Posts filed under ‘Uncategorized’

ஸந்தோஷ விருதுகளும், அளித்தவர்களும்.

lதொடர்ந்து கிடைத்த அவார்டுகளும்,மகிழ்ச்சியும்.

Continue Reading செப்ரெம்பர் 23, 2014 at 11:07 முப 25 பின்னூட்டங்கள்

எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை

ஆகஸ்ட் எட்்டாம் தேதி வரலக்ஷ்மி பூஜை. சென்ற வருஷத்திய என் பதிவை திரும்பவும் அளிக்கிறேன்.
படித்து மகிழுங்கள். அன்புடனும்,ஆசிகளுடனும்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

வரலக்ஷ்மி அம்மன் மும்பை 2012 வரலக்ஷ்மி அம்மன்
மும்பை 2012

பெயரே வரலக்ஷ்மி பூஜை.   கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் பூஜை.

இதைத் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,மஹாராஷ்டிராமுதலான இடங்களில்

விவாகமான பெண்கள்,  தலைமுறைத்,தலைமுறையாகக் கொண்டாடி,

வரலக்ஷ்மி அம்மனிடம் நல்ல வரங்கள் வேண்டிப் பூஜித்துவரும் ஒரு நோன்பு.

பல குடும்பங்களில் வழக்கமில்லாதும் இருக்கலாம்.

பிறந்த வீட்டில் உண்டு, புகுந்த வீட்டில் இல்லை என்றும் சொல்வதுமுண்டு.

பொதுவில் குடும்பத்தின் ஐசுவரிய வளத்திற்கும், வளமான  வாழ்க்கைக்கும்

கணவரின் க்ஷேமத்திற்காகவும் கொண்டாடப் படுகிறது,அனுஷ்டிக்கப் படுகிறது

என்பதுதான் எங்களின் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.

நாங்கள்   எங்கள் குடும்பத்தில் எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதுதான்

நான் சொல்ல வந்தது.

ஏறக்குறைய  எல்லோருமே அம்மனைக் கலசத்திலிருத்தி  அலங்காரங்கள் செய்து,

வீட்டற்குள் அழைத்து,  மண்டபத்திலிருத்தி நல்ல முறையில் பூஜை செய்வது வழக்கம்.

சிற்சில விஷயங்களில், மாறுபாடு இருந்தாலும்,கொள்கையும்,பூஜையின்

காரணங்களும் ஒன்றேதான்.

தமிழ் நாட்டில் ஸுமங்கலிப் பெண்கள்,  இப்பூஜையை செய்வது வழக்கம்.

கர்நாடகாவில்,  கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து,  சாயங்காலவேளையில்

இப்பூஜைகளைச் செய்வதைப்   பார்த்திருக்கிறேன்.

வடை,பாயஸம்,இட்டிலி. கொழுக்கட்டை,  மஹாநிவேதநம்,பலவகைச் சமையல்கள்,

பருப்பு,சுண்டல்கள், வகை,வகையான பழங்கள் இவை யாவும் அவரவர்கள்

சவுகரியப்பட்டதை சிரத்தையாகச்,சேகரித்தும்,பூஜையில் நிவேதனம் செய்வார்கள்

பலவித   பக்ஷணங்களைச் செய்து,  அவைகளை நிவேதனம்  செய்யும்

முறை உள்ளவர்களும் உண்டு.

ஆவணிமாத   பௌர்ணமிக்கு   முன்னால் வரும்  வெள்ளிக்கிழமையில்

இந்த நோன்பு வரும்.

சில ஸமயம் இது ஆடி மாதத்தில் அமையும். இந்த வருஷம் ஆடி மாதம்

வருகிரது.

ஆடி 31 ஆம்தேதி அதாவது  ஆகஸ்ட் 16…

View original post 624 more words

ஜூலை 31, 2014 at 8:43 முப 8 பின்னூட்டங்கள்

ஒன்றில் மூன்று

 

புளிப்பு மாங்காய்கள்

புளிப்பு மாங்காய்கள்

மாங்காய் ஸீஸனில் வாங்கியுள்ள மாங்காயை மூன்று ரகமாகச்

செய்ததுதான் இது.

இனிப்புத் தொக்கு ஒன்று, காரம் சேர்த்த தொக்கு ஒன்று. மாங்காய்ப்

பச்சடி ஒன்று. ஆக மூன்று ரகம்.

