சோம்புக்கீரை பக்கோடா

செப்ரெம்பர் 13, 2012 at 11:06 முப 26 பின்னூட்டங்கள்

சோம்புக்கீரை பகோடோ

அதிசயமாக நானும்  கடைக்கு வருகிறேன்.  காய்கறிகளை

ஒட்டு மொத்தமாக   பார்த்தால்   ஏதாவது  புதுசா  யோசனை

தோன்றும்.    எங்கேயும்   போகாதவர்கள் சொன்னால்  ,ஸரி

வா பாட்டி   நீ கடையில் ஏறி இறங்கினால்ப் போதும்.

வா என்று  உறுதியாகக்      சொல்லவே    நான்கிளம்பிப்

போய்   கடையில்   இறங்கியும் ஆயிற்று.

எல்லா காய்களையும் பார்த்து  இதில்,அது செய்யலாம்,  அதில்

இது செய்யலாம்  யோசனை   போய்க்கொண்டே இருந்ததே

தவிர   ப்ராக்டிகலாக   ஒன்றுமில்லை.

மளமளவென்று  மாமூலாக   வாங்கும் காய்களுக்கு லிஸ் ட்

சொல்லிவிட்டு,கீரை வகைகளைப் பார்த்தால் ,பெருஞ்சீரகக்

கீரை,இன்னும் பலகீரைகள்  வகைவகையாகக்  கொட்டிக்

கிடந்தது.பெருஞ்சீரகக் கீரைதான்  சோம்புக்கீரை.

பெங்களூர்,  காட்மாண்டு, ஜெனிவாவில்   இதை வாங்குவது  உண்டு.

கர்நாடகாவில்  ஃபேமஸ் இந்தக்கீரை.  பாணந்தி,அதாவது

பெண்களுக்கு    பிரஸவத்திற்குப்  பிரகான   காலத்தில்

பத்தியச் சமையலுக்கு     இது மிகவும் நல்லது  என்று சொல்லக்

கேட்டிருக்கிறேன்.

சின்னக் கட்டாக   ஒன்று வாங்கி  வந்தேன்.

இங்குள்ள பேத்திகள்  விரும்புவார்களே மாட்டார்களோ என்ற

யோசனையும் வேறு.

குறுக்கு வழியாக      இட்டிலிக்கு  அறைத்த   உளுந்து மாவில்

ஒரு  அறைக் கிண்ணம்    எடுத்தேன்.

அது ஜலம் விட்டு அறைத்த  மாவு இல்லையா?

அது கொண்ட வரையில்  கடலை மாவைத் தூவி ப் பிசறினேன்.

பொடியாக  நறுக்கிய  வெங்காயம், பச்சைமிளகாய்,உப்பு,இஞ்சி

முதலானவைகளைச் சேர்த்து,     நன்றாக  ஆய்ந்து  நறுக்கிய

சோம்புக் கீரையையும்   சேர்த்துப் பிசறி ,     எண்ணெயைக்

காயவைத்து  அதில் மாவைக்  கிள்ளி      பகோடாக்களாகப்

போட்டு    சிவக்கவிட்டுப்   பொறித்தெடுத்தேன்.

மெது  பகோடாக்கள்  நல்ல ருசியுடன் இருந்தது.

கொஞ்சம்தான்  செய்திருந்தேனா. இன்னமும் தேவை

இருந்தது.

பின்னொரு முறை   செய்தால் போயிற்று.   உங்களுக்கு

இஷ்டமிருந்தால்  நீங்களும்  செய்யலாமே.

இப்படி ஒரு பேச்சு  உங்களிடம் நேரில் சொல்லலாம்போலத்

தோன்றியது.  சும்மா ஒரு திட்டம் மனதில் தோன்றிய அளவு

செய்து பாருங்கள்.

சோம்புக்கீரை

சோம்புக்கீரை பகோடா

இந்தக் கீரையைப் போட்டு   காரசாரமாக   அடை செய்யலாம்.

