பிகாஸோ ஓவியங்களைப் பார்த்த பிறகு அடித்தளத்தில் பழைய கார்களின் வகைகள் அழகழகாக கண்காட்சிக்கு வைத்திருந்தனர். அவைகளையும் பார்த்து விடலாமென்றனர்.
எவ்வளவு வகைகள்? எல்லாம் அப்பொழுதுதான் விலைக்கு வந்திருப்பதுபோன்ற புத்தம்புதிய தோற்றத்துடன் பொலிவாக விளங்கியது. பார்க்க அலுக்கவில்லை. எடுத்த படங்களிற் பல காணாது போய் விட்டது.
இருந்தவைகளிற் சிலவற்றை உங்கள் பார்வைக்கு. பார்ப்பதில் சலிப்பு ஏற்படாது.
இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வஸந்தத்தை வரவேற்கும் பூக்களைப் பார்த்ததும் முயற்சி செய் என்று சொல்லும் என்னை ஊக்குவிப்பவர்களுக்காகச் செய்கிறேன். வஸந்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில மரங்கள் பூத்துக் குலுங்கி அதன் வேலையை முடித்து விட்டு பூக்கள் யாவையையும் உதிர்த்து இலைகளை சுமக்க ஆரம்பித்து விட்டது.
ஒரு வெண்மையான மலர் சிறிய மரத்தில் பூத்துக் குலுங்குவதைப் பாருங்கள். இப்போது பூக்களே இல்லை. எவ்வளவு அழகிய மலர்கள்?
உங்கள் யாவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.