அரிசியில் கீர்.

ஜூலை 23, 2012 at 7:11 முப 14 பின்னூட்டங்கள்

என்னவோ  புதியதாக   ஒன்றுமில்லை.நேபால்,அஸ்ஸாம்,பஞ்சாப்

மற்றும்  வட இந்தியாவில் அரிசியில் தயாரிக்கும், சுலபமான

நிவேதனம்  இது.  நாம் பாயஸம்   வைப்பதுபோல  அவர்கள்  இதை

சுலபமாகச்   செய்து விடுகிறார்கள் . என்ன   வித்தியாஸமென்றால்

நாம் சற்று    நீர்க்கச் செய்வோம்,அவர்கள்  சற்று  கெட்டியாகத்

தயாரிக்கிறார்கள்.

இன்று  ஆடி வெள்ளிக் கிழமை.  நாமும்  நிவேதனத்துக்கு  என்ன

செய்யலாமென்று  யோசித்தபோது ,  பாயஸான்னப் பிரியா என்ற

லலிதா ஸஹஸ்ர நாம  வரிகள்  ஞாபகத்திற்கு வந்தது. ஸரி

இன்று செய்வோமெனத் தீர்மானித்து   லலிதா ஸஹஸ்ர நாமத்தைச்

சொல்லியபடியே  தயார் செய்த   நேபாலி   கீர் இது.  கொஞ்சம்

நான்  வித்தியாஸப்  படுத்தி  இருக்கிறேன்.  என்ன  களைந்த  அரிசியை

ஒரு துளி  நெய்யில்  வருத்திருக்கிறேன்.. அவ்வளவுதான்.பாருங்கள்.

வேண்டிய  சாமான்களை.

ஒரு  பிடித்த பிடி—பாஸ்மதி அரிசி.   3, 4  டேபிள்ஸ்பூன்

பால்—-அரைலிட்டர்

சர்க்கரை—அரைகப்

ஏலக்காய்—2  பொடிக்கவும்

நெய்—ஒரு டீஸ்பூன்

குங்குமப்பூ.–சிறிது.  ஒரு ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்.

செய்முறை.

அரிசியை  நன்றாகக்  களைந்து  தண்ணீரை வடிக்கட்டவும்.

அடி  கனமான    பாத்திரத்தைச்  சூடாக்கி,   நெய்யில்  வடிக்கட்டிய

அரிசியைச் சேர்த்து,   மிதமான  சூட்டில்  வருக்கவும்.

சற்று   கலகல பதம்  வந்ததும்   அரைகப்  தண்ணீரும், பாதி

பாலையும்   சேர்த்துக் கிளறவும்.

கொதிநிலை  வந்தவுடன்   காஸை  ஸிம்மில் வைத்து கலவையைக்

கிளறி   நிதானமாக  வேகவிடவும்.

அரிசி வேக,வேக   பாலைச் சேர்த்துக் கொண்டே வரவும்.

அரிசி  நன்றாக  வெந்ததும்     கரண்டியினால்  நன்றாக மசிக்கவும்.

சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.

ஏலக்காயைப் பொடித்துச் சேர்த்து   குங்குமப்பூவையும்சேர்க்கவும்.

இரண்டொரு  கொதிவிட்டு  இறக்கவும்.

அரிசி பாலை  இழுத்தால்  அதிகமாகவும் சேர்க்கவும்.

தித்திபு்பும்   அப்படியே.

முந்திரி,  திராக்ஷை  முதலானது  கூட  அவசியமில்லை.

பாயஸான்னப் பிரியாவுக்கு  அர்ப்பணம் செய்து  யாவருக்கும்

நன்மையைக் கோரி  உண்டு மகிழ்வோம் வாருங்கள்.

பாலில் வேகும் அரிசி

அரிசியில் கீர்

இந்த  கேரள  வெண்கல  பாத்திரம்   கீர் எடுத்து வைக்க

அழகாயிருக்கும்என்று  தோன்றியது   ஸரியாக  இருக்கிறது.

Entry filed under: இனிப்பு வகைகள்.

இடு போளி கோதுமைமாவில். ஆலு மேதி வதக்கல்.

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. kalyanimurugan's avatar kalyanimurugan  |  7:41 முப இல் ஜூலை 23, 2012

    அம்மா அரிசியில் செய்த கீர் மிகவும் அருமையாக இருக்கும். நான் எனது பெண்ணுக்குக் குழந்தையாக இருக்கும்போது அடிக்கடி உணவாகவே செய்து தருவேன். மிகவும் விரும்பி உண்பாள். உங்கள் பதிவைப் பார்த்ததும் அதனை நினைவு கூர்வதாக உள்ளது.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  11:56 முப இல் ஜூலை 23, 2012

      உங்களின் புதிய வரவை நல்வரவாக நினைக்கிறேன். உங்களின் அருமையான நினைவூட்டங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.
      உங்களின் வலைப்பதிவின் பெயர் கொடுங்கள்.
      அடிக்கடி ஸந்திக்க வாருங்கள். அன்புடன் சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 3. kalyanimurugan's avatar kalyanimurugan  |  7:58 முப இல் ஜூலை 23, 2012

    அம்மா அரிசியில் செய்த கீர் மிகவும் அருமையாக இருக்கும். நான் எனது பெண்ணுக்குக் குழந்தையாக இருக்கும்போது அடிக்கடி உணவாகவே செய்து தருவேன். மிகவும் விரும்பி உண்பாள். உங்கள் பதிவைப் பார்த்ததும் அதனை நினைவு கூர்வதாக உள்ளது.