உளுத்தம் பருப்பு,   கடலைப் பருப்புகளுடன்

சேர்த்தோ,தனித்தோ   வடை  தட்டலாம்.      இந்தக்கீரை

மருத்துவ   ரீதியாக    உடம்பிற்கு  நல்லதைச் செய்யக்  கூடியது.

சுத்தம் செய்த  கீரையை  நிறைய சேர்த்துப் போடுங்கள்.

பார்ப்பதற்கும் பசுமையாக  இருக்கும்.

Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.

நன்றி தெறிவித்தல். ஸொஜ்ஜி அப்பம்.

26 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ranjani135's avatar ranjani135  |  11:48 முப இல் செப்ரெம்பர் 13, 2012

    ஆஹா! எங்கள் ஊர் சபக்கி (sabakki) சொப்பு (கீரை) வைத்து ஓர் மொறு மொறு பக்கோடா!

    என் வீட்டில் யாருக்குமே இந்த கீரையின் வாசனை பிடிக்காது. என் பெண்ணின் புக்ககத்தில் இதைப் போட்டு அக்கி ரொட்டி, ராகி ரொட்டி எல்லாம் செய்வார்கள்.

    அவள் விகடன் கிடைத்ததா?

    என் அம்மா வந்திருக்கிறாள். உங்கள் புகைபடமும், உங்களைப்பற்றி எழுதி இருப்பதையும் காண்பித்தேன். ரொம்ப சந்தோஷம் என்று சொல்லச் சொன்னாள்.

    புகைப்படத்தில் அத்தனை வயது தெரியவில்லை என்று சொன்னாள். நமக்கெல்லாம் யாராவது இப்படிச் சொன்னால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லையா?

    அன்புடன்,
    ரஞ்ஜனி

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  12:05 பிப இல் செப்ரெம்பர் 13, 2012

      ஓஹோ இந்தப்பேரு மறந்துப் போச்சு.நல்ல ஒத்தாசை. பக்கோடா வடைஎல்லாம் சுடச்சுட நன்றாக இருக்கும். அந்த ஊர் தாக்கம் இது.
      ரொம்ப ஸந்தோஷம். மற்றவை அடுத்து எழுதுகிறேன்.

      மறுமொழி
  • 3. ANGELIN's avatar ANGELIN  |  12:22 பிப இல் செப்ரெம்பர் 13, 2012

    அருமையான குறிப்பு .எங்க வீட்டிலேயே சென்ற வருடம் இந்த கீரை போட்டோம் .இந்த வருடம் போடவில்லை .இங்கே கடைகளில் கிடைக்கும் தேடிப்பார்த்து செய்கிறேன் .

    அப்புறம் பழு பாகல் வாங்கி சமைத்தாயிற்று..மிக மிக அருமை .
    எனது அடுத்த பதிவில் பதிவிடுவேன் .உங்களுக்கும் விவரம் தருவேன்

    ..இப்படிக்கு
    அஞ்சு

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  12:46 பிப இல் செப்ரெம்பர் 13, 2012

      கண்டேன் சீதையைன்னு சொல்கிறமாதிறி பழுபாகலை சமைத்துசாப்பிட்டுவிட்டு கமென்ட் எழுதியிருக்கே. இவ்வளவு அக்கறையா எழுதியிருக்கே? எவ்வளவு ஸந்தோஷம் தெறியுமா?சொல்ல முடியலே. நன்றி சொல்வதைவிட ஆசிகளும் அன்பையும் சொல்லத் தோன்றுகிறது அஞ்சு

      மறுமொழி
  • 5. வெங்கட்'s avatar வெங்கட்  |  2:07 பிப இல் செப்ரெம்பர் 13, 2012

    இந்த கீரை தில்லியில் கிடைக்குமா தெரியலைம்மா. படம் பார்த்துட்டேன். மார்கெட் போகும்போது பார்க்கிறேன்…

    கிடைச்சா செஞ்சுடுவோம்ல!

