Archive for நவம்பர், 2016
ஜெனிவாஏரியைச் சுற்றிமேலும்-6
இந்த இடத்தில் பார்வையாளர்களுக்காக மதியம் ஒரு மணிக்கு மிஷினை இயக்கிக் காட்டுகிரார்கள். அது வரை அவ்விடம் சேருவதற்குள் பார்வைக்குப் படங்களும்,கணக்குகளும், மாடுகளின் உணவைப் பற்றியும், விவரமாகப் பதிவுகள் படங்கள் மூலம் இருக்கிறது.
ரிமோட் ஒன்றை எடுத்துக் கொண்டு விட்டால் அவ்விட விஷயங்களை அது நமக்குச் சொல்லுகிறது.
புற்கள்தான் எத்தனைவித நறுமணங்களில்? புற்களைப் பார்க்க முடிவதில்லை.
அதன் நறுமணங்களை முகர்ந்து பார்க்க வசதி இருக்கிறது. இந்த வாஸனை இல்லையா? ஓமம் வாஸனை, சீரகம்,ரோஜா, பூக்களின் வாஸனை என பலதரப்பட்டது. லவென்டர்,ரோஸ்மரி இப்படிப்பலபல.
ஓ அம்மா கரெக்டா கண்டு பிடிக்கிறா என்று கேலிக்கூச்சல். பிறகு பார்த்தால் வாஸனையின் பெயர்களும் சிறிய எழுத்தில் எழுதியிருக்கிறது போலும்.
அம்மாவிற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். உனக்கு பிளாக் இருக்கு எங்களுக்கெல்லாம் எதுவும் இல்லையே என்று என்னை முக்கிய நபராக பேசி சிரித்துக் கொண்டு வந்தனர்.
போகட்டும்போங்கள். நான்தான் எங்குமே வர விரும்பவில்லை. இப்படி ஒரு பெரிய சுமை எனக்காகவா என்றேன்.
சுமையில்லை. நீ ஸந்தோஷமாக ஏதாவது எழுத இம்மாதிரி இடங்கள் வேண்டுமென்றுதான். மனதில் ஸந்தோஷம் வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
கணக்குகளின் பார்வை பாருங்கள்.
ஒரு பசுவின் சாப்பாடு 100 கிலோகிராம் பசும்புல். எண்பத்தைந்து லிட்டர் தண்ணீர்
12 லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ சீஸ் செய்ய முடியும். 30 பால் வியாபாரிகள் ஒரு வருஷத்தில் ஆறு மில்லியன் லிட்டர்
பால் ஸப்ளை செய்கிறார்கள். இதில் 500 டன் சீஸ் செய்கிரார்கள்.
இந்த சீஸை ஐந்து மாதத்திற்குப் பிறகு உபயோகப் படுத்துகிரார்கள்.
பிறகு 16மாதங்கள் வரை உங்கள் ருசிக்குத் தக்கவாறு சாப்பிடமுடியும்.
2200 பால் கொள் முதல் செய்பவர்கள் 345 மில்லியன் லிட்டர் பாலில் 870000 வீல்ஸ் சக்க்ரவடிவிலான சீஸைச் செய்கிரார்கள்.
மணி ஒன்றாகப்போகிறது. நமக்கு செய்முறை காட்டும் நபரும் வந்து விட்டார்.
கொப்பறையில் குளமாக கெட்டியானபால். என்ன ஏது கலப்பார்களோ அது தெரியவில்லை. கேட்டுகள் மாதிரி உள்ளவைகள் சுழன்று வருகிறது.
தயிர்கடைவேனே கோபாலன் தனைமறவேனே என்ற பழைய பாடல் ஒன்று ஞாபகம் வந்தது. காணொளி பாருங்கள்.
நான் மிக்க அக்கறையாக இம்மாதிரி பதிவு ஒன்றும் நாம் போட வேண்டும் என்ற ஆசையுடன் செய்கிறேன்.
அவர்கள் கணக்கு முடிந்து கலவையை வட்டங்களில் நிரப்பி ஒரு நாள் பூரவும் அழுத்தம் கொடுப்பார்களாம்.
கலவை கெட்டியாக ஆனவுடன் தயார் செய்து கிடங்குகளில் ரோபோ மூலம் அடுக்கி விவரங்கள் பதிப்பார்கள்.
இம்மாதிரி வகைவகையாக எவ்வளவு சீஸ் தயாரிக்கும் இடங்களோ? பலவித ருசிகளில், விதவிதமாக ருசிப்பவர்களுக்கு விருந்துதானே?
