ஹலோ ஹலோ ஹலோ.2
மார்ச் 6, 2013 at 6:03 முப 24 பின்னூட்டங்கள்
ஹலோ என்ன சொல்ல வந்தெங்களோ சொல்லுங்க.
எதை ஆரம்பிக்கறது, எதைச் சொல்லரது, எதை விடரது
தெரியலே.
பிள்ள நல்ல வேலையிலே இருக்கான், எதுக்கும் பஞ்சமில்லே.
வேலைக்காரிகளுக்கும், குறைவில்லே. ஆனால் நாமதான்
வேலைக்காரிகள் சொன்னபடிகூட கேட்க வேண்டியிருக்கு.
பாரு ஒவ்வொரு நாள் மாட்டுப்பெண் வெளியில் போரச்சே
ஒண்ணும் சொல்ல மாட்டாள். ரொம்ப நாழி கழித்து போன் பண்ணி
வேலைக்காரியிடம் சொல்லுவோன்னு நினைக்கிறேன்.
அம்மா,ஒங்க கிட்டே சொல்லச் சொன்னாங்கோ, ஒரு
ரஸம் செய்துடச் சொன்னாங்க.
வேரெ ஒண்ணும் சொல்லலியா?
இல்லே அவங்க வந்து பாத்துப்பாங்க.
இதை நம்மிடம் சொல்லிட்டுப் போகக் கூடாதா?
நினைக்கத் தோன்றுகிரதா இல்லையா?
வேலக்காரி காயும் ஏதோ நறுக்குவோ. ஆனால் சும்மா
நறுக்கி வைக்கிறேன். அவங்க ஒண்ணும் சொல்லலே!
நீ செஞ்சாலும் தப்புன்னுவாங்க.
ஸரி ஒரு பருப்பைபோட்டு ரஸத்தை வைச்சு இரக்கினோம்
என்றால் அத்துடன் போகுமா?
போனைல்தான் தேவலையே. அவ வருவோ, என்னம்மா ஒரு
கறியும் பண்ணிருப்பேங்கோ என்று நினைத்தேன். இல்லே
அவ நீ ஒண்ணும் சொல்லலேன்நு சொன்னா, அதான்.
நான் அப்படிதான் நினைத்தேன். இதெல்லாம் கணக்கா?
இன்னொரு நாள் பண்ணிடலாம் என்று பண்ணி விட்டால்
பிள்ளைகளுக்குப் பிடிக்காதே. என்னை ஒரு வார்த்தை கேளுங்கோ!!
இல்லே இதை வேரெ மாதிரி பண்ணாதான் அவர்களுக்குப் பிடிக்கும்.
எது சொல்லு செய் எல்லாம் எதிரிடை.
வேலைக்காரிக்கு ப்ரட் கொடுத்தால் அதிலும் ஏதாவது குற்றம் கண்டு
பிடிப்பு. இவ்வளவு ப்ரெட் இருக்கு, இன்னும் ஏன் வாங்கணும்.
நீதானே நேத்தி வாங்கினே.
எல்லாம் உன்னை கேட்டு செய்யணும். நீ யாரையும் கேட்க மாட்டே.
சொல்ல முடியுமா? முடியாது. நாம்தானே வந்து நிக்கரோம்.
வெளியில் போய்ட்டு வரும் போதே , யார் பேரிலாவது, குத்தம்
கண்டு பிடிச்சு, ஒரு சத்தம் போட்டுட்டா மத்தவா தானா பயந்துண்டு
கப்சிப்புனு ஆயிடரா.
தோசைக்கு நினைச்சதை கிரைண்டர்லே போடுவோம்னு போட்டா
என்ன அவசரம், நான் வந்து அரைச்சுக்கறேன். போடலையா
இந்தக்காரியங்கள்ளாம் நான் செஞ்சாதான் உண்டு. எதையும்
கண்டுக்காம அவர்கள் சொல்ரதெல்லாம் காதில் வாங்கிண்டு
பதில் சொல்லாம பழகிண்டூட்டேன்.
சில ஸமயம் நம்மையறியாமல் இப்படி இல்லே, அப்படி என்று
சொல்லிட்டா, ஆச்சு, நான்தான் எல்லோரையும் வச்சிண்டு
செய்யறேன். ஒரு வார்த்தை சொன்னா என்ன போறது?
ஆகாத்தியம்.
சொல்லாததான் இருந்துடரதுதானே.