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  11:27 முப இல் செப்ரெம்பர் 14, 2012

      எனக்குக்கூட டில்லியில் பார்த்ததாக ஞாபகமில்லை. வேறு ஏதாவதொரு கீரையைப் போட்டுக்கூட செய்யலாம். உங்கள்பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 7. chitrasundar5's avatar chitrasundar5  |  3:03 பிப இல் செப்ரெம்பர் 13, 2012

    காமாட்சிமா,

    கீரை வாசனையோட பகோடா சூப்பரா இருக்கு.கொஞ்ச நாளக்கி பகோடா, பஜ்ஜி,வடை பக்கமெல்லாம் போகக்கூடாதுன்னு சபதமெல்லாம் எடுத்து வச்சிருந்தேன்.ஆனால் படத்தப்பாத்ததும் செய்யனும்போல இருக்கு.

    இங்கு இந்தக்கீரைய ஃப்ரெஷ்ஷா வேரோட (வெள்ளைக்கிழங்குடன்)ஃபார்மர்ஸ் மார்க்கெட்ல நிறையப் பார்க்கலாம்.கிழங்கையும் யூஸ் பன்னலாமா? ஏதோ வாசனை வரும் என்று கேள்விப்பட்டதால நான் வாங்குறதில்ல.நல்லதுன்னு சொன்னபிறகு வாங்கிட வேண்டியதுதான்.நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  11:24 முப இல் செப்ரெம்பர் 15, 2012

      அன்புள்ள சித்ரா நீ வேறு ஏதோ கீரையைப்பற்றி சொல்வது போலத் தோன்றுகிறது. வேரில் கிழங்குகள் எதுவும் கிடையாது. பெருஞ்ஜீரகம் உபயோகிப்போமே அதனுடைய கீரை இது. பெருஞ்ஜீரகம் உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பிடித்த கீரை இது. கர்நாடகாவில் இதை உபயோகம் செய்பவர்கள் அதிகம்.
      நீ சொல்வதையும் தெறிந்து கொண்டால் போகிறது. மிக்க ஸந்தோஷம் . அன்புடன்

      மறுமொழி
      • 9. chitrasundar5's avatar chitrasundar5  |  11:33 பிப இல் செப்ரெம்பர் 15, 2012

        காமாட்சிமா,

        கீரை வாங்கி வந்துட்டேன்.இதே கீரைதான்.Fennel greens அல்லது anise green.உங்களுக்கு கீரையை மட்டும் கொடுத்திருக்காங்க.இங்கு அதனுடன் சேர்ந்த bulb உடன்.குக்கரி ஷோவில்கூட அந்த bulb ஐத்தான் சமைக்கிறாங்க.இந்த வாரம் பகோடா செய்திடுவேன்னு நினைக்கிறேன்.புதுமுயற்சி.நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.

      • 10. chollukireen's avatar chollukireen  |  12:53 பிப இல் செப்ரெம்பர் 16, 2012

        ரொம்ப ஸந்தோஷம். அடுத்து நீ இன்னும் ஐட்டம் செய்வதற்கு உபயோகமாக இருக்கும்.
        எனக்கும் கீரையைப் பற்றி விஷயங்கள் மேலும் தெறிந்து கொண்டதற்கு உனக்கு நன்றி. இன்னும்
        மார்க்கெட்டில் பல புதிய காய்கறிகளும் பார்த்திருப்பாய். நல்ல அனுபவங்கள். எல்லாம்
        பங்கிட்டுக் கொள்ளலாம். அன்புடன்

  • 11. திண்டுக்கல் தனபாலன்'s avatar திண்டுக்கல் தனபாலன்  |  2:42 முப இல் செப்ரெம்பர் 14, 2012

    வித்தியாசமாக இருக்கு அம்மா… வீட்டில் இதுவரை செய்ததில்லை…

    செய்து பார்ப்போம்… நன்றி…

    மறுமொழி
    • 12. chollukireen's avatar chollukireen  |  10:41 முப இல் செப்ரெம்பர் 15, 2012

      நம்ம பக்கத்திலே பெருஞ்ஜீரகம் உபயோகிப்போமே
      அதனுடைய கீரைதானிது. கன்னடக்காரர்களுடன்
      சேர்ந்து வசிக்கும் போது அவர்களிடமிருந்து தெறிந்து கொண்டதிது. குறிப்பிலிருந்தால் எப்பொழுதாவதுகூட ஸமயத்திற்கு ஞாபகம் வரும். நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 13. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  11:57 பிப இல் செப்ரெம்பர் 17, 2012