மொத்தமாகத் துருவியதில் மாங்காய்த் துருவல் அதிகமாக இருந்தது.

மூன்றாகப் பிரித்ததில்  எல்லா வகையும் செய்ய முடிந்தது.

பச்சடி இன்னும் சுலபம். அடுத்து எழுதுகிறேன்

பார்ப்போமா உங்களுடன்.

காரமாங்காய் தொக்கு.

ரெடியாகும் காரத் தொக்கு

ரெடியாகும் காரத் தொக்கு

வேண்டியவைகள்.

துருவிய மாங்காய்—4கப். தோலைச் சீவி விட்டு மாங்காயைத் துருவவும்.

மிளகாய்ப்பொடி—-4 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—2 டீஸ்பூன்

நல்லெண்ணெய்–அரைகப்

ருசிக்கு– உப்பு

கடுகு—1 டீஸ்பூன்

வெந்தயம்—1 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். விருப்பத்திற்கேற்ப சேர்க்கவும்.

செய்முறை–

கடுகையும்,வெந்தயத்தையும்,  சூடான வாணலியில் எண்ணெய்விடாது

வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை

நான்ஸ்டிக் வாணலயிலோ, அல்லது  அலுமினியம் வாணலியிலோ பாதி

எண்ணெயைக் காயவைத்து துருவிய மாங்காயைப் போட்டு  வதக்கவும்.

புளிப்புக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். மஞ்சளும் சேர்த்து நிதான தீயில்

சுருள வதக்கவும்.

நீர் வற்றி   எண்ணெய் பிரிந்து வரும் போது,மிளகாய்ப்பொடி,மீதி

எண்ணெயைச்சேர்த்துக் கிளறி, இறக்கி வெந்தயகடுகுப் பொடியைச் சேர்த்துக்

கிளறவும்.

பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஆறினவுடன் ருசி பார்த்து

உப்பு காரம் ருசி பார்த்து   சுத்தமான பாட்டலில் வைத்து மூடவும்.

பாட்டிலில் அடங்கத் தயார்

பாட்டிலில் அடங்கத் தயார்

ஃப்ரிஜ்ஜில் வைத்து  நாள்ப்படவும் உபயோகப் படுத்தலாம். அடுத்தது

இனிப்புத் தொக்கு

இனிப்புத் தொக்கு

இனி.ப்புத் தொக்கு.

வேண்டியவைகள்

மாங்காய்த் துருவல்—-2கப்

வெல்லம்—-2கப்

உப்பு—ஒரு டீஸ்பூனைவிட அதிகம்

எண்ணெய்—-3 டேபிள்ஸ்பூன்

வறுத்தரைத்த சீரகம்,வெந்தயம், வகைக்கு ஒருஸ்பூன் பொடித்துக் கொள்ளவும்.

மிளகாய்ப் பொடி—-2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—சிறிது.

செய்முறை

நான் ஸ்டிக் வாணலியில்  எண்ணெயைக் காயவைத்து, மாங்காய்த் துருவலை

வதக்கவும். உப்பு , மஞ்சள் சேர்க்கவும்.

துருவல் வதங்கியதும், வெல்லத்தூளைச் சேர்த்துக் கிளறவும். வெல்லம் சேர்த்ததும்

சிறிது இளகும்.

நன்றாகக் கிளறிக்கொண்டே இருந்தால்  மாங்காய் சேர்ந்து வெந்து, சுருண்டு வரும்.

கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி,வெந்தய,சீரகப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.

பெருங்காயப்பொடி,   அல்லது, சிறிது கரம் மஸாலாவும் சேர்த்துக் கிளறி

உபயோகிக்கலாம்.

தித்திப்பும்,காரமுமாக நானும் ரெடி

தித்திப்பும்,காரமுமாக நானும் ரெடி

இனிப்பு  விருப்பமானவர்களுக்கு  ரொட்டி,தோசை முதலானவற்றுடன் சேர்த்துச்

சாப்பிட நன்றாக இருக்கும்

. பச்சடியையும் எழுதிவிடுகிறேன்.

