புளிக் காச்சலும் புளியஞ்சாதமும்.
ஜனவரி 12, 2014 at 11:41 முப 10 பின்னூட்டங்கள்
இந்தப் பதிவும் கனுப்பண்டிகையன்று புளியஞ்சாதம் தயாரிக்க உதவியாக இருக்கும். படம் அப்போதெல்லாம் போடத் தெரியாது. இப்போ தேடணும். செய்து பார்த்து நீங்கள் போட்டு விடுங்கள். திரும்பவும் பார்க்கலாம். மகிழுங்கள். அன்புடன்
வேண்டியவைகள்–
கெட்டியாக உருட்டிய 2 எலுமிச்சை அளவு புளியை அரைகப்
தண்ணீரில் ஊற வைக்கவும்.
வறுப்பதற்குச் சாமான்கள்
தனியா—-2 டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன், மிளகாய் 4 ,
இவைகளைத் தனியாக வெறும் வாணலியில்வறுத்துக் கொள்ளவும்.
கடுகு கால் டீஸ்பூன், வெந்தயம் அரைடீஸ்பூன், சீரகம்கால்டீஸ்பூன்-
இவைகளைத் தனியாக கருகாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன் சிவப்பாகவறுத்துக் கொள்ளவும்.
எள் இரண்டு டேபிள்ஸ்பூன் கருகாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தாளிக்க நல்லெண்ணெய் 4 , 5,—-டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 1,இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய இஞ்சித் துண்டுகள் 1 டேபிள்ஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் —1துண்டு
மஞ்சள்பொடி—-1 டீஸ்பூன்
மிளகாய் 4
கடலைப் பருப்பு——4 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை——4 டேபிள்ஸ்பூன்
ஒருகப்——கறிவேப்பிலை
ருசிக்கு உப்பு
வெல்லப்பொடி—–3டீஸ்பூன்.
செய்முறை—–புளியைக் கரைத்து ஒன்றரைகப் அளவிற்கு
சாறு எடுத்துக் கொள்ளவும்.
வறுத்தவைகளை ஆற வைத்து எள்ளைத்தவிர்த்துமீதியை
ஒன்றாக மிக்ஸியிலிட்டு பொடித்துக் கொள்ளவும்.
எள்ளைத் தனியாக பொடிக்கவும்.
அடி கனமான அலுமினிய வாணலியிலோ அல்லது
நான் ஸ்டிக் வாணலியிலோ எண்ணெயைக் காய வைத்து
காம்பு நீக்கிய முழு மிளகாயைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
தீயைக் குறைத்து ,கடுகைப் போட்டு வெடிக்கவிட்டு பருப்பு பெருங்காயம்
வகைகளைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலைமஞ்சள்சேர்த்து
கீழிறக்கி நிதானமாக புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, வெல்லப் பொடி…
View original post 130 more words
Entry filed under: சித்ரான்னங்கள்.
10 பின்னூட்டங்கள் Add your own
gardenerat60 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 11:44 முப இல் ஜனவரி 12, 2014
சூப்பர் ! படிக்கும் போதே எனக்கு பசியைக் கிளப்பிவிட்டது. டேஸ்டோ டேஸ்டான புளியஞ்சாதம். நன்றி. அன்புடன் கோபு.
2.
chollukireench | 12:10 பிப இல் ஜனவரி 15, 2014
காரம் குறைவுதான்.வேண்டியதைச் சாப்பிடலாம்.அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 5:02 முப இல் ஜனவரி 13, 2014
செய்முறைக்கு நன்றி அம்மா…
4.
chollukireench | 12:14 பிப இல் ஜனவரி 15, 2014
உஙகளுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். அன்புடன்
5.
angelin | 11:24 பிப இல் ஜனவரி 14, 2014
Thanks ma..PULI KAAICHAL. enakku mikavum pidikkum .HAPPY PONGAL TO YOU AND YOUR FAMILY.
6.
chollukireench | 12:17 பிப இல் ஜனவரி 15, 2014
அஞ்சு வாழ்த்துகளும் ஆசிகளும் யாவருக்கும். புளிக்காச்சல் செய்துவிட்டு எழுது. ஸந்தோஷ,மாக இருக்கும். அன்புடன்
7.
gardenerat60 | 12:54 பிப இல் ஜனவரி 16, 2014
அம்மா, எனக்கு எப்போதுமே புளி காச்சல் சரியாகவே வராது. இந்த ரெசிபி பர்பெக்ட். செய்து பார்க்க ஆவலாக உள்ளது, சீக்கிரமே! தேங்க்ஸ்மா!!
8.
chollukireen | 12:10 பிப இல் ஜனவரி 17, 2014
என்னம்மா ரொம்பநாட்களாக பார்க்கவே முடிவதில்லை. பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கு,மற்றும் யாவருக்கும். ப்ரமாதமொன்றுமில்லை. செய்து பாருங்கள்.
எல்லாம் ஸரியாகவே வரும். செய்து பார்த்து அபிப்ராயம் சொல்லுங்கள். உங்களை வரவேற்கிறேன். ஸந்தோஷம். அன்புடன்
9.
gardenerat60 | 4:21 பிப இல் ஜனவரி 20, 2014
அம்மா, உங்கள் கமெண்ட்ட பார்த்த உடன் , ஒரு சந்தோஷம்!.
பண்ணி பார்த்தாச்சு. டேஸ்ட் நன்றாகவே வந்துள்ளது. பொடிகளை , நைசாக அரைத்து விட்டேன். கொஞ்சம் கரகரவாக இருந்தால் , இன்னும் ஜோர் என்று, வீட்டில் ஒரு கருத்து.
அக்கம் பக்கத்திலும் ஷேர் பண்ணி மகிழ்ந்தேன். தேங்க்ஸ் மா!
10.
chollukireen | 10:32 முப இல் ஜனவரி 21, 2014
அடுத்தமுறை செய்யும் போது நல்ல முறையில் வந்து விடும். முறை தெரிந்து விட்டது. இந்த அக்கம்,பக்கம் கொடுப்பது நமக்கெல்லாம் உடன் பிறந்த கலை.
அடுத்த ஜெனரேஷனுக்கு வருமா ஸந்தேகம்தான்.
எனக்கும் மிக்க ஸந்தோஷமாக இருந்தது உன் புளியஞ்சாதம். ஆசிகள் அன்புடன்