேபிபொடேடோவதக்கல்

வேண்டியவைகள் ஒன்றும் பிரமாதமில்லை.    வேண்டிய அளவு

குட்டி உருளைக் கிழங்கு

எண்ணெய் தாராளமாகவே    விடுங்கள்.

தாளித்துக் கொட்ட —சிறிது கடுகு.

மஞ்சள்பொடி—சிறிது

மிளகாய்ப் பொடி—காரம் வேண்டிய அளவு.

சீரகப்பொடி—-அரை டீஸ்பூன்

உப்பு—ருசிக்கு

பெருங்காயப் பொடி—சிறிது

ஒரு டீஸ்பூன்—கடலைமாவு

கறிவேப்பிலை—-சிறிது.   2 இதழ் உரித்த பூண்டு

செய்முறை–

உருளைக்கிழங்கை அலம்பி  ,அது அமிழத்  தண்ணீர் வைத்து

குக்கரிலோ,அல்லது பாத்திரத்திலோ வேக வைத்து வடிக்கட்டவும்.

முக்கால் வேக்காடு போதும்.   ஆறினவுடன் தோலை உரிக்கவும்.

உரித்த கிழங்குடன்,உப்பு, மிளகாய், மஞ்சள், பெருங்காயம் சீரகப்

பொடிகளுடன்      நன்றாக நசுக்கிய பூண்டு சேர்த்துப்  பிசறி வைக்கவும்.

சற்று ஊறிய பிறகு, அடி கனமான வாணலியைச் சூடாக்கி

எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க விடவும்.

பிசறி வைத்துள்ள  பேபி பொடேடோவை, அதான் குட்டி உருளைக்

கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

ஸிம்மில் எரிவாயுவை வைக்கவும்.

நிதானமாகக்  கிளறிவிட்டு வதக்கவும்.

ம னதுக்கு போதும் என்று தோன்றும் வரை வதக்கலாம்.

இஞ்சி சேர்த்து வதக்கலாம்.

பூண்டு சேர்த்து வதக்கலாம்.

வெங்காயம் சேர்த்து வதக்கலாம்.

மஸாலா, பெருஞ்சீரகம், எது வேண்டுமானாலும் சேருங்கள்.

ஏதாவதொன்று சேர்த்து வதக்கி கடைசியில்   கடலை மாவைப் பரவலாகத்

தூவிப் பிரட்டி வதக்கி இரக்கவும்.    சிறிது எண்ணெய் அதிகமிருந்தாலும்

மாவு அதை  ஸரியாக்கிவிடும். கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.

வித்தியாஸமான  …

View original post 12 more words

திசெம்பர் 18, 2015 at 12:32 பிப 9 பின்னூட்டங்கள்

மட்ரி.

Originally posted on சொல்லுகிறேன்:
இது ஒரு  வடஇந்திய வகை  மைதாமாவின் தயாரிப்பு. பார்க்கப்போனால்     நம்முடைய  தட்டை மாதிரிதான்.   பருப்புகள் போடுவதில்லை.  சற்று வித்தியாஸமான   ருசி.  கரகரப்பாகச் செய்கிறார்கள்.   சிறிதளவு    வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள். இது மேத்தி மட்ரி.    அவசரத்திற்கு    ஊறுகாயுடன்காலைடிபனில்கூட மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான்   கற்றுக்கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வேண்டியவைகள். மைதாமாவு—-2 கப் ஓமம்—2 டீஸ்பூன் மாவுடன்   சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன் ருசிக்கு உப்பு மட்ரி…

Continue Reading நவம்பர் 20, 2015 at 11:25 முப 6 பின்னூட்டங்கள்

மேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி

chollukireen's avatarசொல்லுகிறேன்

                 வேண்டியவைகள்———–மாவு தயாரிக்க—-கோதுமைமாவு—2கப்

                                                                                                 அரிசிமாவு-ஒரு டேபிள்ஸ்பூன்                 

                                                         கடலைமாவு, அல்லதுசோளமாவு–ஒருடேபிள்ஸ்பூன்

                                        மிளகாய்ப்பொடி—-அரை–டீஸ்பூன்      ஆம்சூர்–ஒரு டீஸ்பூன்

                                        சீரகப்பொடி—அரைடீஸ்பூன்  -ருசிக்கு வேண்டியஉப்பு

         அலம்பி சுத்தம் செய்து    பொடியாக நறுக்கிய லெந்தயக்கீரை-ஒருகப்

                   மாவுடன் கலக்க-ஒருடேபிள் ஸ்பூன் எண்ணெய்.

