Archive for மே, 2015
ஒன்றில் மூன்று
மாங்காய் ஸீஸன் இது. நல்ல மாங்காய் கிடைக்கும்போது செய்து ருசிக்க சென்ற மாங்காய் ஸீஸனில் எழுதிய குறிப்புகளே இது. மறுபதிவு செய்யத் தோன்றியது. பார்த்தோ,செய்தோ ருசியுங்கள். ஒரு வரி எழுதுங்கள்.
மாங்காய் ஸீஸனில் வாங்கியுள்ள மாங்காயை மூன்று ரகமாகச்
செய்ததுதான் இது.
இனிப்புத் தொக்கு ஒன்று, காரம் சேர்த்த தொக்கு ஒன்று. மாங்காய்ப்
பச்சடி ஒன்று. ஆக மூன்று ரகம்.
மொத்தமாகத் துருவியதில் மாங்காய்த் துருவல் அதிகமாக இருந்தது.
மூன்றாகப் பிரித்ததில் எல்லா வகையும் செய்ய முடிந்தது.
பச்சடி இன்னும் சுலபம். அடுத்து எழுதுகிறேன்
பார்ப்போமா உங்களுடன்.
காரமாங்காய் தொக்கு.
வேண்டியவைகள்.
துருவிய மாங்காய்—4கப். தோலைச் சீவி விட்டு மாங்காயைத் துருவவும்.
மிளகாய்ப்பொடி—-4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்–அரைகப்
ருசிக்கு– உப்பு
கடுகு—1 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். விருப்பத்திற்கேற்ப சேர்க்கவும்.
செய்முறை–
கடுகையும்,வெந்தயத்தையும், சூடான வாணலியில் எண்ணெய்விடாது
வறுத்துப் பொடிக்கவும்.
செய்முறை
நான்ஸ்டிக் வாணலயிலோ, அல்லது அலுமினியம் வாணலியிலோ பாதி
எண்ணெயைக் காயவைத்து துருவிய மாங்காயைப் போட்டு வதக்கவும்.
புளிப்புக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். மஞ்சளும் சேர்த்து நிதான தீயில்
சுருள வதக்கவும்.
நீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது,மிளகாய்ப்பொடி,மீதி
எண்ணெயைச்சேர்த்துக் கிளறி, இறக்கி வெந்தயகடுகுப் பொடியைச் சேர்த்துக்
கிளறவும்.
பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஆறினவுடன் ருசி பார்த்து
உப்பு காரம் ருசி பார்த்து சுத்தமான பாட்டலில் வைத்து மூடவும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்து நாள்ப்படவும் உபயோகப் படுத்தலாம். அடுத்தது
இனி.ப்புத் தொக்கு.
வேண்டியவைகள்
மாங்காய்த் துருவல்—-2கப்
வெல்லம்—-2கப்
உப்பு—ஒரு டீஸ்பூனைவிட அதிகம்
எண்ணெய்—-3…
View original post 143 more words
ஸீஸன் மோர்க்குழம்பு.
எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம்.
தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மருமகள். ஸரி அதை வைத்துவிடு நான் உப யோகப் படுத்திக் கொள்கிறேன்என்றேன். சீக்கிரமே செய்து விடுங்கள் என்றாள்.
அவர்கள் காலை சாப்பாடுகள் செய்து முடித்த பின் நான் சமையலரைக்குப் போனேன். இரண்டு ஸ்பூன் கடலைபருப்பு,துளி தனியா, சீரகம் ,எல்லாவற்றையும் ஊரவைத்து காரத்துக்கு பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து கொஞ்சம் கூடவே தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்துக் கொண்டேன்
இந்த மாம்பழத்தை 2 ஒரு பக்கம் துளி கீரல் போட்டுவிட்டு , நன்றாகக் கதுப்பை அழுத்தி எடுத்துக் கொண்டேன். இரண்டுகப் கெட்டி மோரில் புளிப்பில்லாதது எல்லா வற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்தேன். உப்பு,மஞ்சப்பொடியும் போட்டேன். என்ன பிரமாதம் என்கிறீர்களா?கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு கடுகு,வெந்தயம்,பெருங்காயம்,கூடவே நான்கு குடமிளகாயையும் வறுத்துப் போட்டு தாளித்துக் கொட்டி விட்டு, கறிவேப்பிலையையும் அதன் தலையில் போட்டு இறக்கினேன்.
