Archive for பிப்ரவரி, 2014
அன்னையர் தினம்—-13
கல்யாணமே வைபோகமே. வந்தவர்கள் யாவருக்கும் நன்றிதான். படியுங்கள். ரஸியுங்கள். பதிவு13. பார்க்கலாம்.
Continue Reading பிப்ரவரி 15, 2014 at 5:25 பிப 20 பின்னூட்டங்கள்
லெஸொதோ LESOTHOஅனுபவமும்,தென் ஆப்ரிகாவும். 1
ஐந்தாறு வருஷங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் உள்ள
லொஸேத்தோ என்ற தேசத்திற்குப் போயிருந்தோம்.
அது ஒரு கிங்டம். வரண்டபூமி. தலைநகர் மஸேரு. அந்த தேசத்தில்
விசேஷம் என்ன வென்றால் எய்ட்ஸ் பேஷன்டுகள் அதிகம்.
மிகவும் வரண்ட பூமி. மலைப் பகுதிகளே அதிகம்.
மலையும் கற்குவியல்களாக இருக்குமே தவிர பசுமையாக இராது.
பல அறியவகை வண்ண, வண்ணக் கற்கள் கனிஜங்களாக இருக்கும் போல
உள்ளது.
ஜோஹான்ஸ்பர்க்போய், அங்கிருந்து சிறிய விமானத்தில் மஸேரு
,செல்ல வேண்டும்.
அதிகம் வசதிகளில்லாத ஏர்போர்ட் காண்மாண்டுவை, ஞாபகப் படுத்தியது.
இப்போதைய காட்மாண்டுவைச் சொல்லவில்லை.
விமானத்திலிருந்து ஸாமான்கள் இறக்கி, ஆட்கள் தூக்கி வந்து ஹாலில்
வைப்பார்கள். கஸ்டம்ஸ் கெடுபிடி இருக்கும்.
பெயரளவிற்கு ஏதோ கூலி ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் மூலம் ஸாமான்கள்
வெளிக் கொணரவேண்டும்.
ஆனால் காட்மாண்டுவில் டகோடா ஸர்வீஸ் இருந்தது. பிறகு ஆவ்ரோவும்
வந்தது.
மஸேரு போன விமானம் மிகக் குட்டியானது. பதினாறு இருக்கைகளே.
பதினைந்து கிலோ ஸாமான்களே உடன் எடுத்துப் போக முடியும்.
அதனாலே துணி மணிகள்கூட மிக்கக் குறைந்த அளவிலே எடுத்துப் போனோம்.
உள் நாட்டில்அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை.
இளைய தலைமுறையினர் வேலைதேடி வெளிநாட்டிற்குப் போய்
விடுகிரார்கள்
அவர்கள் பணம் கொண்டு வருகிரார்களோ இல்லையோ, எய்ட்ஸைக்
கொண்டுவருகிரார்கள். மனைவிகளுக்குக் கொடுக்கிரார்கள்.
குழந்தைகளும் அதனுடனேயே பிறக்கிரார்கள். ஆக எய்ட்ஸ் நோய் தலை
விரித்தாடும்தேசமாக இருந்தது.
கைத்தொழிலும்அ திகம் கிடையாது.
என்னுடைய பிள்ளை இந்த வியாதியை கண்ட்ரோலுக்குக் கொண்டுவரும்
,அத்தேசத்தின் தலைமைபதவியில் அவ்விடம் யூ என் எய்ட்ஸ் நிறுவனத்தால்
நியமிக்கப் பட்டிருந்தார்.
எதற்கு இதை எழுதினென்றால் இப்படியும் பல தேசங்கள் இருக்கிறது.
அங்கு அவர் போனபோது சமைக்கத் தெரியாது. ஸ்கைப் மூலமே
வெண்ணெய் காய்ச்சுவது முதல் பாடமெடுத்தோம்.