                                                                               இவைகள் யாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துப பிறகு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ரொட்டிமாவுபதத்தில்  மாவைத் தயாரித்துக் கொள்ளவும். அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

 ரொட்டி தோய்த்துயிட மாவும், ரொட்டி தயாரிக்க  விருப்பம்போல எண்ணெயோ நெய்யோ உபயோகிககலாம்.

   திட்டமான உருண்டைகளாகச் செய்து . குழவியினால்     ஊறினமாவை  வட்டமான ரொட்டிகளாக மேல் மாவில் பிரட்டிஇட்டு  அவரவர்கள் அடுப்பில்  தோசைக் கல்லில்     நெய் விட்டு ரொட்டிகளைஒவ்வொன்றாகதயாரிக்கவும்   .    டால,கூட்டு முதலானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

View original post

செப்ரெம்பர் 3, 2015 at 10:30 முப 5 பின்னூட்டங்கள்

மிளகாய்த் தொக்கு.

ஐந்து வருஷஙகளுக்கு முன்பு எழுதியது. ஒரு வார காலமாக ப்ளாகினுள்ளே நுழைய முடியாமல் இருந்தது. சித்ரா சுந்தர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக தேடப்போய் இன்றுதான் வலைப்பூவினுள்ளேயே நுழைந்தேன். பச்சை
மிளகாயை இரண்டாகக் கீறி நல்லெண்ணெயில் வதக்கிச்செய்யவும். வருகிறேன் தொடர்ந்து. அன்புடன்

chollukireen's avatarசொல்லுகிறேன்

வேண்டியவைகள்

பச்சை மிளகாய்—–100 கிராம்

புளி—-ஒரு எலுமிச்சையளவு

எண்ணெய்—–3டேபிள் ஸ்பூன்

கடுகு—–1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு–2 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—முக்கால் டீஸ்பூன்

வெந்தயம்-1 டீஸ்பூன்

உப்பு—-தேவையான அளவு

வெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்

செய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து

வைத்துக் கொள்ளவும்.

புளியைக் கொட்டை கோது இல்லாமல் உலர்த்திஎடுக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்

கீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.

மூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.

ஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட

தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.

எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு,  வெந்தயத்தைச்

சிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்

கலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,

 உபயோகிக்கவும் .சாப்பாடு  டிபன் வகைகளுடன் உற்ற

ஜோடியாக இருக்கும்.

View original post

ஓகஸ்ட் 7, 2015 at 3:15 முப 13 பின்னூட்டங்கள்

ஒன்றில் மூன்று

மாங்காய் ஸீஸன் இது. நல்ல மாங்காய் கிடைக்கும்போது செய்து ருசிக்க சென்ற மாங்காய் ஸீஸனில் எழுதிய குறிப்புகளே இது. மறுபதிவு செய்யத் தோன்றியது. பார்த்தோ,செய்தோ ருசியுங்கள். ஒரு வரி எழுதுங்கள்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

புளிப்பு மாங்காய்கள் புளிப்பு மாங்காய்கள்

மாங்காய் ஸீஸனில் வாங்கியுள்ள மாங்காயை மூன்று ரகமாகச்

செய்ததுதான் இது.

இனிப்புத் தொக்கு ஒன்று, காரம் சேர்த்த தொக்கு ஒன்று. மாங்காய்ப்

பச்சடி ஒன்று. ஆக மூன்று ரகம்.

மொத்தமாகத் துருவியதில் மாங்காய்த் துருவல் அதிகமாக இருந்தது.

மூன்றாகப் பிரித்ததில்  எல்லா வகையும் செய்ய முடிந்தது.

பச்சடி இன்னும் சுலபம். அடுத்து எழுதுகிறேன்

பார்ப்போமா உங்களுடன்.