வேண்டியவைகள்

மாங்காய்த் துருவல்—அரைகப்

பச்சைமிளகாய்—3

வெல்லம்—-முக்கால்கப்,

துளி–உப்பு

எண்ணெய்—2 டீஸ்பூன்

கடுகு,பெருங்காயம்–சிறிது

வறுத்த வெந்தயப்பொடி,சீரகப்பொடி சிறிது.

நான்தான் பச்சடி

நான்தான் பச்சடி.

செய்முறை

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகை வெடிக்க விட்டுநறுக்கிய பச்சை

மிளகாயை வதக்கி  மாங்காய்த்   துருவலையும் சேர்த்து    வதக்கவும்.

துருவல் வதங்கியதும்  , அரைகப் தண்ணீர் சேர்த்து ,வெல்லமும் சேர்த்து

கொதிக்க விடவும். உப்பு,பெருங்காயம்,மஞ்சள் சேர்க்கவும்.

கொதித்துச் சற்றுக் குறுகி வரும்போது இறக்கி, வெந்தய,சீரகப்பொடியைச்

சேர்க்கவும்.

பச்சடி தயார். நீர்க்க இருந்தால் துளி மாவு கரைத்துச் சேர்த்து ஒரு கொதி விடவும்.

அவ்வளவுதான்.

மொத்தமாக கடுகு வெந்தயப் பொடிகள் இருந்தால்    ஊறுகாய் வகைகளுக்கு சீக்கிரமே

தயார் செய்ய உபயோகமாக இருக்கும்.

 

 

 

 

 

ஜூலை 13, 2014 at 12:04 பிப 10 பின்னூட்டங்கள்

மினுமினு முருங்கைக்கீரை அடை

(மேலும்…)

ஜூலை 9, 2014 at 2:52 பிப 20 பின்னூட்டங்கள்

லெட்டூஸ் ஸேலட்

லெட்டூஸ் ஸேலட்

இதைமிகவும் ஸுலபமாகத் தயாரிக்கலாம். அதிக ஸாமானுமில்லை. வெய்யில் காலத்திற்கேற்றது.

வேண்டியவைகள்.

வெங்காயம்—-ஒன்று

கேரட் –ஒன்று

தக்காளி —ஒன்று.

உருளைக்கிழங்கு —ஒன்று.

லெட்டூஸ் இலைகள்—நறுக்கியது. –1கப்.

உப்பு, ஒரு இதழ்—பூண்டு, உரிகானோ இருந்தால்—சிறிதளவு.

எலுமிச்சை சாறு சில துளிகள்.

அரை டீஸ்பூன்—ஆலிவ் ஆயில்.

செய்முறை.

உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்துச் சிறிய துண்டங்களாகச்

செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த கேரட்டைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

வெங்காயத்தையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

தக்காளியையும் துண்டுகளாக்கவும்.

பூண்டைத் தட்டி எண்ணெயில் கலக்கவும். உப்பு சிறிது,உரிகானோ,எலுமிச்சைச்

சாற்றைக் கலக்கவும். விரும்பினால் மிளகுப்பொடி துளி சேர்க்கலாம்.

ஒரு அகன்ற பாத்திரத்தில், லெட்டூஸ் இலைகளுடன்,உருளைக்கிழங்கு,வெங்காயம்,கேரட் துருவல்,

பூண்டு சேர்த்த எண்ணெய் இவைகளை ஒன்றாகக் கலக்கவும்.

தக்காளியால் அலங்கரித்து வைத்து, சேர்த்துச் சாப்பிட வைக்கலாம்.

முளைப் பயறுகள் இருந்தாலும் சேர்க்கலாம். ருசியானது. நல்லதும் கூட.

ஜூன் 19, 2014 at 8:32 முப 12 பின்னூட்டங்கள்

கமகமக்கும் மிதிபாகல் பிட்லை

 மிதிபாகல் (மேலும்…)

ஜூன் 4, 2014 at 11:39 முப 8 பின்னூட்டங்கள்

அன்னையர் தினம்–15

எவ்வளவு ஆசை ஆசையாக குழந்தையை வளர்த்தோம்.  அந்தக் குழந்தையின்

நலம் குறித்துக் கூட அவர்கள் கடிதம் எழுதவில்லை அம்மா மனக் கஷ்டப்பட்டாலும்

வார்த்தைகளில் சொல்லுவார். என்ன பிரமாதம் போ.  ஊரில எத்தனையோ குழந்தைகளிருக்கு.