எங்க வீட்டுக்காரர் சாதம் சாப்பிட்டு நாலு வருஷமாறது. ராக்கொடிஅளவுஇரண்டுதோசை,ரஸம்,அல்லது இரண்டு இட்லி, பிரட்பால் ,கஞ்சி, அந்த மனுஷருக்கு தோசையுடன் இன்று இந்த மோர்க்குழம்புதான் இரண்டு கரண்டி கொடுத்தேன். பிடித்து சாப்பிட்டதை உங்களுக்கும் சொல்லலாமே. நானும் காரமே சாப்பிடறதில்லே. நானும் சாப்பிட்டேன். எனக்கு அதில் இரண்டு வேக வைத்த காயைப் போட்டேன். குழம்பு சூப்பர்தான்.
என் கதையாகத்தான் இருக்கட்டுமே. நாட்டு மாம்பழமானால் இன்னும் காரம் வைக்கலாமோ என்னவோ? போட்டோ பாருங்கோ சூப்பரா இருக்கு. குழம்பும் அப்படிதான். எழுதாமலே போஸ்ட் பண்ணி. , குப்பைக்கு அனுப்பிச்சுட்டு, திரும்ப மனதைக் கொட்டி ஒரு பதிவு. ரஸியுங்கள்
வேலை என்றால் வீழ்ந்து கிடக்கும் கள்ளிகளே சோறு என்றால் வாய்திறப்பீரோ?
சிறுவர் கதைகளில் கூட அந்த நாள்க் கதை காமிக் புத்தகங்கள் இல்லாத நாள். சொல் வழக்கு நீங்களும் படிக்கலாமே. இரண்டு நிமிஷ,ம்ஆகுமா அதாவது இடுகை. இதற்கு மட்டும் என்ன இல்லையா?லைக் செய்யலாமே.
அன்னையர்தினப் பதிவு—-30
இரண்டு வருஷங்களாக அவ்வப்போது மனதில் வரும் என் அம்மாவின் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வந்தேன். அவரவர்களுக்குத் தன் தாயார் உயர்வுதான். எங்களம்மா ஒரு பொதுநல விரும்பி. எனக்குத் தெரிந்த சில நினைவுகள்தான் இதுவும். கடைசிப் பகுதியாக இது அமைகிறது. கடந்தகால நிகழ்வுகள்தான். படியுங்களேன். அதுவும் அன்னையர் தினத்தில்.
அன்னையர் தினப் பதிவு—29
தொடர்ந்து படிப்பவர்கள் இந்த அடுத்த பதிவையும் தவராது படிக்கவும்.
அன்னையர் தினப்பதிவு—-28
அன்னையர் தினத்தை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. இடையே காட்மாண்டுவும் வருகிரது. படியுங்கள்
சித்திரா பவுர்ணமி.
நன்றி—-படம். கூகல்
இவ்வருஷத்திய சித்ரா பவுர்ணமி பூஜை 3—5—-2015 அன்று வருகிறது.
சித்திரைமாத, பவுர்ணமி,,சித்திரை நக்ஷத்திரமும் சேர்ந்து வரும்தினத்தைச்,சித்திராபவுர்ணமி என்று கொண்டாடி பூஜிக்கிறோம்.ஏறக்குறைய நக்ஷத்திரமும்,பவுர்ணமியும் சேர்ந்து வரும்.அன்று சித்திர குப்தனுக்கு பூஜை செய்து வழிபடும் வழக்கமிருந்தது.இதற்காக ஒரு கதையும் வழக்கத்தில் சொல்லுவார்கள்.
ஒருஸமயம் பார்வதிதேவி அழகான சித்திரமொன்றை வரைந்தார். அதற்கு சிவபெருமான் உயிர் வழங்கினார். சித்திரம் உயிர்பெற்றதால் சித்ரகுப்தனென்ற பெயர் வழங்கலாயிற்று.
