Archive for திசெம்பர், 2016
வாழ்த்துகள்.
அன்புள்ள இனிய நட்புள்ளம் கொண்ட சொல்லுகிறேனின் ஆதரவு பரிவாரத்தினர் அனைவருக்கும் 2017 ஆம் புத்தாண்டினை வரவேற்று வாழ்த்துகளையும்,ஆசிகளையும், அன்புப் பரிமாற்றங்களையும் உங்களுக்கு மனமுவந்து அளிக்கின்றேன்.
புத்தாண்டே வருகவருக யாவருக்கும் நன்மையைத் தருக. அன்புடன் சொல்லுகிறேன்.
ஜெனிவா ஏரியைச்சுற்றி மேலும்–7
நடுநாயகமாக கிராமத்து, சர்ச். பெரியகிராமம். இராஜதானியாகக் கூட இருந்திருக்கலாம். குறுநில மன்னர்கள்தானே! நான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவும் இருந்திருக்கலாம்.
கோட்டை மலை உச்சியில் இருக்கிறது. வண்டி போகாது. பாதை சற்று செங்குத்தாக கரடு முரடாகத் தோன்றியது. மதிய சாப்பாடும் முடிக்க வேண்டும். நிறைய ரெஸ்டாரெண்டுகள். அடுக்கடுக்கான மலை முகடுகளைத் தரிசித்துக் கொண்டே சாப்பிடும் வசதிகள்.
எல்லோரும் அவரவர்களுக்கு வேண்டிய பிட்ஸா,பாஸ்தா, பழச்சாறுகள், நானும் ஸேலட்டுடன் பழச்சாறு சாப்பிட்டேன். நாங்கள் போனபோது குளிரே இல்லை. ஸெப்டம்பர் முதல் வாரம்.
எனக்காக ஒரு வீல்சேரும் கண்டுபிடித்துக் கொண்டு வந்தனர்.
பெரிய கோட்டை,கூடகோபுரம்,மாடமாளிகை என்று கற்பனைப்பண்ணி விடாதீர்கள் என்று முன்னெச்சரிக்கை பிள்ளையிடமிருந்து வந்தது.
மலைக் காட்சிகளே ரம்யமாக இருந்தது. வெகு தூரமில்லை. வந்தடைந்தோம்.
டிக்கெட் வாங்க வேண்டு மென்றனர். வீல்சேர் உள்ளே போகமுடியாது. படிக்கட்டு வழியே மேலே போக வேண்டுமாம்.
] கோட்டையின் ஒருபக்க சுவர்.
பக்கத்திலிருந்து மலைகளழகு.
கோட்டையின் கற்சுவர். நடுவில் ஏதோ சின்னம்.
உள்ளே நுழைந்தால் புராதன சமையலறை.
படுக்கையறை ஓவியங்களுடன் அழகாக இருந்தது. பாருங்களேன். எனக்குத்தான் அப்படித் தோன்றியதோ?
பால்கனியிலிருந்து பார்த்த அழகான தோட்டம் கோட்டையின் நடுநாயகமாக.
புராதனமான பொருட்கள் ஒரு மேஜையின் மீது.
நீங்களாக எதுவாக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.
கீழ்த்தளத்தில், முகப்பிலேயே தண்ணீர் வர வசதி இருக்கிறது.
நீங்களெல்லாம் இதுவரை கூட வந்தீர்கள். பிடித்தவர்களுக்குத்தான் பிடிக்கும். கதை ஒன்றும் இல்லை என்று நினைப்பீர்கள் உடன் வந்தவர்களுக்கு மிகவும் நன்றி. வந்தவழியே ஏரியைச் சுற்றிக்கொண்டு வந்து சேர்ந்தாயிற்று. ரஸித்ததற்கு மிகவும் நன்றி.இந்த ஏரியினின்றுதான் ரோன் என்ற நதி வாய்க்கால்மாதிரி உற்பத்தியாகி பிரான்ஸில் பெரிய நதியாகப் பாய்கிறது.
உள்ளே வாருங்கள் ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போகலாம். அன்புடன்