Archive for செப்ரெம்பர், 2009
மிளகுக் குழம்பு milaguk kuzampu
வேண்டியவை வறுக்க மிளகு-ஒரு டேபிள்ஸ்பூன்
தனியா—இரண்டு டேபிள்ஸ்பூன் , மிளகாய்வற்றல்- ஒன்று
உளுத்தம் பருப்பு-ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்.
கறிவேப்பிலை-15-அல்லது20 இலைகள், நசுக்கிய சுக்கு சிறிய துண்டு, பெருங்காயம் சிறிது. வறுக்க ஒரு ஸ்பூன் எண்ணெய்.
தாளிக்க- நெய்ஒருடேபிள்ஸ்பூன், நல்லஎண்ணெய்ஒருடேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் தலா அரைடீஸ்பூன்
கரைக்க—பழைய புளி எலுமிச்சை அளவு
சுவைக்கு உப்பு,—- வெல்லம் சிறிது, மஞ்சள்பொடி சிறிது.
காய்கறிகள்— ,பிஞ்சு கத்தரிக்காய்- –முருங்கைப் பிஞ்சு,பொடியாக நறுக்கி வேக வைத்த சேனைக்கிழங்கு, இதில் விருப்பமானதை உபயோகிக்கலாம்.
செய்முறை—–வறுக்கக் கொடுத்த சாமான்களை எண்ணெயில் சிவக்க வறுத்து கரிவேப்பிலையையும் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து 2-3 முறை தண்ணீர் விட்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்யும் பாத்திரத்தில் எண்ணெயும் நெய்யுமாகக் காய வைத்து, கடுகு,வெந்தயம் தாளித்து நறுக்கிய காயையும் போட்டு தீயைக் குறைத்து நன்றாக வதக்கி புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.3
உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து புளி வாசனைபோக கொதிக்கவிட்டு
அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் சேர்த்து நீர்க்க இல்லாமல் குழம்பை சரியான பதத்தில் இறக்கி உபயோகிக்கவும்.
மருத்துவ குணமுள்ள காரமான குழம்பு இது. நெய் விட்டுச் சாப்பிட வேண்டும். காரம் கூட்டிக் குரைத்து உபயோகிக்கலாம்.
பின் குறிப்பு——தாளிக்கும்போது, சின்ன வெங்காயம், அல்லது
தோல் நீக்கிய பூண்டுப் பகுப்புகளையும் காய்கறிகளுக்குப் பதிலாகச்
சேர்த்து வதக்கியும் செய்யலாம். அல்லது வதக்கிய பூண்டைச்
சிறிது அரைக்கும்போதும் சேர்க்கலாம்.
மிளகு முக்கியமானதால், சேர்மானங்கள் அவரவர்கள் விருப்பம்.
காய்கள் சேர்க்கும் அளவைப் பொறுத்து எண்ணெயும் கூட்டிக் குறைக்க வேண்டும்.
வற்றல் குழம்பு—-vatral kuzhambu.
வேண்டியவைகள் புளி–ஒருஎலுமிச்சை அளவு சாம்பார் பொடி–ஒரு டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு கடுகு அரை டீஸ்பூன் வெந்தயம்–ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு–ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை—இரண்டு டீஸ்பூன் பெருங்காயப்பொடி-அரைடீஸ்பூன் நல்லெண்ணெய்–மூன்று டேபிள் ஸ்பூன் தேவைக்கு உப்பு காய்ந்த மிளகாய் ஒன்று. சாம்பார் வெங்காயம்-உறித்து நறுக்கியது ஒரு கப் முருங்கைக்காய்–நறுக்கிய துண்டுகள் ஏழு அல்லது எட்டு கறிவேப்பிலை இலைகள்–சிறிதளவு செய்முறை– புளியை ஒருகப் சுடு தண்ணீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்துச் சாரெடுக்கவும். மேலும் இரு முறை தண்ணீர் […]
Continue Reading செப்ரெம்பர் 10, 2009 at 1:53 முப 3 பின்னூட்டங்கள்
பஜ்ஜி வகைகள்-bhajji
வேண்டியவைகள்
கடலைமாவு—ஒருகப்.
அரிசிமாவு—ஒரு டேபிள் ஸ்பூன்.
மிளகாய்ப் பொடி–அரை டீஸ்பூன்.
வாஸனைக்கு-துளி பெருங்காயம்.
தேவையான உப்பு.
காய்ச்சிய எண்ணெய்-ஒரு டேபிள் ஸ்பூன். இவை யாவும் மேல் மாவு தயாரிப்பதற்கு மட்டும்.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
காய்களில் அடுத்து வரும் எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
வாழைக்காய், பீர்க்கங்காய், பெரிய வெங்காயம், சௌசௌ, உருளைக் கிழங்கு இவைகள் தோல் நீக்க வேண்டியவைகள்.
கத்திரிக்காய்க்கு தோல் நீக்க வேண்டாம்.
காலிப்ளவரானால் சிறிய பூக்களாகப் பிரித்து சுடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டெடுக்கவும்.
எதை வேண்டுமானாலும் மெல்லிய வட்டமாக நறுக்கி தண்ணீரில் அலம்பி ஒரு துணியிலோ,டிஷ்யூபேப்பரிலோ போட்டு ஈரம் குறைக்கவும்.
பச்சை மிளகாய்முழுதாகநறுக்கியும், காப்ஸிகம் நறுக்கியும் உபயோகிக்கலாம்.
செய் முறை—–மேல் மாவிற்காக கொடுத்திருக்கும் சாமான்களை
தண்ணீர் சேர்த்து இட்டிலிமாவு பதத்திற்கு கட்டி இல்லாமல்
கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய வில்லைகளை ஒவ்வொன்றாகக் கரைத்த மாவில் தோய்த்துஎடுத்துப் போட்டு வேக வைக்கவும். சற்று சிவந்ததும்,திருப்பிப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
கரகரப்பிற்காக ஸோடாமாவு சிறிது சேர்ப்பவர்களும் உண்டு. எண்ணெய் அதிகம் இழுக்கும்.
மாவில் விதவிதமான மாறுதலான ருசிக்காகவும், வாசனைக்காகவும், சில சாமான்களைச் சேர்க்கலாம்.
சிறிய வெங்காயம் ஒன்றை நசுக்கிப் போடலாம்.
சீரகம் சோம்பு சிறிது பொடித்துச் சேர்க்கலாம்.
நசுக்கிய பூண்டு கரம் மஸாலா சிறிது சேர்க்கலாம்.
ஏதாவது ஒன்றைத் தெரிந்தெடுத்து சேர்க்கலாம்.
அதிக அளவு பஜ்ஜி செய்யும் பொழுது காய்களை நீளவாக்கில் பெரியதாகவும், குறைவான அளவில் செய்யும் பொழுது வில்லைகளாகவும், பொதுவாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாயில் செய்யும் பொழுது காரம் குறைக்கவும்.
ஏற்ற சட்னிகளுடன் சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.