எல்லாம் கற்றுக்கொண்டு அவரும் பிறறைச் சாப்பிடக் கூப்பிட்டு
விருந்து கொடுக்கும் அளவிற்கு பழக்கம் வந்து விட்டது.
உதவிக்கு ஒரு பெண்மணி உண்டு. அவரை மே என்றுதான்
கூப்பிடவேண்டும்.
வாசலில் ஸெக்யூரிடிக்கு ஆட்கள் உண்டு. அவர்களை
தாதே என்று கூப்பிட வேண்டும்.
எல்லாம் இங்லீஷ் தெரிந்து பேசுபவர்கள். மரியாதையும் உண்டு.
ஸுய கௌரவமும் உண்டு.
வேலைக்காரர்கள் என்று குற்றம் குறை சொல்ல முடியாது.
அப்படி நாங்கள் டிஸம்பர் லீவிற்கு அங்குச் சென்றபோது, வாராவாரம்
விருந்துதான் தான் அவ்விடம்.
நாங்கள் குறைந்த அவகாசத்திற்காக அங்கு போயிருந்ததால் இருந்த நாட்கள்வரை
நாங்கள் அங்குள்ளவர்களுக்கு விருந்துகொடுப்பதும், அவர்கள் எங்களுக்குக் கொடுப்பதுமாக
இருந்தவரை இப்படியே காலம் ஓடியது.
ஒரு 10 குடும்பத்தினர் இம்மாதிரி வெவ்வேறு வேலைகள் நிமித்தம் வந்தவர்கள்
வாராவாரம் ஒவ்வொரு வீட்டில் எல்லோரும் கூடி பொழுதைக் கழிப்பது வழக்கம்.
வேறு எந்த விதமான பொழுது போக்குகளோ,. கேளிக்கைஸ்தலங்களோ கிடையாது.
ஆக அவர்களே வாராவாரம் ஒவ்வொருவர் வீட்டில் ஸந்தித்து, ஏதாவது
தங்களுக்குள்ளே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டு, பேசிமகிழ்ந்து,உண்டு களித்து
பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
நாங்கள் அதாவது என் மகன்
தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் ,இங்கு இட்லி,தோசை,வடை
உப்புமா என்பதெல்லாம் எங்களின் ப்ரதான ஐட்டமாக இருந்தது.
அது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதை
செய்யச் சொல்லியே விருந்தினர்கள் ருசித்தனர்.
என் மகனுக்கு யூஎன் நிருவனத்தில் ஸாமான்கள் கொண்டுபோக
. ஷிப்மென்ட் வசதி இருந்ததால் கிரைண்டர்,மிக்ஸி,வேண்டிய ஸாமான்கள்
என ஒரு அழகிய குடும்பஸாமான்கள் எல்லாம் எடுத்துப் போக முடிந்தது.
அதெல்லாம் டில்லியிலிருந்து வாங்கி மஸேரு வந்து சேர்ந்தது.
அதனால்தான் இவைகளை நினைத்துப் பார்க்க முடிந்தது.
தவிர மருமகள் வேலையிலிருந்ததால் ஜினிவா குடும்பமும் நடந்து கொண்டு
இருந்தது.தற்செயலாக அவ்விடத்திய படங்களை பார்க்க நேர்ந்தபோது
எல்லோருடைய ஞாபகமும் வந்தது.
வேர்ல்ட் ஃபுட் ப்ரோக்ராம், யுநிஸெஃப், யுஎன்டிபி , ஜெர்மன் டெவலப்மென்ட் ஏஜன்ஸி,
மினிஸ்ட்ரி ஆஃப் எஜுகேஷன்,
லொஸேத்தோ ஆர்மிக்கு ட்ரெயினிங் கொடுப்பதற்காக, இண்டியன் ஆர்மியின்
பிரிகேடியர் யாதவ் அவர்களுடன், 12 குடும்பத்தினர்,தமிழர்களும் உண்டு,
பெயர்போன பாகிஸ்தானி ஸர்ஜன் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்,
அவர்களது குடும்பம், 40 வருஷங்களாக அவ்விடம் பிஸினஸ் செய்து வரும்
பகாயா குடும்பத்தினர் என ஞாபகம் உள்ளவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
அதிலும் ஸ்ரீலங்காத் தமிழர் குடும்பம் மிகவும் அன்போடு, பழகியது.