ஐயோ உங்களுக்கும் புரியலியா? நம்மையும் மீரி வந்துடறது.
என்ன அடிமை வாழ்வு. தாங்கலை.
கௌரவம் ஒண்ணு இருக்கு, மனஸு தாங்கலை.
பரவாயில்லே. இந்தமாதிரி நம் பிள்ளைகளுடன்தான் இருக்கிறோம்.
நமக்கு ஒன்று என்றால் உடனே நம்மை கவனிப்பவர்களும் அவர்கள்
தானே?
அதனால்
கௌரவம்,நம் குழந்தைகள், எல்லாத்தையும் நினைத்து பழகிக் கொள்ளதான் வேண்டியிருக்கிறது.
எங்கு போனாலும், யாரிடமிருந்தாலும், முதுமைக்கு கிடைக்கும்
கௌரவம் அவ்வளவுதான்.
நாம் அனுஸரித்தால்தான், பிள்ளகளுடனிருக்க முடியும். அவர்கள் ஸந்தோஷத்திற்காக விட்டுக் கொடுக்கணும்.
அப்போ நீங்க சொல்ரது அவா செய்றதெல்லாம் ஸரி என்றுதான்
இருக்கணும், இல்லையா?
அப்படியெல்லாம் இல்லை. இன்னும் வேறுவிதமாக எவ்வளவோ
கஷ்டங்கள் எல்லாம் கூட இருக்கு.
எங்கே நான் சொல்றதுக்கு நீங்கள் விட்டாதானே,
இல்லே லக்ஷ்மி, ஒண்ணு சொன்னாலே பாக்கி எப்படி இருக்கும்
யூகிக்க முடியாதா?
இல்லே, கஷ்டப்படறவாளுக்குதான் ஸரியா புரிஞ்சுக்க முடியும்.
நான் ஒண்ணும் சொல்லலியேன்னு இப்படி பேசறியா?
காசு பணம் எல்லாம் யாருக்கு?
இவாளுக்கு தானே, நம்ம மனுஷாளைப் பத்தி, ஏன் மற்ற பேரன்
பேத்திகளைப் பற்றி பேசினா கூட பிடிக்காது.
நம்மாலே மறந்து விட முடியுமா?
அது இல்லே பேச்சு, அவர்களுடன் இருந்த போது ஏதாவது
நிகழ்வுகள் நடந்திருக்கும்.
அதை சாக்கு வைத்து, ஜனங்கள், அப்படி சொன்னா,இப்படி சொன்னா
பெயர் குறிப்பிடாமல், சாக்கு வைச்சு பேசறது,
இதெல்லாம் ஸகிக்க முடியலே.
அதோடயா போரது. ஏதாவது ஸ்வீட்ஸ். பசங்கள் இருக்கும்
வீட்லே தின்னவா தெறியாமல் காலியாகி விடுகிரது.
அதையும் வயஸானதுகள் யார் என்ன தின்ரா தெறியலேன்னு
பொதுவா சத்தம் போட்டா, ஜென்மத்துக்கும் ஏதும் கொடுத்தால்
கூட சாப்பிடக்கூடாது என்று தோன்றுகிறது.
ஏம்மா முகம் ஸரியாயில்லே. எல்லோரும் ஸந்தோஷமா இருக்கணும்
அது ஒண்ணுதான் எனக்குத் தெரியும் என்கிறான்.
வாஸ்தவம்தான். ஸம்பாதிக்கும் புருஷ பசங்கள் அதைத்தவிர
வேறு என்ன சொல்ல முடியும். நமக்கு ஒன்று என்றால் நாட்டுப் பெண்களுக்கு தானே முதல் சீட்டு விழுகிறது.
அதெல்லாம் ஸரியாகச் செய்கிறது அவள்தானே?
வருங்காலத்தை நினைத்து, நிகழ்காலத்தை மறந்து பழகத்
தெரிய வேணும்.
இன்னும் சில தெல்லாம் எம்மனஸிலே தோன்றது
பாட்டை மாத்தி பாடறியே ராஜம்மா,சொல்லு,சொல்லு
இல்லே பொதுவா வயத்தைக் கட்டணும். வாயையும் கட்டணும்.
ஏதுக்கும் ஆசைப்படக்கூடாது அதான் வயிறு.
வாயைக் கட்டணும். எதுக்கும் ரோஷப்படக்கூடாது. பதிலே
சொல்லாட்டா சச்சரவு குறையும் . அதுதான் வாயைக் கட்டரது.