காரமாங்காய் தொக்கு.

ரெடியாகும் காரத் தொக்கு ரெடியாகும் காரத் தொக்கு

வேண்டியவைகள்.

துருவிய மாங்காய்—4கப். தோலைச் சீவி விட்டு மாங்காயைத் துருவவும்.

மிளகாய்ப்பொடி—-4 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—2 டீஸ்பூன்

நல்லெண்ணெய்–அரைகப்

ருசிக்கு– உப்பு

கடுகு—1 டீஸ்பூன்

வெந்தயம்—1 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். விருப்பத்திற்கேற்ப சேர்க்கவும்.

செய்முறை–

கடுகையும்,வெந்தயத்தையும்,  சூடான வாணலியில் எண்ணெய்விடாது

வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை

நான்ஸ்டிக் வாணலயிலோ, அல்லது  அலுமினியம் வாணலியிலோ பாதி

எண்ணெயைக் காயவைத்து துருவிய மாங்காயைப் போட்டு  வதக்கவும்.

புளிப்புக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். மஞ்சளும் சேர்த்து நிதான தீயில்

சுருள வதக்கவும்.

நீர் வற்றி   எண்ணெய் பிரிந்து வரும் போது,மிளகாய்ப்பொடி,மீதி

எண்ணெயைச்சேர்த்துக் கிளறி, இறக்கி வெந்தயகடுகுப் பொடியைச் சேர்த்துக்

கிளறவும்.

பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஆறினவுடன் ருசி பார்த்து

உப்பு காரம் ருசி பார்த்து   சுத்தமான பாட்டலில் வைத்து மூடவும்.

பாட்டிலில் அடங்கத் தயார் பாட்டிலில் அடங்கத் தயார்

ஃப்ரிஜ்ஜில் வைத்து  நாள்ப்படவும் உபயோகப் படுத்தலாம். அடுத்தது

இனிப்புத் தொக்கு இனிப்புத் தொக்கு

இனி.ப்புத் தொக்கு.

வேண்டியவைகள்

மாங்காய்த் துருவல்—-2கப்

வெல்லம்—-2கப்

உப்பு—ஒரு டீஸ்பூனைவிட அதிகம்

எண்ணெய்—-3…

View original post 143 more words

மே 29, 2015 at 8:01 முப 8 பின்னூட்டங்கள்

ஸீஸன் மோர்க்குழம்பு.

எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம்.

மாம்பழ மோர்க்குழம்பு.

மாம்பழ மோர்க்குழம்பு.

தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம்  நறுக்க வரவில்லை என்றாள் மருமகள். ஸரி அதை வைத்துவிடு நான் உப யோகப் படுத்திக் கொள்கிறேன்என்றேன். சீக்கிரமே செய்து விடுங்கள் என்றாள்.

அவர்கள் காலை   சாப்பாடுகள்  செய்து முடித்த பின் நான் சமையலரைக்குப் போனேன். இரண்டு ஸ்பூன் கடலைபருப்பு,துளி தனியா, சீரகம் ,எல்லாவற்றையும் ஊரவைத்து காரத்துக்கு பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து கொஞ்சம் கூடவே தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்துக் கொண்டேன்

இந்த மாம்பழத்தை 2 ஒரு பக்கம் துளி கீரல் போட்டுவிட்டு , நன்றாகக் கதுப்பை  அழுத்தி எடுத்துக் கொண்டேன்.  இரண்டுகப் கெட்டி மோரில் புளிப்பில்லாதது  எல்லா வற்றையும்   சேர்த்து நன்றாகக் கலந்தேன். உப்பு,மஞ்சப்பொடியும் போட்டேன். என்ன பிரமாதம் என்கிறீர்களா?கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு   கடுகு,வெந்தயம்,பெருங்காயம்,கூடவே நான்கு குடமிளகாயையும் வறுத்துப் போட்டு தாளித்துக் கொட்டி விட்டு, கறிவேப்பிலையையும் அதன் தலையில் போட்டு இறக்கினேன்.