அதுகளைக் கொஞ்சினால்ப் போகிறது. எங்கேயாவது நன்றாக இருந்தால்ப் போதுமானது

என்று அடிக்கடி சொல்லுவார்கள்.

அன்னையர் தினப்பதிவு ஆரம்பித்து அடுத்த வருடமும் வந்து விட்டது.

என்னுடைய   இயலாமையை  நினைத்துக் கொண்டேன்.

காலம் முழுவதும் ஏதோ போராட்டங்கள் இருந்தாலும், பொருட் படுத்தாது அதிலிருந்து

மீண்டுகொண்டே  காலம் கடத்தினது  பொதுஜன  உறவுகளும், பிரருக்கு உதவி செய்து

மகிழும் மனப்பான்மையும் இருந்ததால்தான்.

காலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. மிகுதி  இருந்த  நிலத்தையும்  விற்று அடுத்த

பெண்ணிற்கும் கலியாணம் செய்து முடித்து   காலம் பறந்து கொண்டு  இருந்தது.

எவ்வளவோ விஷயங்கள்.

என்னுடைய பெண்ணை தன்னுடன்  இருக்க வேண்டும் என்று

சொல்லி அப்பா அழைத்துப் போனது. தனக்குப் பேரன் கையினால் அந்திமக்

கிரியைகள் செய்ய வேண்டுமென்று தான் நன்றாக இருக்கும்போதே உறுதி

மொழி வாங்கிக் கொண்டது போன்றவைகள் அந்த நாளைய பெற்றோர்களின்

ஆசைகள்.

கான்ஸர்.  இந்த வியாதி வந்தால் , குடும்பத்தின் செல்வ நிலைக்கும் ஏதே வியாதி

பிடித்து விடும் என்று சொல்வார்கள்.

அந்த  நோயினால் அப்பா  பீடிக்கப் பட்டார். ஆனால்  அவர் ஒரு மருந்தும் சாப்பிடவே

மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ஒரு வலிமருந்து கூட சாப்பிடாமல் இருந்து தான்

அவருடைய வாழ்வை முடித்தார்.

அம்மாதிரி ஒரு மன உறுதி எப்படி வரும்?  ஆறு வருடங்கள் அம்மாவின் பணிவிடை

அங்கும் அந்த பொறுமையுடன் சிச்ரூஷை.

அந்தக் காலத்தில் மருந்துகளும் கிடையாது.

எங்களை எல்லாம் வரவேண்டாம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிரமமாக

இருக்கும் என்ற ஒரே பதில்

எவ்வளவு பரோபகாரியாக இருந்தால் கூட ஸமயத்தில் சில காரியங்கள்

மறக்கப் படுகின்றன.

அப்பாவிற்கு அந்தியகாலம். பெரிய அக்காமட்டில் உதவிக்கு.

இருப்பதில் அனுபவமுள்ள பெரியவர்கள்,பார்த்து விட்டு அதிக நாள் இருக்க மாட்டார்.

பெண்களுக்குச் சொல்லி விடு.  சின்ன பெண் நான், சென்னை பெண் இன்னொருத்தி.

ஆனால்  அம்மா  சொல்லவில்லை. அடுத்தத்   தெருவிலிருக்கும் , பங்காளி உறவினர்களிடம்

போய், நாளை மறுநாள் என்றோ ஒருநாள் அவருக்கு செய்ய வேண்டிய காரியத்தை

கௌரவமாக நீ செய்ய வேண்டுமப்பா என்று  வேண்டுகோள் விடுத்து வந்தார்.

அந்த வயதான ,படித்த,பக்திமானுக்கு எந்த விதக் குறைவும் ,தகன ஸமயத்தில்

ஏற்படக் கூடாது. அப்போதும் சிச்ரூஷ மனப்பான்மைதான்.

 

எனக்கு அப்பா உயிர் நீத்த பிறகு தந்தி கொடுத்தார்கள்.

வந்த தந்தி அம்மா போய்விட்டாளென்று. கொடுத்தவர்கள் தவறோ,

வாங்கினவர்கள் தவறோ?

இரண்டும்  கெட்டான்     மனப்பான்மையில்  இரண்டு       குழந்தைகளுடன் கல்கத்தாவினின்றும்

வருகிறேன். சென்னை பெண்ணிற்கு   அவர்கள் விவரம் சொல்லவில்லை.