எல்லாத்தையும் விட முக்கியம், சரணாகதி.
என்ன சொல்ரது காது கேக்கறதா?
சொல்லு,சொல்லு, உன்னுடைய பங்கு இப்போ.
கேளு, ராமாயணத்தில் தேவதைகள்,சரணாகதியையும்,தசரதர்
பரசுராமரிடத்தில் செய்த சரணாகதியும் விசேஷம்.
அப்புரம் ராமரிடத்தில் லக்ஷ்மணர் செய்த சரணாகதி விசேஷம்.
பரதன் சக்ரவர்தித் திருமகனிடம் செய்த சரணாகதி,
மகரிஷிகளெல்லாம், பகவானிடத்தில் செய்த சரணாகதி,
ஸுக்ரீவன், பகவானிடத்தில் செய்த சரணாகதி,
திரிஜடை, ஸீதாதேவியிடம் சரணாகதி,
விபீஷணன், பகவானிடம் சரணாகதி,
ராமர், ஸமுத்ர ராஜனிடம் செய்த சரணாகதி
எல்லா தேவதைகளும்,பகவானிடத்தில் செய்த சரணாகதி,
இவைகள் எல்லாம் போற்றத் தகுந்த இதிகாச சரணாகதிகள்.
இதையெல்லாம் மனதில் நினைத்தால் நாமும் கலி காலத்தில் நம்
குடும்பத்தாரிடம் நிபந்தனையற்ற சரணாகதி அடைந்து விட்டதாக
மனதில் எண்ணி எல்லாவற்றையும், பொருத்தருளும் சுபாவத்தை
கொடுக்கும்படி வேண்டிக் கொண்டால் எவ்வளவு நன்ராக இருக்கும்
என்று தோன்றுகிறது.
காருண்யம் நம் குடும்பத்தாரிடம்தான் நமக்குப் பெரமுடி.யும்.!!
ராஜம்மா என்ன ராமாயணத்துக்கு போய்ட்டீங்களா?
அதெல்லாம் படிச்ச தாக்கம் மனஸிலிருந்தது.
வயஸாயிட்டா முகத்திலே ஸந்தோஷக் களை போயிடறது.
தோல்சுருங்கி, கிழக்கோலம். பாக்ரவாளுக்கு முகம் உர் என்று தெறியும்
இதெல்லாம் கூட கொஞ்ஜம் கஷ்டம்தான்.
எவ்வளவு பாக்க வேண்டியிருக்கு பாரு.
ஆமாம், வயிற்றைக் கட்டு
வாயையும் கட்டு,இதெல்லாம் இல்லாவிட்டால், நடையைக் கட்டு
இது முடியுமா? மனதில் தோன்றியதைச் சொன்னேன்.
உனக்காக இல்லை. எனக்காகவும் இல்லை.
நம் வீட்டு பெறியவர்களுக்கு என்ன வசதி இருந்தது.
அவர்கள் இம்மாதிரி யோசிக்கவில்லை.
நாம்தான் வசதிகளுக்கு அடிமையாகி விட்டோம்.
ஸரி ரொம்பவே சொல்லிட்டெனா. ஹலோ,ஹலோ
ஹலோஹலோ எத்தனைதரம் கூப்பிடறது?
அம்மா, அம்மா, அம்மா, என்ன போன்லே யாரைக் கூப்பிடரே?
ஏதாவது கனவா! பிள்ளை
அம்மா உன்னைத்தான் கூப்பிடறேன். எழுப்புகிறான்.
காலை உடற்பயிற்சி செய்ய வந்தவன், ஹலோ,ஹலோ
யாரம்மா அது இந்த காலை நேரத்திலே!!
ஒண்ணுமில்லே, சுதாரிக்கிறேன். என்ன கனவு?என்ன நினைவு?
போருண்டாப்பா,போரும்.
என்ன ஹலோ,ஹலோ, வேண்டிக் கிடக்கறது?
பின் குறிப்பு—–கனவில் ஏற்பட்ட கற்பனை .இன்னும் சில கட் செய்யப்பட்டிருக்கிறது. வயதானவர்களில் பலர் படும் பாடு. இன்னும்
எவ்வளவோ? நன்ராக உள்ளவர்களுக்கு ஜே போடுவோம்.
Entry filed under: கதைகள்.