நல்ல தரமான பசும்பாலில்தான் சீஸ் தயாரிக்கப் படுகிறது. முன்நாட்களில் படகுகள் மூலம் வெளியிடங்களுக்குக் கொண்டுச் செல்வார்களாம். இப்போது வாகன வசதிகளுக்குக் குறைவில்லை.
யாவரும் உடன் வந்து ரஸித்தாற்போல நான் உணருகிறேன்.
இன்னும் மலையின் மீது போய்ப் பார்க்க ஒரு கோட்டை ஃபோர்ட் பாக்கியுள்ளது. குட்டி குட்டி ராஜ்யமும் , பெயரளவில் கோட்டையும்.
பிறகு பார்க்கலாம். வாருங்கள்.
ஜெனிவா ஏரியைச் சுற்றி மேலும்–5
அன்று போய்வந்த ந்யான் வழியேதான் கார்தான் எவ்வளவு வேகமாகப் பறக்கிறது. காரிலிருந்து படம் எடுக்க வேண்டுமென்றால் முடிவதே இல்லை. ஆப்பிள் தோட்டங்களும், சோளக் கொல்லைகளும்,திராக்ஷைத் தோட்டங்களும். ஆப்பிள்மரங்கள் அடர்ந்த பகுதி இது.
சூரியகாந்தி அறுவடை முடிந்து விட்டிருக்கும் போலுள்ளது. லுஸான் நகரையும் கடந்து மலைமீது அமைந்திருக்கும் ஒரு இடத்திற்குப் போகிறோம். குளிர் இருக்குமென்பதால் இலகுவான ஸ்வெட்டர் எனக்குத் தேவையாக இருந்தது. கிராமத்திற்குப் போகும் வழி. ஊரின் பெயர் Gruyeres Gகிரியேர்ஸ்
மலை மேலுள்ள பாதை தெரிகிறதா? வழியே எவ்வளவோ காட்சிகள். மாடுகளின் மேய்ச்சலுக்கான புல் வெளிகளும்,மாட்டுக் கூட்டங்களும். படமெடுக்கவில்லை கார்வேகம். மேலும் போகிறோம்.
கிராமத்து கார் முகப்பில் நிறுத்திவிட்டு சீஸ் உற்பத்தி செய்யும் இடத்தின் முகப்பிற்குச் செல்கிறோம்.
கொழுகொழு பசுமாட்டின் உருவமும்,சீஸ் ஸம்பந்தப்பட்ட கடைகளும்,அவ்விடத்திய விஷயங்களும், மாதிரிக்கு சாப்பிட சீஸும் தருகிரார்கள். பெரிய முகப்பு. எல்லா விஷயங்களும் ஆங்கிலத்திலும்,Fப்ரெஞ்ஜிலும் இருக்கிறது.அழகான கடைகள்.
வியப்பு மேலிட அவ்விட எல்லா உபகரணங்களையும் பார்க்க விலையைப் படிக்க எவ்வளவு விலை அதிகம் என்று வியப்பு மேலிடுகிறது.
சீஸ் தயாரிக்கும் முறையைப் பொது மக்களுக்குக் காட்ட, மதியம் ஒரு மணி குறிப்பிடப் பட்டுள்ளது. அதற்கும் டிக்கெட் வாங்கிப் போக வேண்டும். டிக்கெட் வாங்கியாகிவிட்டது. பொழுது இருக்கிறது.
உள் நுழைவதற்கு முன்பே சீஸ் வட்டங்களை அடுக்கி வைக்கும் பெரிய கிடங்கு இருக்கிறது. ரோபோக்கள் உதவியுடன் பெரியபெரிய வட்டங்கள் அடுக்கப்படுவதைப் பார்ப்போம் வாருங்கள். வண்டிச் சக்கரம் மாதிரி கெட்டியான சீஸ். அடுக்கடுக்கான ஷெல்புகள்,
வட்டவட்டமாக அடுக்கியிருப்பது எல்லாம் சீஸ். இடையே வருவது ரோபோ.
சீஸை அடுக்கும் விதத்தையும் , ரோபோ செய்வதையும் பார்ப்போம்.
ரோபோ வேலை செய்வதைப் பாருங்கள்.
சீஸ் செய்யும் இடத்திற்கு ஒரு மணிக்குப் போவோம். பின்பு மலைமுகடுகளருகில் ஒரு கோட்டையையும் பார்ப்போம்.
பூர்ணிமா.
எங்கள் ஜெனிவா சந்திரனைப் பாருங்கள். கரிய மேகத்தினிடையே இரவு எட்டு மணிக்கு.
பால்கனியிலிருந்து எடுத்தது.
