மட்ரி.
நவம்பர் 20, 2015 at 11:25 முப 6 பின்னூட்டங்கள்
இதுவும் 2011 இல் ஜெநிவாவில் புதியதாகக் கற்றுக்கொண்டு செய்தது. டில்லியில் கரகரப்பாகச் செய்ததே கிடைக்கும். கசூரிமெத்தி என்ற காய்ந்த வெந்தயக்கீரை பொடி சேர்த்தும் செய்யலாம். இதுவும் ரிப்ளாக்தான். குளிர்காலம் வருகிறதே. காமாட்சி அம்மாவையும் ப்ளாகில் பார்க்க வேண்டாமா? ஜெனிவா படங்கள் மும்பையினின்றும் உங்களைத் தேடிவருகிறது. எல்லோரும் ஸவுக்கியமா அன்புடன்
இது ஒரு வடஇந்திய வகை மைதாமாவின் தயாரிப்பு.
பார்க்கப்போனால் நம்முடைய தட்டை மாதிரிதான். பருப்புகள்
போடுவதில்லை. சற்று வித்தியாஸமான ருசி. கரகரப்பாகச்
செய்கிறார்கள். சிறிதளவு வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள்.
இது மேத்தி மட்ரி. அவசரத்திற்கு ஊறுகாயுடன்காலைடிபனில்கூட
மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான் கற்றுக்கொண்டேன்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்.
மைதாமாவு—-2 கப்
ஓமம்—2 டீஸ்பூன்
மாவுடன் சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
மட்ரி பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்
செய்முறை.
ஓமத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
அகன்ற தாம்பாளத்தில் மாவைக் கொட்டி ஓமம், திட்டமான உப்பு
சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
மாவில் சிறிது சிறிதாக மேலே குறிப்பிட்ட 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், 1ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.
புட்டுமாவுபோல , மாவைக் கையிலெடுத்துப் பிடித்தால் பிடிபட
வேண்டும்.
உதிர்த்தால்தான் உதிர வேண்டும். இம்மாதிரி பக்குவமாக கலக்கவும்.
செய்து பார்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக ஜலத்தைத் தெளித்து மிகவும்
கெட்டியான மாவாக நன்றாகப் பிசைந்து கொள்ளவும்..
அழுத்தமாகப் பிசைந்த மாவைத் திரட்டி பாதி மாவைச் சிறிய
உருண்டைகளாக உருட்டி அப்பளக் குழவியினால் சிறிய கனமான
வட்டங்களாகச் செய்து கொள்ளவும்.
போர்க்கினால் வில்லைகளின் மேல் குத்தி துளைகளிடவும்.
மீதிமாவைக் கனமான அப்பளாமாக இட்டு போர்க்கினால் குத்தி
கத்தியினால் துக்கடாக்களாகக் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஜாஸ்தி புகையவிடாமல்
View original post 59 more words
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள், Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 11:34 முப இல் நவம்பர் 20, 2015
மைதாவில் செய்தது இல்லை. கோதுமை மாவில் அடிக்கடி செய்வதுண்டு. 🙂
2.
chollukireen | 11:42 முப இல் நவம்பர் 20, 2015
உடனே பதில் கொடுத்தது மிக்க ஸந்தோஷம். கோதுமைமாவு உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது. விடாப்பிடி மைதாவினரும் வடக்கே அதிகம். கீதா அவர்களுக்குத் தெரியாததாக ப் போட எங்குபோவது? அன்புடன்
3.
Revathi Narasimhan | 7:01 முப இல் நவம்பர் 25, 2015
Dear Kamatchi ji. ammma ithaiye thukkadaavaaka seyvaarkaL. really tasty. thanks.
4.
chollukireen | 2:06 பிப இல் திசெம்பர் 18, 2015
வெந்தயக்கீரை,ஓமம்,எண்ணெய் எல்லாம் விட்டுப் பிசைந்து கெட்டியாக இட்டு , துண்டு போட்டது பொரிக்கும்போது துக்கடாக்கள் மாதிரி உப்புவது கிடையாது. கரகரவென்று கரையும் பதத்தில் வாயில் உணர்வோம். சும்மா ஒரு கரண்டிமாவில் முடிந்தபோது முயற்சி செய்து பாருங்கள். கஸூரி மேத்தி பவுடர் போட்டுச் செய்து பார்க்கலாம். உங்களின் முதல் மறு மொழியையும், உங்களையும் வரவேற்கிறேன். தாமதமான என்னடைய பதில். பொருட்படுத்தாதீர்கள். நன்றி. அன்புடன்
5.
பிரபுவின் | 5:29 முப இல் திசெம்பர் 16, 2015
நல்ல பதிவு அம்மா.நீண்ட நாள் வர முடியவில்லை.வெளிநாடு சென்றிருந்தமையினால் நேரம் கிடைக்கவில்லை.உங்கள் ஞாபகம் அடிக்கடி வரும்.இதோ மீண்டும் வந்து விட்டேன்.நன்றி அன்புடன்…
6.
chollukireen | 2:10 பிப இல் திசெம்பர் 18, 2015
என்னுடைய ஞாபகம் வருவதுபோல நானும் பிரபுவைத் தேடினேன். அடுத்து வெளிநாட்டுக் கட்டுரைகளா. அசத்துங்கள். மீண்டும் வந்தததற்கு மிகவும் நன்றி. தொடரவும். அன்புடன்