விளாம்பழம்
ஏப்ரல் 4, 2016 at 7:26 முப 6 பின்னூட்டங்கள்
அனேகமாக எல்லோருக்குமே இப்பழத்தைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை . ஆனால் மிகவும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பழ வகை. பார்வைக்கு வில்வப்பழத்தைப் போன்ற உருவமும், அதே போன்ற தடித்த ஓட்டுடனும் கூடியது. காயாக இருக்கும்போது அதன் உள்ளே இருக்கும் சதைப் பற்று துவர்ப்பு. ருசியுடன் இருக்கும். பழுத்த பின் புளிப்பும்,துவர்ப்புமான ஒரு கலவை ருசி வரும்.அத்துடன் வெல்லமோ,சர்க்கரையோ சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும். உப்பு,புளி சேர்த்து காரத்துடன் கொதிக்க வைத்து காரப் பச்சடியும்,வெல்லம் சேர்த்து இனிப்புப் பச்சடியும் செய்வதுண்டு. பழம் நன்றாகப் பழுத்து விட்டால் விளாம்பழத்தை கையிலெடுத்து ஆட்டிப் பார்த்தால் உள்ளே ஓட்டை விட்டுப் பிரிந்து விளாம்பழத்தின் குலுக்கல் தெரியும். நன்றாக வயது முதிர்ந்த பெரியோர்கள் விட்டதடி ஆசை விளாம் பழத்தின் ஓட்டோடே என்பார்கள். பழம் பக்குவமானவுடன் லேசான எடையுடன் உள்ளுக்குள்ளேயே ஓட்டை விட்டு விலகிவிடும்.. பழத்தை உடைத்து அகன்ற திக்கான அதன் ஓட்டை அகற்றி பின்னர்தான் அது உபயோகத்தில் வரும். சிரார்த்த தினத்தில் இப்பச்சடி செய்வது மிகவும் விசேஷம்.
இதன் விசேஷ குணங்கள் பித்தத்தைப் போக்கும். வாயுத் தொல்லைகள் அகலும். இம்மரத்தின் பிசின் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த மருந்தாக உபயோகப்படும். வயிற்றுப் புண்ணைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. எங்கள் வீட்டில் இதனுடைய ஓட்டின் பெரிய துண்டுகளை ரஸத்தை இறக்கும்போது சேர்த்து இறக்குவார்கள். ரஸம் கமகம என்று எங்களுக்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது.
உயரமான இம்மரங்களில் சிறிது முள்ளும் உண்டு. ஆங்கிலத்தில் இதை Wood apple என்று சொல்வார்கள். காய்,பழம் எல்லாவற்றையும் உபயோகித்து மோரிலும் பானங்கள் தயாரிக்கலாம். எல்லா இடங்களிலும் வளரக்கூடிய மரம்..
திருக்காறாயில் என்ற இடத்தின் கோவிலின் ஸ்தல விருக்ஷமே இந்த விளா மரம்தான்.
இலை,பூ,காய்,பழம் என்ற எல்லாவித இதன் பாகங்களுமே மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது என்பதை மனதிற்கொண்டு நல்ல பழக்கடைகளில் விசாரித்து கிடைக்கும்போது யாவரும் உபயோகிக்க வேண்டுமென்பதே என் எண்ணம்.
Entry filed under: பழங்கள்.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 2:32 பிப இல் ஏப்ரல் 5, 2016
விளாம்பழம் எனக்குப் பிடிக்காது போனாலும் தாங்கள் தரும் பிரஸாதமாச்சே என ஆசையாக ஓடி வந்தேன். ஆனால் இங்கு விளாம்பழத்தையே காணோம் 😦
அதனால் பரவாயில்லை. 🙂
2.
chollukireen | 11:25 முப இல் ஏப்ரல் 6, 2016
பிரசுரிக்வும் கிளிக் பண்ணினவுடனே கணினி கோளாறு. நான் சென்னையிலுள்ளேன். நெட் கிடைப்பதில் காலதாமதம். எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்ற நிலையில் ஏதோ எழுத்துகள். தெரிந்த விஷயங்களே மறந்து விடும் முதுமைக் கோளாறு. இம்மாதம் 22 தேதிக்கு மும்பை சென்று விடுவேன். ஆவணி புரட்டாசியில்தான் வினாயகரின் இஷ்டமான இப்பழம் கிடைக்கும். பாருங்கள் விளாம் பழத்தைக் காயும் பழமுமாக வருகைக்கு நன்றி.ஆசிகள் அன்புடன்
3.
angelin | 12:43 பிப இல் ஏப்ரல் 6, 2016
இந்த விளாம்பழ காரபச்சடி நான் சாப்பிட்டு இருக்கேன் புளி காரத்துடன் சூப்பர் சுவை .விளாம்பழம் பற்றிய தகவல்களுடன் அருமையான பகிர்வு நன்றிம்மா
4.
chollukireen | 8:25 முப இல் ஏப்ரல் 8, 2016
விளாம்பழம் கிடைக்காத ஸீஸனில் எழுதிவிட்டேன். பிள்ளையார் சதுர்த்தியில் விசேஷமாகக் கிடைக்கும். நீயாவது ருசித்து சாப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளாய்.! பரம ஸந்தோஷம். நன்றி அன்புடன்
5.
chitrasundar5 | 3:47 பிப இல் ஏப்ரல் 27, 2016
காமாக்ஷிமா,
விநாயகர் சதுர்த்தி என்றாலே விளாம்பழங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். பார்த்து பல வருடங்கள் ஆச்சு. விளாம்பழத்தை வைத்து ஒரு கிளி கதை எங்க ஆயா சொல்லுவாங்க. இப்போ மறந்துபோச்சு 😦
சில சமயங்களில் பழுத்து நல்ல சுவையாக இருக்கும், பல சமயங்களில் காயாக இருந்து புளிப்பாக இருக்கும். எப்படி இருந்தாலும் விடமாட்டேன், சாப்பிட்டுவிடுவேன். இதில் இவ்வளவு மருத்துவ குணங்களா ! ஆச்சரியமா இருக்கு, அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 2:16 பிப இல் ஏப்ரல் 29, 2016
உன் மறு மொழியை மிகவும் ரஸித்து நன்றி சொல்கிறேன். அன்புடன்