தொட்டில்–16
பண்டிட் எங்கிருந்து வந்தான்?
அது ஒரு டீக்கடை. வரும்வழியில் ரொம்பகுளிர். ஸரி வீட்டில் முதியவளும் இல்லே போனவுடன் டீகொடுக்க ஒரு டீசாப்பிடலாம்.டீவருகிறது.
ஓ ராம்தாயீ எனக்கும் ஒரு டீ. குரல் வந்த திசையில் ஒரு வயதான பெண்மணி. நீ எங்கே இங்கே வந்தே. ஹஜூர் இந்த பையனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று வந்தேன்.
பஹினி இது யாரு?
தாயி, எல்லாம் சொல்றேன். வீட்டிற்குப் போன பிறகு.
பையனுக்கும் சாய் ஒன்று.
இல்லே அவன் ஒண்ணும் குடிக்க மாட்டான். பாவுன்கா சோரா. பிராமணப்பிள்ளையாம். ஏதோ புதியகதை. வீட்டை அடைந்தாகி விட்டது.
பாவுஜு மன்னி பேரு நேபாலியில்.
வாவா பஹினி என்று வரவேற்கிறாள் பாவுஜு. தாயி என்றால் அண்ணா
. தீதி என்றால் அக்கா.பாயி என்றால் தம்பி. யாரையும் உறவு சொல்லிதான் அழைப்பார்கள்.bபுவாரி என்றால் மருமகள்.அம்மாவிற்கு ஆமா என்று பெயர் அப்பாவிற்ரு புவா.
பாவுஜு இந்த பிள்ளை நல்லவன். அப்பா,அம்மா இரண்டுபேரும் பிரிஞ்சுபோயி வெவ்வேரெ வாழ்வு. இது நம் வீட்டோடு இருக்கு. ஆத்தா,அப்பன் இரண்டும் ஸரியில்லே.
நம் வீட்டிலே இருந்தா இரண்டு பேரும் தொந்திரவு கொடுக்கராங்கோ. இது அங்கே போகமாட்டேன்னு நம் வீட்டோடு கிடக்கறது. அங்கே வேண்டாம்,உனக்கும் உதவிக்கு ஆள் கேட்டாயே என்று அழைத்து வந்தேன்.
அதன் ஆத்தாகாரியும் ஸரி கண் முன்னாலே இல்லாமல் இருக்கட்டும் என்றாள்.
என்ன சொல்கிறாய்? அவ ரொம்பவருஷ பழக்கம்.
இல்லாவிட்டால் சாய் துகானில் கேட்டார்கள். விட்டுவிடணும். அந்த தீதியும் நல்லவள்.
பேசிக்கொண்டே சாப்பாடு முடிகிரது. பையன் சுருசுருப்பா கூடமாட பழக்கப்பட்டவன்போல் ஒட்டிக்கொண்டு எல்லாவேலையும் செய்கிரான்.
ஸரி நான் பாத்துக்கறேன். மனதுக்கு பிடிக்கலைன்னா அனுப்பிடறேன் உங்கிட்டயேபஹினி..
வேலை செய்யும் சிறுவர்கள் காஞ்சா. சிறுமிகள் காஞ்சி.
இவன் பாவுன் என்றே அழைக்கப்பட்டான்.
அவனையும் மாலை நேர பள்ளியில் சேர்த்து விட்டனர். சொல்லிக்கொடுத்த எளிய வேலைகளை சிக்கென பிடித்துக் கொண்டு, மேற்கொண்டு வேலைகளையும் தானே வலிய தெரிந்துகொண்டும், செய்து கொண்டும் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டு விட்டான்.அதிகம் படிப்பு ஏறவில்லை.
இதெல்லாம் பிள்ளைகளுக்கும் தெரிந்த விஷயம்தான்.
அவனும் பெரியவனானபோது அவனுக்கும் காதல் வந்தது. இவனைமாதிரியே அதுவும் ஒரு தாய்தந்தையரின் பிரிவால் கைவிடப்பட்ட அனாதைப் பெண்.
திரும்பவும் ஆள்தேடி அலைவதைவிட இவர்களையே நாம் நமதென பாவிக்கவேண்டும் என்ற கொள்கையுடன் , ஒரு சின்னஸ்வயம்வரம் வைத்து இருவருக்கும் மணம் முடித்து வைத்து, வீட்டிலேயே ஒருபகுதியில் தனிக்குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விட்டனர்.