எங்க வீட்டுக்காரர்  சாதம் சாப்பிட்டு நாலு வருஷமாறது.    ராக்கொடிஅளவுஇரண்டுதோசை,ரஸம்,அல்லது இரண்டு இட்லி, பிரட்பால் ,கஞ்சி,  அந்த மனுஷருக்கு தோசையுடன்  இன்று இந்த  மோர்க்குழம்புதான் இரண்டு கரண்டி கொடுத்தேன். பிடித்து சாப்பிட்டதை   உங்களுக்கும் சொல்லலாமே.  நானும் காரமே சாப்பிடறதில்லே. நானும் சாப்பிட்டேன்.    எனக்கு அதில் இரண்டு வேக வைத்த காயைப் போட்டேன்.   குழம்பு சூப்பர்தான்.

என் கதையாகத்தான் இருக்கட்டுமே. நாட்டு மாம்பழமானால் இன்னும் காரம் வைக்கலாமோ என்னவோ?    போட்டோ பாருங்கோ   சூப்பரா இருக்கு.  குழம்பும் அப்படிதான்.  எழுதாமலே போஸ்ட் பண்ணி. , குப்பைக்கு அனுப்பிச்சுட்டு,   திரும்ப மனதைக் கொட்டி ஒரு பதிவு. ரஸியுங்கள்

மே 19, 2015 at 10:54 முப 15 பின்னூட்டங்கள்

2014 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.

Here’s an excerpt:

Madison Square Garden can seat 20,000 people for a concert. This blog was viewed about 61,000 times in 2014. If it were a concert at Madison Square Garden, it would take about 3 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

திசெம்பர் 30, 2014 at 6:28 முப பின்னூட்டமொன்றை இடுக

பொரி உருண்டை

கார்த்திகையை நினைத்துக் கொண்டு நாம் ஏதாவதுஎழுதினோமா என்று பார்த்தால் ஜெனிவாவில் கிடைத்த பொரியில் செய்தது நான் இருக்கிறேன் என்று முன் வந்து நிற்கிறது. அதுதான் நானே எடுத்த முதல் போட்டோவும். காமா,சோமா என்று இருந்தாலும் கார்த்திகைப்
பருப்பு தேங்காயும்,உருண்டைகளும் கிடைத்த வெல்லத்தைக் கொண்டு செய்தது. நான் எடுத்த முதல் படம்.
என் கேமிராவில் என்ன இருக்கும்? கம்யுட்டரில்தான் என்ன இருக்கும்.? இதுவே அது.அதுவே இது என்ற கணக்கில்தான்.
பாருங்கள்.அண்ணாமலைக் கார்த்திகை வாழ்த்துகளுடன்.
அன்புடன்

கோபுர தரிசனம் கோடி புண்யம். திருவண்ணாமலை கோபுரம்.

திவண்ணாமலை ராஜகோபுரம்.

திருவண்ணாமலை ராஜகோபுரம்.

கார்த்திகைத் தீபங்களே ஒளி வீசுகவே

கார்த்திகைத் தீபங்களே ஒளி வீசுகவே

இவைகளும் கோபுரமும் என் காமிராவின் பதிவே.

chollukireen's avatarசொல்லுகிறேன்

சுத்தம் செய்த     அவல் பொரியோ அல்லது  நெல் பொரியோ எது

கிடைக்கிரதோ  ஒரு 3 டம்ளர் அளவில் செய்யலாம் வாருங்கள்.

வேண்டிய சாமான்கள்.—–பொடித்த வெல்லம்—1 டம்ளர்

சுக்குப் பொடி—அரை டீஸ்பூன்

மிளகுப் பொடி—கால் டீஸ்பூன்

ஏலப்பொடி—கால் டீஸ்பூன்

சிறிய பல்போல நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்–3டேபிள்ஸ்பூன்

பொட்டுக் கடலை, வறுத்த வேர்க் கடலை  சிறிது

நெய்—-சிறிது

செய்முறை. —-நெய்யில்   தேங்காய்த் துண்டுகளை சிவக்க

வறுத்து வைத்துக் கொள்ளவும்.