    சென்னையில் இந்தக் கீரை கிடைப்பதாகப் பார்த்தது இல்லை. நாங்கள்தான் பார்க்கவில்லையோ என்னமோ… மேலும் முளைக் கீரை, அரைக்கீரை, பசலைக் கீரை என்று பழகிய கீரைகள் தவிர வேறு எதுவும் வாங்க கையும் வருவதில்லை! மற்ற கீரைகளிலும் இது போல முயற்சித்துப் பார்க்கலாமோ?

    மறுமொழி
    • 14. chollukireen's avatar chollukireen  |  10:10 முப இல் செப்ரெம்பர் 19, 2012

      வாங்க வாங்க எல்லாக்கீரைகளிலும் நன்றாக இருக்கும். புதினா,முருங்கை,கொத்தமல்லி எதிலும் செய்யலாம். ஒரு ஸ்பூன் சோம்பைக்கூட போட்டு பாருங்கள். வாஸனை கிடைத்துவிட்டுப் போககிறது.உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் ப்ளாகையும் பார்க்க வரேன். நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 15. Mahi's avatar Mahi  |  4:32 முப இல் செப்ரெம்பர் 18, 2012

    சோம்புக் கீரை பற்றி கேள்விப் பட்டிருக்கேன், ஆனால் சாப்பிட்டதில்லைம்மா..இங்கே ஹைக் போகையில் நிறைய இந்த சோம்பு செடிகள் நிறைய இருக்கும். ஒரு முறை கொஞ்சம் கீரையை பறித்து வந்து ப்ரிட்ஜ்-ல பல நாட்கள் பத்திரமா வைச்சு, பிறகு தூக்கிப் போட்டேன். சோம்பு வாசம் பிடிக்கும், ஆனால் கீரை எப்படி இருக்குமோ என்று ஒரு சந்தேகம்! ஹிஹி! 🙂 அடுத்த முறை கிடைத்தால் பகோடா செய்து பார்க்கிறேன்.

    மறுமொழி
    • 16. chollukireen's avatar chollukireen  |  10:03 முப இல் செப்ரெம்பர் 19, 2012

      மஹி இல்லாத பின்னூட்டமா என்று எப்போதும் ஞாபகம் வரும். ரொம்ப திருப்தி ஆச்சு. சோம்பு பிடித்தவர்களுக்கு இந்தக்கீரை நன்றாகவே பிடிக்கும்.மகிழ்ச்சிமஹி. அன்புடன் வாழ்த்துகள்.

      மறுமொழி
  • 17. சோம்புக்கீரை வடை/Dill keerai vadai/Fennel leaves vadai « Chitrasundar's Blog  |  4:25 பிப இல் செப்ரெம்பர் 28, 2012

    […] இதுவரை வாங்காமலே இருந்தேன். காமாட்சிமா சமைத்ததாலும்,  ரஞ்ஜனி அவர்கள் ‘எங்க […]

    மறுமொழி
  • 18. Pattu's avatar Pattu  |  5:42 பிப இல் நவம்பர் 3, 2012

    தெலுங்காணாவில் சோம்பு கீரையை போட்டு மெது வடை செய்வது சகஜம். ருசியாக இருக்கும். உங்கள் ரெசிபியும் , நல்ல அய்டியா. வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே முளைக்கிறது.

    மறுமொழி
    • 19. chollukireen's avatar chollukireen  |  10:35 முப இல் நவம்பர் 7, 2012

      இதுவும் மெது வடை கணக்கா மேலே கரகராவும் உள்ளே. மிருதுவாகவும் வரும்.வீட்லேயே கீரை. நல்ல வாஸனையுடன் இருக்கும். கேட்கணுமா ருசிக்கு?
      சாப்பிட நானும் வரேன்.

