லெட்டூஸ் ஸேலட்
ஜூன் 19, 2014 at 8:32 முப 12 பின்னூட்டங்கள்
இதைமிகவும் ஸுலபமாகத் தயாரிக்கலாம். அதிக ஸாமானுமில்லை. வெய்யில் காலத்திற்கேற்றது.
வேண்டியவைகள்.
வெங்காயம்—-ஒன்று
கேரட் –ஒன்று
தக்காளி —ஒன்று.
உருளைக்கிழங்கு —ஒன்று.
லெட்டூஸ் இலைகள்—நறுக்கியது. –1கப்.
உப்பு, ஒரு இதழ்—பூண்டு, உரிகானோ இருந்தால்—சிறிதளவு.
எலுமிச்சை சாறு சில துளிகள்.
அரை டீஸ்பூன்—ஆலிவ் ஆயில்.
செய்முறை.
உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்துச் சிறிய துண்டங்களாகச்
செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த கேரட்டைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
தக்காளியையும் துண்டுகளாக்கவும்.
பூண்டைத் தட்டி எண்ணெயில் கலக்கவும். உப்பு சிறிது,உரிகானோ,எலுமிச்சைச்
சாற்றைக் கலக்கவும். விரும்பினால் மிளகுப்பொடி துளி சேர்க்கலாம்.
ஒரு அகன்ற பாத்திரத்தில், லெட்டூஸ் இலைகளுடன்,உருளைக்கிழங்கு,வெங்காயம்,கேரட் துருவல்,
பூண்டு சேர்த்த எண்ணெய் இவைகளை ஒன்றாகக் கலக்கவும்.
தக்காளியால் அலங்கரித்து வைத்து, சேர்த்துச் சாப்பிட வைக்கலாம்.
முளைப் பயறுகள் இருந்தாலும் சேர்க்கலாம். ருசியானது. நல்லதும் கூட.
Entry filed under: Uncategorized.
12 பின்னூட்டங்கள் Add your own
வை. கோபாலகிருஷ்ணன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed


1.
வை. கோபாலகிருஷ்ணன் | 8:40 முப இல் ஜூன் 19, 2014
நமஸ்காரம்.
அருமையான ருசியான பதிவு. பாராட்டுக்கள்.
ஏனோ என் பதிவுகள் பக்கம் இப்போதெல்லாம் வருவது இல்லை. பரவாயில்லை. உடம்பு நல்லா இருக்கீங்களா ?
பிரியமுள்ள கோபு
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html#comment-form
2.
chollukireen | 11:23 முப இல் ஜூன் 19, 2014
ஆசிகள் உங்களுக்கு. உங்கள் பதிவுகளுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறேன்.
உடம்பு நல்லா இருக்கீங்களா?
பரவாயில்லே. வயது ஏறிக்கொண்டே வருகிறது இல்லையா? உங்களின் உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
Kumar | 9:48 முப இல் ஜூன் 19, 2014
Padithathum sappithu pol ullathu
4.
chollukireen | 11:25 முப இல் ஜூன் 19, 2014
சிலவே இல்லை. மிக்க ஸந்தோஷம். உங்களின் மறு மொழிக்கும், ரஸிப்பிற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
5.
மகிஅருண் | 5:32 முப இல் ஜூன் 20, 2014
காமாட்சிம்மா, நலம்..நலமறிய அவா! உடல்நலத்தை கவனிச்சுக்கோங்கம்மா!
ஸேலட் நல்லா இருக்கு. எனக்கு இந்த ஸேலட் வகைகள் அதிகம் பிடிக்காது, ஆனா உங்க ரெசிப்பி படிக்க செய்து பார்க்கலாம் போல இருக்கு! 🙂
6.
chollukireen | 1:27 பிப இல் ஜூன் 24, 2014
எப்போதாகிலும் முடிந்தபோது சிறிய அளவில் செய்துபார்.. நான் மும்பை வந்திருக்கிறேன். அதிகம் எழுத உட்காருவதில்லை. குட்டிச் செல்லம் எப்படி இருக்கு?எழுத விடுகிறாளா? என்அன்பு. அன்புடன்
7.
adhi venkat | 7:57 முப இல் ஜூன் 21, 2014
பார்க்கவே அழகா இருக்கு. ஆனா இந்த லெட்டூஸ்லாம் திருச்சியில் கிடைக்காது.. 🙂 பகிர்வுக்கு நன்றிம்மா. வாய்ப்பு கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.
8.
chollukireen | 1:28 பிப இல் ஜூன் 24, 2014
நீண்டநாள் கழித்து உன்னைப் பார்க்க மிக்க ஸந்தோஷம்.. நன்றியுடனும்,அன்புடனும்
9.
இளமதி | 11:58 பிப இல் ஜூன் 25, 2014
அம்மா! வந்திட்டேன்மா…
எனக்காகவே சாலட் பிடிக்கும்னு வைச்சு காத்திட்டு இருக்கீங்களோ..:)
எனக்கு ரொம்பவே இஷ்டம்! அதையே சில வேளைகளில் மதிய உணவாகச் சாப்பிடுவேன்!
படத்துடன் பதிவு அருமை அம்மா!
என் வலைக்கும் வந்து விசாரித்து வந்தமைக்கு என் மன்மார்ந்த நன்றிகள் அம்மா..
உங்கள் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்!
தொடர்ந்து வருவேன்மா இனி நானும் இங்கே…
10.
chollukireen | 7:10 முப இல் ஜூன் 28, 2014
இளமதி வந்தாச்சா மிகவும் ஸந்தோஷம். எனக்கும் ஸேலட் வகையராக்கள் மிகவும் பிடிக்கும். தொடர்ந்து வருவதாக எழுதினது மிக்க ,ஸந்தோஷம். நான்கூட அதிகம் எழுதுவது இல்லை. கவனித்திருப்பாய். உன்னைமாதிரி பெண்கள் எனக்குக் கிடைத்தது மிக்க நன்றி கடவுளுக்குத்தான். இளமதியாகவே பெயருக்கேற்ப
வலம் வா. அன்புடன்
11.
chitrasundar | 4:00 பிப இல் ஜூன் 29, 2014
காமாக்ஷிமா,
எங்களுக்கு வேலை கொடுக்காம நல்லா கலர்ஃபுல்லா சாலட் செஞ்சி கண்ணாலேயே சாப்பிட வச்சிட்டீங்க. அன்புடன் சித்ராசுந்தர்.
12.
chollukireen | 12:14 பிப இல் ஜூலை 4, 2014
அப்படியா? மிக்கஸந்தோஷம். அன்புடன்