சென்னயிலிறங்கி, விழுப்புரம் போய் வண்டி மாறி புதுவை வண்டியில்  ஊரில் இறங்குகிறேன்.

அதே கம்பார்ட்மென்டில்  ஏற உறவுகாரர்கள்.

வந்தயாடி அம்மா,  வா.  அப்பா நல்லபடி போய்ச் சேர்ந்தார். இறங்க வழி கொடுத்து ஏறும் போதே

ஸமாசாரம்.

அப்பாதானே?

ஆமாம்.ஆமா.

மனது  ஒரு நிலைக்கு வந்து , கூட வரும் குழந்தைகளைக் கவனிக்க வேண்டுமே?

ஸ்டேஷனில் வெளியில் வந்தால்  வெளியில் என் பெண். அவளுக்குத் தெரிந்ததை

அவள் சொன்னாள்.

அந்திய காலம் அப்பாவிற்கு எப்படி இருந்தது?

கடைசிவரை ஞாபகம் இருந்தது.   வித்தியாஸமாக மூச்சு வருவதுபோல தோன்றியதும் அம்மா சொல்கிராள்.  பூஜையில் கடைசியில் ஒரு ஸ்லோகம் சொல்வீர்களே அதைச் சொல்லுங்கள்.

ஸ்லோகத்தை ஆரம்ப வார்த்தை சொல்லிவிட்டு  நீ சொல் என்கிரார். அவித்யா மூலநாசாயா ஜென்ம கர்ம நிவர்த்தயே என்று தொடர்ந்து கொண்டே முடியும் வரிக்கு

ஞான வைராக்ய ஸித்யர்த்தம் சாம்பசிவ பாதோதகம் சிவம்.

ஸ்லோகத்தை  ஆரம்ப முதல் சொல்லி விட்டு

ஸத்குரு பாதோதகம் சுபம். சாம்பசிவ பாதோதகம் சிவம் வரை சொன்னவர்.   அவர் பாதத்திலே சுபமாகிவிட்டார்.

அம்மா அந்தக் கடைசி நேரத்தைச் சொல்லும்போது, எவ்வளவு முடியாத நேரத்திலும், பூஜை புனஸ்காரங்கள் எப்படி உதவுகிறது?

கூட இருந்து பார்த்தவர்கள் சொன்னார்கள்.  அந்த நேரத்தில் கூட அம்மா

தைரியமாக ஒரு   அந்தியகாலம்  என்ற  துக்க  நேரத்தைக்  கொண்டுவராமல்

ஒரு சிவ பூஜையை  அப்பாவிற்கு ஞாபகப்படுத்தி சொல்ல வைத்து,இருக்கவே இருக்கும் கங்கா ஜலத்தைக் கொடுத்து   ஒரு பூஜைநடக்கும் இடத்தைக் கொண்டு  வந்து விட்டார்.

இன்னும் எவ்வளவோ விஷயங்கள் எழுத வில்லை. யாருக்கு எந்ந நேரம் எது தேவையோ

அதைக் கொண்டுவருவதில் அம்மாவிற்கு அனுபவமாகி விட்டது.

இம்மாதிரி எல்லாம் அதிகம் படிக்காத ஒரு ஸோஷியல் ஸர்வீஸை ,தக்க ஸமயத்தில்

ஸந்தோஷத்திலும், தேவையான   ஸமயங்களிலும்  கொடுக்கும்     அம்மாவை, நினைக்க

நினைக்க ஏதோ எழுத நினைத்து ஏதோ எழுதுவது போல  நீண்டு கொண்டே போகிறது.

என்ன அம்மாமார்கள்  எல்லோருக்கும் மிகவும் முக்கியமானவர்கள். எங்கள் அம்மா

ஒரு விசேஷ ப்ரகிருதி.

எல்லோரின் ஸுகத்திலும் இன்பம் காண்பவர்.

குறைந்த பக்ஷம்  இதை எனக்குத்தெரிந்த வகையில் எழுதி வருகிறேன். இன்னும் சில

ஸம்பவங்களை அடுத்து எழுதுகிறேன். அன்னையர் தின நினைவுகள் இன்னும் உள்ளன.