சற்று கொள்ளளவு  பெரிதாகவுள்ள பாத்திரத்தில் வெல்லப்பொடி

நன்றாக மூழ்கும் அளவு   தண்ணீர் சேர்த்து  நிதான தீயில் வைத்து

பாகாகக் காய்ச்சவும்.

பாகில் பொடிகளைச் சேர்க்கவும்.   முதிர் பாகாக வரும் போது

பொரியையும்,  தேங்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எண்ணெய் தடவிய தட்டில் கொட்டிக் கொண்டு   கையில்

அரிசி மாவை  லேசாக தடவிக்கொண்டு  வேண்டிய சைஸில்

உருண்டைகளாக உருட்டவும்.

விருப்பமுள்ளவர்கள்,     பொட்டுக் கடலையையும், வறுத்த

வேர்க் கடலையையும்    பொரியுடன் சேர்க்கலாம்.

பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.

காய்ந்தபாகில் ஒரு துளி, சிறிது ஜலத்தில் விட்டுப் பார்த்தால்

கரையாமல் கெட்டியாக  உருட்டி எடுக்கும் பதத்தில் பாகு வரும்.

திருக்கார்த்திகைக்கு  விசேஷமான பொரி உருண்டை.

சாதாரணமாக எப்போதும் கிடைக்கும்    முட்டைப்பொரி[அதாவது  அரிசிப் பொரி]

இதிலும் தயாரிக்கலாம். அளவு எல்லாம்   பொரி 3 பங்கு,   வெல்லம் 1 பங்கு கணக்குதான்.

பொரி யைக் கடையில் வாங்குவதால் சில சமயம் நமுத்துப் போக

வாய்ப்புள்ளது. அதனால் பொரியை சற்று சூடு படுத்தி…

View original post 7 more words

திசெம்பர் 4, 2014 at 11:21 முப 10 பின்னூட்டங்கள்

மாலாடு

இந்த மாலாடுவும் 2012 இல் எழுதியதுதான். தீபாவளியையொட்டி இதுவும் ரி ப்ளாக் செய்துள்ளேன்.
ஸுலபமானது. எதையாவது எழுதிப் பழக்கம். இதையாவது போடுவோம் என்று இந்தப்பதிவு. யாருக்காகவாவது உபயோகப்பட்டால் போதும். ருசியுங்கள். வாழ்த்துகளுடனும்,
அன்புடனும் சொல்லுகிறேன்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

இதுவும்  மிகவும்  சுலபமாக   நினைத்தால்  செய்யக்கூடிய

லட்டு.   வாயில் போட்டால்  கரையக்கூடியதும், ருசியானது

மானது. நீங்களும்  செய்து  பாருங்கள்.

மாலாடு

வேண்டியவைகள்

பொட்டுக்கடலை—-ஒருகப்

சர்க்கரை—1 கப்

பாதாம்—–    8

முந்திரி—8

பிஸ்தா—8

ஏலக்காய்—3

நெய்—-2 கரண்டிகளுக்கு  அதிகம்.

லாடுக்கான ஸாமான்கள். நெய் தவிர

செய்முறை

பொட்டுக்கடலை  அதாவது   தேங்காய் சட்னியில் கூட

வைத்து அரைப்போமே ஸாக்ஷாத் அதுவேதான்.

வாணலியிலோ,   மைக்ரோவேவில்  வைத்தோ  பொட்டுக்

கடலையை   சற்று  சூடாக்கி    மிக்ஸியில்  நன்றாக அறைத்து

சலித்து எடுத்துக் கொள்ளவும்.   சில ஸமயம்  பொட்டுக்கடலை

நமுத்துப் போயிருக்கலாம்.  அதற்காகவும்,வாஸனைக்காகவும்

சூடாக்க வேண்டும்.

பருப்பு வகைகளையும்   லேசாக  வறுத்து   மிக்ஸியில்

நறநறப்பாகப்   பொடிக்கவும்

உறித்த  ஏலக்காயுடன்   சர்க்கரையையும் நன்றாக மிக்ஸியில்

அறைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியின்  சிறிய   கன்டெய்னரில்   அறைத்தால்

யாவையையும் நைஸாகப் பொடி செய்ய   முடியும்

பொட்டுக் கடலைமாவுப்ளஸ் முந்திரி பாதாம்பொடி
அறைத்த சர்க்கரைப் பொடி

இப்போது பொடித்த   எல்லாவற்றையும்   ஒரு  அகன்ற

தாம்பாளத்திலோ  தட்டிலோ   சேர்த்துக்  கலக்கவும்.