பாசமான பிள்ளை மருமகள்போல் அவர்களின் உதவி இன்றிமையாதது என்ற நிலையும் வயோதிகத்தில் ஏற்பட்டு விட்டது. இதோ அந்த பெண்ணின் பெண் எப்படி பாசத்தைக் காட்டுகிறது. பார்த்தாயா?
தூங்கி எழுந்து வந்த பிள்ளைகளிடம் விவரித்து விட்டு, முன்போல் எங்களுடைய ஸொந்த காரியங்களையும், நாங்களாகவே செய்து கொள்ள முடிவதில்லை. அடிக்கடி டாக்டரிடம் போக வேண்டியுள்ளது. உங்கள் பெண் பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டார்கள். அவர்களின் வேறு கல்ச்சரில் வளர்ந்த மனப்பான்மையே வேறு விதமாக உள்ளது.
அவர்கள் விஷயத்திலும் நீங்களும் எவ்வளவோ ஈடு கொடுக்கும்படி உள்ளதையும், மன உளைச்சலையும் அறிய முடிகிறது.
எங்களுக்கு இங்கிருந்தால் எல்லாவித ஸௌகரியங்களையும் நாங்களே பார்த்துக் கொள்ள முடியும். உங்கள் மனைவிகளும் வேலைக்குப் போகிறவர்கள். யாரையும் குறை சொல்லவில்லை.
பண்டிட்டிற்காக சேர்ந்த பணத்திலேயே அவனுக்கும் வீடு வாங்கி வைத்து விட்டேன்.நிறைய உறவினர்கள் வரபோக இருக்கிரார்கள். பண்டிகை,பருவம் என எல்லோரும் வரபோக தனிமை அதிகம் வாட்டுவதில்லை.
ஸொந்த வீடு. நம் இஷ்டப்படி இருக்க முடிகிறது. தாழ்வு மனப்பான்மை குறைகிறது.
நம் ஸொத்து ஸுதந்திரத்தைப் பார்த்துக் கொள்ளும் வகையில் அவனுக்கும் சில ஏற்பாடுகள் செய்து விட்டேன்.
எங்களுக்குப் பிற்காலம் உஙகளிருவருக்கும் எல்லா ஸொத்துக்களும் பிரித்து எழுதப்பட்டு விட்டது.
பண்டிட்டின் பெண்ணிற்கும் கல்யாணம் ஏற்பாடு செய்து விட்டேன். நீங்கள் யாவரும் வாருங்கள்.
உங்களுக்கும் வயதானகாலத்தில் இங்கு வந்து ஸெட்டிலாக எண்ணம் தோன்றும்.
யோசனை செய்வதற்கே ஒன்றுமில்லை.
பிள்ளை குறுக்கிடுகிறான்.
பண்டிட் மட்டும் உங்களைப் பார்த்துக் கொள்வான் என்பது என்ன நிச்சயம்.
தேசம்,கலாசாரம்,சுற்றம்,அவனின் சூழ்நிலை. எங்களிடம் இதுவரை காட்டிய நேசம்,பணிவு எல்லாமாக எங்களை இந்த முடிவுக்கே கொண்டு வந்துள்ளது.
சில முடிவுகள் ஆண்டவனால் எடுக்கப்படுபவை. அதை மாற்ற யாராலும் முடியாது.
எங்கும்,யாருடனும்,எப்பொழுதேனும் எதுவும் மாறலாம். அதுவே தவிர வேறு என்ன செய்ய முடியும்.?
தீர்மான முடிவு. பார்ப்போம். பிள்ளைகளும் இப்படியே இரண்டு வருஷம் வந்துபோயினர்.
அவர்கள் பெண்ணுக்கும் அங்கேயே லவ் மேரேஜ் நடந்தது. அடுத்து பிள்ளையும் வரிசையில்
வருஷங்கள் உருளுகிறது. பண்டிட் மாறவேயில்லை. வயதான பெற்றோரை அவன் பார்த்துக் கொள்ளும் விதமும் அக்கரையாகவே இருக்கிறது..
பிள்ளைகள் வருவதாகப் போன் வருகிறது. பண்டிட்டிற்குப் பேரன் பிறந்துள்ளது. அவர்கள் வரும் தேதியும் ஒத்துப் போகிறது.
தொட்டிலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
காலை எட்டு மணி ப்ளைட்டில் பிள்ளைகளின் குடும்பம் வருகிறது. ஏக குதூகலம்.
சொல்லாத தகவல். பேரன்மனைவியும்,கையில் குழந்தையும்.
புதியதாக பெரிய பிள்ளையின் பேரன். அன்னியதேசக் கொள்ளுப்பேரன், இதுவரை சொல்லாத ஸஸ்பென்ஸ் கோபம்,ஸந்தோஷம்,உண்மை கூறாததின் வருத்தம் பல சுவைக் கதம்ப கூட்டலும்,மகிழ்ச்சியும்,கூடவே கண்ணீரும். மருமகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமே.அதற்கும் உடனே ஏற்பாடு.
புதியதாக வரும் மருமகளை ஆசீர்வதித்து , இருவருக்கும் டீக்கா எனப்படும் ,தயிரில்அக்ஷதைகலந்த சந்தன குங்குமப்பொட்டை திலகமிட்டு ஆசீர்வதித்து இனிப்பூட்டி பெரியவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் அவர்கள் குடும்பத்து நபர் ஆவார்கள்.
இன்று இரட்டைத் தொட்டில் அலங்கரித்து எல்லோரையும் கூப்பிட்டு, விருந்துதான்.
மருமகளுக்கு முதலில் டீக்கா கொடுத்து வாழ்த்தி ஏற்றுக் கொண்டனர்.
அடுத்து கணவன் வீட்டில் வைத்து நாரண்.
நாம்புண்யாசனம் என்று சொல்லும் தூய்மைப்படுத்தலும்,பேரிடுதலும். அது கட்டாயமானது. வம்சத்து பெயர்கள் அதாவது ஸர்நேம் கொடுப்பது. இரண்டு குழந்தைகளுக்கும் செய்து விடலாம்.இதுவும் கட்டாயமானது.
விரைதானம் இந்துக்களின் வழக்கம் நேபாலி வாத்தியார் வந்து யாவற்றையும் இனிதாக நிறைவேற்றினார்.ஸூர்யகிருஷ்ணா ஒன்று, யுவகிருஷ்ணா மற்றொன்று.
மருமகள்கள், பேரன் பேத்திகள்,பிள்ளைகள்,உற்றார் உறவினர்களுடன்
பூக்களலங்காரத்துடன் இரட்டைத் தொட்டில்.
குழந்தைகளைக் கொண்டு வருகின்றனர் தொட்டிலில் கிடத்த
படங்கள் யாவும் கூகல் உபயம். மிக்க நன்றி.
லாலிலாலய்யலாலி. ஓம்கார லாலிமால் மருகலாலி
லாலி சிவ புத்ர லாலீ செந்தில் வளர் லாலி சிருங்காரலாலி. என்று மனதில் பாட்டு தோன்றியது.
இரண்டொரு வருஷத்தில் நாங்களும் இங்கே வந்து விடுகிறோம் என்ற மகன்களை
ஆளுக்கொருவராக அணைத்துக் கொண்டனர் பெற்றோர்கள். தொட்டில்கள் நிதானமாகஆடுகின்றன!!!!!!!!!!!
ஜெனிவாஏரியைச்சுற்றி–4
இதுவரை நாம் போய்வந்தது -பிரெஞ்சு கிராமத்தின் கரை ஓரம்.
நாம் இன்று போவது ஸ்விஸ்ஸின் பாகத்திலுள்ள ஏரிக்கரையின் சின்ன நகரம். இங்கு வந்த போது குளிர் ஆரம்பமாகவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தில்லி மருமகளும் வந்திருந்ததால் போனேன். ஊரின் பெயர் Nyon ந்யான்.
வீதியின் மத்தியில் பூக்கள் பூத்திருப்பது மனதைக் கவர்கிறது. நடந்து யாவற்றையும் ரஸித்துக் கொண்டே ஏரிக்கரையோரத்திலே பாட்டை மனதில் நினைத்துக்கொண்டே நடைபோட்டு ரஸிக்கலாம் வாருங்கள்.
பிருமாண்ட ஏரியின் கரையோர அழகுப் பார்வைகள்.
இதே அழகான இன்னொரு பார்வை.
இன்னும் கொஞ்சம் மேலே போவோமா? போய்க்கொண்டே இருக்கலாம்.
பூக்கள் அலுக்காதவைகள்.
சாப்பிடப் போகுமுன் முகம்காட்ட வேண்டாமா?
நாங்களும்
பிட்ஸா,ஸேலட் வரும்.
மறுநாள்
அடுத்து ஒரு மலையுச்சியில் ஒரு சின்ன கோட்டையையும், மலைமுகடுகளையும்,போகும்போதே சீஸ் செய்யப்படும் ஒரு இடத்தையும், பார்ப்பதாக உத்தேசம்
போய் விட்டு வந்தாகியும் விட்டது. முன்னமேயே. அதையும் கடைசியாகப் பங்குகொண்டு , எழுதி முடித்து விடுகிறேன் சிலநாட்களில்.