தொடர்ந்து வருவேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மே 6, 2014 at 9:08 முப 16 பின்னூட்டங்கள்

வடு மாங்கா,அல்லது மாவடு

வடுமாங்காய் ஸீஸன் வருகிறதே. போன வருஷம் போட்டது இதுவரை இருந்தது. கடையில் விசாரியுங்கள்.வாங்கிப் போடுங்கள். அதற்காகவே மறுபதிவிட்டிருக்கிறேன்.அன்புடன்

chollukireen's avatarசொல்லுகிறேன்

மரத்தில் பரித்தபடி வடுமாங்காய்கள் மரத்தில் பரித்தபடி வடுமாங்காய்கள்

இவ்வளவு சிறிய  வடு கிடைத்து மாவடு போட்டதாக  ஞாபகமே

இல்லை.அவ்வளவு வருஷங்கள்  கிடைக்காத இடத்தில்தான்

இருந்திருக்கிறேன்.

கடையில் பார்த்து உங்களுக்கு வேண்டுமா என்று  மருமகள்

கேட்டவுடன் வாங்கி வரும்படி ஸந்தோஷமாகக் கூறினேன்.

அதுவும் மேலே கொடுத்த குட்டி மாங்காய்கள்.

திட்டமாக காம்பை விட்டு  மிகுதியை எடுத்து விடவும்

சுத்தம்செய்து ஒழுங்காக்கப்பட்ட மாவடு சுத்தம்செய்து ஒழுங்காக்கப்பட்ட மாவடு

இனி மா வடு தயாரிக்கலாம். அதாவது  நன்ராக   அலம்பித் துடைத்த

மாங்காய்களை       ஒரு உலர்ந்த  பாத்திரத்திலோ   கண்ணாடி

கிண்ணத்திலோ போடவும்.

எவ்வளவென்று  சொல்லவேயில்லையே நான்.  ஒரு கிலோ மாங்காயில்

ஒரு லிட்டர் தான்   கிடைத்தது.

ஸரி,   நீங்கள்  ஒரு  பெரிய    டம்ளரினால்  அளந்து     4 டம்ளர்  மாவடுவை

எடுத்துக் கொள்ளவும்.

அரைகப் நல்ல  உயர்தரமான    உப்புப் பொடி வேண்டும்.

கால்கப்   சின்ன சைஸ்  கடுகு, விதை  நீக்கிய  8  மிளகாய், வெய்யிலில்

நன்ராக    காயவைத்துக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது  மஞ்சளும் சேர்த்து மிக்ஸியிள் பொடிசெய்யவும்.

ஸாதாரணமாக எண்ணெய்   விளக்கெண்ணை அரை டீஸ்பூன்

உபயோகிப்பதுண்டு.  நான் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு

அரைத்த பொடியைக் கலந்து   மாங்காயைக் கிளறி,  உப்பு சேர்த்து

சற்று கொள்ளளவு    பெரியதாக   உள்ள பாட்டிலில் போட்டு குலுக்கி,

அழுத்தமான  மூடியினால்   காற்று புகாவண்ணம்,  மூடி வைத்தேன்.

அரைத்துப் பிசறினகடுகு,மிளகாய்,உப்பு,மஞ்சளுடன் அரைத்துப் பிசறினகடுகு,மிளகாய்,உப்பு,மஞ்சளுடன்

தினமும் அடிக்கடி நன்றாகக் குலுக்கி விட்டேன்.

நிறைய  ஜலம் விட்டுக் கொண்டு   மாவடு  சாப்பிட…

View original post 71 more words

மார்ச் 2, 2014 at 11:13 முப 2 பின்னூட்டங்கள்

பொங்கல் வாழ்த்துகள்

எங்கள் தோட்டத்து வாழைப் பழங்கள்.

அன்பிற்குரிய   சொல்லுகிறேனின்   ஆதரவாளர்களாகிய அன்பு உள்ளங்களுக்கு

என் மனமார்ந்த மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல். அன்புடன் சொல்லுகிறேன்.

ஜனவரி 13, 2014 at 5:03 பிப 8 பின்னூட்டங்கள்

2013 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 84,000 times in 2013. If it were an exhibit at the Louvre Museum, it would take about 4 days for that many people to see it.

Click here to see the complete report.

ஜனவரி 4, 2014 at 6:10 முப 2 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2026
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,916 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.