இனிப்பு   குறைவாக  வேண்டியவர்கள்   சர்க்கரைப் பொடியைக்

குறைக்கவும்.

முந்திரி,  பாதாம்  வகைகளை   ஸவுகரியம் போல  சேர்க்கவும்.

எல்லாமே  அவசியம் என்று  நினைக்க வேண்டாம்.

வாணலியில்    பாதியளவு   நெய்யை விட்டு  மிதமான  தீயில்

நன்றாகச்   சூடாக்கவும்.

தாம்பாளத்தில்   கலவையை பாதியாக  பிரித்துக் கொள்ளவும்.

பாதிக் கலவையில்  நன்றாகக்  காய்ச்சிய  நெய்யைவிட்டு

அகலமான  கரண்டியினால் நன்றாகக்   கலக்கவும்.

சூடான நெய்யுடன்

நெய்யின்  சூட்டில்    சர்க்கரை இளகி   உருண்டை…

View original post 82 more words

ஒக்ரோபர் 18, 2014 at 7:23 முப 4 பின்னூட்டங்கள்

புத்துருக்குநெய் மைசூர் பாகு

நான்கு வருஷத்திற்கு முன் எழுதியது இது. கடலைமாவை சற்று வருத்தாலே போதும். தீீபாவளிக்காகப் புதியதாக ஒன்று எழுதாவிட்டாலும் ரீ/ப்ளாகாகிலும் செய்வோமென்று தோன்றியது. செய்து ருசியுங்கள். கமகமவென்று வாஸனையுடன் ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

வெண்ணெய் புதியதாகக் காய்ச்சி  அந்த நெய்யில் மைசூர்பாகு

தயாரித்தால்   அந்த ருசியே  அலாதிதான்

அம்மாதிரி செய்யும்  முறையைப் பார்ப்போமா?

வேண்டியவைகள்.

கால் கிலோ  உப்பு சேர்க்காத  வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சினால்

ஒரு கப்பிற்கு அதிகமாகவே  நல்ல நெய் கிடைக்கும். அதில் ஒருகப்

நெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.

அரைகப் கடலை மாவை   முன்னதாகவே  ஒரு ஸ்பூன் நெய் கலந்து

மைக்ரோ வேவில்   ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டு   2,   3,   நிமிஷம்

வைத்தெடுக்கவும்.

அல்லது   வாணலியிலிட்டு   லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

அடி கனமான    அகலமான பாத்திரத்தில்    ஒரு கப் சர்க்கரையைப்

போட்டு   சர்க்கரை அமிழ  ஜலம் விட்டு   நிதான தீயில் நன்றாகக்

கிளறவும்.

கூடவே     மற்றொரு    பாத்திரத்தில்   நெய்யைச்     சூடாக்கிக்

கொண்டே இருக்கவும்.

சர்க்கரை கரைந்து கொதித்து   ஒரு கம்பிப்  பாகு பதம் வரும் போது

மாவைச் சிறிது, சிறிதாகத் தூவிக் கிளறவும்.

நல்ல சூடான  நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.

தீ மிதமானதாக இருக்க வேண்டும். கை விடாது  அடிபிடிக்காது

கிளறவும்.

நெய் விடவிட கலவை நெய்யுடன்  சேர்ந்து    கொதித்து  இறுகி

பாத்திரத்தை விட்டு விலகி     நுறைத்து  மேலே வர ஆரம்பிக்கும்

நன்றாகக் கிளறி ,     தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய

தட்டு  அல்லது ட்ரேயில்     கலவையைக் கொட்டி , தட்டை

இரண்டு கையினால் பிடித்து  சமனாக பரவும்படி  அசைக்கவும்.

View original post 32 more words

ஒக்ரோபர் 10, 2014 at 11:47 முப 5 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2026
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,916 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Vijethkannan's avatar
  • Great Foodies's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.