24 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 6:16 முப இல் மார்ச் 6, 2013
//எங்கு போனாலும், யாரிடமிருந்தாலும், முதுமைக்கு கிடைக்கும் கௌரவம் அவ்வளவுதான்.
நாம் அனுஸரித்தால்தான், பிள்ளகளுடனிருக்க முடியும். அவர்கள் ஸந்தோஷத்திற்காக விட்டுக் கொடுக்கணும்.//
எல்லாவற்றையும் அழகாக நாசூக்காகச் சொல்லிவிட்டு கனவு என்று முடித்துள்ளது, ரஸிக்கும்படியாக உள்ளது.
பாராட்டுக்கள்.
நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்.
2.
chollukireen | 2:50 பிப இல் மார்ச் 6, 2013
நிதர்சனம் இதுதான். விஞ்ஞானம் முன்னேறியதில்
முதியவர்களுக்கு ஆயுள் அதிகமாகிவிட்டது.
அநுபவிக்கும் போதுதான் முதுமையைப் பற்றிய
விவரங்கள் புரியும். அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 6:19 முப இல் மார்ச் 6, 2013
//எதுக்கும் பஞ்சமில்லே. வேலைக்காரிகளுக்கும், குறைவில்லே. ஆனால் நாமதான் வேலைக்காரிகள் சொன்னபடிகூட கேட்க வேண்டியிருக்கு.//
உண்மை மாமி. வேலைக்காரி வராவிட்டாலும் தொல்லை. வந்தாலும் தொல்லை. ;)))))
4.
chollukireen | 3:09 பிப இல் மார்ச் 6, 2013
எத்தனை விதமான அனுபவங்கள். அதிகம் வீட்டிலே
இருப்பவர்களுக்கு ஸமாசாரங்கள் சொல்லும், ஊர் நிலவரம் சொல்லும், அக்கப்போர்கள் சொல்லும்,அதி நவீன உறவுக்காரர்கள். உங்கள் பதிலுக்கு நன்றி.அன்புடன்
5.
mahalakshmivijayan | 10:06 முப இல் மார்ச் 6, 2013
வயதானவர் படுகின்ற வேதனைகளை தொகுத்து எழுதியுள்ள விதம் அருமை! எல்லாவற்றையும் குறித்து வைத்து கொண்டேன், ஏன் என்றால் நானும் ஒரு வீட்டின் மருமகள் இல்லையா 🙂
6.
chollukireen | 4:19 முப இல் மார்ச் 7, 2013
ஆமாம்மா. மனதில் குறித்துக்கொள். வயதானவர்களுக்குத் தேவையானதில் அதிக முக்கியமானது அன்புதான். கௌரவமும் கொடுத்தால்
ஸந்தோஷப்படுவார்கள். நன்றி. அன்புடன்
7.
chitrasundar5 | 3:54 பிப இல் மார்ச் 6, 2013
காமாக்ஷிமா,
நிஜத்தை கனவாக்கியிருப்பது அருமை. இதற்காகத்தான் சில முதியவர்கள் என்ன வந்தாலும் பரவாயில்லை என தனிமையிலேயே இருக்கிறார்கள், வீம்பு பிடித்தவர்கள் என்ற பட்டத்துடன்.’ஹலோ ஹலோ…’ஓ இது சொல்லுகிறேனில் உள்ள பதிவா! அம்மா என்னிடம் பேசிக்கொண்டு இருக்காங்களோ என நினைத்துவிட்டேன்.உண்மையை இப்படித்தான் சொல்ல முடியும்,வேறெப்படி சொல்வது!கடைசியில் லக்ஷ்மி,ராஜம்மா கேரக்டர்கள் மறைந்துபோய் நிஜ கேரக்டர்கள் உள்ளே வந்துவிட்டது உண்மை.அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 4:30 முப இல் மார்ச் 7, 2013
இந்த அளவு கனவில் சொல்லுவது கூட கஷ்டம்தான்.
நிறைய கஷ்டங்கள் இருட்டடிப்புதான் செய்ய முடியும்.
கனவாக எவ்வளவு விஷயங்கள்_? ஆரம்ப முதல் தனியாக வாழ்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். கூட்டாக வாழ்ந்தாலும்,சுகப்படுகிரவர்களும் இருக்கிரார்கள். பரவலாக முதுமை யோசிக்கவைத்துவிடுகிரது.