    மறுமொழி
  • 4. Mahi's avatar Mahi  |  3:38 பிப இல் ஜூலை 23, 2012

    நேற்று கோயிலில் இதே பாயசம்தான் பிரசாதமாக இருந்தது, இன்று இங்கே பாயசம் செய்முறையும் கிடைத்துவிட்டது. அருமையான பாயசம் அம்மா! ஆடிவெள்ளியில் அன்னைக்கேற்ற நிவேதனம்!

    மறுமொழி
    • 5. chollukireen's avatar chollukireen  |  10:23 முப இல் ஜூலை 25, 2012

      நான் பிரஸாதத்தை எழுதுமுன்னரே உனக்குப் பிரஸாதம் கிடைத்துவிட்டது. படிக்க மிக்க ஸந்தோஷமாக இருந்தது. தித்திக்க, தித்திக்கப் ப்ரஸாதங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்.
      அன்புடன்

      மறுமொழி
  • 6. chitrasundar5's avatar chitrasundar5  |  3:14 முப இல் ஜூலை 24, 2012

    நேபாள கீர்_கேரள வெண்கலப் பாத்திரத்தில் சூப்பரா இருக்கு.வரும் வெள்ளிக்கிழமை கொஞ்சமா செஞ்சிடலாம்னு ஒரு ஐடியா.குறிப்பை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 7. chollukireen's avatar chollukireen  |  10:29 முப இல் ஜூலை 25, 2012

    வரும் வெள்ளிக் கிழமை வரலக்ஷ்மி பூஜை. நாளே நல்ல நாள். புண்ணியம் செய்யும் நாளே நல்ல நாள். உன் கமென்டைப் பார்த்ததும் இந்த வாக்கியம் ஞாபகம் வந்தது. செய்து ருசிக்கவும். அன்புடன்

    மறுமொழி
  • 8. Sheela's avatar Sheela  |  11:33 முப இல் ஜூலை 27, 2012

    Mami

    Namaskaram. Eppidi erukel/ even though i make many payasam, never felt like making this one. (pal payasam ..) soumya was asking about this other day. Now after reading this I can confidently try.

    Thank you.

    regards

    மறுமொழி
    • 9. chollukireen's avatar chollukireen  |  10:13 முப இல் ஜூலை 28, 2012

      ஷீலா உன் கமென்ட் பார்க்க மனதிற்கு த்ருப்தியாக இருந்தது. ஸௌம்யாவிற்காக கட்டாயம் செய்து ருசிப்பீர்களென்று நினைக்கிறேன்.மாமா மிகவும் வீக்காக இருக்கிறார். அதனாலே டில்லி வரவில்லை.
      நான் எல்லோரையும் மிஸ் செய்கிறேன். அன்புடன்

      மறுமொழி
  • 10. Mahi's avatar Mahi  |  8:03 பிப இல் ஜூலை 27, 2012

    அம்மா, இந்த வெள்ளிக் கிழமை நான் அரிசிப் பாயஸம் செய்து நீங்க சொன்னது போலவே லலிதாம்பிகைக்கும் படைத்துவிட்டேன். 🙂 நன்றிம்மா!

    மறுமொழி
    • 11. chollukireen's avatar chollukireen  |  9:57 முப இல் ஜூலை 28, 2012

      மிக்க ஸந்தோஷமாக இருக்கு. எனக்கும் ப்ரஸாதம் கிடைத்தமாதிரி உணருகிறேன். அன்பிற்கு நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 12. chitrasundar5's avatar chitrasundar5  |  7:04 பிப இல் ஜூலை 29, 2012

    காமாஷிமா,

    வெள்ளிக்கிழமை அரிசியில் கீர் செய்து,படையல் செய்து ருசியும் பார்த்தாச்சு. நான் அரிசியில் பாயஸம் செய்தது இதுதான் முதல்முறை.அரிசியை வெறும் வாணலியில் வறுத்து,உடைத்து செய்தேன்.அது மட்டுமே மாற்றம். மற்றபடி நீங்க சொன்ன மாதிரியேதான் செய்தேன்.ரொம்ப நல்லா இருந்த்துச்சு. பகிர்வுக்கு நன்றி அம்மா.

    “வரும் வெள்ளிக் கிழமை வரலக்ஷ்மி பூஜை. நாளே நல்ல நாள். புண்ணியம் செய்யும் நாளே நல்ல நாள்”_ பெரியவர்கள் சொல்வதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது.

    மறுமொழி
    • 13. chollukireen's avatar chollukireen  |  11:09 முப இல் ஜூலை 31, 2012

      நான் ஒரு பதிவு போட்டு அதை அடுத்த வெள்ளியன்றே செய்து அம்மனுக்கு நிவேதனமென்றால் அது எப்படிப்பட்ட நாளாக இருக்கும்.அதுவும் வரலட்சுமி பூஜை. அதுவே நாளே நல்ல நாள். எதைச் செய்தாலும் நிவேதனப் பொருள்களுக்கு தானே அலாதியான ருசி ஒன்று இருப்பது போலத் தோன்றும். சித்ரா, மஹி,கல்யாணி, sheela யாவருக்கும் நன்றி. தொடர்ந்து ஸந்திப்போம். அன்புடன்

      மறுமொழி
  • 14. swamimathan's avatar swamimathan  |  4:13 பிப இல் செப்ரெம்பர் 16, 2012

    inru tan aval vikatan il thangalathu blog parthen migavaum arumai.tamil il type seyvathu epadi nu terila amma

    மறுமொழி

Mahi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜூலை 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,014 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.