சற்று வயதான பெண்மணி. அவர் உத்தியோகம் செய்யவில்லை.
பேரன் பேத்தி எடுத்தவர். வெகு வருஷங்களாக வெளியிலேயே இருப்பவர்.
அயல்நாட்டு மருமகள்,மருமகன் உண்டு. குடும்ப விஷயங்கள் பூராவும்
சொல்லி, எல்லா விஷயங்களையும்,பகிர்ந்து கொள்ள அவருக்கு நான்
உற்ற ஒரு மனுஷியாக இருந்தேன்.
ஸ்ரீதனமெல்லாம் அப்படியே விட்டு வந்து விட்டோம் என்று அவர் சொல்லும்போது
நமக்கும் கண்கள் பனிக்கச் செய்யும்.
பாஷைகள் எப்படி நெருங்கி உறவாடியது. இப்போது நினைத்தாலும் மனது
அந்த நினைவுகளை அசை போட வைக்கிறது.
நேபாலி,இந்தியர், வடதென் மாநிலத்தவர் என்று ஒரு குட்டி உலகமாகத் தோன்றியது
எனக்கு.
பாஷைகள்,தேசம் எல்லாம் மிஞ்சிய ஒரு நட்புக் கூட்டமாகத் தோன்றியதெனக்கு.
நேபாலிக் குடும்பம், அவர்களது குடும்பமாகவே பாவித்தது.
ஆந்திரக் குடும்பம், அவர்களுடயதாகவே எங்களை மதித்தது.
வட இந்தியக் குடும்பங்கள், சம்பந்தி எனக் கொண்டாடியது.
தமிழ்க் குடும்பங்கள் ஸந்திக்க நேர்ந்தபோது என்னை அவர்களின்
அருகிலுள்ள ஊரின் பிறந்தவள் என பெரியம்மா முறை கொண்டாடியது.
புது வருஷப்பிறப்பை பிரிகேடியர் வீட்டில் கொண்டாடியபோது அவர்கள்
செய்து வந்த பண்டங்கள், அவ்வளவு சிறப்பாகச் செய்து வந்தர்கள்.
ஈரானியக் குடும்பம், என எல்லோர் வீட்டிற்கும் போய்வந்தோம்.
இளமைகளுக்கு எல்லோரும் முக்கியத்துவம் அளிக்கும் போது
வயதான எங்களுக்கும் அவ்விடம் நல்ல வரவேற்பிருந்ததை மறக்க
முடியாது.
ஜோஹான்ஸ்பர்க் ஒரு நேபாலிக் குடும்பத்துடன் போய் அவ்விடமிருந்து
பல இடங்களுக்குப் போய் வந்ததை மறக்க முடியாது.
ப்ளாக் எல்லாம் எழுத ஆரம்பிக்காத காலமது.
எவ்வளவு இடங்களை வர்ணித்திருக்கலாம். காலம் தாழ்ந்த
கனவு இது. குறிப்புகளும் ஏதும் வைக்கவில்லை.
இருப்பினும் படங்கள் குறிப்புகளுக்குப் பதிலாக உள்ளது.
அப்படிச் சென்ற சில இடங்களின் படங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசையே
தவிர பயணக் கட்டுரை இல்லை இது.
மேலும்RUST FONTEIN DAM மற்றும் கோல்டன்கேட் ஹைலேட்ஸ், நேஷனல்பார்க்
ஸௌத் ஆப்ரிகா முதலான இடங்களுக்குச் சென்ற போது எடுத்த சில
படங்களுடன் அடுத்து உங்களிடம் பெருமை பேச வருகிறேன்.
கட்டாயம் பாருங்கள். வருகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.