உன் கருத்துள்ள பதிலுக்கு மிகவும் நன்றி
9.
ranjani135 | 5:13 முப இல் மார்ச் 7, 2013
நிஜத்தை சொல்லியிருக்கிறீர்கள். சேர்ந்து வாழும்போது அவர்களுடன் ஒத்துப் போகவும், தனியாக வாழும்போது அதைப் பற்றிக் குறை சொல்லாமல் வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.
இப்படி அவதிப் படுகிறவர்கள் அதிகம் பெண்கள்தான் என்று தோன்றுகிறது. அவர்களுக்குத்தான் ஆயுசும் அதிகம்!
என் அம்மாவின் நினைவு ரொம்பவும் வந்து வருத்தப்பட வைத்தது.
10.
chollukireen | 6:04 முப இல் மார்ச் 7, 2013
ஒரு அளவுக்கு மீறும்போது ஆண் என்ன பெண் என்ன
இருபாலாருக்கும் கஷ்டம்தான். பெண்களத்தனை தாக்கம், ஆண்களுக்கில்லை. சொல்லுவதெளிது.
வயோதிகம் உடல் தளர்ந்து செயல் குறையும் போதுதான் உணரவே முடிகிறது. மன வலிமைகூட பிரயோஜனமில்லை. மொத்தத்தில் திருப்தியான மன நிலை வர கொஞ்ஜம் அன்பு ஒரு அரைகிலோ அளவிற்கு கூடுதலாக வேண்டும். எங்கு கிடைக்கும்
பார்க்க வேண்டும். தனித்திருந்து வாழ ஆதிமுதல் பழகினால் மிகவும் நன்றாக இருக்கும்.
11.
chitrasundar5 | 3:42 முப இல் மார்ச் 8, 2013
ரஞ்ஜனி,
“இப்படி அவதிப் படுகிறவர்கள் அதிகம் பெண்கள்தான் என்று தோன்றுகிறது” ___வேறு வழியில்லாமல் நம்மால்(பெண்களால்) ஓரளவுக்குப் பொறுத்துப் போக முடியும்.இதில் ஆண்கள் நிலைதான் கஷ்டம்.துணை இருக்கும்வரை சமாளித்துவிடுவார்கள்… உணர்ச்சிகரமான பிரச்சினை. இதற்குமேல் எழுத முடியவில்லை.
12.
இளமதி | 1:44 பிப இல் மார்ச் 8, 2013
அம்மா.. வருவதற்கு காலதாமதமாகிவிட்டது. மன்னிக்கவேண்டுகிறேன்.
மனதில் பதிந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
முதுமையில் வறும் நோய், மற்றும் வெறுமை, தனிமை… தனிமைன்னா தன்னக்குன்னு உரிய உற்ற உறவு இல்லாமபோய் மகனோ மகளோ அவங்க குடும்பத்துடன் ஒட்டிண்டு வாழுற தனிமை… அப்போ அங்கை கிடைக்கிற ராஜ மரியாதைகளை அழகாக படம்பிடிச்சு காட்டிட்டீங்கம்மா.
இருட்டடிப்பு செய்து போட்டதே எத்தனை நிஜமானது. அத்தனையும் உண்மை.
படிக்கும்போது கண்களை நிறைத்துகொண்டது. கனவென்று சொன்னாலும் கனமான பதிவு அம்மா…
13.
chollukireen | 2:06 பிப இல் மார்ச் 8, 2013
ஆசிகள் இளமதி. நன்றிகள். அன்புடன் அம்மா
14.
Dr.M.K.Muruganandan | 2:39 முப இல் திசெம்பர் 10, 2013
மிகவும் யதார்த்மாகவும் சுவையாகவும் வயோதிபர்களின் பாடு பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்
வலைச்சசரத்தில் அறிமுகமாகியதற்கு வாழ்த்துக்கள்
15.
chollukireen | 3:01 பிப இல் திசெம்பர் 10, 2013
ஹலோ டாக்டர்.வணக்கம். உங்கள் பாராட்டுகளுக்குமிக்க நன்றி. வலைப்பதிவுகள்
உங்களது யாவருக்கும்,எப்போதும் உபயோகமாகும் பதிவு. ஏதாவது ப்ரச்சனை என்றால்
முதலில் உங்கள் பதிவில்தான் தேடுகின்றேன். மகிழ்ச்சி. அன்புடன் சொல்லுகிறேன்.
