ஜெனிவா ஏரியைச் சுற்றி மேலும்–5

நவம்பர் 17, 2016 at 1:35 பிப 8 பின்னூட்டங்கள்

அன்று போய்வந்த  ந்யான் வழியேதான்  கார்தான் எவ்வளவு வேகமாகப் பறக்கிறது. காரிலிருந்து படம் எடுக்க வேண்டுமென்றால் முடிவதே இல்லை. ஆப்பிள் தோட்டங்களும், சோளக் கொல்லைகளும்,திராக்ஷைத் தோட்டங்களும். ஆப்பிள்மரங்கள் அடர்ந்த பகுதி இது.

ஆப்பிள் காடு

ஆப்பிள் காடு

சூரியகாந்தி  அறுவடை முடிந்து விட்டிருக்கும் போலுள்ளது. லுஸான் நகரையும் கடந்து மலைமீது அமைந்திருக்கும் ஒரு இடத்திற்குப் போகிறோம். குளிர் இருக்குமென்பதால் இலகுவான ஸ்வெட்டர் எனக்குத் தேவையாக இருந்தது. கிராமத்திற்குப் போகும் வழி. ஊரின் பெயர் Gruyeres Gகிரியேர்ஸ்

கிராமத்தை நோக்கி

கிராமத்தை நோக்கி

மலை மேலுள்ள பாதை தெரிகிறதா? வழியே எவ்வளவோ காட்சிகள். மாடுகளின் மேய்ச்சலுக்கான புல் வெளிகளும்,மாட்டுக் கூட்டங்களும். படமெடுக்கவில்லை கார்வேகம். மேலும் போகிறோம்.

பாதை

பாதை

கிராமத்து கார் முகப்பில் நிறுத்திவிட்டு சீஸ் உற்பத்தி செய்யும் இடத்தின் முகப்பிற்குச் செல்கிறோம்.

சீஸ் ஃபேக்டரியின் முகப்பு.

சீஸ் ஃபேக்டரியின் முகப்பு.

கொழுகொழு பசுமாட்டின் உருவமும்,சீஸ் ஸம்பந்தப்பட்ட  கடைகளும்,அவ்விடத்திய விஷயங்களும்,  மாதிரிக்கு  சாப்பிட சீஸும் தருகிரார்கள்.    பெரிய முகப்பு. எல்லா விஷயங்களும் ஆங்கிலத்திலும்,Fப்ரெஞ்ஜிலும் இருக்கிறது.அழகான கடைகள்.

வியப்பு மேலிட  அவ்விட எல்லா உபகரணங்களையும் பார்க்க விலையைப் படிக்க  எவ்வளவு விலை   அதிகம் என்று வியப்பு மேலிடுகிறது.

சீஸ் தயாரிக்கும் முறையைப் பொது மக்களுக்குக் காட்ட, மதியம் ஒரு மணி குறிப்பிடப் பட்டுள்ளது. அதற்கும்  டிக்கெட் வாங்கிப் போக வேண்டும்.  டிக்கெட் வாங்கியாகிவிட்டது. பொழுது இருக்கிறது.

உள் நுழைவதற்கு முன்பே  சீஸ்   வட்டங்களை  அடுக்கி வைக்கும் பெரிய கிடங்கு இருக்கிறது. ரோபோக்கள் உதவியுடன்    பெரியபெரிய  வட்டங்கள்  அடுக்கப்படுவதைப் பார்ப்போம் வாருங்கள். வண்டிச் சக்கரம் மாதிரி கெட்டியான சீஸ். அடுக்கடுக்கான ஷெல்புகள்,

சீஸ் கிடங்கு ஒருபக்கம்

சீஸ் கிடங்கு ஒருபக்கம்

வட்டவட்டமாக அடுக்கியிருப்பது எல்லாம்  சீஸ். இடையே வருவது ரோபோ.

சீஸை அடுக்கும் விதத்தையும் , ரோபோ செய்வதையும் பார்ப்போம்.

சீஸ்கிடங்கும் ரோபோவும்

சீஸ்கிடங்கும் ரோபோவும்

ரோபோ வேலை செய்வதைப் பாருங்கள்.

சீஸ் செய்யும் இடத்திற்கு ஒரு மணிக்குப் போவோம். பின்பு மலைமுகடுகளருகில் ஒரு கோட்டையையும் பார்ப்போம்.

Entry filed under: பொழுதுபோக்கு. Tags: , , , .

பூர்ணிமா. ஜெனிவாஏரியைச் சுற்றிமேலும்-6

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  1:44 பிப இல் நவம்பர் 17, 2016

    அருமையான தகவல்களுடன், அழகான படங்களுடன், காணொளியையும் கண்டு களித்தேன். நானும் உங்களுடனேயே வந்தது போன்றதொரு மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  2:29 பிப இல் நவம்பர் 17, 2016

      உடனுக்குடனான ஊக்கமளிக்கும் பதிலுக்கு மிகவும் நன்றி.அன்புடன்

      மறுமொழி
  • 3. ஸ்ரீராம்  |  2:22 முப இல் நவம்பர் 18, 2016

    அழகிய படங்கள், தகவல்கள். ரோபோ அடுக்குவதும் அழகு.

    மறுமொழி
    • 4. chollukireen  |  8:55 பிப இல் நவம்பர் 18, 2016

      இம்மாதிரி வாய்ப்புகள் காண்பதற்கு சற்று அழகுதான். மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 5. கோமதி அரசு  |  5:58 முப இல் நவம்பர் 18, 2016

    அழகான படங்கள், சீஸ் அழகு, அதை அடுக்கும் ரோபோ காணொளி அருமை.
    நன்றி.

    மறுமொழி
  • 6. chollukireen  |  8:59 பிப இல் நவம்பர் 18, 2016

    நீங்கள் ஆன்மீக சுற்றுலா போடுங்கள். நான் பார்த்த சீஸின் சுற்றுலாவைப் போடுகிறேன். கிடைத்ததைப் பிடித்துக் கொள்கிறேன். உங்களின் மறுமொழியைப் பார்த்ததும் என் மனதில் இப்படித் தோன்றியது. வருகைக்கு மிகவும் நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 7. chitrasundar5  |  3:05 முப இல் நவம்பர் 24, 2016

    ஜெனிவாவுல என்ன நடக்குதுன்னு காமாட்சி அம்மா மூலம் இங்க இருந்தே தெரிஞ்சிக்க முடியுது🙂

    கிராமம்னாலே பசுமையான அழகுதானே ! ரோபோவினால் சீஸ் அடுக்கப்படுவதை அழகா எடுத்திருக்கீங்க. நீங்க சுற்றிப் பார்த்தை நாங்களும் பார்க்கக் காத்திருக்கிறோம், அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 8. chollukireen  |  12:34 பிப இல் நவம்பர் 26, 2016

    ஆமாம். டிஸம்பர் 19 ஆம் தேதி மும்பை போகிறேன். ஏதோ வந்தவுடன் குளிர் இல்லாதிருந்து போகமுடிந்த இடங்கள் இவை. வீட்டுவரையில் நடமாட்டம் உள்ள நான் இவ்வளவு தூரம் சில இடங்கள் பார்க்க முடிந்தது. வியப்புதான். உடன் இரண்டு மருமகள்கள்,ஒரு,பிள்ளை,பேத்தி என உதவிசெய்ததுதான் விசேஷம். நன்றி அன்புடன்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நவம்பர் 2016
M T W T F S S
« Oct    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 257 other followers

வருகையாளர்கள்

  • 393,082 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: