Archive for நவம்பர் 24, 2016
ஜெனிவாஏரியைச் சுற்றிமேலும்-6
இந்த இடத்தில் பார்வையாளர்களுக்காக மதியம் ஒரு மணிக்கு மிஷினை இயக்கிக் காட்டுகிரார்கள். அது வரை அவ்விடம் சேருவதற்குள் பார்வைக்குப் படங்களும்,கணக்குகளும், மாடுகளின் உணவைப் பற்றியும், விவரமாகப் பதிவுகள் படங்கள் மூலம் இருக்கிறது.
ரிமோட் ஒன்றை எடுத்துக் கொண்டு விட்டால் அவ்விட விஷயங்களை அது நமக்குச் சொல்லுகிறது.
புற்கள்தான் எத்தனைவித நறுமணங்களில்? புற்களைப் பார்க்க முடிவதில்லை.
அதன் நறுமணங்களை முகர்ந்து பார்க்க வசதி இருக்கிறது. இந்த வாஸனை இல்லையா? ஓமம் வாஸனை, சீரகம்,ரோஜா, பூக்களின் வாஸனை என பலதரப்பட்டது. லவென்டர்,ரோஸ்மரி இப்படிப்பலபல.
ஓ அம்மா கரெக்டா கண்டு பிடிக்கிறா என்று கேலிக்கூச்சல். பிறகு பார்த்தால் வாஸனையின் பெயர்களும் சிறிய எழுத்தில் எழுதியிருக்கிறது போலும்.
அம்மாவிற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். உனக்கு பிளாக் இருக்கு எங்களுக்கெல்லாம் எதுவும் இல்லையே என்று என்னை முக்கிய நபராக பேசி சிரித்துக் கொண்டு வந்தனர்.
போகட்டும்போங்கள். நான்தான் எங்குமே வர விரும்பவில்லை. இப்படி ஒரு பெரிய சுமை எனக்காகவா என்றேன்.
சுமையில்லை. நீ ஸந்தோஷமாக ஏதாவது எழுத இம்மாதிரி இடங்கள் வேண்டுமென்றுதான். மனதில் ஸந்தோஷம் வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
கணக்குகளின் பார்வை பாருங்கள்.
ஒரு பசுவின் சாப்பாடு 100 கிலோகிராம் பசும்புல். எண்பத்தைந்து லிட்டர் தண்ணீர்
12 லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ சீஸ் செய்ய முடியும். 30 பால் வியாபாரிகள் ஒரு வருஷத்தில் ஆறு மில்லியன் லிட்டர்
பால் ஸப்ளை செய்கிறார்கள். இதில் 500 டன் சீஸ் செய்கிரார்கள்.
இந்த சீஸை ஐந்து மாதத்திற்குப் பிறகு உபயோகப் படுத்துகிரார்கள்.
பிறகு 16மாதங்கள் வரை உங்கள் ருசிக்குத் தக்கவாறு சாப்பிடமுடியும்.
2200 பால் கொள் முதல் செய்பவர்கள் 345 மில்லியன் லிட்டர் பாலில் 870000 வீல்ஸ் சக்க்ரவடிவிலான சீஸைச் செய்கிரார்கள்.
மணி ஒன்றாகப்போகிறது. நமக்கு செய்முறை காட்டும் நபரும் வந்து விட்டார்.
கொப்பறையில் குளமாக கெட்டியானபால். என்ன ஏது கலப்பார்களோ அது தெரியவில்லை. கேட்டுகள் மாதிரி உள்ளவைகள் சுழன்று வருகிறது.
தயிர்கடைவேனே கோபாலன் தனைமறவேனே என்ற பழைய பாடல் ஒன்று ஞாபகம் வந்தது. காணொளி பாருங்கள்.
நான் மிக்க அக்கறையாக இம்மாதிரி பதிவு ஒன்றும் நாம் போட வேண்டும் என்ற ஆசையுடன் செய்கிறேன்.
அவர்கள் கணக்கு முடிந்து கலவையை வட்டங்களில் நிரப்பி ஒரு நாள் பூரவும் அழுத்தம் கொடுப்பார்களாம்.
கலவை கெட்டியாக ஆனவுடன் தயார் செய்து கிடங்குகளில் ரோபோ மூலம் அடுக்கி விவரங்கள் பதிப்பார்கள்.
இம்மாதிரி வகைவகையாக எவ்வளவு சீஸ் தயாரிக்கும் இடங்களோ? பலவித ருசிகளில், விதவிதமாக ருசிப்பவர்களுக்கு விருந்துதானே?
நல்ல தரமான பசும்பாலில்தான் சீஸ் தயாரிக்கப் படுகிறது. முன்நாட்களில் படகுகள் மூலம் வெளியிடங்களுக்குக் கொண்டுச் செல்வார்களாம். இப்போது வாகன வசதிகளுக்குக் குறைவில்லை.
யாவரும் உடன் வந்து ரஸித்தாற்போல நான் உணருகிறேன்.
இன்னும் மலையின் மீது போய்ப் பார்க்க ஒரு கோட்டை ஃபோர்ட் பாக்கியுள்ளது. குட்டி குட்டி ராஜ்யமும் , பெயரளவில் கோட்டையும்.
பிறகு பார்க்கலாம். வாருங்கள்.