16.
chollukireen | 11:57 முப இல் மார்ச் 10, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
திங்கட்கிழமை வெளியிட்டதின் முடிவுப்பதிவு. இதுவும் மீள்பதிவுதான். படித்து அபிப்ராயம் சொல்லுங்கள். ஹலோஹலோஹலோஹலோ. அன்புடன்
17.
ஸ்ரீராம் | 11:49 பிப இல் மார்ச் 10, 2022
// எங்கு போனாலும், யாரிடமிருந்தாலும், முதுமைக்கு கிடைக்கும் கௌரவம் அவ்வளவுதான். //
இந்த வரிகள் வருத்தத்தைத் தருகின்றன. ஆனால் உண்மையும் அதுதானே.. எல்லாம் கற்பனை, கனவு என்றறியும்போது சொல்லக்கூட ஆளில்லையே என்று தோன்றுகிறது.
18.
chollukireen | 12:36 பிப இல் மார்ச் 11, 2022
கனவு,கற்பனை, நிஜம், மற்றவர்களின் அனுபவம் எல்லாம் பார்த்துதானே நம்மையும் செதுக்கிக் கொள்கிறோம். இது கதைதான். வருகைக்கு மிகவும் நன்றி. அன்புடன்
19.
Geetha Sambasivam | 5:35 முப இல் மார்ச் 11, 2022
உண்மை இது தானே! இதில் பிள்ளையாவது/பெண்ணாவது! பல இடங்களில் பெண்ணும்/மாப்பிள்ளையும் கூடப் படுத்துகிறார்கள். அதிலும் சாதத்தைக் கணக்காக வடிக்கச் சொல்லும் பெண். கடைசியில் அம்மா சாப்பிடும்போது மிஞ்சியதா இல்லையானு கூடப் பார்க்காமல் போகும் பெண்! என்னென்னவோ கஷ்டங்கள் இப்போதும் பல பெண்களுக்கு/அம்மாக்களுக்கு இருக்கத் தான் செய்கிறது.
20.
chollukireen | 12:49 பிப இல் மார்ச் 11, 2022
ஆமாம் இன்னும் எத்தனையோ கதைகளை புதுப்புதுமாதிரியாகக் கேள்விப்பட முடிகிறது.தர்மசங்கடமான சூழ்நிலை.இதுவும் கதைதான் என்று தள்ளிவிட்டுப் போய்விட வேண்டியதுதான்.உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. அன்புடன்
21.
geetha | 9:46 முப இல் மார்ச் 11, 2022
பல வரிகள் வாசிக்கும் போது மனது வேதனைப்பட்டது. யதார்த்தமான வரிகள் பல. பல இடங்களில் பார்க்க முடிகிறது.
எங்கள் வீட்டில் இரு முதியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கடைசிவரை நன்றாக சந்தோஷமாக இருந்தார்கள் எந்தவித மன வருத்தமும் இல்லாமல்.
கடைசியில் சொன்னது போல் முதுமையில் சந்தோஷமாக இருப்பவர்களுக்கு ஜே போடுவோம்.
22.
chollukireen | 12:57 பிப இல் மார்ச் 11, 2022
இப்போதும் யாவரும் இந்தக் கதை மாதர்களில்லை.உண்மையும் கற்பனையும் கலந்த வரிகள்தான் கதை உருவம் எடுக்கிறது.நல்ல மேற்பார்வை இருந்தால் ஸந்தோஷம் தானாக வந்துவிடும். இம்மாதிரிக் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் வீட்டு முதியவர்கள்.ஜே போடுவோம். ஸந்தோஷம். வரவிற்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
23.
ranjani135 | 3:09 முப இல் மார்ச் 17, 2022
என்றும் பசுமையாக இருக்கும் பதிவு. அடுத்த அடுத்த தலைமுறைக்கும் பொருந்தும் படி இருக்கிறது. நம் முந்தைய தலைமுறை படும் அவஸ்தைகளை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவர்களிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளப் பழகலாம்.
24.
chollukireen | 11:48 முப இல் மார்ச் 17, 2022
அவரவர்கள் மனதில்ப்பட்டபடிதான் நடந்து கொள்வார்கள்.பாசமும்,மனிதாபிமானமும் முக்கியமாகத் தெவைப்படுகிறது.இவையிரண்டும் கடையில் வாங்கும் வஸ்துவல்ல.நீங்கள் சொன்னமாதிரி பொறுமையுடன் நடந்து கொள்ளப் பழக வேண்டும். உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. அன்புடன்