      மறுமொழி
  • 20. B Jaya's avatar B Jaya  |  6:55 பிப இல் நவம்பர் 6, 2012

    சோம்புகீரை பக்கோடா செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.அனால் உப்பை சிறிது அதிகமாக போட்டு விட்டேன். அடுத்தமுறை செய்யும் போது உப்பை சிறிது குறைத்துக்கொள்ள வேண்டும். வாசனை ஏதாவது வருமோ என்று நினைத்தேன்.
    ஆனால் வரவில்லை. இன்னும் சிறிது கீரையை வைத்துள்ளேன். கடலைப்பருப்பு, கீரை சேர்த்து வடை செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். செய்துவிட்டு எழுதுகிறேன்.

    மறுமொழி
    • 21. chollukireen's avatar chollukireen  |  10:47 முப இல் நவம்பர் 7, 2012

      கரம் மஸாலாவில் சிறிது சோம்பு சேர்த்து உருளை வதக்கல் செய்வார்கள். இந்தக்கீரையையும் வதக்கலில் பிடித்தவர்கள் சேர்க்கலாம். உங்கள் யதார்த்தமான பின்னூட்டத்திற்கு நன்றிகள். அன்புடன்

      மறுமொழி
  • 22. chollukireen's avatar chollukireen  |  11:25 முப இல் ஏப்ரல் 21, 2022

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    இது சோம்புக்கீரையில் செய்தது. என்ன ரீப்ளாக் செய்யலாம் என்று பார்த்த போது காரகதம்பம் செய்ய நினைத்தேன். அதில் படம் எதுவும் இல்லை. இதை முதலில் போட்டுவிட்டு அதை திங்களன்று போடுவோம் என்று விட்டு விட்டேன் கதை பேசுகிறேனா?இதை முதலில்ப் பாருங்கள். அன்புடன்

    மறுமொழி
  • 23. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  1:00 பிப இல் ஏப்ரல் 21, 2022

    Super dish amma. But do not know whether we will get it in Srirangam. But in Rajasthan they will prepare this type of pakodas in all fresh greens.Grated carrots and onion are also added for decorating.

    மறுமொழி
    • 24. chollukireen's avatar chollukireen  |  10:58 முப இல் ஏப்ரல் 23, 2022

      இது ஒன்றும் புதுசு இல்லை .இந்தக் கீரை கிடைக்காவிட்டாலும் வேறு ஏதாவது கீரைகளுடன் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து செய்தால் தானே இந்த ருசி ஏறக்குறைய அமைந்துவிடும் .அடையில் கூட போட்டு தட்டலாம்.

      கீரையின் ருசி சற்று வேறுபடும். அவ்வளவு தான் உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 25. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  10:41 முப இல் ஏப்ரல் 24, 2022

    இதுவரை கேள்விப்படாத ரெசிப்பி. இதுக்குப் பதிலா கிடைக்கும் கீரையைப் போட்டுச் செய்து பார்த்துடவேண்டியதுதான்.

    காமாட்சியம்மா…. நலமா இருக்கீங்களா?

    மறுமொழி
    • 26. chollukireen's avatar chollukireen  |  11:31 முப இல் ஏப்ரல் 24, 2022

      நீங்கள் என்ன புதியவரா? தீர்த்த யாத்திரைகளும்,ஆலய தரிசனங்களும் தொடர்ந்து நீங்கள் மிகவும் பிஸி. உங்கள் ஊரில் இந்தக்கீரை மிகவும் பிரஸித்தம். முதலில் வாஸனை பிடிக்காது போலத் தோன்றும். கூகலில் தேடினால்க் கூட என்னுடையதும் இருக்கு. கர்னாடகா பிரஸித்தமான கீரை. என்னை ஞாபகம் வைத்து விஸிட் செய்ததற்கு மிகவும் நன்றி. வழக்கமான நலம் என்னுடையது. மிக்க நன்றி. அன்புடன்

      மறுமொழி

Mahi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


செப்ரெம்பர் 2012
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,017 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • பிரபுவின்'s avatar
  • tamilelavarasi's avatar
  • chitrasundar5's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Vijethkannan's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.