யமதர்மராஜனுக்கு வேலை பளுஅதிகமாகிறதுயார்என்னபாவபுண்ணியங்கள்செய்தார்களென்று
பார்த்து அவர்களுக்கானதைச்செய்வதில் கடினம் ஏற்படுகிறது என்று
விஷ்ணுவிடமும்,சிவனிடமும் சொல்கிரார் யமன். உயிர்களைப் படைக்கும் பிரம்மதேவனிடம் சொல் என்கிரார்கள் அவர்கள். யமதர்மருக்கு,
அப்படி பிரம்ம தேவனால் கணக்குப்பிள்ளையாக சித்ரகுப்தன் நியமிக்கப்படுகிறார்.உலகத்தில் எல்லோருடைய பாப புண்ணிய கணக்குகளைத் துல்லியமாக வைப்பவர் சித்ர குப்தன்.
அவரை பூஜைசெய்து வணங்குவதுதான் சித்ரா பௌர்ணமியின் விசேஷம். தாங்கள் செய்த பாவங்ளைக் குறைத்தும்,புண்ணியங்களை அதிகரிக்க வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கமே. புண்ணியமான காரியங்கள் அதிகம் செய்ய வேண்டுமென்பதை இந்த நாள் ஞாபகப்படுத்துகிறது. அதிலும் வயதான பெண்மணிகள் கட்டாயம் இதைச் செய்வார்கள்.
உப்பில்லாமல் சாப்பிடுவது இதன் விசேஷம். நிவேதனத்திற்கு உப்பு சேர்த்து ருசியாகச் செய்து நிவேதித்து தானமும் செய்வார்கள். இந்த நன்னாளில் தானம் செய்வது விசேஷம்.
கோடைகாலமாதலால் விசிறி,குடை,பாதரக்ஷை, பழங்கள் என தானம் கொடுப்பார்கள்.
எங்கள் ஊரில் ஐந்து ஆறு பெண்களாகச் சேர்ந்து இதனைச் செய்வார்கள். சித்திரகுப்தன் கதை ஏதோ பாட்டின் வடிவத்தில் இருக்கும். புத்தகம் பார்த்து பாடுவார்கள். மற்றவர்கள் பக்தியுடன் பாட்டைக் கேட்பார்கள். மிக்க சுலபமான நடையில், ஒரே ராகமாகத்தான் பாடிக் கேட்டிருக்கிறேன்.
ஒரே ஒரு அடி ஞாபகம் உள்ளது. சித்திர புத்திரனார், சீரார் பெரும் கணக்கர், நாட்டுக்கொரு கணக்கர் நல்ல கணக்கர் வந்தாரம்மா இப்படியே கதை பூராவும் பாடுவார்கள். பாட்டைக் கேட்பதற்கு அக்கம்,பக்கமுள்ள பெண்கள் எல்லோரும் வந்து பக்தியுடன் பாடலைக் கேட்பார்கள். பூஜையின் கடைசியில் பிரஸாத விநியோகமும் உண்டு. முக்கியமாக அன்று உப்பில்லாமல் சாப்பிடுவார்கள்.
சர்க்கரைப் பொங்கல்,மெயினாகப் பண்ணுவார்கள். மாங்காய் விசேஷமாக இருக்கும். அன்றைய தினம் தானங்கள் செய்தால் விசேஷமென்பர். கலந்தசாதங்கள்வடை முதலானதும் செய்து வந்தவர்களுக்குக் தானமாகக் கொடுப்பார்கள்.
போடும் இழைகோலத்தில் தெற்குபுறம் வாயிற்படி மாதிரி திறந்து விட்டுக் கோலம் அமைந்திருக்கும். நடுவில் சித்திர குப்தனாக கற்பனை செய்துஒரு படம். வைதீகர்கள் வீட்டில் ஓலைச்சுவடிகள் இருக்கும். அதனுடன் எழுதுகோலும் பூஜையில் வைத்து பூஜிப்பார்கள். கிருஷ்ணாஷ்டமிக்குப் போடுவதுபோல வாயிலிலிருந்து பாதமும் போடுவார்கள். இப்பொழுது பார்க்கவே கிடைக்காது. நிறைய பேர் வந்து பூஜையைப்பார்த்துப் போவார்கள். உப்பில்லாமலும் சாப்பிடுவார்கள்.
சென்றமாதம் காஞ்சீபுரம் போய் சித்ர குப்தன் கோவிலுக்குப் போய் வந்தோம். மிகவும் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது கோவில். அதன் ஞாபகமாக இந்தப்பதிவு.